Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நபி வழியில் நம் ஹஜ் (தொகுப்பு - 2)
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
நபி வழியில் நம் ஹஜ் (தொகுப்பு - 2)
http://abuwasmeeonline.blogspot.com
கடந்த பதிவின் தொடர்ச்சி...
இஹ்ராம் கட்ட வேண்டிய கடைசி எல்லைகள்: மதீனாவாசிகளுக்கு “துல்ஹுலைபா” என்ற இடம், இதனை “அப்யார்அலி” அல்லது “பீர் அலி” என்றும் கூறுவர். யமன் தேசத்தவருக்கு “யலம்லம்” என்ற இடம் ஷாம் தேசத்தவருக்கு “ஜுஹ்பா” என்ற இடம் நஜ்த் தேசத்தவருக்கு “கர்னுல் மனாஜில்” என்ற இடம். என நபி(ஸல்) வரையறுத்துக் கூறினார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா(ரழி) நூல் : புகாரி, முஸ்லிம் இராக் வாசிகளுக்கு “தாது இர்க்” என்ற இடம் நபி(ஸல்) குறிப்பிட்டார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா(ரழி) நூல்கள் : அபுதாவூது , நஸயீ
மேலே குறிப்பிட்ட தேசத்தவர்களுக்கும், அவ்விடங்களை கடந்து வருபவர்களுக்கும் அந்தந்த இடங்கள் ஹஜ்ஜுக்கான இஹ்ராம் கட்ட கடைசி எல்லையாக பெருமானார்(ஸல்) கூறினார்கள். என இப்னு அப்பாஸ்(ரழி) அறிவிக்கின்றார்கள். எனவே இந்தியாவிலிருந்து செல்லும் ஹாஜிகளுக்கு யமன் தேசத்தாருக்குரிய “யலம்லம்” இஹ்ராம் கட்ட கடைசி எல்லையாக அமைகிறது. கப்பலில் செல்வோருக்கு அவ்விடம் வந்ததும் கப்பல் மாலுமிகளால் அறிவிக்கப்படும். இஹ்ராம் கட்டிக்கொள்ளலாம். விமானங்களில் சில மணி நேரத்தில் ஜித்தா அடையும் ஹாஜிகள் இடையில் இஹ்ராம் கட்ட வசதிப்படாது. எனவே பம்பாயிலிருந்தே இஹ்ராம் அணியலாம். இவ்வெல்லைக்கள் இஹ்ராம் கட்டாதவர்கள் திரும்பி அவ்வெல்லை வந்து இஹ்ராம் அணிய வேண்டும். அல்லது அதற்காக ஒரு ஆடு பரிகாரம் தர வேண்டும்.
இஹ்ராமும் நிய்யத்தும் : இஹ்ராம் கட்டவேண்டிய எல்லை வந்ததும் (விமானத்தில் செல்பவர்கள் பம்பாயிலேயே) இஹ்ராம் கட்ட வேண்டும். இஹ்ராம் கட்டுவதற்கு முன் மீசை, அக்குள், மர்மஸ்தான முடிகள், நகங்களை வெட்டி, குளித்து நறுமணம் பூசிக் கொள்வது சுன்னத் ஆகும். ஹஜ், உம்ராவைத் தவிர வேறு எந்த வணக்க வழிபாட்டுக்கும் நபி(ஸல்) அவர்களோ, அவரது அருமைத் தோழர்களோ,கலீபாக்களோ, இமாம்களோ நிய்யத்துடன் வாயால் சொன்னதற்கு நிரூபிக்கப்பட்ட ஆதாரங்களில்லை. இஃப்ராத் ஹஜ் செய்பவர் “லப்பைக்கஃபி ஹஜ்ஜின்” என்றும்;தமத்துஃ ஹஜ் செய்பவர் “லப்பைக்பஃபி ஹஜ்ஜின் வ உம்ரத்தின்” என்றும்,நிய்யத் செய்திடல் வேண்டும். தமத்துஃ ஹஜ் செய்பவர் இந்த இஹ்ராமில் உம்ராவை முடித்து, களைந்து, பின் துல்ஹஜ் எட்டாம் நாள் இருக்குமிடத்திலேயே (எல்லைக்கு வரவேண்டியதில்லை) ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிகையில் “லப்பைக்பஃபி ஹஜ்ஜின்” என்ற நிய்யத்துடன் வாயால் சொல்ல வேண்டும்.
இஹ்ராம் கட்டியபின் செய்ய கூடாதவைகள்: 1. உடலிலுள்ள முடிகளை அகற்றல். (தானாக முடிகள் உதிர்வது பாவமில்லை. அதற்குப் பரிகாரம் தேவையில்லை) 2. நகங்களைக் கடித்தல், வெட்டுதல் 3. நறுமணங்கள் பூசதல் 4. உடல் உறவு கொள்ளுதல், கனவில் ஸ்கலிதமானால் குற்றமில்லை. குளித்து விட்டால் போதுமானது. 5. தரை பிராணிகளை வேட்டையாடுதல்! வேட்டையாடுபவருக்கு உதவுதல் 6. மக்கா(ஹரம்) எல்லைக்குள் புல், பூண்டுகள், மரம், செடி, கொடிகளைப் பிடுங்குதல் , வெட்டுதல். 7. பொய், புறம் , கோள், பேசுதல் 8. கெட்ட வீணான சொல், செயல்களில் ஈடுபடல் 9. காமப் பார்வை,போகப் பேச்சுக்கள். 10. ஆண்கள் தொப்பி, தலைப்பாகை, துண்டு கொண்டு தலையை மூடுதல் (கூரையுள்ள வாகனங்களில் சவரி செய்தல் கூடும்) 11. மணப்பெண் பேசல், திருமண ஒப்பந்தங்கள் செய்தல் 12. பெண்கள் முகம்,கை, (மணிக்கட்டு வரை) களை மூடுதல்
மக்கா(ஹரம்) சென்றடைந்ததும்: தமத்துஃ ஹஜ் செய்பவர்க்கு உம்ரா செய்ய வேண்டும். இப்ராத், இக்ரான், ஹஜ் செய்பவர்கள் “வருகை தவாப்” (தவாபுல் குதூம்) செய்ய வேண்டும். அத்துடன் அவர்கள் “ஸயீ” (தொங்கோட்டம்) ஓடினால் துல்ஹஜ் பத்தாம் நாள் செய்ய வேண்டிய ஹஜ் ஸயீ செய்ய வேண்டியதில்லை. உம்ரா என்பது தவாப் செய்து, ஸயீ முடித்து தலைமுடி இறக்கி கொள்வதாகும். பின் அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுதலையடையலாம். தவாப் செய்யும் விதம் : மக்கா ஹரம் ஷரீபில் நுழைந்ததும் ஹஜருல் அஸ்வத் கல் மூலையிலிருந்து இடது தோள்புறம் கஃபாவை நோக்கிய வண்ணம் கஃபாவை இடது புறமாக (Anti clock wise) வலம் வர வேண்டும். கஃபாவின் தங்கக் கதவு மகாமே இப்றாஹீமை கடந்ததும் வரும் முதல் மூலையிலிருந்து அடுத்து மூலை வரை “U” வடிவில் உள்ள பகுதி (ஹிஜ்ருல் இஸ்மாயில்) யையும் உள்ளடக்கி வெளியில் நடக்கவும். எனெனில் ஹிஜ்ர் இஸ்மாயில் கஃபாவின் ஒரு பகுதியாகும். இவ்விதம் சுற்றி மீண்டும் ஹஜ்ருல் அஸ்வத் இடம் வருவதற்கு ஒரு சுற்று எனப்படும். முதல் மூன்று சுற்றுக்களில் தங்களது தோள் புஜத்தைச் சிறிது வேகமாக நடக்கவும். மீதி நான்கு சுற்றுக்களில் வழமையாக நடக்கவும். ஒவ்வொரு சுற்றின் போதும் ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிட முடிந்தால் முத்தமிடலாம். முடியாவிட்டால் கல்லை நோக்கிக் கை உயர்த்தி தக்பீர் சொன்னால் போதுமானது. அக்கல்லை முத்தமிடுவது சிறப்பு, பரக்கத் கிடைக்குமென நினைத்து மற்றவர்களுக்கு,முட்டி, மோதி, தொல்லைகள் கொடுப்பது சிறப்பல்ல. நபி(ஸல்) அவர்கள் ‘ஹஜருல் அஸ்வத்தையும் அதற்கு முந்திய “ருக்னுல் யமனி”என்ற மூலையையும் தவிர வேறு எந்த இடத்தையும் தொட்டு முத்தமிடவில்லை. (ஆதாரம் : புகாரி) தவாபில் துஆ ஒதுவதற்காக அரபி தெரிந்த ஆலிம்களையோ, மெளலானா, மெளலவிகளையோ தேடாதீர்கள்; ரெடிமேட் துஆக்களை ஓதாதீர்கள். குறிப்பிட்ட துஆக்களை நபி(ஸல்) ஓதியதாக ஆதாரமில்லை. உங்களது வேண்டுதல்களையும், தேவைகளையும், கஷ்ட நஷ்டங்களையும் உங்களது மொழியிலேயே கேளுங்கள். அல்லாஹ் எல்லா மொழிகளையும் அறிந்தவன். ருக்னுல் யமனிலிருந்து ஹஜ்ருல் அஸ்வத் வரையிலுள்ள தூரத்தை கடக்கையில் நபி(ஸல்) ஓதிய “ரப்பனா ஆதினாஃபித்துன்யா ஹஸனத்தன்வபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வகினா அதாபன்னார்” போன்ற துஆவை ஓதுங்கள். ஏழு சுற்றுக்களை முடிந்ததும் மகாமே இப்றாஹீமில் இரண்டு ரக்அத் தொழுங்கள். அங்கு இடம் கிடைக்கவில்லையெனில் ஹரமின் எந்த எல்லையிலும் தொழலாம். பின் ஜம்ஜம் நீர் அருந்துங்கள்.
“ஸயீ” (தொங்கோட்டம்) ஓடுதல்: ஹஜ்ருல் அஸ்வத் நோக்கியுள்ள திசையில் மேடை ஏறினால் ‘ஸபா’ குன்று வரும். ஸபா குன்றில் ஏறி மும்முறை தக்பீர் சொல்லி தங்களுக்கான தேவைகளை அல்லாஹ்விடம் கேளுங்கள். மேலும் “லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு அன்ஜச வஃதஉவநசர அபதஹு வஹஸபல் அஹ்சாப் வஹதஹு” என்ற துஆவையும் மும்முறை ஓதி ஸயீ ஓட்டத்தை ஆரம்பியுங்கள். எதிரிலுள்ள மாவா குன்றை நோக்கி உங்களுக்கு தெரிந்து திக்ருகள்,துஆக்கள், குர்ஆன் ஓதிக் கொண்டு நடங்கள். குறிப்பிட்ட துஆக்கள் எதுவுமில்லை. இவ்வழியில் பச்சை அடையாளமிட்டிருக்கும் பகுதியில் சிறிது வேகமாக (சிறு ஓட்டம்) ஓடவும், மர்வா குன்றடைந்ததும் ஸபாவில் செய்தது போன்று செய்யுங்கள். இது ஒரு ஓட்டம். பின் மர்வாவிலிருந்து ஸபாவுக்கும் வாருங்கள். 2வது ஓட்டம். இவ்விதம் ஏழாவது ஓட்டம் மர்வாவில் முடியும். இவ்விதம் ஏழு ஓட்டம் ஓடி ஸயீயை முடித்ததும் தலை முடியை இறக்கவும். அல்லது சிறிது வெட்டி விட வேண்டும். இத்துடன் உம்ரா முடிவடைய இஹ்ராமை (தமத்துஉ) ஹஜ் செய்பவர்கள் மட்டும்) களைந்து விடலாம். இப்ராது, இக்ரான், ஹஜ் செய்பவர்கள் தலை முடியை இறக்காமல், வெட்டாமல் இஹ்ராம் உடையிலேயே இருக்க வேண்டும்.
இன்ஷா அல்லாஹ் இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில்...
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum