சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

குர்ஆனில் துஆக்கள் - Page 2 Khan11

குர்ஆனில் துஆக்கள்

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

குர்ஆனில் துஆக்கள் - Page 2 Empty குர்ஆனில் துஆக்கள்

Post by புதிய நிலா Sun 16 Oct 2011 - 10:01

First topic message reminder :

إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ (இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல. 1:5-7
புதிய நிலா
புதிய நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66

Back to top Go down


குர்ஆனில் துஆக்கள் - Page 2 Empty Re: குர்ஆனில் துஆக்கள்

Post by புதிய நிலா Sun 16 Oct 2011 - 11:38

رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِن ذُرِّيَّتِي رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ(“என்) இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக!” 14:40
رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ“எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக”. 14:41
رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا“என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!” 17:24
புதிய நிலா
புதிய நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

குர்ஆனில் துஆக்கள் - Page 2 Empty Re: குர்ஆனில் துஆக்கள்

Post by *சம்ஸ் Sun 16 Oct 2011 - 13:41

அருமையான தொகுப்பு பகிர்விற்கு நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

குர்ஆனில் துஆக்கள் - Page 2 Empty Re: குர்ஆனில் துஆக்கள்

Post by jasmin Sun 16 Oct 2011 - 15:41

அருமையான துவாக்கள் நன்றி
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

குர்ஆனில் துஆக்கள் - Page 2 Empty Re: குர்ஆனில் துஆக்கள்

Post by புதிய நிலா Sun 16 Oct 2011 - 18:11

رَبَّنَا آتِنَا مِن لَّدُنكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا“
எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! இன்னும் நீ எங்களுக்கு எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாக)ச் சீர்திருத்தித் தருவாயாக!”. 18:10
புதிய நிலா
புதிய நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

குர்ஆனில் துஆக்கள் - Page 2 Empty Re: குர்ஆனில் துஆக்கள்

Post by புதிய நிலா Sun 16 Oct 2011 - 18:12

رَبِّ إِنِّي وَهَنَ الْعَظْمُ مِنِّي وَاشْتَعَلَ الرَّأْسُ شَيْبًا وَلَمْ أَكُن بِدُعَائِكَ رَبِّ شَقِيًّا وَإِنِّي خِفْتُ الْمَوَالِيَ مِن وَرَائِي وَكَانَتِ امْرَأَتِي عَاقِرًا فَهَبْ لِي مِن لَّدُنكَ وَلِيًّا“

என் இறைவனே! நிச்சயமாக என் எலும்புகள் பலஹீனமடைந்து விட்டன; என் தலையும் நரையால் (வெண்மையாய்) இலங்குகிறது. என் இறைவனே! (இதுவரையில்) நான் உன்னிடம் செய்த பிரார்த்தனையில் பாக்கியம் இல்லாதவனாகப் போய்விடவில்லை. “இன்னும், எனக்குப் பின்னர் (என்) உறவினர்களைப்பற்றி நிச்சயமாக நான் அஞ்சுகிறேன்; மேலும், என் மனைவியோ மலடாக இருக்கிறாள்; ஆகவே, நீ உன் புறத்திலிருந்து எனக்கு வாரிசை அளிப்பாயாக! 19:4-5
புதிய நிலா
புதிய நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

குர்ஆனில் துஆக்கள் - Page 2 Empty Re: குர்ஆனில் துஆக்கள்

Post by புதிய நிலா Sun 16 Oct 2011 - 18:13

رَبِّ اشْرَحْ لِي صَدْرِي وَيَسِّرْ لِي أَمْرِي وَاحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِي يَفْقَهُوا قَوْلِي “

இறைவனே! எனக்காக என் நெஞ்சத்தை நீ (உறுதிப்படுத்தி) விரிவாக்கி தருவாயாக!” “என் காரியத்தை எனக்கு நீ எளிதாக்கியும் வைப்பாயாக!” “என் நாவிலுள்ள முடிச்சையும் அவிழ்ப்பாயாக!” “என் சொல்லை அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக!” 20:25-28
புதிய நிலா
புதிய நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

குர்ஆனில் துஆக்கள் - Page 2 Empty Re: குர்ஆனில் துஆக்கள்

Post by புதிய நிலா Sun 16 Oct 2011 - 18:14

رَّبِّ زِدْنِي عِلْمًا“

இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!” 20:௧௧௪


أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنتَ أَرْحَمُ الرَّاحِمِينَ“
நிச்சயமாக என்னை (நோயினாலான) துன்பம் தீண்டியிருக்கிறது; (இறைவனே!) கிருபை செய்பவர்களிலெல்லாம் நீயே மிகக் கிருபை செய்பவனாக இருக்கின்றாய்” 21:83
புதிய நிலா
புதிய நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

குர்ஆனில் துஆக்கள் - Page 2 Empty Re: குர்ஆனில் துஆக்கள்

Post by புதிய நிலா Sun 16 Oct 2011 - 18:15

لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ“
உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்”. 21:87


رَبِّ لَا تَذَرْنِي فَرْدًا وَأَنتَ خَيْرُ الْوَارِثِينَ“
என் இறைவா! நீ என்னை (சந்ததியில்லாமல்) ஒற்றையாக விட்டு விடாதே! நீயோ அனந்தரங்கொள்வோரில் மிகவும் மேலானவன்” 21:89
புதிய நிலா
புதிய நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

குர்ஆனில் துஆக்கள் - Page 2 Empty Re: குர்ஆனில் துஆக்கள்

Post by புதிய நிலா Sun 16 Oct 2011 - 18:17

رَبِّ انصُرْنِي بِمَا كَذَّبُونِ“
என் இறைவா! இவர்கள் என்னை பொய்ப்பிப்பதின் காரணமாக நீ எனக்கு உதவி புரிவாயாக!”. 23:26


الْحَمْدُ لِلَّهِ الَّذِي نَجَّانَا مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ“
அநியாயக்காரரான சமூகத்தாரை விட்டும் எங்களைக் காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்”. 23:28
புதிய நிலா
புதிய நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

குர்ஆனில் துஆக்கள் - Page 2 Empty Re: குர்ஆனில் துஆக்கள்

Post by புதிய நிலா Sun 16 Oct 2011 - 18:18

رَّبِّ أَنزِلْنِي مُنزَلًا مُّبَارَكًا وَأَنتَ خَيْرُ الْمُنزِلِينَ“
இறைவனே! நீ மிகவும் பாக்கியம் உள்ள - இறங்கும் தலத்தில் என்னை இறக்கி வைப்பாயாக! நீயே (பத்திரமாக) இறக்கி வைப்பவர்களில் மிக்க மேலானவன்”. 23:29


رَبِّ انصُرْنِي بِمَا كَذَّبُونِ
“என் இறைவா! என்னை இவர்கள் பொய்ப்படுத்துகின்ற காரணத்தினால் எனக்கு நீ உதவி புரிவாயாக!” 23:39
புதிய நிலா
புதிய நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

குர்ஆனில் துஆக்கள் - Page 2 Empty Re: குர்ஆனில் துஆக்கள்

Post by புதிய நிலா Sun 16 Oct 2011 - 18:19

رَبِّ فَلَا تَجْعَلْنِي فِي الْقَوْمِ الظَّالِمِينَ“
என் இறைவனே! என்னை அநியாயக்காரர்களின் சமூகத்துடன் என்னைச் சேர்த்து வைக்காதிருப்பாயாக”. 23:94


رَّبِّ أَعُوذُ بِكَ مِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَعُوذُ بِكَ رَبِّ أَن يَحْضُرُونِ“
என் இறைவனே! ஷைத்தானின் தூண்டுதல்களிலிருந்து நான் உன்னைக் கொண்டு காவல் தேடுகிறேன்” . “இன்னும் அவை என்னிடம் நெருங்காமலிருக்கவும் என் இறைவனே! உன்னிடம் காவல் தேடுகிறேன்”. 23:97-98
புதிய நிலா
புதிய நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

குர்ஆனில் துஆக்கள் - Page 2 Empty Re: குர்ஆனில் துஆக்கள்

Post by புதிய நிலா Sun 16 Oct 2011 - 18:20

رَبَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَأَنتَ خَيْرُ الرَّاحِمِينَ“
எங்கள் இறைவா! நாங்கள் உன் மீது ஈமான் கொள்கிறோம்; நீ எங்கள் குற்றங்களை மன்னித்து, எங்கள் மீது கிருபை செய்வாயாக! கிருபையாளர்களிலெல்லாம் நீ மிகவும் மேலானவன்”. 23:109


رَّبِّ اغْفِرْ وَارْحَمْ وَأَنتَ خَيْرُ الرَّاحِمِينَ“
என் இறைவனே! நீ என்னை மன்னித்துக் கிருபை செய்வாயாக! நீ தான் கிருபையாளர்களிலெல்லாம் மிக்க மேலானவன்” 23:118
புதிய நிலா
புதிய நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

குர்ஆனில் துஆக்கள் - Page 2 Empty Re: குர்ஆனில் துஆக்கள்

Post by புதிய நிலா Sun 16 Oct 2011 - 18:21

رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا
“எங்கள் இறைவனே! எங்களைவிட்டும் நரகத்தின் வேதனையைத் திருப்புவாயாக; நிச்சயமாக அதன் வேதனை நிரந்தரமானதாகும்”. 25:65


رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
“எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக!. 25:74
புதிய நிலா
புதிய நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

குர்ஆனில் துஆக்கள் - Page 2 Empty Re: குர்ஆனில் துஆக்கள்

Post by புதிய நிலா Sun 16 Oct 2011 - 18:32

إِنَّا نَطْمَعُ أَن يَغْفِرَ لَنَا رَبُّنَا خَطَايَانَا أَن كُنَّا أَوَّلَ الْمُؤْمِنِينَ“(அன்றியும்) முஃமினானவர்களில் நாங்கள் முதலாமவர்களாக இருப்பதினால் எங்கள் இறைவன் எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னித்து விடுவான்” என்று, நாங்கள் ஆதரவு வைக்கின்றோம். 26:51
الَّذِي خَلَقَنِي فَهُوَ يَهْدِينِ
“அவனே என்னைப் படைத்தான்; பின்னும், அவனே எனக்கு நேர்வழி காண்பிக்கிறான். 26:78
புதிய நிலா
புதிய நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

குர்ஆனில் துஆக்கள் - Page 2 Empty Re: குர்ஆனில் துஆக்கள்

Post by புதிய நிலா Sun 16 Oct 2011 - 18:33

رَبِّ هَبْ لِي حُكْمًا وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ وَاجْعَل لِّي لِسَانَ صِدْقٍ فِي الْآخِرِينَ وَاجْعَلْنِي مِن وَرَثَةِ جَنَّةِ النَّعِيمِ وَلَا تُخْزِنِي يَوْمَ يُبْعَثُونَ“இறைவனே! நீ எனக்கு ஞானத்தை அளிப்பாயாக. மேலும், ஸாலிஹானவர்களுடன் (நல்லவர்களுடன்) என்னைச் சேர்த்து வைப்பாயாக!”. “இன்னும், பின் வருபவர்களில் எனக்கு நீ நற்பெயரை எற்படுத்துவாயாக!”. “இன்னும், பாக்கியம் நிறைந்த சுவனபதியின் வாரிஸுக்காரர்களில் (ஒருவனாக) என்னை ஆக்கி வைப்பாயாக!”. “இன்னும் (மனிதர்கள் உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாளில் என்னை நீ இழிவுக்குள்ளாக்காதிருப்பாயாக!”. 26:83-85, 87
புதிய நிலா
புதிய நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

குர்ஆனில் துஆக்கள் - Page 2 Empty Re: குர்ஆனில் துஆக்கள்

Post by புதிய நிலா Sun 16 Oct 2011 - 18:34

فَافْتَحْ بَيْنِي وَبَيْنَهُمْ فَتْحًا وَنَجِّنِي وَمَن مَّعِيَ مِنَ الْمُؤْمِنِينَ
நீ எனக்கும், அவர்களுக்கு மிடையே தீர்ப்புச் செய்து, என்னையும், என்னுடனிருக்கும் முஃமின்களையும் இரட்சிப்பாயாக!”. 26:118

رَبِّ نَجِّنِي وَأَهْلِي مِمَّا يَعْمَلُونَ


“என் இறைவனே! என்னையும், என் குடும்பத்தாரையும் இவர்கள் செய்து கொண்டிருக்கிற (தீய)வற்றிலிருந்து காப்பாயாக!”. 26:169
புதிய நிலா
புதிய நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

குர்ஆனில் துஆக்கள் - Page 2 Empty Re: குர்ஆனில் துஆக்கள்

Post by புதிய நிலா Sun 16 Oct 2011 - 18:34

رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَىٰ وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَدْخِلْنِي بِرَحْمَتِكَ فِي عِبَادِكَ الصَّالِحِينَ
“என் இறைவா! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக! இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக!”. 27:19
புதிய நிலா
புதிய நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

குர்ஆனில் துஆக்கள் - Page 2 Empty Re: குர்ஆனில் துஆக்கள்

Post by புதிய நிலா Sun 16 Oct 2011 - 18:35

رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْ لِي فَغَفَرَ لَهُ إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ
“என் இறைவா! நிச்சயமாக நான் என் ஆத்மாவுக்கே அநியாயம் செய்து விட்டேன்; ஆகவே, நீ என்னை மன்னிப்பாயாக!”. 28:16

رَبِّ نَجِّنِي مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ

“என் இறைவா! இந்த அக்கிரமக்கார சமூகத்தாரை விட்டும் நீ என்னைக் காப்பாற்றுவாயாக!”. 28:21
புதிய நிலா
புதிய நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

குர்ஆனில் துஆக்கள் - Page 2 Empty Re: குர்ஆனில் துஆக்கள்

Post by புதிய நிலா Sun 16 Oct 2011 - 18:38

رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ
“என் இறைவா! நீ எனக்கு இறக்கியருளும் நல்லவற்றின்பால் நிச்சயமாக நான் தேவையுள்ளவனாக இருக்கின்றேன்”. 28:24

رَبِّ انصُرْنِي عَلَى الْقَوْمِ الْمُفْسِدِينَ

“என் இறைவனே! குழப்பம் செய்யும் இந்த சமூகத்தாருக்கு எதிராக எனக்கு நீ உதவி புரிவாயாக!” . 29:30


رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ

“என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக”. 37:100
புதிய நிலா
புதிய நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

குர்ஆனில் துஆக்கள் - Page 2 Empty Re: குர்ஆனில் துஆக்கள்

Post by புதிய நிலா Sun 16 Oct 2011 - 18:40

رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِّلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَءُوفٌ رَّحِيمٌ

“எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக; அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; கிருபை மிக்கவன்”. 59:10
புதிய நிலா
புதிய நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

குர்ஆனில் துஆக்கள் - Page 2 Empty Re: குர்ஆனில் துஆக்கள்

Post by புதிய நிலா Sun 16 Oct 2011 - 18:40

رَّبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَإِلَيْكَ أَنَبْنَا وَإِلَيْكَ الْمَصِيرُ رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلَّذِينَ كَفَرُوا وَاغْفِرْ لَنَا رَبَّنَا إِنَّكَ أَنتَ الْعَزِيزُ الْحَكِيمُ


“எங்கள் இறைவா! உன்னையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம்; (எதற்கும்) நாங்கள் உன்னையே நோக்குகிறோம்; மேலும், உன்னிடமே எங்கள் மீளுதலும் இருக்கிறது”. “எங்கள் இறைவா! காஃபிர்களுக்கு, எங்களைச் சோதனை(ப் பொருள்) ஆக ஆக்கிவிடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன்”. 60:4-5
புதிய நிலா
புதிய நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

குர்ஆனில் துஆக்கள் - Page 2 Empty Re: குர்ஆனில் துஆக்கள்

Post by புதிய நிலா Sun 16 Oct 2011 - 18:42

رَبَّنَا أَتْمِمْ لَنَا نُورَنَا وَاغْفِرْ لَنَا إِنَّكَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

“எங்கள் இறைவா! எங்களுக்கு, எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப்பாயாக! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்”. 66:8


رَبِّ ابْنِ لِي عِندَكَ بَيْتًا فِي الْجَنَّةِ

“இறைவா! எனக்காக உன்னிடத்தில், சுவர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டித் தருவாயாக!”. 66:11
புதிய நிலா
புதிய நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

குர்ஆனில் துஆக்கள் - Page 2 Empty Re: குர்ஆனில் துஆக்கள்

Post by புதிய நிலா Sun 16 Oct 2011 - 18:47

عَسَىٰ رَبُّنَا أَن يُبْدِلَنَا خَيْرًا مِّنْهَا إِنَّا إِلَىٰ رَبِّنَا رَاغِبُونَ

“எங்களுடைய இறைவன் இதைவிட மேலானதை எங்களுக்கு மாற்றித் தரக்கூடும்; நாங்கள் (தவ்பா செய்து) நிச்சயமாக எங்களுடைய இறைவன் மீதே ஆதரவு வைக்கிறோம்”. 68:32


رَّبِّ اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِمَن دَخَلَ بَيْتِيَ مُؤْمِنًا وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ


“என் இறைவா! எனக்கும், என் பெற்றோருக்கும், என் வீட்டில் நம்பிக்கையாளர்களாகப் பிரவேசித்தவர்களுக்கும், முஃமினான ஆண்களுக்கும், முஃமினான பெண்களுக்கும், நீ மன்னிப்பளிப்பாயாக!. 71:128
புதிய நிலா
புதிய நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

குர்ஆனில் துஆக்கள் - Page 2 Empty Re: குர்ஆனில் துஆக்கள்

Post by புதிய நிலா Sun 16 Oct 2011 - 18:47

قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ مِن شَرِّ مَا خَلَقَ وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ

அதிகாலையின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன். அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும்- இருள் பரவும் போது ஏற்படும் இரவின் தீங்கை விட்டும்- இன்னும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும், பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்). 113:1-5
புதிய நிலா
புதிய நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

குர்ஆனில் துஆக்கள் - Page 2 Empty Re: குர்ஆனில் துஆக்கள்

Post by புதிய நிலா Sun 16 Oct 2011 - 18:50

قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ مَلِكِ النَّاسِ إِلَٰهِ النَّاسِ مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ

மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன். (அவனே) மனிதர்களின் அரசன்; (அவனே) மனிதர்களின் நாயன். பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்). அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான். (இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர். 114:1-6

www.tamililquran.com
புதிய நிலா
புதிய நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

குர்ஆனில் துஆக்கள் - Page 2 Empty Re: குர்ஆனில் துஆக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum