சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

நல்ல உறவுகளின் அஸ்திவாரம் ? Khan11

நல்ல உறவுகளின் அஸ்திவாரம் ?

2 posters

Go down

நல்ல உறவுகளின் அஸ்திவாரம் ? Empty நல்ல உறவுகளின் அஸ்திவாரம் ?

Post by ஜிப்ரியா Tue 18 Oct 2011 - 6:54

- மரியசார்லஸ்

நாம் ஒவ்வொருவருமே வாழ்க்கையில் சில விஷயங்களக் கற்றுக் கொண்டு, அதை மனதில் பத்திரப்படுத்திக் கொள்கிறோம். விவேகமுள்ளவர்கள், அந்த அனுபவங்களை தகுந்த தருணத்தில் பயன்படுத்திக் கொள்கிறோம். நிறையபேர், நட்பில், காதலில், அன்பில் வெற்றி பெற, அடுத்தவர் எதிர்பார்ப்புகளப் பூர்த்தி செய்யும் வகையில் தங்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொள்கிறார்கள். உண்மயில் நீங்கள் திருப்திபடுத்த வேண்டியது மற்றவரை அல்ல. உங்களைத்தான்.

இது சுயநலமல்ல. தன் மீது அன்போ, மரியாதையோ கொண்டிராத ஒருவர் அடுத்தவருடய அன்பை, மரியாதையை உய்த்துணர முடியாது

ஜேனட்லூர் என்பவருடய 'Simple Loving' என்ற புத்தகத்திலிருந்து சில இங்கே....

உங்கள் அன்பு நன்கு மலர்ந்து நிலைத்திருக்க வேண்டுமெனில் மற்றவருக்கு உகந்த வகையில் நான் நல்லவனாக இருக்கவேண்டும். மிகுந்த ஆர்வம் காட்ட வேண்டும் என்ற எண்ணத்தை விட்டுவிட்டு, உங்கள் மீதே மரியாதை கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையையும், செயல்களையும் மகிழ்ச்சியாக, உற்சாகமாக செய்யுங்கள்.

உங்கள் உறவுகளில் நீங்கள் தவறிழைக்கும் போது மற்றவர்கள் உங்களை மன்னித்துவிட்டால் மட்டும் போதாது. நீங்களும் உங்களை மன்னிக்க வேண்டும். மற்றவர்கள் உங்களை ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்க வேண்டும்.

நீங்கள் மற்றவர் வாழ்க்கையை வாழ முயற்சி செய்யக் கூடாது; அவர்கள் உங்களுக்கு நெருங்கியவராக இருந்தாலும். ஏனென்றால் உங்கள் வாழ்க்கையை யாரும் வாழ முடியாது. உங்கள் வாழ் நாளில் நீங்கள் பார்க்கப்போகும் அத்தன பேரிலும், உங்களை விட்டுப் பிரியாத ஒரேயொருவர் நீங்கள் மட்டும்தான். உங்கள் வாழ்க்கையை நீங்கள் சிறப்பாக, உற்சாகமாக, அர்த்தமுள்ளதாக வாழத் தொடங்கினால் போதும். உங்களுக்கு அமையும் உறவுகளும், மகிழ்வும் உங்களை விட்டு எளிதில் விலகி போகாது.

என்னை அன்பு செய்யுமாறு நான் யாரையும் வருத்திட முடியாது. நான் செய்யக் கூடியதெல்லாம் அன்பு செலுத்த தகுந்தவனாக என்ன மாற்றிக் கொள்வதுதான். பிறகு அவர்கள் விருப்பம். ஆனால், வாழ்க்கையில் எனக்குப் பிடித்த மனிதனாக நான் மாற நிறைய காலம் பிடிக்கிறது.

உங்கள் மனப்பான்மையைப் பொறுத்துத்தான், உங்கள் உறவு நீடிக்குமா? அல்லது காற்றில் கரந்த கற்பூரம் போலாகுமா? எனச் சொல்ல முடியும்.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

நல்ல உறவுகளின் அஸ்திவாரம் ? Empty Re: நல்ல உறவுகளின் அஸ்திவாரம் ?

Post by ஜிப்ரியா Tue 18 Oct 2011 - 6:55

சரி, மனப்பான்மை என்றால் என்ன?

உங்களைப் பற்றி, மற்றவர்களைப் பற்றி, உங்களைச் சுற்றி நடக்கும் சம்பவங்களப் பற்றி நீங்கள் கொண்டுள்ள கருத்துக்கள் நாளடைவில் உங்கள் நம்பிக்கையாக மாறிவிடுகிறது. உங்களின் தீர்மானமான உணர்வுகள் நிரந்தர நிழலாய் மனதில் படிந்து விடுவதுதான் மனப்பான்மை.

உங்கள் உறவுகளின் அஸ்திவாரமான மனப்பான்மை எவ்வாறு உருவாகிறது?

நேற்றைய வார்த்தைகள் இன்றைய செயல்கள்

இன்றைய செயல்கள் நாளைய மனப்பான்மைகள்

இன்றய மனப்பான்மைகள் நாளைய குணங்கள்

இன்றய குணங்கள் தாம் அவருடய நாளைய விதி!

எனவே ஆரோக்கியமான, வளர்ச்சியடையக்கூடிய மனநிலையை நாம் வளர்த்துக் கொண்டோம் என்றால் உறவுகள் இலேசில் புளித்துப் போகாது. ஐஸ்கிரீம் கலந்த அன்பு பேச்சுகள் எளிதில் அலுத்துப் போகாது. ஆரோக்கியமான மனநிலைக்கு அடிப்படையே, நாம் நாமாக இருப்பதுதான்.

கோபென்ஹெகன் பல்கலக் கழகத்தின் இயற்பியல் தேர்வு நடந்து கொண்டிருந்தது. 'ஒரு பெரிய வானளாவிய கட்டிடத்தின் உயரத்தை ஒரு பாரோமீட்டர் உதவியுடன் எப்படிக் கணக்கிடுவது? உடனே ஒரு மாணவன் எழுந்து சொன்னான். பாரோமீட்டர் கழுத்தில் ஒரு கயிற்றைக் கட்டி விட்டு அதை மெல்ல இறக்கவும். கயிற்றின் நீளம்+பாரோமீட்டர் நீளம்-இவயிரண்டயும் சேர்த்தால் கட்டடத்தின் உயரம் தெரியும். அந்த மாணவன் பெயிலாக்கப்பட்டான். எனினும் தனித்தன்ம வாய்ந்த பதிலைக் கூறிய அந்த இளஞன் சோர்ந்துவிடவில்ல. தாமாகவே பிரச்னகளுக்குத் தீர்வு கண்டு வந்த அவரின் பெயர் தான் நீல்ஸ்போர். இயற்பியலுக்காக நோபல் பரிசு வாங்கிய ஒரே டேனிஷ் நாட்டவர். தனித்தன்மையுடன், இயல்பாக இருப்பதுதான் நாளடைவில் பெரும் வெற்றிகளைப் பெற்றுத் தரும்.

ஒரு நாள் இரண்டு நண்பர்கள் கடலில் படகு ஓட்டி சென்றார்கள். பெரியவர் ஜிம் படகை ஓட்ட, சிறியவர் ரே, ஒரு முனையில் நின்று கொண்டு இயற்கை அழகை ரசித்துக் கொண்டு வந்தார். அன்றிரவு இருவரும் உணவருந்தும் போது ரே கேட்டார், ஜிம் காலையில் நாம் சென்ற கடற்கரைப் பகுதியில் நூற்றுக்கணக்கான பாறைகள், கோர புற்கள் இருந்தனவே? எப்படிக் ஒன்றில் கூட மோதாமல் ஓட்டினீர்கள்? ஜிம் புன்னகைத்துக் கொண்டே சொன்னார், அங்குள்ள ஒவ்வொரு பாறையையும் நான் இடித்துப் பழகி விட்டேன்!
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

நல்ல உறவுகளின் அஸ்திவாரம் ? Empty Re: நல்ல உறவுகளின் அஸ்திவாரம் ?

Post by ஜிப்ரியா Tue 18 Oct 2011 - 6:55

வாழ்க்கையில் நாம் படும் ஒவ்வொரு துன்பத்திலிருந்தும் பாடங்களைக் கற்றுக் கொள்வதோடு, அத்தகைய வாழ்க்கை முறையிலிருந்து ஓடிவிடாமல், அதையே சிறப்பாக வாழ கற்றுக் கொள்பவர்தாம் சிறந்த மனிதர். நம்முடன் வாழ்பவர்களுக்கு வாழ்க்கை சுலபமாக அமையக் கூடும். நமக்கிருப்பது போன்ற துன்பங்கள் அவருக்கு வராமல் இருக்கக்கூடும். ஆனால் தொடர்ந்து போராடி வெற்றி பெறுங்கள். பிறகு உங்களுக்கும் அவருக்கும் உள்ள வித்தியாசங்கள நீங்கள் உணர்வீர்கள்; கொஞ்ச காலத்தில் மற்றவர்களும் உணர்வார்கள்.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

நல்ல உறவுகளின் அஸ்திவாரம் ? Empty Re: நல்ல உறவுகளின் அஸ்திவாரம் ?

Post by நண்பன் Tue 18 Oct 2011 - 13:43

மிகவும் சிறப்பானதொரு கட்டுரை தோழி

நீங்கள் மற்றவர் வாழ்க்கையை வாழ முயற்சி செய்யக் கூடாது; அவர்கள் உங்களுக்கு நெருங்கியவராக இருந்தாலும். ஏனென்றால் உங்கள் வாழ்க்கையை யாரும் வாழ முடியாது

ஆனான் நான் மற்றவர்களுக்காக வாழ்கிறேன் என்னைச் சுற்றியுள்ளவர்களுக்காக அதிகதிகமாக வாழ்கிறேன் என்றுதான் சொல்ல வேண்டும் உங்கள் கட்டுரை என்னை சிந்திக்க வைக்கிறது பகிர்வுக்கு மிக்க நன்றி தோழி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நல்ல உறவுகளின் அஸ்திவாரம் ? Empty Re: நல்ல உறவுகளின் அஸ்திவாரம் ?

Post by ஜிப்ரியா Tue 18 Oct 2011 - 13:47

நண்பன் wrote:மிகவும் சிறப்பானதொரு கட்டுரை தோழி

நீங்கள் மற்றவர் வாழ்க்கையை வாழ முயற்சி செய்யக் கூடாது; அவர்கள் உங்களுக்கு நெருங்கியவராக இருந்தாலும். ஏனென்றால் உங்கள் வாழ்க்கையை யாரும் வாழ முடியாது

ஆனான் நான் மற்றவர்களுக்காக வாழ்கிறேன் என்னைச் சுற்றியுள்ளவர்களுக்காக அதிகதிகமாக வாழ்கிறேன் என்றுதான் சொல்ல வேண்டும் உங்கள் கட்டுரை என்னை சிந்திக்க வைக்கிறது பகிர்வுக்கு மிக்க நன்றி தோழி

உங்களை சிந்திக்க வைத்தது தான் நான் சந்தித்த பெரும் வெற்றி..நன்றி நண்பன்.. :];: :];: :];:
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

நல்ல உறவுகளின் அஸ்திவாரம் ? Empty Re: நல்ல உறவுகளின் அஸ்திவாரம் ?

Post by நண்பன் Tue 18 Oct 2011 - 16:04

ஜிப்ரியா wrote:
நண்பன் wrote:மிகவும் சிறப்பானதொரு கட்டுரை தோழி

நீங்கள் மற்றவர் வாழ்க்கையை வாழ முயற்சி செய்யக் கூடாது; அவர்கள் உங்களுக்கு நெருங்கியவராக இருந்தாலும். ஏனென்றால் உங்கள் வாழ்க்கையை யாரும் வாழ முடியாது

ஆனான் நான் மற்றவர்களுக்காக வாழ்கிறேன் என்னைச் சுற்றியுள்ளவர்களுக்காக அதிகதிகமாக வாழ்கிறேன் என்றுதான் சொல்ல வேண்டும் உங்கள் கட்டுரை என்னை சிந்திக்க வைக்கிறது பகிர்வுக்கு மிக்க நன்றி தோழி

உங்களை சிந்திக்க வைத்தது தான் நான் சந்தித்த பெரும் வெற்றி..நன்றி நண்பன்.. நல்ல உறவுகளின் அஸ்திவாரம் ? 930799 நல்ல உறவுகளின் அஸ்திவாரம் ? 930799 நல்ல உறவுகளின் அஸ்திவாரம் ? 930799
நல்ல உறவுகளின் அஸ்திவாரம் ? 517195 நல்ல உறவுகளின் அஸ்திவாரம் ? 517195


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நல்ல உறவுகளின் அஸ்திவாரம் ? Empty Re: நல்ல உறவுகளின் அஸ்திவாரம் ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum