Latest topics
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதைby rammalar Today at 8:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
துருக்கியில் பாரிய பூகம்பம்: 1000 பேர் பலி என அச்சம்
Page 1 of 1
துருக்கியில் பாரிய பூகம்பம்: 1000 பேர் பலி என அச்சம்
துருக்கியின் கிழக்குப் பகுதியில் ஞாயிறன்று ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்துவிழுந்தன. இந்த இடிபாடுகளில் சிக்கி 1,000 பேர் வரை இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
ஈரான் எல்லை அருகேயுள்ள வான் மாகாணத்தின் தபன்லில் பகுதியில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. அதில் வான் நகரில் உள்ள கட்டிடங்கள், ஹோட்டல்கள் உட்பட ஏராளமான வீடுகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
பூகம்பத்தால் வீடுகள் குலுங்கியதால் பீதியடைந்த மக்கள் வீட்டைவிட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர். இதையடுத்து பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்து சென்ற இராணுவத்தினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இடிபாடுகளில் சிக்கி 1000 பேர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இடிபாடுகளில் சிக்கிக் காயமடைந்த 50 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இடிந்த கட்டிடங்களில் ஏராளமானவர்கள் சிக்கி இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று கூறப்படுகிறது.
பூகம்பம் பாதித்த நகரங்களில் மின்சாரம், தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ளவர்களைத் தொடர்பு கொள்ள 'சாட்டலைட் போன்கள் கொண்டு செல்ல அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் ஈரான் எல்லைப் பகுதியிலும் பூகம்ப அதிர்வுகள் உணரப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஈரானின் பல நகரங்களில் மக்கள் பீதி அடைந்து காணப்படுகின்றனர்.
இதனால் பல நகரங்களில் பதற்றம் நிலவுகின்றது. பூகம்ப செய்தியைக் கேட்ட துருக்கிப் பிரதமர் ரிசிப் டயிப் அரசு முறை பணிகளை ஒதுக்கிவிட்டு, உடனடியாக பூகம்பம் பாதித்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் மீட்பு பணியைத் தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். வான் நகரின் வடகிழக்கில் 19 கி.மீ. தொலையில் உள்ள தபன்லில் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த முதல் பூகம்பம் ரிச்டர் அளவுகோலில் 7.3 ஆகப் பதிவானது.
அடுத்த பூகம்பம் ரிச்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் அமைப்பு தெரிவித்துள்ளது. பூகம்ப அபாயம் உள்ள துருக்கியில் ஏற்கனவே 1976இல் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் சிக்கி, 3,840 பேரும், 1999இல் ஏற்பட்ட 2 பூகம்பங்களில் சிக்கி 20,000 பேரும் பலியானமை குறிப்பிடத்தக்கது.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum