சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

குழந்தை பருமனை தடுக்க எளிய வழி Khan11

குழந்தை பருமனை தடுக்க எளிய வழி

2 posters

Go down

குழந்தை பருமனை தடுக்க எளிய வழி Empty குழந்தை பருமனை தடுக்க எளிய வழி

Post by gud boy Sat 1 Oct 2011 - 18:54

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியாவில் குழந்தைப் பருவத்தில் குண்டாக இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. நாடு முழுக்க 5 முதல் 14 வயது வரைக்குட்பட்ட குழந்தைகள் உடல் பருமனாக உள்ளனர்.

இந்தியாவில் பரவலாக 15 பெரு நகரங்களில் 21 பள்ளிகளில் 2,200 மாணவர்கள் மற்றும் 1,898 மாணவிகளிடையே நடந்த ஆய்வில் இது தெரியவந்துள்து என்கிறார் குழந்தை மருத்துவர் எஸ்.பெருமாள்

குண்டாவதற்கு காரணம் என்ன?

பள்ளிப் பருவத்தில் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு குறைந்தது. பல பள்ளிகளில் விளையாடுவதற்கான இடவசதி இல்லாத நிலை.

கம்ப்யூட்டர் விளையாட்டுகள், குழந்தைகளுக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவற்றில் அதிக நேரத்தை செலவிடுவதால் வெளிப்புற விளையாட்டுகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு குறைந்து விடுகிறது.

போட்டிகள் கடுமையாக உள்ள இந்த கால கட்டத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அடுத்து டாக்டராகவோ, இஞ்ஜினீயராகவோ அல்லது பிற துறைகளில் சிறந்த வல்லுநகராகவோ வரவேண்டும் என்பதில் மட்டுமே உறுதியாக இருக்கிறார்களே தவிர குழந்தைகளின் உடற்பயிற்சி பற்றி பெரிதாக கண்டு கொள்வதில்லை.

பெரும்பாலான குழந்தைகளுக்கு தினமும் எந்த விதமான உடற்பயிற்சியும் இல்லாத நிலையில், வீட்டிலிருந்து பணிக்கு ஏ.சி.கார் அல்லது பைக்கில் அழைத்துச் செல்லப்படுவதோடு, பாஸ்ட்-புட் எனப்படும் துரித உணவகங்களின் நொறுக்குதீனி எனப்படும் அதிக கலோரி உணவுகளை உட்கொள்வதும் இதற்கு காரணமாக உள்ளது.

மேலும் பெரும்பாலான தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை தொடக்கத்தில் 1 வயது அல்லது 2 வயதிலிருந்து தேவைக்கதிகமாக அதிக கலோரியுள்ள உணவு ஊட்டி பழக்கப்படுத்தி விடுகின்றனர். இதனால் அதிகமாக சாப்பிடுவதற்கு பழக்கப்பட்டு விடுகிற அவர்கள் தொடர்ந்து குண்டாகி விடுகின்றனர்.

ஒரு சில குழந்தைகள் தைராய்டு மற்றும் ஒரு சில ஹார்மோன் குறைபாடுகளால் குண்டாகி விடுகின்றனர். சிலர் தங்கள் குடும்பத்தில் மரபணு எனப்படும் பரம்பரையாகவே குண்டாக உள்ளனர்.

அளவுக்கதிகமாக உடல் பருமனாக இருப்பவர்களுக்கு சர்க்கரை வியாதி, இருதய நோய்கள், ரத்தக் கொதிப்பு, சுவாசக் கோளாறுகள், கல்லீரல் வியாதிகள் மற்றும் அளவுக்கதிகமாக தூக்கம் போன்ற பிரச்சினைகள் வருகின்றன. மேலும் இவர்களின் மனரீதியாக தங்களை தரம் தாழ்த்தி கொள்வதோடு தன்னம்பிக்கையையும் இழக்கின்றனர்.

உடற்பயிற்சி:

குழந்தைகள் அளவுக்கதிகமாக குண்டாக இருந்தால் ஆரம்பத்திலேயே அருகிலுள்ள குழந்தை நல மருத்துவரிடம் காண்பித்து, தைராய்டு போன்ற ஹார் மோன் குறைபாடுகள் ஏதேனும் உள்ளதா? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

குறிப்பிடத்தக்க காரணம் வேறு இல்லை என்றால் சாப்பாடு கட்டுப்பாடு ரொம்ப, ரொம்ப முக்கியம். தினந்தோறும் நடைப் பயிற்சி அல்லது உடற்பயிற்சி மேற்கொள்வதோடு, பள்ளிகளில் விளையாட்டுகளில் ஆர்வமாக கலந்து கொள்ள வேண்டும்.

சாப்பாட்டில் காய்கறிகள் அதிக அளவில் சேர்த்துக் கொள்வதோடு சாப்பாட்டு அளவை குறைத்துக் கொள்ள வேண்டும். பழங்கள் சேர்த்துக் கொள்ளலாம். எண்ணை பலகாரங்கள் போன்ற நொறுக்குத் தீனியை தவிர்ப்பது நல்லது.

உணவு முறை:

குழந்தைகளுக்கு எடை போடுவது என்பது, சாதாரண எடையை விட அவர்கள் 20 சதவிகிதம் அதிக எடை உள்ளவர்களாக இருப்பதாகும். இது மருத்துவப் பிரச்சினை என்பதை விட இது ஒரு சமூகப் பிரச்சினை என்று கூறுவதே பொருத்தம். நாம் சமூகம், குண்டான குழந்தைகளை அதிகம் விரும்புகிறது.

இந்த குழந்தைகளையே `க்யூட்' என்று செல்லமாக அழைக்கிறோம். சுருக்கமாக குண்டு குழந்தைகளையே நாம் ஏற்று கொள்கிறோம். தற்போது 100 மில்லியன் இந்தியர்கள் சதைப் போட்டு குண்டாக இருக்கிறார்கள் என புள்ளியல் விவரம் ஒன்று தெரிவிக்கிறது. இதில் அபாய கரமானது என்ன வென்றால் டீனேஜில் அதிகமாக உடல் எடை உள்ளவர்களின் எண்ணிக்கை பெருகிவருகிறது.

நகர்ப்புற பள்ளிகளில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில், டீனேஜர்களின் உடல் எடை பெருக்கம் அதிகமாகி இருப்பது தெரிய வந்திருக்கிறது. குறிப்பாக 11 வயது முதல் 16 வயது நிரம்பியவர்களின் உடல் எடை அதிகமாகி வருவதாக மருத்துவ அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

உணவு பழக்கங்கள்:

வீட்டிலுள்ள பெரியவர்களின் தவறான உணவு உட்கொள்ளும் வழிமுறை அப்படியே குழந்தைகளையும் தொற்றிக் கொள்வதால் குழந்தைகள் உடல் பருமன் அதிகரிக்கிறது.

குடும்ப சூழ்நிலை:

தனிமையில் விடப்பட்ட பாதுகாப்பற்ற குழந்தைகள், அதிகமாக உணவு உட்கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இதனால் தேவையற்ற உடல் பருமன் ஏற்படுகிறது.

பருமனால் ஏற்படும் நோய்கள்:

சர்க்கரை வியாதி, தைராய்டு சுரப்பிகளின் செயலிழப்பு, ஸ்டீராய்ட் போன்ற உடல் பருமன் ஏற்படுத்தும் மருந்துகளை சாப்பிடுதல். தேகப்பயிற்சியில் சிறிது கூட ஈடுபடாமல், எப்போதும் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருப்பதும், அல்லது கம்ப்யூட்டர் முன்னால் அமர்ந்து கொண்டிருப்பதும் சிறு வயது உடல் பருமன் ஏற்படுவதற்கு காரணமாகிறது.

உடல் பருமன் என்பது வாழ்க்கை முழுவதும் உடல் ரீதியாகவும், மனதளவிலும் பல பிரச்சினைகளைக் கொடுக்கக் கூடிய விஷயமாகும். பருமனான டீனேஜர்களிடம் தாழ்வு மனப்பான்மை ஏற்படும். தங்கள் உருவம் குறித்து கவலை கொண்டு தனிமைப்பட்டுப் போவார்கள்.

இவர்கள் அதிக கூச்ச சுபாவம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள். உடல் ரீதியாக கவர்ச்சியாக இல்லாதவர்கள், எதிர்பாலினரால் வெறுத்து ஒதுக்கப்பட்டதைப் போல உணர்வார்கள். இது மனோரீதியான துன்பத்தை ஏற்படுத்தும்.

தன்னைப் பற்றியே தாழ்வாக நினைத்துக் கொள்ளும் இவர்களின் உடற் பருமன் இதனால் இன்னும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. உடற் பருமனால், இருதய நோய்களும், எலும்பு தொடர்பான நோய்களும், எலும்பு, மூட்டு ஆகியவை தேய்ந்து போவதும், சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் அதிகரிப்பது போன்றவைகள் ஏற்படும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும், கர்ப்பமாவதில் பிரச்சினைகளும், குழந்தை பிறப்பில் பிரச்சினைகளும் உடல் பருமனுடன் தொடர்புபடுத்தப்படுகிறது.

வயது உடல் எடை.கிலோ எடுத்துக் கொள்ள வேண்டிய கலோரி

1 10 1000

2 12 1100

3 14 1200

4 16 1300

5 18 1400

6 20 1500

7 22 1600

8 25 1700

9 29 1800

10 32 1900

11 36 2000

12 39 2100

பெற்றோர் செய்ய வேண்டியவை:

உங்கள் குழந்தைகளுக்கு 3 அல்லது 4 முறை சரியான அளவு உணவு கொடுங்கள், குளிர் பானங்கள் அருந்துவதை தடை செய்யுங்கள். அதற்குப் பதிலாக பழச்சாறுகள், தண்ணீர், கொஞ்சம் பால் என அவர்கள் மனதை மாற்றுங்கள். அளவைக் குறைத்து உணவின் தரத்தில் கவனம் செலுத்துங்கள்.

உட்கார்ந்து கொண்டே இருப்பதை தவிருங்கள், தேகப்பயிற்சி செய்வதை பழக்கப்படுத்துங்கள். கலோரியை அதிகரிக்கும் உணவை தவிர்த்து விடுங்கள். உணவுப் பொருட்களை குழந்தைகளுக்கு பரிசாக அளிப்பதை தவிருங்கள்.

சுருக்கமாக குழந்தைப் பருவ உடற்பருமன், டினேஜிலிருந்து மற்றும் பெரியவர்களான பின்பும், பல பிரச்சினைகளை, ஏற்படுத்தக் கூடியது. ஆகவே சிறு வயதிலேயே கவனமான முறைகளை கையாண்டு பருமனைக் குறைக்க தகுந்த ஆலோசனை பெறுங்கள்.
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

குழந்தை பருமனை தடுக்க எளிய வழி Empty Re: குழந்தை பருமனை தடுக்க எளிய வழி

Post by Atchaya Sat 1 Oct 2011 - 18:56

பள்ளிப் பருவத்தில் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு குறைந்தது. பல பள்ளிகளில் விளையாடுவதற்கான இடவசதி இல்லாத நிலை.

கம்ப்யூட்டர் விளையாட்டுகள், குழந்தைகளுக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவற்றில் அதிக நேரத்தை செலவிடுவதால் வெளிப்புற விளையாட்டுகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு குறைந்து விடுகிறது.

உட்கார்ந்து கொண்டே இருப்பதை தவிருங்கள், தேகப்பயிற்சி செய்வதை பழக்கப்படுத்துங்கள். கலோரியை அதிகரிக்கும் உணவை தவிர்த்து விடுங்கள். உணவுப் பொருட்களை குழந்தைகளுக்கு பரிசாக அளிப்பதை தவிருங்கள்.
:!+: :!+:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum