சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

கவலை தரும் கருக்கலைப்பு. Khan11

கவலை தரும் கருக்கலைப்பு.

4 posters

Go down

கவலை தரும் கருக்கலைப்பு. Empty கவலை தரும் கருக்கலைப்பு.

Post by நண்பன் Sat 15 Oct 2011 - 11:02

திருமணமான தம்பதிகள், முதன் முதலில் எடுத்துக்கொள்ள வேண்டிய முக்கிய
தீர்மானம், `தங்களுக்கு எப்போது குழந்தை வேண்டும் என்பது!' இதுபற்றி நன்றாக
ஆலோசித்து தெளிவான தீர்மானம் எதுவும் எடுக்காமல், இளமை முறுக்கோடு
`தாம்பத்யம்` செய்து, கர்ப்பம் தரித்த பின்பு, `அய்யோ தெரியாமல்
ஆகிவிட்டதே..

இனி என்ன செய்வது? கருக்கலைப்பு
செய்துவிட்டு, கருத்தடை முறை எதையாவது பின்பற்றலாம்' என்ற முடிவுக்கு பல
தம்பதிகள் வருகிறார்கள். அந்த முடிவு ஒருவேளை அவர்களுக்கு சரியானதாக
இருக்கலாம். ஆனால் கருக்கலைப்பால் பெண்ணின் உடல் நலனில் பாதிப்பு
ஏற்படுகிறது. கருக்கலைப்பை முறையாக செய்யாவிட்டால், அவளது இனப்பெருக்க
உறுப்புகளில் தற்காலிக அல்லது நிரந்தர பாதிப்பு ஏற்பட்டு குழந்தையின்மை
பிரச்சினை தோன்றலாம்.

கருக்கலைப்பின்போது அவள்
மனதளவிலும் பாதிப்பு நேரலாம். விருப்பம் இல்லாமல் கர்ப்பம் ஆகி,
கருக்கலைப்பு செய்து பிரச்சினைகளை சந்திப்பதை விட, தம்பதிகள் முதலிலே
திட்டமிட்டு, பொருத்தமான கருத்தடை முறையை கடைப் பிடிப்பது நல்லது.

என்னென்ன கருத்தடை முறைகள் உள்ளன?

கருத்தடை
சாதனங்களில் ஆண்கள் உபயோகிப்பவை, பெண்கள் உபயோகிப்பவை என இரு வகைகள்
உள்ளன. ஆண்கள் பயன்படுத்தக்கூடியது, ஆணுறைகள். ரப்பரால் ஆன இந்த மெல்லிய
உறையால், பக்கவிளைவுகள் எதுவும் கிடையாது. மருத்துவர்களின் ஆலோசனையும்
தேவையில்லை.

கடைகளில் எளிதாக கிடைக்கும். ஆணுறையின்
மீது வழுவழுப்புத் தன்மைக்காக வேறு எந்த பொருளையும் பூசக்கூடாது.
பூசினாலோ, சரியான முறையில் நிதானமாக பொருத்திக் கொள்ளாவிட்டாலோ ஆணுறை
கிழிந்துவிடும். பெண்களுக்கான கருத்தடைகளில் பெரும்பாலானவை ஹார்மோன்களை
அடிப்படையாகக் கொண்டவை.

இவை ஊசி மற்றும்
மாத்திரைகள் வடிவில் கிடைக்கின்றன. புற்று நோய், ரத்த உறைவு நோய், இதய
நோய், ரத்த அழுத்தம், கல்லீரல் பாதிப்பு, ஒற்றைத் தலைவலி பாதிப்பு
கொண்டவர்கள் ஹார்மோன் தன்மை கொண்ட கருத்தடை மாத்திரைகள் மற்றும் ஊசிகளை
பயன்படுத்தக்கூடாது.

ஹார்மோன் கருத்தடை மாத்திரைகளை
பயன்படுத்த விரும்புகிறவர்கள் மாதவிலக்கு வந்த ஐந்தாவது நாளில் தொடங்கி
23-ம் நாள் வரை தினம் ஒரு மாத்திரை சாப்பிட வேண்டும். அடுத்த ஐந்து நாட்கள்
மாத்திரைகள் பயன்படுத்தக்கூடாது. பின்பு மாதவிலக்கான ஐந்து நாட்கள்
கழித்து தொடர்ந்து மாத்திரைகளை பயன்படுத்த வேண்டும். இந்த மாத்திரைகளால்
பெண்ணின் சினைப்பையில் இருந்து கரு முட்டைகள் வெளியாவது தடுக்கப்படும்.

இதனால்
ஆணிடம் இருந்து உயிரணு வெளிப்பட்டு பெண்ணிடம் சென்றாலும் கருத்தரிப்பு
நிகழாது. இந்த மாத்திரைகளால் ஓரளவு பக்க விளைவுகள் உண்டு. மாதவிலக்கு
நாட்களில் மனச்சோர்வு, மனஇறுக்கம் தோன்றும். உடல் எடையும் அதிகரிக்கலாம்.
இந்த மாத்திரைகளை முறைப்படி தொடர்ந்து சாப்பிடாமல் இருந்தால், கருத்தரிப்பு
நிகழ்ந்து விடும்.

வருடக்கணக்கில் இதை பயன்படுத்தி
வந்தால் ரத்த நாளங்களில் ரத்தஉறைவு, மார்பக புற்றுநோய் போன்றவை தோன்றவும்
செய்யலாம். கர்ப்பமாவதைத் தடுக்க ஊசி மூலம் ஹார்மோன் மருந்துகளை மூன்று
மாதங்களுக்கு ஒருமுறை உடலில் செலுத்துவதுண்டு. பக்க விளைவுகள் மிக அதிகம்
என்பதால், பெரும்பாலானவர்கள் இந்த ஊசி மருந்தை பயன்படுத்துவதில்லை.

பெண்களுக்கான
கருத்தடை சாதனம் உள்ளது. `லூப்' எனப்படும் இதனை டாக்டரின் ஆலோசனைப்படி
பொருத்திக்கொள்ள வேண்டும். இதன் மேற்பக்கத்தில் சிறிய நுனி நீண்டு
கொண்டிருக்கும். பெண்கள் கர்ப்பமாக விரும்பும்போது, நுனியை இழுத்து நீக்கம்
செய்து கொள்ளலாம். பாலைவனப் பிரதேசங்களில் வசிப்பவர்கள் தங்கள் ஒட்டகங்கள்
கருத்தரிக்கக்கூடாது என்பதற்காக, அதன் பிறப்பு உறுப்பில் வாதுமைக்
கொட்டையை பொருத்தி விடுவார்கள்.

அதுபோன்ற முறையில்
கர்ப்பத்தை தடுப்பதற்கு பெண்களின் உறுப்பில் `ஜி' வடிவத்திலான தாமிர
உலோகத்தினை பொருத்துகிறார்கள். இதற்கு `காப்பர்- டி' என்று பெயர். இதை
பொருத்தும்போது கருப்பை குழாய்கள் அடைத்துக் கொள்வதால், ஆணின் உயிரணு உள்ளே
சென்று கருத்தரித்தல் நிகழாது. `டயபிராம்' என்ற முட்டை வடிவ உறையையும்
பெண்கள் கருத்தடை சாதனமாக பயன்படுத்துவது உண்டு.

அதில்
உயிரணுக்களைக் கொல்லும் மருந்து பொருட்கள் தடவப்பட்டிருக்கும்.
எல்லோருக்கும் பெண் உறுப்பு ஒரே அளவில் இருப்பதில்லை. அதனால் உறுப்பின்
அளவுக்கு தக்கபடியான டயபிராம் தேர்ந்தெடுத்து, டாக்டரின் ஆலோசனைப்படி
பொருத்தாவிட்டால் கருத்தரிப்பு நிகழ்ந்து விடக்கூடும்.

இவைகளைத்
தவிர கருப்பையின் வாய்ப்பகுதியை மூடிவிடும் கருத்தடை சாதனமும் உள்ளது. மிக
மலிவான, வாழ்நாள் முழுவதும் நீடிக்கிற கருத்தடை சாதனம் இது. கருப்பைக்
கழுத்தில் பொருந்தும் விதத்தில் இது வடிவமைக்கப்பட்டிருக்கும். இதைப்
பொருத்திவிட்டால், கருத்தரிப்பு நிகழாது.

பக்க
விளைவுகள் எதுவும் தோன்றவும் செய்யாது. திருமணமான தொடக்கத்திலே தாய்மை
அடையவேண்டாம் என்று கருதும் பெண்கள், முதலிலே திட்டமிட்டு சரியான கருத்தடை
சாதனத்தை தேர்ந்தெடுத்து பயன்படுத்தி, தேவையற்ற கர்ப்பத்தை தவிர்க்க
வேண்டும்.

- டாக்டர் கே.எஸ்.ஜெயராணி.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கவலை தரும் கருக்கலைப்பு. Empty Re: கவலை தரும் கருக்கலைப்பு.

Post by jasmin Sat 15 Oct 2011 - 11:31

தம்பதிகள் ஆனவுடன் சீக்கிரம் குழந்தை பெற்றுக்கொள்வதே நல்லது கொஞ்ச நாள் அனுபவிக்கலாம் அது இது என கணடபடி நடப்பது கருகலைப்பது எல்லாம் நல்லது அல்ல
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

கவலை தரும் கருக்கலைப்பு. Empty Re: கவலை தரும் கருக்கலைப்பு.

Post by அப்துல்லாஹ் Sat 15 Oct 2011 - 11:34

உண்மை தான் ...பயனுள்ள செய்தி நன்றி...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

கவலை தரும் கருக்கலைப்பு. Empty Re: கவலை தரும் கருக்கலைப்பு.

Post by நண்பன் Sat 15 Oct 2011 - 12:23

கவலை தரும் கருக்கலைப்பு. 111433 கவலை தரும் கருக்கலைப்பு. 111433
jasmin wrote:தம்பதிகள் ஆனவுடன் சீக்கிரம் குழந்தை பெற்றுக்கொள்வதே நல்லது கொஞ்ச நாள் அனுபவிக்கலாம் அது இது என கணடபடி நடப்பது கருகலைப்பது எல்லாம் நல்லது அல்ல
கவலை தரும் கருக்கலைப்பு. 111433 கவலை தரும் கருக்கலைப்பு. 111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கவலை தரும் கருக்கலைப்பு. Empty Re: கவலை தரும் கருக்கலைப்பு.

Post by நண்பன் Sat 15 Oct 2011 - 12:24

அப்துல்லாஹ் wrote:உண்மை தான் ...பயனுள்ள செய்தி நன்றி...
கவலை தரும் கருக்கலைப்பு. 930799 கவலை தரும் கருக்கலைப்பு. 930799


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கவலை தரும் கருக்கலைப்பு. Empty Re: கவலை தரும் கருக்கலைப்பு.

Post by kalainilaa Sat 15 Oct 2011 - 12:33

நண்பன் wrote:
அப்துல்லாஹ் wrote:உண்மை தான் ...பயனுள்ள செய்தி நன்றி...
கவலை தரும் கருக்கலைப்பு. 930799 கவலை தரும் கருக்கலைப்பு. 930799
@. @.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கவலை தரும் கருக்கலைப்பு. Empty Re: கவலை தரும் கருக்கலைப்பு.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum