Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நெல்லை மாநகராட்சி மேயர்: இ.யூ. முஸ்லிம் லீக்கின் பரிதாப நிலை
2 posters
Page 1 of 1
நெல்லை மாநகராட்சி மேயர்: இ.யூ. முஸ்லிம் லீக்கின் பரிதாப நிலை
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் நெல்லை மாநகராட்சி மேயர் பதவிக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர் காதர்பீவியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அக். 17, 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது. நெல்லை மாநகராட்சியில் மேயர் மற்றும் கவுன்சிலர் பதவிகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டு மனு பரீசிலனை நேற்று முடிந்தது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் மேயர் பதவிக்குக் காதர்பீவி என்பவர் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால் மாநகராட்சி எல்லைக்குள் வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இல்லை எனக்கூறி மனுவுக்கு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. இதற்கு காதர்பீவி, "வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு மனுச் செய்திருப்பதாக" தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து மாநகராட்சி தேர்தல் அலுவலர் அஜய்யாதவ் நேற்று காலை 11 மணிக்குள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்ததற்கான ஆவணங்களைச் சமர்பிக்கும்படி கூறியிருந்தார். அதன்படி நேற்று காலை மாநகராட்சி அலுவலகத்திற்குக் காதர்பீவி வந்தார். ஆனால் ஆவணங்கள் எதையும் அவர், தேர்தல் அலுவலரிடம் ஒப்படைக்கவில்லை. இதைத்தொடர்ந்து அவரது மனுவைத் தள்ளுபடி செய்வதாக தேர்தல் அலுவலர் அஜய்யாதவ் அறிவித்தார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், "நெல்லை மாநகராட்சி மேயர் பதவிக்கு 40 மனுக்கள் வந்துள்ளன. இவற்றில் 19 மனுக்கள் தகுதியானவை ஆகும். நேற்று வேட்பு மனுபரிசீலனையின் போது 2 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. காதர்பீவியின் மனுவில் வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இல்லாதது குறித்து சர்ச்சை கிளம்பியது. அவருக்குக் கொடுக்கப்பட்ட கால அவகாசத்தில் ஆவணங்களைச் சமர்பிக்காததால் அவரது மனுவும் தள்ளுபடி செய்யப்படுகிறது. தற்போது 16 மேயர் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்" என்றார்.
இதுகுறித்து காதர்பீவி கூறும்போது, "எனக்கு கொடுக்கப்பட்ட கால அவகாசத்தில் ஆவணங்களைச் சமர்ப்பிக்க முடியவில்லை. இதுசம்பந்தமாக உயர் நீதிமன்றத்தில் பெறப்பட்ட உத்தரவையும் அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அந்தப் பகுதியில் உள்ள வாக்காளர் பட்டியலில் இருக்கவேண்டும் என்ற விவரம் எனக்குத் தெரியாது. தெரிந்த பிறகு நீதிமன்றத்தின் உதவியை நாடினேன். தற்போது 7 நாட்கள் கழித்துத்தான் பெயர் சேர்க்கமுடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என காரணம் காட்டி எனது மனுவைத் தள்ளுபடி செய்துள்ளனர். இதுகுறித்து கட்சி தலைமைக்குத் தெரிவித்துள்ளேன். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும்" என்றார்.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» சிங்க கூண்டுக்குள் இறங்கிய வாலிபரின் பரிதாப நிலை
» தேசிய கீதத்துடன் பணி துவக்கம் : ஜெய்ப்பூர் மாநகராட்சி அதிரடி
» சீனாவில் சீற்றம் விடுப்பு பார்த்தவர்களின் பரிதாப நிலை (படங்கள், காணொளி இணைப்பு)
» நெல்லை-தென்காசி :அகல பாதை பணிகள்
» சென்னையில் நவம்பர் 21, 22, டிச 12, 13ம் தேதிகளில் வாக்காளர் சிறப்பு முகாம்: சென்னை மாநகராட்சி தகவல்
» தேசிய கீதத்துடன் பணி துவக்கம் : ஜெய்ப்பூர் மாநகராட்சி அதிரடி
» சீனாவில் சீற்றம் விடுப்பு பார்த்தவர்களின் பரிதாப நிலை (படங்கள், காணொளி இணைப்பு)
» நெல்லை-தென்காசி :அகல பாதை பணிகள்
» சென்னையில் நவம்பர் 21, 22, டிச 12, 13ம் தேதிகளில் வாக்காளர் சிறப்பு முகாம்: சென்னை மாநகராட்சி தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum