Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மருந்து இல்லாமல் சிகிச்சை செய்யும் 5 `மருத்துவர்கள்’
Page 1 of 1

http://abuwasmeeonline.blogspot.com
மருந்து இல்லாமல் சிகிச்சை செய்யும் 5 `மருத்துவர்கள்’ நமது ஆரோக்கியத்திற்கு அவசியமானவர்கள். அவர்கள்…
மூச்சை இழுத்து விடுங்கள் என்றுதான் இந்த டாக்டரும் கூறுகிறார். அடுத்த நிமிடம் இவரது சிகிச்சையால் புத்துணர்வு அடைகிறார்கள் அனைவரும். சுத்தமான காற்றுதான் நம்மை நலமாக வைக்கும் முதல் இயற்கை மருத்துவர். காற்று உடலுக்குத் தரும் நன்மைகள் பல. காற்றுதான் உடலின் எரிபொருள். நாம் உண்ணும் உணவுகள் செரிமானம் ஆகவும், செல்கள் வளர்சிதை மாற்றம் அடையவும் காற்று தேவை. ரத்த ஓட்டம் ஆரோக்கியமாக இருக்க தூய காற்று அவசியம். நல்ல காற்றை சுவாசிக்கும் போதுதான் நரம்புகள் ஆரோக்கியம் பெறும். ஒரு நாளைக்கு சுமார் 7 ஆயிரத்து 50 லிட்டர் காற்று உள்ளிழுக்கப்படுகிறது. ஒவ்வொரு சுவாசத்திலும் நம் நலவாழ்வு இருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள். காற்றை மாசுபடுத்தாமல் வாழ்வதே நாம் செய்யும் முதல் அறப்பணி.
இந்த மருத்துவர் கண்டிப்பான பேர்வழி. கட்டுப் பாடுகளை விதித்து உடல்நலனைக் காப்பவர். கண்டிப்பு என்பதால் இவரை அணுகுபவர்கள் குறைவுதான். ஆனால் அணுகியவர்கள் நலம் பெறுவது உண்மை. எனவே இவரைக் கொண்டாடாதவர்கள் இல்லை. ஆமாங்க… “டயட்”தான் நலவாழ்வுதரும் இன்னொரு இயற்கை மருத்துவர். `டயட்’ என்றால் உணவுக் கட்டுப்பாடு என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஊட்டம் நிறைந்த சத்துணவு சாப்பிடுவதே உண்மையான `டயட்’ ஆகும். நாம் இஷ்டம்போல் சாப்பிட்டு நோய்வாய்ப் படுவதால்தான் டாக்டர்கள் உணவுக் கட்டுப்பாடு விதிக்கி றார்கள். அதைத்தான் நாம் டயட் என்று சொல்லிக் கொள்கிறோம். மற்றபடி டயட் என்பது உடலுக்கு ஊட்டம் தரும் உணவுகளை சேர்ப்பதே ஆகும். டயட் கடைபிடிப்பது உடல் எடையை கட்டுப்பாட்டுக்குள் வைக்கும். கொழுப்பு படியாமல் தடுக்கும். எப்போதும் டயட் கடைபிடிப்பவர்களை நீரிழிவு, புற்றுநோய் போன்ற கொடிய வியாதிகள் அண்டாது. கோபம், மன அழுத்தம், உயர் ரத்த அழுத்தம் போன்றவையும் வராது.
கொஞ்சம் கடினமான சிகிச்சை முறைகளை கடைபிடிப்பவர் இந்த மருத்துவர். தினமும் கொஞ்ச நேரம் தனக்கு ஒதுக்கக் கேட்கிறார். அவர் சொல்வதைக் கேட்டால் பலமடங்கு பலன் கிடைப்பதாக நலம் பெற்றவர்கள் கூறுகிறார்கள். தேகப் பயிற்சிதான் உடலை உறுதிப்படுத்தும் இயற்கை மருத்துவர். உடற்பயிற்சியால் கிடைக்கும் பலன்கள் ஏராளம். அவற்றில் முக்கியமான சிலவற்றைச் சொல்கி றோம்… உடற்பயிற்சி உடல்வலியைத் தருமென்று நீங்கள் நினைப்பதுண்டா? அது மிகவும் தவறு. உடற்பயிற்சி உற்சாகம் தருவதாகும். நீங்கள் என்றாவது மன அழுத்தம் மிகுந்து காணப்பட்டால் 30 நிமிடம் உடற் பயிற்சியில் ஈடுபட்டுப் பாருங்கள். மனமாற்றம் ஏற்பட்டு அமைதி சூழ்ந்து கொள்ளும். தேகப்பயிற்சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உயர் ரத்த அழுத்தம் வராமல் தடுக்கும். உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுவதன் மூலம் பல வியாதிகளை தடுக்கும். உடற்பயிற்சியால் சுவாசம் சீராகும். உடலுக்கு பலமடங்கு ஆற்றலும் கிடைக்கும். அத்துடன் நிம்மதியான உறக்கமும் கிடைக்கச் செய்யும். இன்னுமொரு முக்கியமான விஷயம் உடலுறவுக்கான ஊக் கத்தை தருவதில் உடற்பயிற்சி பெரும்பங்கு வகிக்கிறது.
“மாடாய் உழைத்து ஓடாய்த் தேய்ந்ததுதான் உங்கள் உடல் நலத்திற்கு கேடு”. எனவே கொஞ்சம் ஓய்வெடுங்கள் என்பதுதான் இந்த மருத்துவரின் ஆலோசனை. அதைப் பின்பற்றியவர் கள் நிம்மதியான உறக்கமும். நல்ல புத்துணர்ச்சி யும் பெற்று வாழ்ந்து வருகிறார்கள். இந்த டாக்டரின் பெயர் ஓய்வு. உழைப்பதற்கேற்ற ஓய்வு எடுத்தால்தான் மறுநாள் பணிகளைச் சுறு சுறுப்பாகச் செய்ய முடியும். ஓய்வு நேரத்தில் உடல் தளர்வு நிலைக்குச் சென்று தன்னைத்தான் புதுப் பித்துக் கொள்கிறது. ஓய்வு வேளையில் மூளையில் புதிய செல்கள் உற்பத்தி ஆகின்றன. இது உடல் நலத்திற்கு மட்டுமல்லாமல் மனநலத்திற்கும் உதவுகிறது. கவலை. மன அழுத்தம் போன்றவற்றைக் குறைக்கிறது. ஒவ்வொருவரும் தினமும் 8 மணி நேரம் தூங்க வேண்டும். ஒன்றிரண்டு மணி நேரம் வேலை செய்யாமல் தளர்வாக இருந்து கலந்துறவாட வேண்டும். அதுதான் பூரண நலம் தரும் ஓய்வாகும்.
இந்த மருத்துவர் அமைதி ஆசாமி. ஆனால் நல்ல மனநல மருத்துவ நிபுணர். பல நேரங்களில் இவர் பேசும் மவுன மொழி யாருக்கும் புரிவ தில்லை. “என்ன நடந்தாலும் பொறுத்திருந்து பார், நல்ல வழி பிறக்கும்”, “எதுக்கும் ஒரு நேரம் வர வேண்டும்” என்று தத்துவம் பேசுவார். இதைக் கேட்டு எரிச்சல் அடைபவர்கள் பலர். ஆனால் பின்னாளில் அவர் சொன்னதுபோல் நல்ல மாற்றம் நடந்த பிறகு அவரையே மறந்து மகிழ்ச்சியில் மூழ்கிவிடுவார்கள் அனைவரும். ஆமாம் இவர்தான் காலம் என்னும் மனநல மருத்துவர். இவர் எந்த வியாதியைத் தீர்க்கிறாரோ, இல்லையோ “கவலை” என்னும் கொடிய வியாதியை குணப்படுத்துவதில் இவரை மிஞ்சிய மருத்துவர் உலகில் கிடையாது. “காலமே காயம் ஆற்றும் அருமருந்து” என்பார்கள். அழுதவர் அடுத்த கணமே சிரிப்பது காலம் செய்யும் மாற்றம் என்பதை அனுபவத்தில்தான் உணரமுடியும்!
மேற்கண்ட ஆலோசனைகளை கடைபிடிப்பவர்களுக்கு ஆயுள் கெட்டி!
நன்றி: உங்களுக்காக

Permissions in this forum:
You cannot reply to topics in this forum