Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இதயத்திலும் புற்றுநோய் ஏற்படும்: அதிர்ச்சித் தகவல்
4 posters
Page 1 of 1
இதயத்திலும் புற்றுநோய் ஏற்படும்: அதிர்ச்சித் தகவல்
உடலிலுள்ள உறுப்புகள் பல லட்சக்கணக்கான திசுக்களால் உருவாக்கப்பட்டது. பல சிறிய செல்கள் அடங்கியது தான் திசு.
இந்த திசுக்கள் தான் உடல் உறுப்பாகின்றன. ஒவ்வொரு உறுப்பும், ஒவ்வொரு வகை செல்களை உதாரணமாக தோல் செல், சதை செல், இதய செல், நரம்பு செல் எனக் கொண்டுள்ளது.
இந்த செல்கள் இரண்டு செல்லாக உருவாகி தேய்மானமடைந்த செல்களை அப்புறப்படுத்தி அமர்கிறது. செல் பெருக்கம் நடப்பது இயற்கை.
செல் இரண்டாக பிரிந்து பின் அதுவே பன்மடங்காக பெருகி கட்டியாக வளர்கிறது. இதில் இரண்டு வகை. தொல்லை தராத கட்டியை “பினைன் கட்டி” என்கிறோம். இக்கட்டியால் எந்தப் பாதிப்பும் இருக்காது.
எனினும் அவ்வப்போது பார்த்துக் கொள்ள வேண்டும். மெலிக்னன்ட் கட்டி தான் ஆபத்தான கட்டி. பல மடங்கு செல்களாக குட்டி போட்டு கட்டுக்கு அடங்காத வளர்ச்சியை கொடுத்து எந்த உறுப்பிலிருந்து வளர்கிறதோ அந்த உறுப்பை சீரழித்து உயிரை அழித்து விடுகிறது. இக்கட்டியை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த வேண்டும்.
புற்றுநோய் வர காரணங்கள்: சாதாரண நிலையில் செல்கள் தாறுமாறாக வளர்ச்சி கண்டு டி.என்.ஏ.வில் மாற்றம் ஏற்பட்டு செல்லின் வளர்ச்சியை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும்.
1. புகைப்பிடிப்பதால், புகையிலையால் ஏற்படும் விளைவு, அளவுக்கு மீறிய மதுப்பழக்கம் மற்றும் ஜங்க்புட் போன்றவற்றால் ஏற்படுகிறது.
2. பாரம்பரியத் தன்மை, பென்சைன் போன்ற ரசாயனப் பொருட்கள்.
3. அதிக ரேடியோ கதிர்கள் படுதல், வைரஸ்.
இதரபுற்றுநோய்கள்: முதன்மையான புற்று நோய், இதய தசைகளிலிருந்து வருபவை. இவை பினைன் வகை.
இரண்டாம் நிலை மற்ற பகுதியில் வந்த புற்றுநோய், இதயத்திற்கு பரவுவதால் வருபவை.
மூன்றாவது வகை இதய வால்வுகளில் வரும் “பாப்பிலாரி பைப்ரோயலாஸ் டோமா” என்ற வகை. இதனால் திடீர் மரணம் ஏற்படும்.
இதய கட்டிகளில் “மிக்சோமா” என்ற இடது மேலறையில் வரும் கட்டி தான் பிரசித்தி பெற்றது. இதுதான் வழக்கமாக பெண்களுக்கு வரும். இதை எக்கோ பரிசோதனை மூலம் கண்டறியலாம். 75 சதவீதம் இடது மேலறையில் தான் இந்த கட்டி வரும். வலது மேலறையில் வருவது குறைவே.
மிக்சோமாவின் அறிகுறிகள்: இடது மேலறை மிக்சோமா “மைட்டிரல் ஸ்டெனோசிஸ்” என்ற ஈரிதழ் வால்வு சுருக்கம் போல இருக்கும். மல்லாந்து படுக்கும் போது மூச்சிரைப்பு, ஆழ்ந்த தூக்கத்திலிருக்கும் போது மூச்சிரைப்பு, மார்பு வலி அல்லது மார்பு அழுத்தம், தலைசுற்றல், மயக்கம், படபடப்பு, சிறிய வேலை செய்தாலும், மூச்சு வாங்குதல் என்பது பெண்களுக்கு சாதாரணமாக வருவதால் அவர்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்.
பொதுவான அறிகுறிகள்: கை விரல்கள் நீல நிறமாக தோன்றுதல், இருமல், நகங்கள் மேலே தூக்கி இருத்தல், அசதி, தன்னையறியாத எடை குறைவு, முட்டிகளில் வலி, வீக்கம். இந்த அறிகுறிகள் இதய உட்சுவரான எண்டோ கார்டியத்தில் ஏற்படும் எண்டோ கார்டைட்டிஸ் என்ற நோய் போல இருக்கும்.
வலது மேலறை மிக்சோமா எந்தவித தொல்லை இல்லாமல் 15 செ.மீ(5 அங்குலம்) வரை வளர்ந்து விடும். எவ்வித பாதிப்பும் இல்லாமல் நோயாளி வலம் வருவார். இந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் வெட்டி எடுக்க வேண்டும். அப்படி சரிவர எடுக்காவிட்டால் திரும்பவும் வரும்.
முக்கிய பரிசோதனைகள்: எக்கோ கார்டியோ கிராம், இ.சி.ஜி, டாப்ளர் பரிசோதனை, எம்.ஆர்.ஐ இதய ஊடுறுவல் பரிசோதனைகள், ஆஞ்சியோகிராம்.
மிக்சோமாவின் விளைவுகள்: தக்க சிகிச்சை செய்யாவிட்டால் இந்த மிக்சோமாவிலிருந்து கட்டிகள் வெளியேறி மூளைக்கு செல்லும் ரத்த நாளத்தை அடைத்து பக்கவாதம் உண்டாகலாம்.
மேலும் கண், கால் ஆகிய இடங்களுக்கு சென்று அங்கு கட்டியாக வளரலாம். இதை உடனடியாக அறுவை சிகிச்சை செய்யாவிடில் மரணம் ஏற்படலாம்.
இதய துடிப்பு மாறுபாடு, நுரையீரலில் நீர் சேர்தல், பல பாகங்களில் ரத்த குழாய் அடைப்பு ஆகியவை, ஈரிதழ் வால்வை முழுவதுமாக அடைத்து மரணத்தை வரவழைக்கும். இந்த கட்டி இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்து தகுந்த சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: இதயத்திலும் புற்றுநோய் ஏற்படும்: அதிர்ச்சித் தகவல்
மிக்க நன்றி தோழா எமது களஞ்சியத்தில் சேமிக்கப்பட்ட தகவல்களாய் பயன்பெறும் நாளைய உலகம் :];:
Similar topics
» புகைப்பதால் வாழ்நாளில் 10 ஆண்டுகள் இழப்பு: அதிர்ச்சித் தகவல்
» காலையில் வரும் மாரடைப்பு ஆபத்தானது: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
» உப்பைக் குறைத்தால் இருதய நோய்கள் ஏற்படும்: அதிர்ச்சித் தகவல்
» கையடக்கத் தொலைபேசியை அதிகம் பயன்படுத்தினால் மூளை புற்றுநோய் ஏற்படும்: ஆய்வில் தகவல்
» பரசிடமோல் மாத்திரைகளை உட்கொண்டால் இரத்தப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது: ஆய்வில் தகவல்
» காலையில் வரும் மாரடைப்பு ஆபத்தானது: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
» உப்பைக் குறைத்தால் இருதய நோய்கள் ஏற்படும்: அதிர்ச்சித் தகவல்
» கையடக்கத் தொலைபேசியை அதிகம் பயன்படுத்தினால் மூளை புற்றுநோய் ஏற்படும்: ஆய்வில் தகவல்
» பரசிடமோல் மாத்திரைகளை உட்கொண்டால் இரத்தப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது: ஆய்வில் தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum