Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
முந்நூறு கிறுக்கல்கள்
5 posters
Page 1 of 1
முந்நூறு கிறுக்கல்கள்
முந்நூறு
எழுத்துக் கிறுக்கல்கள்
கிறுக்கியது என் கரமாயினும்
கிறுக்கச் சொன்னது
சமூகம்
இவர்
இவர்கள் என் குருநாதர்
அடையாள பொய் சொல்லுகையில்
என்னோக்கி முகம் சுளிக்கும்
சமூக ஆசான்
படைப்பு
இறைவனால் ஆக்கப்பட்டது
மனிதர்களின் தேடல் படலத்தில்
உயிர்த்தெழுகிறது
அறிவு
கற்பவனுக்கும்
கற்றுத் தேர்ந்தவனுக்கும்
கற்றுக் கொடுப்பவன்
இறைவன்
சொல்படலம்
மெய்யா பொய்மையா
மனிதர்கள் தர்க்கிக்கலாம்
இறைவன் கையில் தான்
தீர்ப்பு
கையளவு
கற்றவனும் கற்காதவனும்
வாழ்கிறார்கள் மடிகிறார்கள்
கற்றதில் வாதம் கொள்பவர்கள்
வாழப் பயப்படுகிறார்கள்
வாழ்வின்
ஒவ்வொரு அசைவுகளிலும்
இறைவன் பதிந்து செல்கிறான்
அவன் இருப்பை
வாழ்க்கை
இறைவன் எழுதிய கவிதை
அதன் அதன் தருணங்களில்
வாசிக்கபடுகிறது
ஒரு
கவிதை வாசிப்பின் முடிவில்
மறுகவி பிறப்பெடுக்கும்
இது இயற்கை கூற்று
ஒன்றை
எழுதுகிறவன் எழுதும் முன்
தன் சிந்தைத் திரையில்
வாசிக்கிறான்
சிந்தையில்
எழுதும் வல்லமையுடைவன்
இறைவன் மட்டுமே
இது என்னதென்று மார்தட்டுவது
மடமை
எழுதத்
தெரியாதவன் கையில்
எழுதுகோல் கிட்டியதன் வினை
மௌனமாக அழுகிறது கிறுக்கலில்
கிறுக்கல்கள்
-செய்தாலி
குறிப்பு :என் வலைத் தளத்தில் இது முன்னூறாவது கிறுக்கல்
Last edited by செய்தாலி on Sun 30 Oct 2011 - 10:34; edited 1 time in total
Re: முந்நூறு கிறுக்கல்கள்
மிகவும் அருமையாக உள்ளது செய்தாலி பாராட்டுக்கள் அத்தோடு இன்னுமின்னும் நிறைய எழுதி ஊருக்கு நல்லது செய்ய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்
நன்றியுடன்
நண்பன்
நன்றியுடன்
நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முந்நூறு கிறுக்கல்கள்
நண்பன் wrote:மிகவும் அருமையாக உள்ளது செய்தாலி பாராட்டுக்கள் அத்தோடு இன்னுமின்னும் நிறைய எழுதி ஊருக்கு நல்லது செய்ய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்
நன்றியுடன்
நண்பன்
உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி நண்பன்
Re: முந்நூறு கிறுக்கல்கள்
சிந்தையில்
எழுதும் வல்லமையுடைவன்
இறைவன் மட்டுமே
இது என்னதென்று மார்தட்டுவது
மடமை
அத்தனையும் உண்மையான வரிகள் பாராட்டுகள் இன்னும் பல்லாயிரம் கவிதைகள் உங்கள் சிந்தையில் உருவாகி மனங்களில் மலர்ந்திட வாழ்த்துகிறேன் நன்றிகள்
Re: முந்நூறு கிறுக்கல்கள்
கன நாளைக்குப் பிறகு உங்கள் கவிதைனை படித்திருகிறேன் இன்னும் உங்கள் கவிதைப் பயணத்தை தொடருங்கள் முன்னூறை மூவாயிரமாக்குங்கள்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: முந்நூறு கிறுக்கல்கள்
நேசமுடன் ஹாசிம் wrote:சிந்தையில்
எழுதும் வல்லமையுடைவன்
இறைவன் மட்டுமே
இது என்னதென்று மார்தட்டுவது
மடமை
அத்தனையும் உண்மையான வரிகள் பாராட்டுகள் இன்னும் பல்லாயிரம் கவிதைகள் உங்கள் சிந்தையில் உருவாகி மனங்களில் மலர்ந்திட வாழ்த்துகிறேன் நன்றிகள்
மிக்க நன்றி சகோ
Re: முந்நூறு கிறுக்கல்கள்
மீனு wrote:கன நாளைக்குப் பிறகு உங்கள் கவிதைனை படித்திருகிறேன் இன்னும் உங்கள் கவிதைப் பயணத்தை தொடருங்கள் முன்னூறை மூவாயிரமாக்குங்கள்
மிக்க நன்றி மீனு
Re: முந்நூறு கிறுக்கல்கள்
செய்தாலி wrote:
முந்நூறு
எழுத்துக் கிறுக்கல்கள்
கிறுக்கியது என் கரமாயினும்
கிறுக்கச் சொன்னது
சமூகம் ..... அருமை அருமை....! என்ன சொல்லி பாராட்டுவதென்றே தெரியாத தொடக்கம்.... அம்மா உணவு சமைத்து மேடைமேல் வைக்க அதைச் சாப்பிடும் நாம்... என்உணவை நான் சாப்பிட்டேன் என்று சொல்லுவது சமைத்தவளை அடையாளம் காட்டாமல் அது என் உணவு என்று சொல்வதுபோல்தான் உள்ளது... சபாஷ்! செய்தாலி
இவர்
இவர்கள் என் குருநாதர்
அடையாள பொய் சொல்லுகையில்
என்னோக்கி முகம் சுளிக்கும்
சமூக ஆசான் -ஒன்றைஅடடா... வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவையும் கற்றுக்கொடுக்கும் சமூக ஆசானை விடுத்து நானும் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறேன் இன்றுவரை... இவர்கள் என் ஆசான்கள் என்று... (அச்சச்சோ...இனி எப்படி சொல்வது செய்தாலி?)
எழுதுகிறவன் எழுதும் முன்
தன் சிந்தைத் திரையில்
வாசிக்கிறான்
சிந்தையில்
எழுதும் வல்லமையுடைவன்
இறைவன் மட்டுமே
இது என்னதென்று மார்தட்டுவது
மடமை
எழுதத்
தெரியாதவன் கையில்
எழுதுகோல் கிட்டியதன் வினை
மௌனமாக அழுகிறது கிறுக்கலில்
கிறுக்கல்கள் --செய்தாலிஇந்த தங்களின் கிறுக்கலில் ஒரு புதிய எழுச்சியே இருக்கிறது செய்தாலி.... தங்களின் முன்னூறாவது கவிதை எப்போதும்போல் கருத்தில் முன்னிற்கிறது செய்தாலி. வாழ்த்துக்கள்.... எங்களுக்குத் தாங்கள் தொடர்ந்து கொடுக்கும் அந்தந்த நேரத்திற்கான சிந்தனைத் தீனிக்கு நன்றிகள்.... ஆயிரமாயிரமாகக் கவிதைகளை அள்ளிக்கொடுங்கள் இச்சமூகத்திற்கு....!
எங்கிருப்பினும் இந்த யாதுமானவளின் ஆர்வத்துடன் கூடிய எதிர்பார்ப்பர்ப்பும்... எதிர்பாற்ப்ற தங்கள் கவிதைக்கு என் வாழ்த்தும் எப்போதும் இருக்கும்...! வாழ்க வளமுடன்!
குறிப்பு :என் வலைத் தளத்தில் இது முன்னூறாவது கிறுக்கல்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: முந்நூறு கிறுக்கல்கள்
இந்த தங்களின் கிறுக்கலில் ஒரு புதிய எழுச்சியே இருக்கிறது செய்தாலி.... தங்களின் முன்னூறாவது கவிதை எப்போதும்போல் கருத்தில் முன்னிற்கிறது செய்தாலி. வாழ்த்துக்கள்.... எங்களுக்குத் தாங்கள் தொடர்ந்து கொடுக்கும் அந்தந்த நேரத்திற்கான சிந்தனைத் தீனிக்கு நன்றிகள்.... ஆயிரமாயிரமாகக் கவிதைகளை அள்ளிக்கொடுங்கள் இச்சமூகத்திற்கு....!
எங்கிருப்பினும் இந்த யாதுமானவளின் ஆர்வத்துடன் கூடிய எதிர்பார்ப்பர்ப்பும்... எதிர்பாற்ப்ற தங்கள் கவிதைக்கு என் வாழ்த்தும் எப்போதும் இருக்கும்...! வாழ்க வளமுடன்!
உங்களின் பின்னூட்டம் மெய்சிலிர்க்க வைத்துவிட்டது
ஆழமான வாசித்தாலும் நெடிய உள்நோக்கும் ......அற்புதம்
உங்களின் அன்பும் ,கருத்தும் ,பாராட்டும் ,ஊக்கமும் பெறுகையில்
எனக்கு நல்ல தோழமையை கொடுத்த இறைவன் அவனுக்கு நன்றி சொல்கிறேன்
இறைவனுக்கு நன்றி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum