Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
விற்பனையை அதிகரிக்க சலுகைகளை வாரி வழங்கும் கார் நிறுவனங்கள்
Page 1 of 1
விற்பனையை அதிகரிக்க சலுகைகளை வாரி வழங்கும் கார் நிறுவனங்கள்
கார் தயாரிப்பு நிறுவனங்கள், கார் விற்பனையை அதிகரிக்கும் பொருட்டு, கவர்ச்சிகரமான சலுகைகளையும், திட்டங்களையும் அறிவித்துள்ளன. நாட்டின் கார் விற்பனை, சென்ற ஜூலை மாதம் 16 சதவீதமாகவும், ஆகஸ்ட் மாதம் 10 சதவீதம் என்ற அளவிலும் குறைந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வட்டி அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால், நாட்டின் வாகன விற்பனை மந்தமடைந்துள்ளது. இந்நிலையில், பண்டிகைக் காலம் நெருங்குவதையொட்டி, கார் தயாரிப்பு நிறுவனங்கள், விற்பனையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இது குறித்து, வோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் (பயணிகள் கார் பிரிவு) நீரஜ் கர்க் கூறும் போது,"சென்ற ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில், வாகன சந்தை மந்தமடைந்தது. அதனால் விற்பனையை அதிகரிக்க பல்வேறு ஊக்கமளிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். இதன்படி, "போலோ' மற்றும் "வென்டோ' கார்களுக்கான உத்தரவாத காலத்தை நீட்டித்துள்ளோம். மேலும், 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிற்கு காப்பீடு அல்லது உதிரிபாகங்களை வழங்குகிறோம்' என்று தெரிவித்தார். வோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம், அதன் கார் விற்பனையை அதிகரிக்கும் பொருட்டு, நாடு முழுவதும் உள்ள அதன் விற்பனை நிலையங்களில், சென்ற வாரம் பிரசாரம் மேற்கொண்டது. அப்போது, இந்நிறுவனத்தின் "பிரீஸ்' வரிசையை சேர்ந்த "போலோ' மற்றும் "வென்டோ' கார்களில், திசை காட்டி, வாகனத்தின் பின்புற நகர்வை கட்டுப்படுத்தும் சாதனம், தோல் இருக்கைகள் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டன. "இத்தகைய சலுகைகளால், வாகனங்களை விசாரிக்க வருவோரின் எண்ணிக்கை, இரு மடங்காக அதிகரித்துள்ளது. வழக்கமாக, பண்டிகைக் காலங்களில் மாதாந்திர விற்பனை, 10 சதவீதம் அதிகரிக்கும். ஆனால் தற்போது, "ஷ்ராத்' காலம் அனுசரிக்கப்படுவதால் தேவை குறைந்துள்ளது' என நீரஜ் கர்க் மேலும் தெரிவித்தார். ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம், செவர்லட் பிராண்டுகளில் பீட், ஸ்பார்க் உள்ளிட்ட கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் துணைத்தலைவர் (கார்ப்பரேட் விவகாரங்கள்) பி.பாலேந்திரன் கூறுகையில்,"பண்டிகைக் காலங்களில் வழக்கத்தை விட, விற்பனை 20 சதவீதம் அதிகரிக்கும். ஆனால், வட்டி உயர்வு, பெட்ரோல் விலை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால், 5 சதவீத அளவிற்கே விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளது' என்று தெரிவித்தார். ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், இலவச பராமரிப்பு, காப்பீடு, ரொக்கத் தள்ளுபடி உட்பட 15 ஆயிரம் ரூபாய் முதல் 55 ஆயிரம் ரூபாய் வரை சலுகை விலையில் கார்களை விற்பனை செய்கிறது. ஹோண்டா சீயல் நிறுவனம் அதன் "ஹோண்டா சிட்டி' கார் விலையில், 66 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி வழங்குகிறது. போட்டியை சமாளிக்கும் பொருட்டு, மேம்படுத்தப்பட்ட "ஜாஸ்' காரை முந்தைய விலையை விட, 1 லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் வரை குறைத்து விற்பனை செய்கிறது. மேலும், பண்டிகை காலத்தை முன்னிட்டு, மாதம் 9,999 ரூபாய் தவணையில் "ஹோண்டா சிட்டி' காரை விற்பனை செய்யும் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. ஹோண்டா நிறுவனம், விரைவில், 5 லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையில் "பிரையோ' என்ற சிறிய காரை அறிமுகப்படுத்த உள்ளது. இந்நிறுவனத்தின் மலிவு விலை கார் என்ற சிறப்பை, இந்த கார் பெறும் என, இந்நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் தெரிவித்தார். ஹூண்டாய் நிறுவனம் "இயான்' என்ற சிறிய காரை, விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. 814 சி.சி திறன் கொண்ட இன்ஜின் பொருத்தப்பட்ட இந்த கார், உலகில் அதிகளவில் விற்பனையாகும் மாருதி சு‹கியின் "ஆல்டோ' காருக்கு கடும் போட்டியாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Similar topics
» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
» கூகுள் வாரி வழங்கும் வசதிகள்
» நீண்ட வேலிடிட்டி வழங்கும் இரண்டு சலுகைகளை அறிவித்த ரிலையன்ஸ் ஜியோ
» முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள்
» செய்தித் தணிக்கை கெடுபிடி அதிகரிக்க ஒப்புதல் சீனாவின் பிரபல இணையதள நிறுவனங்கள் அதிரடி
» கூகுள் வாரி வழங்கும் வசதிகள்
» நீண்ட வேலிடிட்டி வழங்கும் இரண்டு சலுகைகளை அறிவித்த ரிலையன்ஸ் ஜியோ
» முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள்
» செய்தித் தணிக்கை கெடுபிடி அதிகரிக்க ஒப்புதல் சீனாவின் பிரபல இணையதள நிறுவனங்கள் அதிரடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum