சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பற்கள்: சிரிப்பதற்கு மட்டுமல்ல, செரிப்பதற்கும்! Khan11

பற்கள்: சிரிப்பதற்கு மட்டுமல்ல, செரிப்பதற்கும்!

2 posters

Go down

பற்கள்: சிரிப்பதற்கு மட்டுமல்ல, செரிப்பதற்கும்! Empty பற்கள்: சிரிப்பதற்கு மட்டுமல்ல, செரிப்பதற்கும்!

Post by gud boy Sat 1 Oct 2011 - 19:07

பல் வியாதி என்று பல் டாக்டரிடம் போனால் ஒரே நாளில் சிகிச்சை அளிக்கமாட்டார். பத்து தடவை வரச் சொல்வார். முடிகிற காரியமா இது. அதனால்தான் நான் பல் டாக்டர் பக்கம் போவதே இல்லை என்று நிறைய பேர் சொல்வதுண்டு. நினைப்பதும் உண்டு. இது மிகப்பெரிய தவறு.

சும்மா தேவையில்லாமல் எந்தப் பல் டாக்டரும் உங்களை பத்து தடவை வரச் சொல்ல மாட்டார்கள். பல்வலி என்று நீங்கள் பல் டாக்டரிடம் போனால் அவர் உங்கள் பல்லைப் பிடுங்குவதற்கு ஒரு நிமிடம்தான் ஆகும். ஆனால் ஒரு பல்லைக் காப்பாற்ற பல நாட்கள் சிகிச்சை கொடுத்துத்தான் ஆக வேண்டும்.

கருவாடு மீனாகாது என்பதுபோல் பிடுங்கின பல் போனது போனதுதான். அந்த இடத்தில் வேறு பல் முளைக்காது. இப்படி ஒவ்வொரு பல்லாக பிடுங்கிக் கொண்டே இருந்தால் வாய் என்னாவது? எப்படி சாப்பிடுவது? எப்படி மெல்லுவது? எப்படி பேசுவது? மொத்த பற்களும் இருந்தால்தான் இவை எல்லாவற்றையும் ஒழுங்காக செய்ய முடியும்.

ஒழுங்காக பேசுவதற்கு பல உறுப்புகள் காரணமாகின்றன. இதில் பற்களுக்கும் முக்கிய பங்குண்டு. பற்கள் இல்லாமல் பேசினால் வார்த்தை உச்சரிப்பு எப்படியிருக்கும் என்பதை பல் இல்லாதவர்கள் பேசும்போது பார்த்திருப்பீர்களே!. அதே மாதிரி உங்கள் அழகான சிரிப்பும் பற்களை வைத்துத்தானே! எனவே பற்களை முடிந்தவரை காப்பாற்றப் பார்க்கணுமே!

எல்லா சிகிச்சையும் பண்ணிப் பார்த்தாச்சு. வேறு வழியே இல்லையென்றால் அப்பொழுதுதான் பல்லைப் பிடுங்க வேண்டும். பல் விழுந்துவிட்ட இடத்தில் `இம்பிளாண்ட் டூத்' என்று சொல்லக்கூடிய செயற்கைப் பல்லைப் பொருத்தலாம். ஆனால் இதற்கு நோயாளியின் தேக ஆரோக்கியம் நன்றாக இருக்க வேண்டும்.

நல்ல சுத்தமான, பலமான ஈறு மற்றும் தாடை எலும்பு இருக்க வேண்டும். சிகரெட் உபயோகிக்காதவராக இருக்க வேண்டும். (பின்னாளில் உங்களுக்கு செயற்கைப் பல் பொருத்த வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்படலாம். எனவே சிகரெட்டை விட்டு விடுங்கள்) பல்லுக்கு மேலே மெல்லியதாக மூடப்பட்டிருக்கும் வெள்ளை நிற பளபளப்பான பொருளுக்கு பெயர் எனாமல் ஆகும்.

இந்த எனாமல் ஒரு வகை `கால்சியம் பாஸ்பேட் கிரிஸ்டல்' உப்பால் ஆனது. பற்கள் பளபளவென்று இருக்க இதுதான் காரணம். பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள், பழச்சாறுகள், இனிப்பு கலந்த தின்பண்டங்கள். இவை எல்லாமே பல் சொத்தையை உண்டுபண்ண மிகமிக முக்கிய காரணமாக இருக்கின்றன.

நாம் சாப்பிடும் உணவிலுள்ள இனிப்பில் சுக்ரோஸ் என்ற பொருள் இருக்கிறது. இந்த சுக்ரோஸ் பற்களின் மேலும் வாயின் எல்லாப் பகுதியிலும் படிந்து விடுகிறது. அப்படி படியும் சுக்ரோஸ் ஏற்கனவே வாயிலுள்ள கிருமிகளுடன் சேர்ந்து லேக்டிக் அமிலமாக மாறிவிடுகிறது.

இந்த லேக்டிக் அமிலம்தான் பல்லுக்கு மேலுள்ள எனாமல் படலத்தை உடைத்து பல்லினுள் புகுந்து பற்சிதைவை உண்டு பண்ணுகிறது. சர்க்கரைப் பொருள் வாயில் நீண்ட நேரம் இருந்தால் பற்களின் பாதிப்பும் அதிகமாக இருக்கும். அதற்காகத்தான் இனிப்பு பொருட்களைச் சாப்பிட்டவுடன் வாயை நன்றாக கொப்பளிக்க வேண்டும் என்று சொல்வார்கள்.

சர்க்கரைப் பொருள் வாயில் அதிகமான நேரம் இருப்பதால் மட்டுமல்ல, பலமுறை இனிப்பு பொருளை சாப்பிடும்போதும் பல் அதிகமாக பாதிக்கப்படுகிறது. ஒரு நாளில் ஒரே ஒரு முறை இனிப்பு பொருளை சாப்பிடுவதை விட நாள் முழுக்க நினைக்கும்போதெல்லாம் இனிப்பு பொருட்களை சாப்பிடுவது பற்களுக்கு அதிகமான பாதிப்பை உண்டு பண்ணும்.

எனவே இனிப்பு பொருள் சாப்பிடணும் என்று நினைத்தால் ஒரு நாளில் ஏதாவதொரு வேளை மட்டும் சாப்பிட்டு விட்டு நிறுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் ஒவ்வொரு முறை இனிப்பு சாப்பிடும் போதும் வாயிலுள்ள அமிலத்தன்மை மாறுகிறது.

இதுதான் கெடுதியை உண்டு பண்ணுகிறது. அதேமாதிரி அமிலத்தன்மை அதிகமாக உள்ள பழச்சாறுகள், பாட்டில் குளிர் பானங்கள், ரசாயனப் பொருட்கள் கலக்கப்பட்ட உணவுப்பொருட்கள் போன்றவை பல்லில் பட்டாலும் `எனாமல்' பாதிக்கப்படும்.

மிக மெல்லிய தரமான பிரஷ்ஷை உபயோகித்து வந்தாலுங்கூட நிறைய தடவை தண்ணீரால் நன்கு கொப்பளித்து பற்களுக்கிடையில் எதுவும் தங்கவில்லை என்று உறுதி செய்து கொள்ள வேண்டும். அதுவரை நன்றாக பலமுறை கொப்பளித்தல் தப்பில்லை.

அதேமாதிரி இரவில் பால் குடித்துவிட்டு வாயைக் கொப்பளிக்காமல் அப்படியே தூங்குவதும் எனாமலை பாதித்து பற்களுக்கு வேட்டு வைத்து விடும். எனவே எது சாப்பிட்டாலும் உடனே வாயைக் கொப்பளித்துவிட வேண்டும்.

இன்றைக்கும்கூட வீட்டிலுள்ள பெரியவர்கள் இரவில் தாகம் எடுத்தால் எது எந்த நேரமானாலும் சரி முதலில் வாயைக் கொப்பளித்து விட்டுத்தான் தண்ணீர் குடிப்பார்கள். புளோரைடு என்கிற உப்புப் பொருள் பல் சொத்தையாவதைத் தடுக்க மிகவும் பயன்படுகிறது.

ஆற்றிலும், கடலிலும் உள்ள தண்ணீரில் இயற்கையாகவே இந்த புளோரைடு உப்பு கலந்திருக்கிறது. ஏன் தாய்ப்பாலில் கூட புளோரைடு உப்பு இருக்கிறது. நாம் டெலிவிஷனில் பார்க்கும் விளம்பரங்களில் கூட புளோரைடு கலந்த டூத்பேஸ்ட் என்று அடிக்கடி சொல்வதுண்டு.

புளோரைடு உப்புப் பொருளை சரியான, தேவையான அளவில் பொதுமக்கள் உபயோகப்படுத்தும் தண்ணீரில் கலந்தால் அதிகமான பேரை பல் சொத்தையிலிருந்து பாதுகாக்கலாம் என்று பல் மருத்துவக் கவுன்சில் மற்றும் பெரிய பல் மருத்துவ நிறுவனங்கள் ஆலோசித்து வருகின்றன.
பல்லில் பிரச்சினை ஆரம்பிக்கிறது என்று தெரிந்தால் உடனே வெந்நீரில் கல் உப்பு போட்டு நன்றாக பலமுறை வாயைக் கொப்பளியுங்கள்.

இது முதலுதவி தான். அப்புறமாய் உங்கள் பல் டாக்டரை சென்று பாருங்கள். சாப்பாட்டு விஷயத்தில் கவனமாக இருந்தும், மாத்திரைகளை ஒழுங்காக சாப்பிட்டும் சர்க்கரை அளவு கண்ட்ரோலில் வரமாட்டேங்குதே என்று கவலைப்படும் சர்க்கரை நோயாளிகளே, உடனே பல் டாக்டரிடம் சென்று மொத்தப் பற்களையும் ஒருமுறை சுத்தம் செய்துவிட்டு வாருங்கள்.

சர்க்கரையின் அளவு உடனே குறைந்துவிடும். பற்கள் அதிகமாக பிடுங்கப்பட்டு, வாயில் குறைவான பற்களே இருந்தால் உணவை சரியாக மெல்ல முடியாது. உணவு சரியாக மெல்லப்படாவிட்டால் அரைகுறையாக வயிற்றில் போய் ஜீரணம் ஆவதற்கு தாமதமாகும்.

ஆகவே பற்கள் சிரிப்பதற்கு மட்டுமல்ல, செரிப்பதற்கும் உபயோகப்படுகிறது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். பற்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

பற்கள்: சிரிப்பதற்கு மட்டுமல்ல, செரிப்பதற்கும்! Empty Re: பற்கள்: சிரிப்பதற்கு மட்டுமல்ல, செரிப்பதற்கும்!

Post by Atchaya Sat 1 Oct 2011 - 19:10

எனாமல் ஒரு வகை `கால்சியம் பாஸ்பேட் கிரிஸ்டல்' உப்பால் ஆனது. பற்கள் பளபளவென்று இருக்க இதுதான் காரணம்


புளோரைடு உப்புப் பொருளை சரியான, தேவையான அளவில் பொதுமக்கள் உபயோகப்படுத்தும் தண்ணீரில் கலந்தால் அதிகமான பேரை பல் சொத்தையிலிருந்து பாதுகாக்கலாம்

:!+: :!+: ##*
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum