Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
டாஸ்மாக் கடைகளில் போலி "சரக்கு'கள்?
5 posters
Page 1 of 1
டாஸ்மாக் கடைகளில் போலி "சரக்கு'கள்?
"டாஸ்மாக்' மதுபான கடைகளில் விற்பனை குறைந்துள்ளதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. போலி சரக்குகள் விற்பனை மற்றும் அண்டை மாநில சரக்குகள் விற்பனை ஆகியவற்றால், விற்பனை குறைந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததால், தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் அதிரடி ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. இதில், பல்வேறு குறைபாடுகள் தெரியவந்தன.
தமிழகத்தில், 7,434 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளுக்கான மது சப்ளை, அந்த மண்டல குடோன்களில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில், மொத்தம் உள்ள "டாஸ்மாக்' கடைகள் ஆறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில், கோவை, சேலம், திருச்சி, மதுரை மற்றும் சென்னையில் இரு மண்டலங்கள் என, செயல்பட்டு வருகின்றன."டாஸ்மாக்' துவக்கப்பட்டதிலிருந்து, சரக்குகளின் விற்பனை ஆண்டுதோறும், சராசரியாக 17 சதவீதம் அதிகரித்து வந்துள்ளது. தற்போது, முதல் முறையாக சரக்குகள் விற்பனை, 12 சதவீதமாகக் குறைந்துள்ளது, சமீபத்தில், மண்டல வாரியாக நடந்த மாதாந்திர ஆய்வுக் கூட்டத்தில் தெரிய வந்துள்ளது.
இதற்கு, தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களை உள்ளடக்கிய சென்னை மண்டலம் மற்றும் ஈரோடு, திருப்பூர், உதகை, கோவை மாவட்டங்களைக் கொண்ட கோவை மண்டலம் ஆகியவற்றில், கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில், சரக்கு விற்பனை குறைந்தது காரணமாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, டாஸ்மாக் பணியாளர் ஒருவர் கூறும் போது, ""இதே காலத்தில், பிராந்தி, விஸ்கி உள்ளிட்ட, "ஹாட்' வகை மதுபானங்களின் விற்பனை, அண்டை மாநிலங்களான புதுச்சேரி மற்றும் ஆந்திராவில், 6 லட்சம் மற்றும் 3 லட்சம் பெட்டிகள் வரை அதிகரித்துள்ளது. சென்னை, கோவை மண்டலங்களில், "டாஸ்மாக்' சரக்கு விற்பனை குறைந்ததற்கு, அண்டை மாநிலங்களான புதுச்சேரி மற்றும் ஆந்திராவிலிருந்து கொண்டு வரப்படும் சரக்கு, "டாஸ்மாக் பார்'களில் விற்கப்படுவது முக்கிய காரணம்'' என்றார்.
அதிரடி சோதனை:
மதுபான பாட்டில்கள் விலையை, குவார்ட்டருக்கு ஐந்து ரூபாய் என்ற வீதத்தில் உயர்த்திய பின், அரசுக்கு வர வேண்டிய விற்பனை வரி, ஆயத்தீர்வை போன்றவை அதிகரித்திருக்க வேண்டும். ஆனால், இவை குறைந்ததால், ஏதோ முறைகேடு நடப்பதாக அரசுக்கு சந்தேகம் வந்தது. இதையடுத்து, "டாஸ்மாக்' கடைகளில் இரண்டு நாட்களாக, பறக்கும் படையால், தொடர் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.இதில், ஒரு மண்டலத்திற்கு விற்பனை அடிப்படையில், சராசரியாக ஐந்து முதல் ஆறு மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. ஒரு மண்டலத்திற்கு, 15 பறக்கும் படை என, ஆறு மண்டலங்களுக்கு பறக்கும் படையினர் சென்னையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த பறக்கும் படையில், ஐந்து பேர் இடம் பெற்றுள்ளனர்.சோதனையின் போது, கடைக்கு சரக்கு வந்த தேதி, கடையின் இருப்பு சரக்கு, விற்பனையான சரக்கு, அதற்கான பணம் சரியாக உள்ளதா என கணக்கிடப்படுகிறது. அது மட்டுமன்றி, "பார்'களில் போதிய வசதி செய்யப்பட்டுள்ளதா, பாருக்கான குறுமத் தொகை முறையாக செலுத்தப்படுகிறதா என்பது உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகள் மேற் கொள்ளப்படுகிறன.
இந்த ஆய்வில், பெரியளவில் தவறுகள் கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில், அது குறித்து மாவட்ட, மண்டல மேலாளர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. சிறிய அளவிலான குறைகள், ஆய்வு அறிக்கையாகத் தயார் செய்து, உடனுக்குடன் சென்னைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.மது குடிப்பவர்களின் எண்ணிக்கையோ, குடிக்கும் அளவின் எண்ணிக்கையோ குறையாத நிலையில், விலை உயர்த்தப்பட்ட பின்பும், அரசுக்கு வருவாய் குறைந்து வருவதற்கு, அதிகளவில் போலி மதுபானங்கள் புழக்கமே காரணம் என்று கூறப்படுகிறது. "பார்'கள் மூலம் போலி மதுபானங்களை விற்பதால், டாஸ்மாக் கணக்கில் விற்பனை அளவு குறைந்துள்ளது.
போலி மதுபானங்களால், போதை ஏறாமல், இன்னும் அதிகமாக குடிக்கும் நிலைக்கு தான் குடிமகன்கள் தள்ளப்பட்டுள்ளனர். சென்னை, கோவை மண்டலங்களில், அண்டை மாநில சரக்குகள் விற்பனையும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. சில நிறுவனங்கள், டாஸ்மாக் நிறுவனம் மூலம் மது வகைகளை அனுப்பாமல், நேரடியாக கடைகளுக்கு அனுப்பி வரி ஏய்ப்பு செய்வதாலும், விற்பனை அளவு குறைந்திருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகப்படுகின்றனர்.
"டாஸ்மாக்' விற்பனை சரிவு ஏன்?
டாஸ்மாக் நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகளின் ஊழல் அதிகரித்ததே, பல்வேறு முறைகேடுகளுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. "டாஸ்மாக்' சில்லறை விற்பனையை தமிழக அரசே துவக்கிய போது, அரசுக்கு வருவாய் அதிகரிக்கத் துவங்கியது. அப்போது, எம்.பி.ஏ., பட்டதாரிகளை மாவட்டத்துக்கு ஒருவர் வீதம், ஒப்பந்த அடிப்படையில் நியமித்து, அவர்கள் மூலம் விற்பனை கண்காணிக்கப்பட்டு வந்தது. இதனால், நிர்வாகத்தில் லஞ்சம் என்பது இல்லாமல் இருந்தது.இந்நிலையில், தி.மு.க., ஆட்சி 2006ல் அமைந்ததும், எம்.பி.ஏ., பட்டதாரிகள், வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். டாஸ்மாக் கடைகளை கண்காணிக்கும் பொறுப்பு, வருவாய்த் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது முதல், ஊழல் அதிகரிக்கத் துவங்கியது. ஒவ்வொரு அதிகாரியும், தங்களுக்கு மாதம் தோரும் கடைகளில் இருந்து, இவ்வளவு தர வேண்டுமென, தொகையை நிர்ணயித்தனர்.
படிப்படியாக வளர்ந்த ஊழல் :
இதை கடைகளின் மேலாளர்கள், கடைக்காரர்களிடம் சுமத்தினர். கடைக்காரர்கள், வாடிக்கையாளர்களின் தலையில் சுமத்தினர். இதனால், குவார்ட்டருக்கு இரண்டு ரூபாய் கூடுதல் விலைக்கு விற்கும் பழக்கம், தமிழகம் முழுவதும் துவங்கியது. இவ்வாறு கூடுதல் விலைக்கு விற்க ஆரம்பித்ததால், உள்ளூர் போலீசார், ரவுடிகள், ஆளுங்கட்சியினர், கவுன்சிலர் ஆகியோர், டாஸ்மாக் விற்பனையாளர்கள், பார் உரிமையாளர்களிடம் மாமூல் வசூலிக்கத் துவங்கினர். இதுவே, நாளடைவில் பெரிய ஊழல் வளர காரணமானது. தமிழக அரசு தனது வருவாயை பெருக்க, குவார்ட்டருக்கு ஐந்து ரூபாய் வீதம் விலையை உயர்த்தியதால், வழக்கத்தை விட, அரசுக்கு விற்பனை வரி மற்றும் ஆயத்தீர்வை மூலம் வருவாய் அதிகரித்திருக்க வேண்டும். ஆனால், விலையை உயர்த்திய பின், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில், வரி வருவாய் குறைந்தது. இதனால் தான், அரசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் சிறியதாக துவங்கிய ஊழல், தற்போது போலி சரக்கு அதிகளவில் விற்பனை செய்தல், அண்டை மாநில சரக்கு விற்பனை செய்தல் என்ற அளவுக்கு உயர்ந்துவிட்டது.
நிறுவனங்களே ஊழல்?
மேலும், மதுபான நிறுவனங்களே, டாஸ்மாக் குடோன் மூலம் சரக்கு வழங்காமல், நேரடியாக கடைகளுக்கு சப்ளை செய்கின்றனவா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அவ்வாறு விற்பனை செய்வதன் மூலம், அரசுக்கு செலுத்த வேண்டிய ஆயத்தீர்வை, விற்பனை வரி என, சரக்கின் விலையில் பாதிக்கும் மேல் மிச்சப்படுத்த முடியும். இதனால் கூட அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. தமிழகம் முழுவதும், தற்போது ஆளுங்கட்சியினர் வசம், "பார்' உரிமம் சென்றுள்ளதால், போலி சரக்கு போன்றவற்றில், அதிகாரிகளால் கடுமையான நடவடிக்கை எடுக்க முடியாத நிலையும் உள்ளது. டாஸ்மாக் கடைகளில் கூட்டம் குறையவில்லை. குடிப்பவர்களின் எண்ணிக்கையும், அளவும் குறையவில்லை. ஆனால், விற்பனை குறைந்து வந்துள்ளது. எனவே, அதிகாரிகள் மட்டத்தில் லஞ்சத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்தால், விற்பனையாளர்கள் மட்டத்தில் முறைகேடுகள் தானாகவே குறைந்துவிடும்.
அடுக்கடுக்கான விதிமீறல்கள் - "டாஸ்மாக்' அதிகாரிகள் அதிர்ச்சி :
தமிழகம் முழுவதும், "டாஸ்மாக்' அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், ஊழியர்களின் பல்வேறு விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனால், அதிர்ச்சியான அதிகாரிகள், சம்பந்தப்பட்டோருக்கு அபராதம் விதிக்க உத்தரவிட்டுள்ளனர். 32 தனிப்படை அதிகாரிகள், "டாஸ்மாக்' கடைகளில் அதிரடிசோதனை நடத்தி வருகின்றனர். கடந்த இரு தினங்களாகத் தொடரும் இந்த சோதனை, இன்றுடன் முடியும். இதில், "டாஸ்மாக்' ஊழியர்களின் பல்வேறு விதிமீறல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
பதிவேடே பராமரிக்கவில்லை!
பல இடங்களில் விற்பனைப் பதிவேடு, இருப்புப் பதிவேடு, பில் புக், சரக்குத் தேவைக்கான பதிவுப் புத்தகம் உள்ளிட்டவை, பராமரிக்கப்படாமல் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். பெரும்பாலான இடங்களில், குடிமகன்கள் வாங்கும் சரக்குகளுக்கு, ரசீது தரப்படவில்லை. பல கடைகளின் ஊழியர்கள், மேற்பார்வையாளர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. சில இடங்களில், "டாஸ்மாக்' தாலுகா அதிகாரிகளும், ஊழியர்களின் விதிமீறல்களுக்கு, உடந்தையாக இருந்ததும் தெரிய வந்துள்ளது.
குடிமகன்களிடம் கறவை:
பல இடங்களில், அதிகபட்ச விற்பனை விலையை விட, கூடுதல் விலைக்கு சரக்கு விற்றுள்ளனர். குறைந்த விலை சரக்குகளைத் தான், பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்றுள்ளனர். இதேபோல், பல இடங்களில், "பார்'களில் உள்ள குளிர்சாதனப் பெட்டிகளில், "பீர்' பாட்டில்களைக் குளிர்வித்து, அதிக விலைக்கு விற்றதையும், அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.பல இடங்களில், கடைகளில் விற்பனைப் பணம் குறைவாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சில கடைகளில், ஊழியர்களே பிளாஸ்டிக் டம்ளர், தண்ணீர் பாக்கெட்கள் வாங்கி வைத்து, அதிக விலைக்கு விற்று சம்பாதித்துள்ளனர். சோதனை குறித்து, "டாஸ்மாக்' பொது மேலாளரிடம் கேட்டபோது, ""வழக்கமாக ஆண்டுதோறும் நடத்தும் சோதனையைத்தான் இப்போதும் நடத்துகிறோம். விதிமீறலில் ஈடுபட்டோருக்கு அபராதம் விதிக்கப்படும். அந்தந்த கடைகள் இருக்கும் பகுதிக்கு பொறுப்பான, அதிகாரிகளுக்கும் அபராதம் விதிப்போம்,'' என்றார்.
நன்றி தினமலர்

பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: டாஸ்மாக் கடைகளில் போலி "சரக்கு'கள்?
எப்பு.... தங்கம் நமக்கு எதுக்கு இந்தக் கன்றாவியப் பத்தி கவலை.
சும்மா பட்டையும்ஊறுகாயும் தான நம்ம தேசிய மப்பு ....
ஹா.... எல்லாம் போச்சு....
இப்ப எல்லாத்துலயும் கலப்படம்....
சும்மா பட்டையும்ஊறுகாயும் தான நம்ம தேசிய மப்பு ....
ஹா.... எல்லாம் போச்சு....
இப்ப எல்லாத்துலயும் கலப்படம்....
Re: டாஸ்மாக் கடைகளில் போலி "சரக்கு'கள்?
குடிமக்கள் இருக்கும் வரை குடி புடிக்கும் உடும்பு பிடி .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: டாஸ்மாக் கடைகளில் போலி "சரக்கு'கள்?
என்கொரு உண்மை தெரிந்தாகனும்பானுகமால் wrote:
பானு மேடம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» டாஸ்மாக் கடைகளில் மீண்டும் விற்பனைக்கு வருகிறது கிங்ஃபிஷர் பீர்
» இன்று இரவு முதல் லாரிகள் ஓடாது... தமிழகத்தில் மட்டும் ரூ 500 கோடி சரக்குகள் தேக்கம்!
» கர்ப்பிணிகள் தெருவோர கடைகளில் காபி பருகுவதை தவிர்க்கவேண்டும்
» கடைகளில் ரெடிமேடாக கிடைக்கும் தேங்காய்த் துருவலைப் பயன்படுத்தலாமா?
» ரேஷன் கடைகளில் நவீன கருவியில் ரசீது போடும் திட்டம் ...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum