Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மூலிகை மருத்துவம் – மயக்கமா… கலக்கமா.. மனதிலே பதட்டமா?
Page 1 of 1
மூலிகை மருத்துவம் – மயக்கமா… கலக்கமா.. மனதிலே பதட்டமா?
சர்க்கரை நோயாளிகளுக்கு தேனிலவு காலம் என்று ஒன்று உண்டு. சர்க்கரை நோய்
தாமதமின்றி கண்டறியப்பட்ட ஆரம்ப கட்டத்தில் எந்தவிதமான மருந்துகளும்
உட்கொள்ளாமல் வெறும் உணவக்கட்டுப்பாட்டிலேயே பல மாதங்கள் முதல் சில
ஆண்டுகள்வரை ரத்த சர்க்கரை அளவு இயல்பான முறையில் வைத்துக்கொள்ள முடியும்.
இந்த மகிழ்ச்சியான நாட்கள் சர்க்கரை நோயாளிகளின் தேனிலவு காலம் என்று
அழைக்கப்படுகிறது. உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கு
சில நாட்கள் முதல் ஆறு மாதங்கள் வரையுமே இந்த தேனிலவு காலம் நீடிக்கிறது.
இந்த காலகட்டத்தில் தங்கள் சர்க்கரை நோய் குணமாகிவிட்டதாக பெரும்பாலானோர்
நினைத்துக் கொண்டிருப்பதால் முறையற்ற அல்லது தேவையற்ற உணவுகளை உட்கொண்டு
தங்கள் சர்க்கரை அளவை அதிகப்படுத்திவிடுகின்றனர். இந்த தேனிலவு காலங்களில்
உணவுக்கட்டுப்பாட்டுடன் ஆசனம், தியானம், மூச்சுப்பயிற்சி ஆகியவற்றை
பின்பற்றினால் நெடுநாட்கள் மருந்துகளின்றி, சர்க்கரை நோயை
கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளலாம்.
திடீரென்று எந்தவித காரணமுமின்றி ஏற்படும் ஒருவகையான பயத்துடன் கூடிய
பதட்டம் மற்றும் கவலையே ஆன்சைட்டி என்னும் மனநோயாகும். எப்பொழுதும் ஒருவித
அபாயம் அல்லது பேரிடரை எதிர்நோக்கியவாறே ஆரோக்கியம், குடும்பம்,
பொருளாதாரம், வேலை, படிப்பு என்று பல விஷயங்களில் பதட்டத்துடன் வாழ்நாள்
முழுவதும் சிலர் காணப்படுவர்.
எப்பொழுதும் ஒருவித கவலை மற்றும் மனஅழுத்தம் கொண்டிருத்தல், பிரச்னைகளை
சந்திக்க பயப்படுதல், ஓய்வின்றி இருப்பது போன்ற உணர்வு, அடிக்கடி
எரிச்சல்படுதல், தசைகள் அதிக இறுக்கத்துடன் அல்லது தளர்ச்சியுடன் காணப்
படுதல், தலைவலி, எப்பொழுதும் வியர்வை, கவனச்சிதைவு, குமட்டல், உடற்சோர்வு,
தூக்கமின்மை, கை, கால்களில் நடுக்கம், காரணமின்றி அழுதல், அடிக்கடி
சிறுநீரோ மலமோ கழிக்கச் செய்தல் அல்லது கை கால்களைக் கட்டிக் கொண்டிருத்தல்
ஆகியன மனப்பதட்ட நோயின் அறிகுறிகளாகும். இந்நோய் உடையவர்களுக்கு
எதிர்மறையான எண்ணங்களுடன் இதயத்துடிப்பு அதிகரித்து காணப்படும்.
அவ்வப்பொழுது மார்பு வலியுடன் மூச்சுத்திணறலும் ஏற்பட்டு, ரத்த அழுத்தம்
அதிகரிக்கும். செரிமான சக்தியும், நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்து,
வெளிறிய மற்றும் கண்பார்வை விரிந்த நிலையில் பரிதாபமாக காட்சியளிப்பர்.
மரணம் ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்துடன், வெறுமையான உணர்வுடன், அடிக்கடி கெட்ட
கனவுகள் கண்டு, தூக்கமின்றி, இருப்புக்கொள்ளாமல் இருப்பர். பிறரை
நேரிடையாக சந்தித்து பேச பயந்து அல்லது நடுக்கத்துடன் அல்லது பதட்டத்துடன்
அறிவுரைகளை ஏற்றுக்கொள்ளாமல், தங்கள் பிரச்னைகளையே திரும்பத்திரும்ப
கூறிக்கொண்டிருப்பது, மனப்பதட்ட நோயாளிகளின் குணங்களாகும்.
பரம்பரை, மரபணுக்களின் தன்மை, மூளையிலுள்ள நரம்பு கடத்திகளின்
சமச்சீரின்மை, கடுமையான உடல்நல பாதிப்பு, அடிபடுதல், துக்கம்,
காதலித்தவர்கள் அல்லது பிரியமானவர்களை இழத்தல், விவாகரத்து, பணிமாற்றம்,
படிப்புச்சுமை, சாராயம், காபி, புகையிலை போன்றவற்றிற்கு அடிமையாதல் அல்லது
திடீரென அந்தப் பழக்கத்தை நிறுத்துதல் ஆகியவற்றால் மனப்பதட்டம்
அதிகரிக்கலாம்.
குழந்தைப்பருவம் அல்லது இளமைப்பருவத்திலிருந்தே மனப்பதட்டம் பலருக்கு
தோன்றிவிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆண்களைவிட பெண்களே
மனப்பதட்டத்தால் பாதிக்கப்படுகின்றனர்.
மனப்பதட்டத்தைக் குறைக்கும் மருந்துகள், தூக்கத்தை உண்டாக்கும் மருந்துகள்
ஆகியவற்றை மனநல மருத்துவரின் ஆலோசனைப்படி நீண்டநாட்கள் உட்கொள்ள வேண்டியது
அவசியமாகும். இருந்தபோதிலும் தூக்கமின்மை, உடல்பருமன் அதிகரித்தல் மற்றும்
பாலுறவு பலஹீனம் போன்றவை இந்த சிகிச்சையின் பக்கவிளைவுகளாக இருப்பதால்
பெரும்பாலானோர் இதனை தவிர்க்க ஆரம்பித்துவிடுகின்றனர்.
மனநிலை, மன அழுத்தம், பயம், நடத்தை போன்ற 14 வகையான செயல்பாடுகள்
மனப்பதட்டத்திற்கு காரணங்களாக இருப்பதாக மருத்துவ வல்லுனர்கள்
தெரிவிக்கின்றனர். காபி, டீ, கோலா, சாக்லேட் போன்றவற்றை தவிர்த்து, எளிய
உடற்பயிற்சி, சமச்சரிவிகித உணவு, மனநல ஆலோசனை, தியானம், ஆசனம்,
மூச்சுப்பயிற்சி ஆகியவற்றை பின்பற்றினால் மனப்பதட்டத்திலிருந்து
காத்துக்கொள்ளலாம். பல்வேறு வகையான காரணங்களால் ஏற்படும் மனப்பதட்டத்தை
நீக்கி அதிகரித்த இதயத்துடிப்பை கட்டுப்படுத்தி, மன அமைதியைத்தரும் அற்புத
மூலிகை வாலுழுவை.
செலஸ்ட்ரஸ் பானிகுலேட்டஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட செலஸ்டேரிசியே
குடும்பத்தைச் சார்ந்த மரங்களின் விதைகளே வாலுழுவை என்று அழைக்கப்படுகிறது.
இதன் இலைகளிலுள்ள செலஸ்ட்ரின், பானிகுலோட்டின் போன்ற வேதிச்சத்துக்களும்,
நறுமண எண்ணெயும் மத்திய நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி, இதயத்துடிப்பை
கட்டுப்படுத்தி, மன அமைதியையும், சுகமான நித்திரையையும் உண்டாக்குகின்றன.
வாலுழுவை விதைகளை இளவறுப்பாக வறுத்து, லேசாக வெடித்ததும், புடைத்து,
உள்ளிருக்கும் மென்மையான பகுதிகளை மட்டும் இடித்து, பொடித்து, சலித்து
வைத்துக்கொள்ள வேண்டும். கால் முதல் அரை கிராம் தினமும் இரவு
படுக்கும்பொழுது சூடான பாலில் சாப்பிட்டுவர மனப்பதட்டம் நீங்கும்.
வாலுழுவை, சங்குபுஷ்பம், பிரம்மி, அசுவகந்தா, சடாமாஞ்சில் ஆகியவற்றை
உலர்த்தி, பொடித்து சலித்து வைத்துக்கொள்ள வேண்டும். 1 முதல் 2 கிராம்
தினமும் இரண்டு வேளை பாலுடன் கலந்து சாப்பிட மனப்பதட்டம் நீங்கும். சித்தா,
ஆயுர்வேதா மருந்துக்கடைகளில் கிடைக்கும் பிரேவோபால் என்னும் கேப்சுலில்
வாலுழுவை சேர்க்கப்படகிறது. இதனை 1 கேப்சுல் இரவு படுக்கும்பொழுது தினமும்
சாப்பிட்டுவர மனப்பதட்டம் நீங்கும்.
- டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ், மதுரை
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» மூலிகை மருத்துவம் வருது… வருது…! விலகு… விலகு
» கற்ப மூலிகை மரண மாற்று மூலிகை ஆடாதோடை.
» மூலிகை மருத்துவம்: ஏழாம் சத்து
» மூலிகை மருத்துவம் – தீராத விளையாட்டுப் பிள்ளை-முடவாட்டுக்கால்
» புற்று நோயை குணமாக்கும் எளிய மூலிகை மருத்துவம் !
» கற்ப மூலிகை மரண மாற்று மூலிகை ஆடாதோடை.
» மூலிகை மருத்துவம்: ஏழாம் சத்து
» மூலிகை மருத்துவம் – தீராத விளையாட்டுப் பிள்ளை-முடவாட்டுக்கால்
» புற்று நோயை குணமாக்கும் எளிய மூலிகை மருத்துவம் !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum