சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Yesterday at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

தலைவரின் டில்லி பயணம், கட்சிக்கும், கருணாநிதிக்கும் கெட்ட பெயரைத் தான் தந்துள்ளது  Khan11

தலைவரின் டில்லி பயணம், கட்சிக்கும், கருணாநிதிக்கும் கெட்ட பெயரைத் தான் தந்துள்ளது

Go down

தலைவரின் டில்லி பயணம், கட்சிக்கும், கருணாநிதிக்கும் கெட்ட பெயரைத் தான் தந்துள்ளது  Empty தலைவரின் டில்லி பயணம், கட்சிக்கும், கருணாநிதிக்கும் கெட்ட பெயரைத் தான் தந்துள்ளது

Post by நேசமுடன் ஹாசிம் Tue 25 Oct 2011 - 7:05

சோகத்தை வெளிக்காட்ட முடியாத தர்மசங்கடத்தில் இருக்கிறது தி.மு.க., தலைமை. தீபாவளிக்கு திகார் சிறையிலேயே கனிமொழி இருக்க நேர்ந்தாலும், நவ., 3ம் தேதி அவருக்கு ஜாமின் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை அவர்கள் மத்தியில் காணப்படுகிறது.
அதேசமயம், இவ்விவகாரத்தில், தலைமை மீது தொண்டர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.




பாட்டியாலா விசாரணை நீதிமன்றத்தில் நேற்று, எதிர்பார்த்தபடியே கனிமொழியின் ஜாமின் மனுவை, சி.பி.ஐ., ஆட்சேபிக்கவில்லை. இருப்பினும் நீதிபதி, மனு மீதான உத்தரவை, நவ., 3ம் தேதி வரை ஒத்தி வைத்துவிட்டார். சி.பி.ஐ.,யின் எதிர்ப்பு இல்லாததால் ஆறுதல் அடைந்த தி.மு.க., தலைமை, தீபாவளிக்கும் திகார் சிறையிலேயே கனிமொழி இருக்க நேர்ந்ததை எண்ணி, சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

காங்., தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை, அவர் நேற்று முன்தினம் சந்தித்ததற்கும், சி.பி.ஐ.,யின் இந்த நிலைப்பாட்டுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

கருணாநிதி இன்று வருகை : இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத தி.மு.க., பிரமுகர் ஒருவர் கூறியதாவது:
தலைவரைப் பொறுத்தவரை இந்த விவகாரத்தில், மிகுந்த வேதனையடைந்துள்ளார். திங்கள் கிழமை சென்னை திரும்பும்போது, மகளுடன் வீடு வந்துவிடலாம் என்று தான் நினைத்திருந்தார். அது கைகூடாமல் போனதில் அவருக்கு கவலை தான். மற்றபடி, தீபாவளியை கோலாகலமாகக் கொண்டாடுபவர் அல்ல என்பதால், அது பற்றிய வருத்தமெல்லாம் இல்லை. பேரன் ஆதித்யாவை நினைத்து தான் அவர் வேதனைப்பட்டார். நேற்று எப்படியும் ஜாமின் கிடைத்துவிடும் என மிகுந்த நம்பிக்கையில் இருந்தார். அதனால் தான், விசாரணை தள்ளிப் போகப் போக, நேற்று காலை 10.30, மாலை 3 மணி, இரவு என, மூன்று முறை அவரது சென்னை பயணம் ஒத்திவைக்கப்பட்டது. இறுதியாக, இன்று தான் டில்லியில் இருந்து திரும்புவது என முடிவாகியுள்ளது. இவ்வாறு அந்த தி.மு.க., பிரமுகர் கூறினார்.

கட்சியினர் கடும் அதிருப்தி : தி.மு.க., தலைவர் கருணாநிதியும், அவரது குடும்பமும் மிகுந்த வேதனையில் இருந்தாலும், அவரது டில்லி பயணம் பற்றி, அக்கட்சித் தொண்டர்கள் கடும் அதிருப்தியில் உள்ளது அம்பலமாகியுள்ளது. "கனிமொழியின் ஜாமின் மனு பற்றி, பிரதமர் மற்றும் சோனியாவிடம் பேசவில்லை' என கட்சித் தலைமை திரும்பத் திரும்ப கூறி வந்தாலும், "இப்படி ஓர் அவப்பெயர் வந்ததற்கு தலைவரின் டில்லி பயணம்' அமைந்து விட்டதோ என, கட்சியினர் கருதுகின்றனர். மேலும், "காங்கிரசால் தான் தி.மு.க.,வுக்கு இத்தனை சிக்கலும்' என்ற எண்ணம் தொண்டர்களிடம் நிலவுகையில், மீண்டும் மீண்டும் அவர்களையே அண்டிப் பிழைக்கும் நிலைமையை அவர்கள் ரசிக்கவில்லை. "ஜாமின் கிடைத்த மறுநிமிடமே, கனிமொழி வெளியில் வந்துவிடப் போவதில்லை. நீதிமன்ற உத்தரவு உறுதியான பிறகு கூட கருணாநிதி, டில்லி சென்று மகளை அழைத்து வந்திருக்கலாம். தலைவரின் இந்தப் பயணம், கட்சிக்கும், கருணாநிதிக்கும் கெட்ட பெயரைத் தான் தந்துள்ளது' என்பது, அவர்களின் ஒட்டுமொத்த கருத்தாக இருக்கிறது.


தலைவரின் டில்லி பயணம், கட்சிக்கும், கருணாநிதிக்கும் கெட்ட பெயரைத் தான் தந்துள்ளது  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum