சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

அந்தரங்கம் இது அந்தரங்கம் Khan11

அந்தரங்கம் இது அந்தரங்கம்

Go down

அந்தரங்கம் இது அந்தரங்கம் Empty அந்தரங்கம் இது அந்தரங்கம்

Post by gud boy Fri 21 Oct 2011 - 18:11

நான் 21 வயது பெண். திருமணமாகி நான்கு மாதங்கள் ஆகியுள்ளன. திருமணமான புதிதில்
எனக்கு சிறுநீர் தொற்று ஏற்பட்டது. அப்போது நான் கர்ப்பமும் ஆகியுள்ளேன்.
கர்ப்பமானது தெரியாமலே சிறுநீர் தொற்றுக்கான மருந்துகளை சாப்பிட்டுக்
கொண்டிருந்திருக்கிறேன். கர்ப்பமாகியிருப்பது தெரிந்ததும் டாக்டர் என்னிடம்
`மருந்துகளின் பின்விளைவால் சிசுவுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.
அதனால் உடனடியாக கருவைக் கலைத்துவிடுவதே நல்லது' என்றார். நான் அதற்கு
சம்மதிக்க வில்லை. ஆனால் என் மாமியாரும், கணவரும் தொடர்ந்து வற்புறுத்தியதால்
நான் கருவைக் கலைக்க சம்மதித்தேன். கருவைக் கலைத்த நேரத்திலிருந்தே எனக்கு மனது
சரியில்லை. மிகுந்த குற்ற உணர்வுடன் காணப்படுகிறேன். என்னால் சாப்பிடவோ,
நிம்மதியாக தூங்கவோ முடியவில்லை. நான் குற்ற உணர்விலிருந்து விடுபட வழி
சொல்லுங்கள்?

(நாமக்கல் வாசகி)

உங்களிடம் புத்திசாலித்தனம் குறைவாக இருக்கிறது. மனது ரொம்ப பலகீனமாக
இருக்கிறது. புத்திசாலித்தனம் குறைவாக இருப்பதால், ஒரு நல்ல செயலை அங்கீகரிக்க
உங்கள் மனது இடம் தரவில்லை. நடந்து முடிந்த சரியான செயலை குற்ற உணர்வுக்கான
விஷயமாக கருதிக் கொண்டிருக்கிறீர்கள்.

திருமணமான புதிதில் அனேகமான பெண்கள் `ஹனிமூன் சின்ட்ரோம்' என்ற நெருக்கடிக்கு
உள்ளாகுகிறார்கள். அந்த நேரத்தில் நிறைய தண்ணீர் பருகாமல் இருப்பதும்,
உறுப்புகளை சரியாக பராமரிக்காமல் இருப்பதும் தொடர்ந்தால் சிறுநீர் தொற்று போன்ற
பாதிப்புகள் ஏற்படும். இதற்கு மருந்து சாப்பிடும் முன்பே, தனது கர்ப்ப நிலை
என்ன என்பதை புரிந்திருக்க வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும். ஆனால்
பக்குவமில்லாததாலும், சரியான வழிகாட்டுதல் இல்லாததாலும் உங்கள் கர்ப்பம்
கண்டறியப்படாமலே நீங்கள் சிறுநீர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று
வந்திருக்கிறீர்கள். இதனால் சிசுவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். அபார்ஷன்
செய்தது அதற்கு சரியான, புத்திசாலித்தனமான தீர்வு. இதைச் செய்யாமல்
இருந்தால்தான் உங்கள் மனதில் குற்ற உணர்வு தோன்றியிருக்க வேண்டும். டாக்டரும்,
உறவினர்களும் சொன்னபிறகும் நீங்கள் அபார்ஷனுக்கு சம்மதிக்காமல் குறைபாடான
குழந்தையை பெற்றெடுத்திருந்தால்தான் நீங்கள் குற்றவாளியாகவும், குற்ற உணர்வு
கொண்டவராகவும் ஆகி இருக்க வேண்டும்.

21 வயதில் கிடைத்த இந்த அனுபவத்தை வாழ்க்கைக்குரிய பாடமாக எடுத்துக்
கொள்ளுங்கள். குற்ற உணர்வில் இருந்து நீங்கள் முழுமையாக விடுபட்டால் மட்டுமே
கணவரோடு உங்களால் முழுமையான தாம்பத்யத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியும். அதுவே
அடுத்து நீங்கள் விரைவாக தாய்மையடையும் வாய்ப்பினை ஏற்படுத்தும்.

-விஜயலட்சுமி பந்தையன்.

****************************************

சோர்ந்து போயிருந்த திவ்யாவுக்கு 26 வயது. பிரபலமான தனியார் நிறுவனம் ஒன்றில்
பொதுமக்கள் தொடர்பு துறையில் பணி. எந்நேரமும் காலில் சக்கரம் கட்டிக்கொண்டது
போல் விரைந்து கொண்டிருப்பவள். 32 வயதான கணவர் கம்ப்ïட்டர் என்ஜினீயர். `தான்
தாய்மையடைவது தள்ளிக்கொண்டே போகிறது' என்றபடி என்னிடம் வந்தாள்.

"உங்களை.. கணவரை... வாழ்க்கையைப் பற்றி சொல்லுங்கள்?''-என்றேன்.

"வாழ்க்கையில் நான் எதைத்தேடி ஓடிக்கொண்டிருக்கிறேன் என்றே தெரியவில்லை.
கல்லூரி படிப்பை முடித்ததும் கைநிறைய சம்பளத்துடன் வேலை கிடைத்தது. நான்
செய்யும் ஒவ்வொரு காரியமும் நிறுவனத்திற்கு பெயரைத் தேடித் தந்ததால் நான்
ஓகோவென்று புகழப்பட்டேன். என்னைப் போல் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கும் என்
மாமா மகனை எனக்கு பிடித்ததால் அவரை திருமணம் செய்துகொண்டேன். திருமணமாகி நான்கு
ஆண்டுகள் ஆகிவிட்டன. வாழ்க்கை என்றால் என்னவென்றே எனக்கு புரியவில்லை.
எப்போதாவது மெரினா கடற்கரை பகுதிக்கு சென்றால், அங்கு கொஞ்சிக் குலாவிக்
கொண்டிருக்கும் காதலர்களைப் பார்த்தால் என்னை அறியாமலே ஏங்கி
அழுதுவிடுகிறேன்...''-என்றாள், அழுகையை அடக்கிக்கொண்டு.

"குழந்தை பிறக்கவில்லை என்ற ஏக்கமா?''-என்றேன்.

"நாங்கள் திருப்தியாக செக்ஸ்கூட வைத்துக்கொள்ள நேரம் இல்லையே...''-என்றாள்
வருத்தத்தோடு!

கணவரும், மனைவியும் போட்டி போட்டு அவரவர் வேலையில் காட்டிய ஆர்வம்
அவர்களுக்கிடையேயான பேச்சை, நெருக்கத்தை, அன்பை பாதித்துவிட்டது. வேலையை
முடித்துவிட்டு ஆளுக்கொரு நேரத்தில் வீடு திரும்புவது, அவர் லேப்டாப்பை
எடுத்துக்கொண்டு ஹாலில் அமர்ந்துகொள்வது, அவள் டி.வி. நிகழ்ச்சிகளை பார்த்தபடி
படுக்கை அறையில் காத்திருப்பது. இவளுக்கு தூக்கம் வரும்போது அப்படியே
படுக்கையில் சாய்ந்துவிடுகிறாள். அவருக்கு தூக்கம் வரும்போது அவரும் போய் அதே
படுக்கையில் படுத்துக்கொள்கிறார். அருகருகே தூங்குகிறார்கள்... ஆனால்...?!

"நாங்கள் இருவரும் ஒரே படுக்கையில்தான் தூங்குகிறோம். ஆனால் தூங்கும் போது
மட்டும்தான் அதில் ஒன்றாக! விழித்திருக்கும் போது குட் மார்னிங் சொல்லிவிட்டு
பிரிந்து விடுவோம். தூக்கம் எங்களை ஒன்று சேர்க்கிறது. விழிப்பு எங்களை
பிரிக்கிறது...'' என்று அவள் கவிதை நடையில் சொன்னபோது, அவள் கண் ஓரத்தில் நீர்
கசிந்தது.

"இரண்டு பேரும் இளமையாக இருக்கிறீர்கள். வாரத்தில் எத்தனை நாட்கள் உறவு
வைத்துக் கொள்கிறீர்கள்?''

"ஒரு வருடத்திற்கு முன்பு வரை வாரத்தில் ஒரு நாள் என்று முடிவு செய்திருந்தோம்.
சனிக்கிழமை வேலை முடிந்ததும் நான் ஏதாவது ஒரு ஹோட்டலில் போய் அமர்ந்து கொண்டு
அவரை அழைப்பேன். வருவார் இருவரும் சாப்பிடுவோம். பின்பு இரவில் வீடு
திரும்புவோம். இரவு 11 மணியில் இருந்து அரை மணிநேரத்தை `தாம்பத்யத்திற்காக'
ஒதுக்கி இருந்தோம். அந்த நேரத்தில் நான் அதை அனுபவிக்கும் மனநிலையில்
இருப்பேன். அவரோ அந்த நேரத்திலும் என்னிடம் அவருடைய வேலை தொடர்பாக ஏதாவது
ஆலோசனை கேட்டபடியே இருப்பார். அவருடைய கவனமே செக்சில் இருக்காது. அதனால் எனக்கு
சனிக்கிழமை எதிர்பார்ப்பு குறைந்து போனது. இப்போது முத்தம், கட்டிப் பிடித்தல்
இவைகள் தான் எங்கள் செக்ஸ். அவர் தன் வேலையில் நாளுக்கு நாள் பிசியாகிக்
கொண்டிருக்கிறார். இப்போது அடிக்கடி வெளிநாடுகளுக்கும் போகத் தொடங்கிவிட்டார்.
நான் எப்போதாவது செக்ஸ், குழந்தை என்று பேச்சை எடுத்தாலே, `உன்னிடம் இளம்
வயதில் எவ்வளவு பெரிய லட்சியங்கள் இருந்தன. இப்போது நீயும் சராசரியான பெண் போல்
ஆகிவிட்டாயே' என்று கேட்கிறார். எனக்கு வாழ்க்கை என்றால் என்னவென்று
புரிந்துவிட்டது. ஆனால் அவர் புரிய மறுக்கிறார். இப்போதெல்லாம் எனக்கு செக்ஸ்
என்றாலே எரிச்சலும், ஏமாற்றமும் வந்துவிடுகிறது...''-என்றாள்.

வங்கியில் நிறைய பணம் இருந்தும் நிம்மதியில்லையே என்று நினைத்த அவள், அந்த
பணத்தை செலவு செய்வதற்காக வீடு நிறைய விதவிதமான வீட்டு உபயோகப் பொருட்களை
வாங்கிக் குவித்திருக்கிறாள். லாக்கரில் இருந்த நகைகளை எல்லாம் எடுத்துக்
கொண்டுவந்து வீட்டில் வைத்துக் கொண்டு, அலுவலகத்திற்கு கூட நிறைய நகைகளை
அணிந்துகொண்டு செல்லத் தொடங்கியுள்ளாள்.

கடற்கரைப் பகுதிகளுக்கு சென்று காதலர்கள் ஒன்றாக இருப்பதை பார்ப்பது, நர்சரி
பள்ளிகளுக்கு அருகில் சென்று குழந்தைகள் பள்ளிக்கு வருவதையும், போவதையும் கண்
இமைக்காமல் பார்ப்பது போன்ற மனப்பிரமை நிலைக்கு அவள் சென்றுவிட்டாள்.

அவளுக்கும், கணவருக்கும் செக்ஸாலஜிஸ்ட் ஆலோசனை தேவைப்பட்டது. திவ்யாவின்
பணியில் அவள் நிறைய மனிதர்களை சந்திக்க வேண்டியிருந்தது. அதனால் அவளுக்கு
ஆட்கள், பேச்சு, காட்சி போன்ற மாற்றங்கள் இருந்தன. அவளது கணவருக்கு
கம்ப்ïட்டர், டி.வி இரண்டு மட்டுமே வாழ்க்கையாகி இருந்தது. உடல் களைத்துப்
போகும் அளவிற்கு கம்ப்ïட்டரில் வேலை பார்க்கும் அவர் டெலிவிஷன் பார்ப்பதைத்தான்
ஓய்வு என்று கருதி இருந்தார். அதனால் வீட்டிற்கு வந்ததும் டெலிவிஷன் பார்ப்பதை
வாடிக்கையாகக் கொண்டிருந்த அவர், கண்வலியும், கழுத்துவலியும் ஏற்பட்டதும்
தூங்கப் போய்விடுவார்.

திருமணமான புதிதில் தாங்கள் ஈடுபட்ட துறையில் சாதிப்பதும், சம்பாதிப்பதுமே
வெற்றிகரமான வாழ்க்கை என்று கருதியிருக்கிறார்கள். மேலும் தங்கள் வாழ்க்கையில்
எல்லா செயலுக்கும் திட்டமிட்டு நேரம் ஒதுக்கி, அந்தந்த நேரத்திற்குள் அந்தந்த
செயலை செய்து முடிக்க வேண்டும் என்று கணக்குப் போட்டிருக்கிறார்கள். அந்த
வகையில் அவர்கள் `உறவுக்கென்று' சனிக்கிழமைகளில் மட்டும் குறிப்பிட்ட நேரத்தை
ஒதுக்கியிருக்கிறார்கள். திருமணமான புதிதிலே மனஅழுத்தமும், சாதனை வெறியும்
இருவரிடமும் இருந்ததால் ஒதுக்கிய சிறிதளவு நேரத்திலும் அவர்களால் முழுமையாக
உறவில் ஈடுபட முடியவில்லை. தொடர்ந்து செக்ஸ் இருவருக்குமே திருப்தியற்றதாக
இருந்ததால் திருமணமான ஒரு சில மாதங்களிலே செக்ஸ் மீது எரிச்சல் கொண்டு
அதிலிருந்து விலகி இருக்கிறார்கள். அந்த சிந்தனை வராமல் இருப்பதற்காக தங்கள்
முழு நேரத்தையும் அலுவலக உழைப்பில் காட்டி இருக்கிறார்கள். அதனால் செக்ஸ்
அவர்கள் வாழ்க்கையில் ஏக்கமாகவும், கற்பனையாகவும் மாறிவிட்டது. (இப்படிப்பட்ட
தம்பதிகளின் எண்ணிக்கை சமீப காலங்களில் அதிகரித்துவருகிறது)

திவ்யாவும், அவள் கணவரும் தற்போது தினமும் தங்களுக்கென்று நேரத்தை ஒதுக்கிக்
கொள்கிறார்கள். அன்பாகவும், அன்யோன்யமாகவும் இருக்கிறார்கள். அவர்கள்
`தாம்பத்ய' வாழ்க்கையில் வசந்தம் ஏற்பட்டிருக்கிறது. அவளுக்கு இருந்த ஒரு சில
குறைபாடுகள் எளிதான சிகிச்சையால் அகற்றப்பட்ட நிலையில் தற்போது அவள்
தாய்மையடைந்திருக்கிறாள். இந்த மாற்றம் அவர்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கி
இருக்கிறது.

இளம் தம்பதிகளிடையே பண மோகமும், வேலை மீது இருக்கும் வெறித்தனமான காதலும்
அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இது அவர்கள் வாழ்க்கையில் பல்வேறு கசப்புகளை
உருவாக்கி, வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கிக் கொண்டிருக்கிறது.

-டாக்டர் கே.எஸ்.ஜெயராணி.

****************************************

இளம் பெண்களால் ஏற்படும் பிரச்சினைகள் சமீபகாலங்களில் அதிகரித்து வருகின்றன.
இளம் பெண்களின் பெற்றோர் உஷாராக இருந்து அவர்களை வழிநடத்தவேண்டும். இப்படி...!

* உங்களுக்கு கிடைத்த அனுபவங்களை வைத்துக்கொண்டு, நீங்கள் சந்தித்த பெண்களை
நினைத்துக்கொண்டு உங்கள் மகளை சந்தேகப்பட வேண்டாம். அவர்களை ஓரளவு கண்காணிக்க
வேண்டும் என்பது அவசியம்தான். அதற்காக அவர்களது ஒவ்வொரு செயலிலும் மூக்கை
நுழைப்பது அவசியமற்றது.

* மகளை தனியாக இருக்கவும், தனிமையில் இருந்து சிந்திக்கவும் அதிக வாய்ப்புகளை
கொடுக்கவேண்டாம். தனிமையை விரும்பும் பெண்கள் தன்னம்பிக்கை குறைந்தவர்களாகவும்,
எளிதாக காதல் வசப்பட்டு விடுபவர்களாகவும், சின்னச் சின்ன தோல்விகளைக்கூட தாங்க
முடியாதவர்களாகவும் இருப்பதுண்டு.

* மகளின் படிப்பு, வேலை, எதிர்காலம், திருமணம் பற்றிய உங்கள் கனவு எப்படி
இருக்கிறது என்பதை அவளிடம் உணர்த்துங்கள்.

* நமது பாரம்பரியம், ஒழுக்கம், கலாசாரம் போன்றவைகளை அடிக்கடி மகளிடம்
சொல்லிக்காட்டாமல் நீங்கள் அதன்படி நடந்து காட்டுங்கள். அதுதான் அவளையும்
நல்வழிப்படுத்தும்.

* நீங்கள் அவளுக்கு கொடுக்கும் எல்லா சுதந்திரமும் எல்லைக்குள் இருக்கட்டும்.
`நீ எதை வேண்டுமானாலும் படி... நீ எந்த வேலையானாலும் பார்... நீ எந்த
நாட்டிற்கு வேண்டுமானாலும் செல்.. நீ யாரை வேண்டுமானாலும் திருமணம்
செய்துகொள்...' என்பது போல் சுதந்திர எல்லையை பரவலாக்க வேண்டாம். நீ எதைச்
செய்ய முன்வந்தாலும் அதில் எங்கள் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கும்
என்பதை அழுத்தமாகச் சொல்லிவையுங்கள்.

* திருமணம் என்பது விளையாட்டல்ல. அது சடங்குகளுக்கும், கோலாகலத்திற்கும்
உருவாக்கப்பட்டதல்ல. பொறுப்பும், புனிதமும் நிறைந்தது. அதனால் அதற்குரிய
மரியாதையை கொடுத்தே ஆக வேண்டும் என்பதை உணர்த்துங்கள்.

-ஆஷாதினேஷ்.
நன்றி மருத்துவர்கள் : ஆஷா தினேஷ், விஜய லட்சுமி பந்தையன் மற்றும் ஜெயராணி..தினத்தந்தி
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum