சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

அண்ணனே, அந்த இதயம் இதையும் தாங்குமோ?-நூலக மாற்றம் குறித்து கருணாநிதி வேதனை Khan11

அண்ணனே, அந்த இதயம் இதையும் தாங்குமோ?-நூலக மாற்றம் குறித்து கருணாநிதி வேதனை

+2
kalainilaa
யாதுமானவள்
6 posters

Go down

அண்ணனே, அந்த இதயம் இதையும் தாங்குமோ?-நூலக மாற்றம் குறித்து கருணாநிதி வேதனை Empty அண்ணனே, அந்த இதயம் இதையும் தாங்குமோ?-நூலக மாற்றம் குறித்து கருணாநிதி வேதனை

Post by யாதுமானவள் Fri 4 Nov 2011 - 8:14

சென்னை: தமிழ்ப் பண்பாட்டுச் சின்னங்களை, ஒவ்வொன்றாக முதல்வர் ஜெயலலிதா அழித்து வருகிறார் என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மொழிக்கும், நாட்டுக்கும் தங்களை அர்ப்பணித்து சரித்திரத்தில் இடம்பெற்றவர்களின் நினைவைப் போற்றுவது ஓர் அரசின் அடிப்படை கடமைகளில் ஒன்றாகும். தமிழகத்தில் திமுக ஆட்சி நடந்த போதெல்லாம் இந்தப் பண்பாடு போற்றிப் பேணப்பட்டதை அனைவரும் அறிவர்.

எம்.ஜி.ஆருடைய ஆட்சிக் காலத்தில் மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது. ஆனால் அதன் தொடக்க விழா நடைபெறுவதற்கு முன்பு அவர் மறைந்துவிட்டார். அதன் பின்னர் ஜானகி அம்மையார் ஆட்சியிலும், ஆளுநர் ஆட்சியிலும் தரமணியில் சிறிய வாடகை வீட்டில் அப் பல்கலைக்கழகம் அனாதையாக இயங்கி வந்தது.

31-7-1998ல் திமுக ஆட்சியில்தான் அந்தப் பல்கலைக்கழகத்தின் கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டன. திரைப்பட நகருக்கு எம்.ஜி.ஆரின் பெயரைச் சூட்டினேன்.

சென்னை கடற்கரைச் சாலைக்கு காமராஜர் சாலை என பெயர் சூட்டியது, காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாட அரசாணை பிறப்பித்தது, பெரியார் நினைவு சமத்துவபுரம், முன்னாள் முதல்வர் ஓமந்தூரார் அரசினர் தோட்டம், நாமக்கல் கவிஞர் மாளிகை, வள்ளுவர் கோட்டம், குமரிமுனையில் 133 அடி வள்ளுவர் சிலை, வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை, வீரன் சுந்தரலிங்கம் ஆகியோருக்கு நினைவிடங்கள், சென்னையில் அம்பேத்கர் மணி மண்டபம், குமரியில் காமராஜர் மணி மண்டபம், மூதறிஞர் ராஜாஜி நினைவிடம், திருமங்கலத்தில் தியாகி விஸ்வநாததாஸ் நினைவில்லம், நாகர்கோவிலில் ஜீவா மணி மண்டபம்,

பட்டுக்கோட்டையில் கல்யாணசுந்தரம் மணிமண்டபம், ராஜீவ் காந்தி தகவல் தொழில்நுட்பச் சாலை, சென்னையில் பக்தவத்சலம் நினைவில்லம், இடையன்குடியில் கால்டுவெல் நினைவகம், பசும்பொன் தேவர் பெயரில் கல்லூரிகள், சிலை, குன்றக்குடி அடிகளாருக்கு நினைவு மண்டபம், திருப்பத்தூரில் மருது பாணடியர் நினைவிடம், தில்லையாடி வள்ளியம்மை நினைவில்லம், எட்டையபுரத்தில் பாரதியார் மணிமண்டபம் என திமுக ஆட்சியில் தலைவர்களின் நினைவுகள் போற்றப்பட்டன.

அண்ணாவின் பெயரால் எத்தனையோ நினைவுச் சின்னங்களை அமைத்தேன். 1990ம் ஆண்டு மீனம்பாக்கம் பன்னாட்டு விமானத் தளத்துக்கு அண்ணா பெயரைச் சூட்டச் செய்தேன். அவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் ரூ. 172 கோடியில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை சென்னையில் அமைத்தேன்.

அகிலம் புகழும் அறிவுப் பண்ணையாக ஆசியாவிலேயே முதன்மையானதாக அந்த நூலகம் அமைந்தது. திராவிட மக்களின் அறிவு வளர்கூடமாக அந்த நூலகம் விளங்குகிறது.

ஆனால் இந்த நூலகத்தை காழ்புணர்வு காரணமாக மருத்துவமனையாக மாற்றுவேன் என்று ஜெயலலிதா அறிவித்திருப்பதன் மூலம், எந்த அளவுக்கு குரோதம் குடிகொண்டிருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம்.

புதிய தலைமைச் செயலகக் கட்டடம், பாவேந்தர் செம்மொழி தமிழாய்வு நூலகம், தொல்காப்பியப் பூங்கா ஆகியவை முடக்கம், மற்ற பகுதிகளில் தொடங்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகங்கள் ரத்து, சென்னை புறநகர் காவல் ஆணையரகம் ரத்து, செம்மொழிப் பூங்காவின் பெயர்ப் பலகை மறைப்பு என பலவற்றிற்கு மூடு விழா நடத்தி தமிழ்ப் பண்பாட்டுச் சின்னங்களை ஒவ்வொன்றாக அழித்து வருகிறார் ஜெயலலிதா.

எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்றார் அண்ணா. அண்ணாவின் இதயம் இதையும் தாங்குமோ? என்று கூறியுள்ளார் கருணாநிதி.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

அண்ணனே, அந்த இதயம் இதையும் தாங்குமோ?-நூலக மாற்றம் குறித்து கருணாநிதி வேதனை Empty Re: அண்ணனே, அந்த இதயம் இதையும் தாங்குமோ?-நூலக மாற்றம் குறித்து கருணாநிதி வேதனை

Post by kalainilaa Fri 4 Nov 2011 - 11:14

தலை ஆளும் நேரத்தில் தான் எல்லோருக்கும்
விடை வந்தது உண்மை .
விடலைகள் கூட அறிவார்கள்
நூலகம் ஏன் மூடப்படுகிறது என்பதை .
நேற்று தலை கைது
இன்று நூலகம் மாற்றம்
தொடர் ஏமாற்றம்.....
இன்னும் தொடரும் ....
மாற்றம் வரும் ஏமாற்றமாய் மாறும் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

அண்ணனே, அந்த இதயம் இதையும் தாங்குமோ?-நூலக மாற்றம் குறித்து கருணாநிதி வேதனை Empty Re: அண்ணனே, அந்த இதயம் இதையும் தாங்குமோ?-நூலக மாற்றம் குறித்து கருணாநிதி வேதனை

Post by முனாஸ் சுலைமான் Fri 4 Nov 2011 - 12:26

எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்றார் அண்ணா. அண்ணாவின் இதயம் இதையும் தாங்குமோ? என்று கூறியுள்ளார் கருணாநிதி.
@.
@.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

அண்ணனே, அந்த இதயம் இதையும் தாங்குமோ?-நூலக மாற்றம் குறித்து கருணாநிதி வேதனை Empty Re: அண்ணனே, அந்த இதயம் இதையும் தாங்குமோ?-நூலக மாற்றம் குறித்து கருணாநிதி வேதனை

Post by lafeer Fri 4 Nov 2011 - 12:38

வேதணைப்பட்டு என்ன செய்ற அதான் எல்லாம் முடிஞ்சி போச்சே
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

அண்ணனே, அந்த இதயம் இதையும் தாங்குமோ?-நூலக மாற்றம் குறித்து கருணாநிதி வேதனை Empty Re: அண்ணனே, அந்த இதயம் இதையும் தாங்குமோ?-நூலக மாற்றம் குறித்து கருணாநிதி வேதனை

Post by யாதுமானவள் Fri 4 Nov 2011 - 12:40

இவளுக்கு மனநிலை சரியில்லாமல் ஆகிவிட்டது. அதுதான் என்ன செய்கிறோமெனத் தெரியாமல் தான்தோன்றித்தனமாக எதாவது செய்துகொண்டிருக்கிறாள்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

அண்ணனே, அந்த இதயம் இதையும் தாங்குமோ?-நூலக மாற்றம் குறித்து கருணாநிதி வேதனை Empty Re: அண்ணனே, அந்த இதயம் இதையும் தாங்குமோ?-நூலக மாற்றம் குறித்து கருணாநிதி வேதனை

Post by பாயிஸ் Fri 4 Nov 2011 - 17:36

யாதுமானவள் wrote:இவளுக்கு மனநிலை சரியில்லாமல் ஆகிவிட்டது. அதுதான் என்ன செய்கிறோமெனத் தெரியாமல் தான்தோன்றித்தனமாக எதாவது செய்துகொண்டிருக்கிறாள்

என்ன செய்வது என்று இருக்காமல் ஏதாவது செய்யுங்களேன் முடிவுக்கு வரட்டும்
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

அண்ணனே, அந்த இதயம் இதையும் தாங்குமோ?-நூலக மாற்றம் குறித்து கருணாநிதி வேதனை Empty Re: அண்ணனே, அந்த இதயம் இதையும் தாங்குமோ?-நூலக மாற்றம் குறித்து கருணாநிதி வேதனை

Post by *சம்ஸ் Fri 4 Nov 2011 - 20:32

யாதுமானவள் wrote:இவளுக்கு மனநிலை சரியில்லாமல் ஆகிவிட்டது. அதுதான் என்ன செய்கிறோமெனத் தெரியாமல் தான்தோன்றித்தனமாக எதாவது செய்துகொண்டிருக்கிறாள்
எடுத்து சொல்ல ஆள் இல்லையா ?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அண்ணனே, அந்த இதயம் இதையும் தாங்குமோ?-நூலக மாற்றம் குறித்து கருணாநிதி வேதனை Empty Re: அண்ணனே, அந்த இதயம் இதையும் தாங்குமோ?-நூலக மாற்றம் குறித்து கருணாநிதி வேதனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum