சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» முடிவுகளை நீயே எடுக்கப் பழுகு!
by rammalar Today at 17:20

» பொருள் அறிந்து கற்போம் - சிறுவர் பாடல்
by rammalar Today at 15:10

» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04

» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: பெங்களூர் அணி 51 ரன் வித்தியாசத்தில் வெற்றி Khan11

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: பெங்களூர் அணி 51 ரன் வித்தியாசத்தில் வெற்றி

Go down

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: பெங்களூர் அணி 51 ரன் வித்தியாசத்தில் வெற்றி Empty சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: பெங்களூர் அணி 51 ரன் வித்தியாசத்தில் வெற்றி

Post by நண்பன் Tue 4 Oct 2011 - 9:23

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: பெங்களூர் அணி 51 ரன் வித்தியாசத்தில் வெற்றி 3867636e-58c9-49ac-8da4-22072f27855f_S_secvpf
சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த
சோமர்செட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கெய்ல் அதிரடியில் பெங்களூர் ராயல்
சேலஞ்சர்ஸ் அணி 51 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரை இறுதி வாய்ப்பில்
நீடிக்கிறது.

இந்தியாவில் நடந்து வரும் 3-வது சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

`ஏ' பிரிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் (இந்தியா), நியூ
சவுத் வேல்ஸ் (ஆஸ்திரேலியா), கேப் கோப்ராஸ் (தென்ஆப்பிரிக்கா), டிரினிடாட்
அண்ட் டொபாக்கோ (வெஸ்ட் இண்டீஸ்) ஆகிய அணிகளும், `பி' பிரிவில் பெங்களூர்
ராயல் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (இந்தியா), வாரியர்ஸ்
(தென்ஆப்பிரிக்கா), தெற்கு ஆஸ்திரேலியா (ஆஸ்திரேலியா), சோமர்செட்
(இங்கிலாந்து) ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு
அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள்
அரைஇறுதிக்கு தகுதி பெறும். லீக் சுற்று இறுதி கட்டத்தை எட்டி விட்ட
போதிலும் இதுவரை ஒரு அணியும் அரைஇறுதியை உறுதி செய்யவில்லை. இந்த
நிலையில் பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த `பி' பிரிவில்
ஒரு லீக் ஆட்டத்தில் ஐ.பி.எல். அணியான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி,
இங்கிலாந்தின் கவுண்டி அணியான சோமர்செட்டை சந்தித்தது.

`டாஸ்'
ஜெயித்த சோமர்செட் அணி கேப்டன் அல்போன்சா தாமஸ், பெங்களூர் ராயல்
சேலஞ்சர்ஸ் அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். தொடக்க
ஆட்டக்காரர்களாக கிறிஸ் கெய்ல், தில்ஷன் ஆகியோர் களம் இறங்கினார்கள்.
இருவரும் அதிரடியாக ஆடினார்கள். இதனால் ரன் விகிதம் வேகமாக உயர்ந்தது.
கெய்ல் 4 ரன்னில் இருக்கையில் அவுட்டில் இருந்து தப்பினார். ஸ்டீவ் கிர்ப்
பந்து வீச்சை கெய்ல் அடித்து ஆட அதனை ஜோஸ் பட்லர் கேட்ச் செய்யாமல் கோட்டை
விட்டார்.

இதேபோல் தில்ஷனும் 8 ரன்னில் இருக்கையில்
கேட்ச்சில் இருந்து தப்பினார். அணியின் ஸ்கோர் 4.3 ஓவர்களில் 38 ரன்னாக
இருந்த போது தொடக்க ஆட்டக்காரர் தில்ஷன் (16 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு
சிக்சருடன் 23 ரன்) வான்டெர் மெர்வ் பந்து வீச்சில் போல்டு ஆனார். அடுத்து
களம் இறங்கிய விராட் கோக்லியும் தன் பங்குக்கு அதிரடி ஆட்டத்தை காட்டினார்.
10.3 ஓவர்களில் பெங்களூர் அணி 100 ரன்னை எட்டியது.

11.1
ஓவர்களில் அணியின் ஸ்கோர் 108 ரன்னாக இருந்த போது விராட் கோக்லி (22
பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 33 ரன்) ஸ்டீவன் கிர்ப் பந்து
வீச்சில் போல்டு ஆனார். அடுத்து களம் கண்ட சவுரப் திவாரியும் வேகமாக
அடித்து ஆடினார். அவர் 15 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 18 ரன்
எடுத்த நிலையில் ஸ்டீவன் கிர்ப் பந்து வீச்சில் சுப்பையாவிடம் கேட்ச்
கொடுத்து ஆட்டம் இழந்தார்.

அப்போது அணியின் ஸ்கோர்
15.3 ஓவர்களில் 157 ரன்னில் இருந்தது. அடுத்து வந்த அகர்வால் 8 பந்துகளில்
ஒரு பவுண்டரி, 2 சிக்சருடன் 19 ரன் எடுத்து அல்போன்சா தாமஸ் பந்து வீச்சில்
சுப்பையாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து கேப்டன் டேனியல்
வெட்டோரி, தொடக்க ஆட்டக்காரர் கெய்லுடன் ஜோடி சேர்ந்தார்.

தொடக்கம்
முதலே அதிரடியாக ஆடி ரசிகர்களுக்கு அறுசுவை விருந்து படைத்த கெய்ல் 46
பந்துகளில் 4 பவுண்டரி, 8 சிக்சருடன் 86 ரன்கள் சேர்த்த நிலையில் அல்போன்சா
தாமஸ் பந்து வீச்சில் சுப்பையாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.
அப்போது அணியின் ஸ்கோர் 17.5 ஓவர்களில் 188 ரன்னாக இருந்தது. கேப்டன்
வெட்டோரி ஒரு ரன் எடுத்த நிலையில் ரன்-அவுட் ஆனார்.

இதைத்
தொடர்ந்து அருண் கார்த்திக், பத்கலுடன் ஜோடி சேர்ந்தார். 19.3 ஓவர்களில்
பெங்களூர் அணி 200 ரன்னை தாண்டியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில்
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள்
குவித்தது. இந்த ஆண்டு சாம்பியன்ஸ் லீக் போட்டியில் ஒரு இன்னிங்சில் ஒரு
அணி 200 ரன்னை கடப்பது இதுவே முதல் முறையாகும். பத்கல் 4 ரன்னுடனும், அருண்
கார்த்திக் 13 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

சோமர்செட்
அணி தரப்பில் அல்போன்சா தாமஸ், ஸ்டீவ் கிர்ப் தலா 2 விக்கெட்டும்,
வான்டெர் மெர்வ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். பின்னர் 207 ரன்
எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் சோமர்செட் அணி பேட்டிங் செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக பீட்டர் டிரிக்கோ, கீஸ்வெட்டர் ஆகியோர் களம்
கண்டனர். இருவரும் அதிரடியாக ஆடினார்கள். இதனால் பெங்களூர் அணிக்கு பதிலடி
கொடுப்பது போல் தெரிந்தது.

அணியின் ஸ்கோர் 4.2
ஓவர்களில் 42 ரன்னாக இருந்த போது கீஸ்வெட்டர் (19 பந்துகளில் 3 பவுண்டரி, 2
சிக்சருடன் 26 ரன்) வெட்டோரி பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் அருண்
கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து களம் கண்ட
வான்டெர் மெர்வ் 6 ரன்னில் வெட்டோரி பந்து வீச்சில் அருண் கார்த்திக்கிடம்
கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து களம் கண்ட ஹில்ரெத் (15 ரன்) டிர்க்
நான்ஸ் பந்து வீச்சில் அருண் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்தும், ஜோஸ்
பட்லர் (4 ரன்) அரவிந்த் பந்து வீச்சில் திவாரியிடம் கேட்ச் கொடுத்து
ஆட்டம் இழந்தனர்.

ஹில்ரெத் ஆட்டம் இழக்கும் வரை
சோமர்செட் அணி எதிரணிக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் ரன் சேசிங் செய்தது.
அதன் பின்னர் ஆட்டம் பெங்களூர் அணி கட்டுப்பாட்டுக்கு சென்றது. அதிரடியாக
ஆடிய தொடக்க ஆட்டக்காரர் பீட்டர் டிரிக்கோ (38 பந்துகளில் 6 பவுண்டரி, 3
சிக்சருடன்) 58 ரன் எடுத்த நிலையில் பத்கல் பந்து வீச்சில் வெட்டோரியிடம்
கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். சுப்பையா ஒரு ரன்னில் அவுட் ஆனார்.

நிர்ணயிக்கப்பட்ட
20 ஒவர்களில் சோமர்செட் அணி 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்னே எடுத்தது.
இதனால் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 51 ரன் வித்தியாசத்தில் வெற்றி
பெற்றது. காம்டன் 17 ரன்னுடனும், கேப்டன் அல்போன்சா தாமஸ் 15 ரன்னுடனும்
களத்தில் இருந்தனர். பெங்களூர் அணி தரப்பில் அரவிந்த், வெட்டோரி தலா 2
விக்கெட்டும், டிர்க் நான்ஸ், பத்கல் தலா ஒரு விக்கெட்டும்
கைப்பற்றினார்கள்.

கெய்ல் ஆட்டநாயகன் விருது
பெற்றார். இந்த முதல் வெற்றியின் மூலம் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி அரை
இறுதி வாய்ப்பில் நீடிக்கிறது. `ஏ' பிரிவை போல் `பி' பிரிவிலும் அரை
இறுதிக்கு தகுதி பெறும் அணிகள் எவை என்பதில் இழுபறி நீடிக்கிறது. நாளை
(புதன்கிழமை) நடைபெறும் கடைசி லீக் ஆட்டங்களை பொறுத்து தான் எந்த அணி அரை
இறுதிக்கு முன்னேறும் என்பது முடிவாகும். அணிகள் அரை இறுதிக்கு
முன்னேறுவதில் `ரன்-ரேட்' முக்கிய பங்கு வகிக்கும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: பெங்களூர் அணி 51 ரன் வித்தியாசத்தில் வெற்றி
» சாம்பியன்ஸ் கோப்பை: 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
» சாம்பியன்ஸ் “லீக்” கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அரைஇறுதி வாய்ப்பு கிடைக்குமா?
» 3 நாடுகள் கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
» சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்கா-பாகிஸ்தான் இன்று மோதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum