சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சென்னையில் பயங்கரப் புயல் 4 கப்பல்கள் தரை தட்டின Khan11

சென்னையில் பயங்கரப் புயல் 4 கப்பல்கள் தரை தட்டின

Go down

சென்னையில் பயங்கரப் புயல் 4 கப்பல்கள் தரை தட்டின Empty சென்னையில் பயங்கரப் புயல் 4 கப்பல்கள் தரை தட்டின

Post by *சம்ஸ் Fri 14 Jan 2011 - 19:31

சென்னையில் பயங்கரப் புயல் 4 கப்பல்கள் தரை தட்டின 62d16b6d-5fa9-409a-bd03-fcb2fe27c76b_S_secvpf
1966_ம் ஆண்டில் சென்னையை பயங்கர புயல் தாக்கியது. 4 கப்பல்கள் தரை தட்டின. பயங்கர சேதங்கள் ஏற்பட்டன.

சென்னையை புயல் தாக்கிய தேதி 3_11_1966. அன்று சென்னை நகரில் இதுவரை கண்டறியாத வகையில் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை புயல் கடுமையாக வீசியது. மணிக்கு சுமார் 100 மைல் வேகத்தில் புயல் வீசியது. இந்த புயல் காரணமாக கடலில் ராட்சத அலைகள் எழுந்தன. மழையுடன் சூறாவளி காற்று சுழன்று சுழன்று வீசியது.

ராயபுரம் பனைமரத்தொட்டி குப்பத்துக்குள் கடல் தண்ணீர் புகுந்தது. 100 குடிசைகளை அடித்துச் சென்றது. கடற்கரையில் இருந்து 2 பர்லாங்கு தூரத்தில் இருந்த மாதா கோவிலுக்குள் கடல் புகுந்து கொண்டது.

சாந்தோம் கடற்கரை எஸ்டேட் பகுதியிலும் கடல் நீர் புகுந்தது. இதனால் நொச்சிகுப்பம், டொம்மிகுப்பம், முள்ளிகுப்பம் ஆகிய குப்பங்களில் இருந்த நூற்றுக்கணக்கான குடிசைகள் மூழ்கியது. தாம்பரத்தில் 1,000 குடிசைகளில் வெள்ளம் புகுந்தது.

கூவம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. விமானங்கள், மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.

புயலால் சென்னையில் 4 கப்பல்கள் தரை தட்டி நின்றன. அதில் 2 கப்பல்கள் பாறை மீது மோதி நொறுங்கின.

சென்னை துறைமுகத்துக்கு வெளியே லைபீரியா நாட்டைச் சேர்ந்த "புராகிரஸ்" என்ற கப்பல் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. புயலால் அலைகளிக்கப்பட்ட அந்த கப்பல் ஒரு பாறையில் மோதி இரண்டாக பிளந்தது. பிறகு கடலில் மூழ்கியது. கப்பலின் கொடி மரமும், மேல் தளமும் மட்டும் லேசாக தெரிந்தபடி இருந்தது.

இந்த கப்பலில் கேப்டன் உள்பட 47 பேர் இருந்தார்கள். அனைவரும் சீனாவை சேர்ந்தவர்கள். கப்பல் புயலில் சிக்கி மூழ்கும் தருவாயில் கேப்டனும் மற்றும் 14 பேரும் நீந்தியும் படகில் ஏறியும் கரை சேர்ந்தனர். மேலும் 8 பேர் கொடி மரத்தில் தொங்கியபடி இரவு முழுவதும் போராடி மறுநாள் காப்பாற்றப்பட்டார்கள். இவர்களை தவிர மீதி 18 பேரும் கடலில் மூழ்கி இறந்து போனார்கள். 2 பேரின் உடல்கள் மட்டும் கரையில் ஒதுங்கின.

"எல்.எஸ்.ஸ்டிமாடிஸ்" என்ற கிரேக்க நாட்டு சரக்கு கப்பல், "எஸ்.எஸ்.மாரி கோரா" என்ற இன்னொரு கிரேக்க கப்பல், "எம்.வி.ராஜஸ்தான்" என்ற இந்திய சரக்கு கப்பல் ஆகிய 3 கப்பல்களும் புயலில் சிக்கி தரை தட்டின.

"எஸ்.எஸ்.ஸ்டிமாடிஸ்" என்ற சரக்கு கப்பல் கடற்கரையில் சென்னை பல்கலைக்கழக கட்டிடத்துக்கு எதிரே கடலில் பாதி தண்ணீரிலும், பாதி மணலிலும் புதைந்தபடி நின்றது. மழை சற்று ஓய்ந்ததும், இந்த கப்பலை காண ஆண்களும், பெண்களும் கடற்கரைக்கு கூட்டம் கூட்டமாக சென்றனர். கப்பலை பார்க்க சுமார் ஒரு லட்சம் பேர் திரண்டனர்.

"எஸ்.எஸ்.மாரி தோரா" கப்பல், துறைமுக அலுவலகத்துக்கு எதிரே கரையில் வந்து முட்டியது. அதில் இருந்த 29 ஊழியர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த கப்பல் இரண்டாகப் பிளந்தது. கடல் நீர் புகுந்து கப்பல் மூழ்கியது.

"எம்.வி.ராஜஸ்தான்" கப்பல் அடையாறு ஆறு அருகே தரை தட்டி நின்றது. ஆன போதிலும் அந்த கப்பலுக்கு சேதம் எதுவும் இல்லை. "எம்.வி.அந்தமான்" என்ற பயணிகள் கப்பலும் புயலில் சிக்கியது. கப்பல் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. பிறகு அது சரி செய்யப்பட்டது. புயல் ஓய்ந்த பிறகு அந்த கப்பல் அந்தமான் நோக்கி பயணத்தை தொடர்ந்தது.

ராமேசுவரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த "ராமேசுவரம் பாசஞ்சர்" ரெயில், மதுராந்தகம் அருகே புயலால் கவிழ்ந்தது. ரெயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டன. ரெயில் போக்குவரத்து பாதித்தது. சென்னை நகரில் இந்த புயல் _ மழைக்கு 12 பேர் உயிர் இழந்தார்கள். சுமார் 2 ஆயிரம் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. புயல் பாதித்த இடங்களை முதல்_மந்திரி பக்தவச்சலம் நேரில் சென்று பார்வையிட்டார்.

இதேபோன்று 1977_ம் ஆண்டு நவம்பர் மாதம் மற்றொரு புயல், தமிழ்நாட்டை தாக்கியது. இந்த புயலின் கோரதாண்டவத்தில் தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டது. நாகப்பட்டினத்துக்கு கிழக்கே வங்க கடலில் உருவான புயல் நவம்பர் 12_ந்தேதி தமிழ்நாட்டுக்குள் புகுந்து மணிக்கு 65 மைல் வேகத்தில் வீசியது. இதில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன.

நாகப்பட்டினம் வெளி உலகில் இருந்து 5 நாட்கள் துண்டிக்கப்பட்டு கிடந்தது. திருச்சி அருகேயுள்ள தோரை ஆறு உடைப்பு எடுத்துக்கொண்டதால் திருச்சி கிராபட்டி, புத்தூர், கருமண்டலம், மிளகுபாறை, ராமலிங்கநகர் முதலிய பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. ஊருக்குள் 5 அடி உயரத்துக்கு தண்ணீர் ஓடியது. பிஷப் ஹீபர் கல்லூரி, தேசிய கல்லூரி ஆகியவற்றில் வெள்ளம் புகுந்தது.

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க ராணுவம் வரவழைக்கப்பட்டது. படகுகளிலும் ஹெலிகாப்டர்களிலும் சென்று ராணுவத்தினர் மீட்பு பணியில் ஈடுபட்டார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு விமானத்தில் இருந்து உணவு பொட்டலங்கள் போடப்பட்டன.

புயல்_வெள்ள சேதப்பகுதிகளை முதல்_அமைச்சர் எம்.ஜி.ஆர். விமானத்தில் பறந்தபடி பார்வையிட்டார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறுகையில், "நாங்கள் விமானத்தில் சென்று பார்த்தபோது எங்கும் தண்ணீரைத்தான் பார்த்தோம். எத்தனை நதிகள் புதிதாக உருவாகி இருக்கிறதோ என்று எண்ணத்தக்க அளவில் தண்ணீர் இருக்கிறது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் சேதம் அடைந்துள்ளன. ஆனால் உயிர் சேதம் பற்றி சரியாக மதிப்பிட முடியவில்லை" என்று கூறினார்.

தண்ணீர் வற்றிய பிறகு சேறும் சகதியுமாக உள்ள இடங்களில் பிணங்கள் உருக்குலைந்து கிடந்தன. சில பகுதிகளில் ஒரே இடத்தில் குவியல் குவியலாக பிணங்கள் கிடந்தன. திண்டுக்கல் அருகே வேடசந்தூர் பக்கம் இருந்த குடவனாறு அணை வெள்ளத்தின் வேகம் தாங்காமல் உடைந்தது. இந்த அணை நீர் அருகில் இருந்த 3 கிராமங்களை அடியோடு அழித்து விட்டது. வெள்ளம் வரும் என்று பயந்து ஏராளமானபேர் ஊரை காலி செய்து ஓடியதால் உயிர் தப்பிவிட்டார்கள்.

சென்னையில் புயலில் சிக்கிய கப்பல் கடலில் மூழ்கியது. அந்தக் கப்பலின் சீன மாலுமியின் உடல், துறைமுகம் அருகே கரையில் ஒதுங்கியது.
பிறகும் அடுத்தடுத்து புயல் உருவானது. இதனால் மழை நீடித்து மீட்பு பணி பாதிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் புயல்_மழைக்கு பலியானார்கள். எண்ணிக்கை 504 ஆக உயர்ந்தது. அதிகப்படியாக தஞ்சை பகுதியில் 189 பேரும், மதுரை பகுதியில் 136 பேரும் பலியாகி இருந்தனர். இறந்துபோன கால்நடைகள் 20 ஆயிரத்துக்கும் மேல் இருக்கும் என கணக்கிடப்பட்டது.

புயல் நிவாரணத்துக்கு மத்திய அரசு ரூ.5 கோடி வழங்கியது. மேலும் முதல்_அமைச்சர் நிவாரண நிதிக்கும் உதவிகள் குவிந்தன. நடிகர்_நடிகைகள் கலை நிகழ்ச்சிகள் நடத்தி எம்.ஜி.ஆரிடம் நிதி வழங்கினார்கள்.

சென்னையை பயமுறுத்திக் கொண்டிருந்த மற்றொரு புயல் நவம்பர் 19_ந்தேதி ஆந்திராவை நோக்கி சென்று கரை கடந்தது. அங்குள்ள குண்டூர், கிருஷ்ணா, கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி ஆகிய மாவட்டங்களில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. இந்த புயலில் திவிசீமா என்ற தாலுகா முழுவதுமே சுடுகாடாக மாறிவிட்டது. புயலால் அப்பகுதி முழுவதும் தரைமட்ட மாகிவிட்டது.

ஆந்திராவில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வெள்ளத்திலும், இடிபாடுகளிலும் அகப்பட்டு உயிர் இழந்து விட்டார்கள். கிருஷ்ணா மாவட்டத்தில் மட்டும் 7 ஆயிரம் பேர் இறந்தனர். மேலும் 3 ஆயிரம் பேர் காணாமல் போனார்கள். அடுத்து குண்டூர் மாவட்டத்தில் 1,500_க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள்.

ஓங்கோல் _ மசூலிப்பட்டினம் இடையேதான் புயல் கரையை கடந்தது. என்றாலும் மசூலிப்பட்டினம் பேரழிவில் இருந்து அதிசயமாக தப்பிவிட்டது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum