Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அலட்சியம் வேண்டாம் மூளையும் முக்கியம்!
2 posters
Page 1 of 1
அலட்சியம் வேண்டாம் மூளையும் முக்கியம்!
அலட்சியம் வேண்டாம் மூளையும் முக்கியம்!
ஒருவர் கைகால்கள் செயலிழந்து போகும்போது அதைப் பாரிசம் அல்லது பக்கவாதம்
என்று வீட்டில் உள்ளவரே கணித்து சிகிச்சையை தள்ளிப் போடுகின்றனர். அதற்கு
ஒரு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஏனென்றால் அதனால் உடனடியாக இறப்பு
ஏற்படாது அன்ற எண்ணம். அதே இருதயப்பகுதியில் வலி என்றால் பதறி புரண்டு
மருத்துவரைப் பார்க்க ஓடுகின்றனர். ஏன் இந்தப் பாகுபாடு?
இதய நோயாளி நடக்கலாம், பேசலாம், தன் வேலைகளை செய்து கொள்ளலாம். ஆனால் கை,
கால் பாரிசம் ஆனவரோ, அவர்களின் அன்றாட செயல்களை செய்துக்கொள்வது சிரமம்.
அதற்கு அடுத்தவரின் துணை வேண்டுகிறது. மனதளவில் பாரிசம் ஏற்பட்டவர்கள்
வாழ்நாள் முழுவதும் குன்றி குறுகி நிற்கின்றனர். ஏன் இந்த பாகுபாடு..?
ஆங்கிலத்தில் GOLDEN HOUR என்று கூறப்படும் நேரம் மிகவும் முக்கியமானது.
ஒருவர் விபத்தில் அடிபட்டாலோ, இதய நோயால் மாரடைப்பு ஏற்பட்டாலோ, அல்லது
பாரிசம் ஏற்பட்டாலோ, அந்த முதல் ஒரு மணி நேரக் கவனிப்பு அவருடைய
குணமடைதலுக்கு துணை செய்கின்றது. பாரிசம் ஏற்பட்டவர், முதல் ஒரு மணி
நேரத்தில் மருத்துவம் பெற்றால் அவருடைய குறை முற்றிலும் குணமாகலாம். ஏன்
எல்லோரும் போல் நன்றாக நடந்து பேசி வேலை செய்யமுடியும்.
உதாரணமாக எங்கள் மருத்துவமனைகளில் ஒரு 35 வயது நபர் இடது பக்க பாரிசத்துடன்
15 நிமிடங்களில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்து, அவருக்கு சிகிச்சை
உடனடியாக தொடரப்பட்டது, அவர் 10 நாட்களில் முழுவதுமாக குணமாகி வீட்டுக்கு
சென்றார். இன்று அவர் என்ன தொழில் செய்துக்கொண்டிருந்தோரோ அதையே தொடர்ந்து
செய்து வருகின்றார்.
பாரிசத்திற்கு இன்னொரு காரணம் உண்டு. அதாவது மூளையில் மண்டை ஒட்டிற்கும்
மூளைக்கும் இடையே இரத்தம் சேர்ந்து அது அழுத்தம் கொடுக்கின்றது. அதை
Subdural Hematoma என்பர்.
எதனால் ஏற்படுகின்றது? (Chronic subdural Hemation) தலைக்காயம் பட்டால்
ஏற்படலாம், ஆனால் 6 வாரத்தில் இருந்து. 11\2 வருடம் வரை வரலாம். இது
மெதுவாக கசிந்து கட்டியாகும்போது தான் தன்மையை காட்டுகின்றது. அது
பெரிதாகும்போது எந்த பகுதியில் உள்ளதோ அதற்கு எதிர்பகுதி கை கால்கள் செயல்
இழந்து போகின்றன. கோமா நிலை ஏற்படுகின்றது.
இந்த நோயாளியை உடனடியாக CT scan படம் எடுத்து பார்த்தால், இந்த காரணம்
தெரியும். அதை உடனடியாக அறுவை சிகிச்சையின் மூலம் அப்புறப்படுத்தினால்
நோயாளி தன் சுய நினைவை அடைந்து, கை, கால் பாரிசம் குறைந்து நன்றாக
குணமடைவர்.
எங்களிடம் ஒரு 70 வயது பெரியவர் கொண்டுவரப்பட்டார். அவர் நினைவு இல்லாமல்
கோமா நிலையில் இருந்தார். அவருக்கு வலது கை கால்களில் செயல் இல்லை. அவருடைய
மூளைப்படம், இடது மூளைப்படத்தில் இரத்தக்கட்டி இருப்பது தெரிந்தது. அதன்
அளவு பெரியதாக இருந்ததால் இடது மூளை வலது மூளையை தள்ளிக்கொண்டு இருந்தது.
நோயாளியின் மகன்கள் அவர் குணமடைவாரா என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தனர்.
அவர்களிடம் இந்த அறுவை சிகிச்சையினால் அவர் முற்றிலும் குணமடைவார். மற்றும்
அறுவை சிகிச்சை செய்யும் போதே அவர் நினைவு பெறுவார் என்று கூறி அறுவை
சிகிச்சை செய்தேன். மூளையின் சவ்வை திறக்கும்போது இரத்தம் வெளிவந்தது.
அவ்வாறு வெளிவரும்போதே அவர் நினைவு திரும்பியது, சப்தம் போட ஆரம்பித்தார்.
அறுவை சிகிச்சை முடிந்து வெளிவரும்போது அவரின் மகன்களுடன் பேசினார். 5
ஆண்டுகளுக்கு பின்னும் நன்றாக நடந்துகொண்டு சராசரி மனிதனாக வாழ்ந்து
கொண்டிருக்கிறார்.
பாரிசம் என்பது கை, கால், செயல் இழப்பை குறிக்கின்றது. அதற்கான காரணங்கள்
ஏராளம். அதை மூளை படம் எடுப்பதால் தெரிந்து கொள்ளலாம். (Chronic subdural
hematoma) நாள்பட்ட இரத்த கசிவினால் ஏற்பட்ட பாரிசம் அறுவை சிகிச்சை
செய்தவுடன் குணமடையும். குடிப்பழக்கம் இருப்பவருக்கு இந்த இரத்த கசிவு
சுலபமாக வருவதுண்டு. எனவே குடிப் பழக்கத்தை நிறுத்த பழகிக்கொள்ள வேண்டும்.
பாரிசம் ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சைக்கு நரம்பியல் நிபுணரிடம் கொண்டு
செல்லுங்கள்.
உணர்வுபூர்வமாக எந்த விஷயத்தையும் அணுகுவதை விட அறிவு பூர்வமாக அணுகுவது
தெளிவைத் தரும் தானே? எதைக் குறிப்பிடுகிறேன் என்கிறீர்கள்...? இதய
நோய்க்கு தரும் முக்கியத்துவத்தை மூளை நோய்க்கும் தர வேண்டும் என்பதைத்
தான் அதோடு குடிப்பழக்கம் குடியை மட்டும் கொடுப்பதில்லை. மூளையையும் பதம்
பார்க்கிறது. குவாட்டர், லார்ஜ், ஸ்மால் இந்த வார்த்தைகளோடு இனி பாரிசம்
என்ற வார்த்தையையும் சேர்த்து சியர்ஸ் சொல்லுங்கள். குடிப்பழக்கம் தானாக
ஓடிவிடும்.
நன்றி: மீனாட்சி மருத்துவ மலர்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அலட்சியம் வேண்டாம் மூளையும் முக்கியம்!
நன்றி தோழரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum