Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மாரடைப்பைத் தடுக்கும் மலிவு விலை மருந்துகள்
2 posters
Page 1 of 1
மாரடைப்பைத் தடுக்கும் மலிவு விலை மருந்துகள்
உலக
அளவில், மனித உயிர் குடிக்கும் அபாயகரமான நோய்களில் முதல் இடத்தைப்
பிடித்திருக்கிறது 'மாரடைப்பு!’ -இது பழைய செய்தி என்றாலும், 'இந்தியாவில்,
மாரடைப்பைத் தடுக்கும் மலிவு விலை மருந்துகளை ஏழைகள்கூட வாங்குவது இல்லை!’
என்ற பேரதிர்ச்சி செய்தியை வாசிக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று!
இந்தியாவில், யாரும் மாரடைப்புக்கு மருந்து சாப்பிடுவது இல்லையா? அல்லது
மலிவு விலை மருந்து கிடைப்பதே மருத்துவர்களுக்குத் தெரியவில்லையா?
தெரிந்தாலும் நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கவில்லையா? என பல கேள்விகளைக்
கிளப்பியிருக்கிறது இந்த ஆய்வு.
நீரிழிவு நோயாளிகளுக்கு மற்றவர்களைக் காட்டிலும் மாரடைப்பு வருவதற்கான
வாய்ப்பு விகிதம் அதிகம். எனவே, 'ஒருவருக்கு நீரிழிவு இருப்பது
உறுதியானால், அவருக்கு மாரடைப்பு வருவதைத் தடுப்பதற்கான சிகிச்சையையும்
சேர்த்தே அளிக்க வேண்டும்’ என்கிறது அமெரிக்க ஹார்ட் அசோசியேஷன்!
இதுகுறித்து 'நீரிழிவு மருத்துவ நிபுணர்’ டாக்டர் கருணாநிதியிடம் பேசினோம்.
''இந்த ஆய்வின் முடிவு நூற்றுக்கு நூறு சரி! ஆனால், நம்மூரைப் பொறுத்தவரை
எந்த நோய் வந்தாலும் முதலில், கை மருந்து, அடுத்ததாக மெடிக்கல் ஷாப் என
'தனக்கு தானே மருத்துவம்’ செய்துகொள்கிறார்கள். முடியாத பட்சத்தில்தான்
சிறப்பு மருத்துவர்களை அணுகுகிறார்கள். இதுபோல், நோய் முற்றிய நிலையில்
வருபவர்களுக்கு ஆரம்பக் கட்ட சிகிச்சைகள் பலனளிக்காது. அறுவை சிகிச்சை
மாதிரியான உச்சகட்ட சிகிச்சை முறைகளைத்தான் செய்தாக வேண்டும். மருத்துவ
விழிப்புணர்வு மக்களிடையே இருந்தால், ஆரம்பக்கட்டத்திலேயே விலை குறைந்த
மருந்துகளால், மாரடைப்பை சரி செய்துவிட முடியும்!'' என்று நம்பிக்கை
ஊட்டியவர் தொடர்ந்து, ''பெரும்பாலும் மரபு ரீதியாகவே இந்தியர்களின்
ஜீன்களில் கடத்தப்படும் இந்நோய்க்கு அதிகம் பலியாவது ஆண்கள்தான். பெண்களின்
உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனானது மாரடைப்பை ஏற்படுத்தும்
காரணிகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. ஆனால், நீரிழிவு பாதிப்பு உள்ள
பெண்களுக்கும், மெனோபாஸ் காலகட்டத்தை எட்டிய (ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பு
தடைபட்டு விடுவதால்) பெண்களுக்கும் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள்
ஆண்களுக்கு நிகராகவே இருக்கிறது.
ஒரு குடும்பத் தலைவருக்கு மாரடைப்பு வந்தால், பின்னாளில் வாரிசுக்கும்
மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். நாற்பது வயதில், குடும்பத்தைப்
பொருளாதார ரீதியாக வழி நடத்திச் செல்லும் பொறுப்பில் இருக்கும் குடும்பத்
தலைவரை இந்நோய் தாக்கும்போது மனதாலும், மருத்துவச் செலவுகளாலும்
ஒட்டுமொத்தக் குடும்பமே நிலைகுலைந்து போய்விடுகிறது. மாரடைப்பை
சரிசெய்யக்கூடிய அறுவை சிகிச்சை செலவுகள் சாதாரண மருத்துவமனைகளிலேயே
லட்சங்களில்தான் ஆரம்பிக்கிறது. எனவே, இந்நோய் பாதிப்பு உள்ள குடும்ப
உறுப்பினர்கள் தங்களது முப்பது வயதில் இருந்தே வருடத்துக்கு ஒருமுறை
கட்டாயமாக 'கொலஸ்ட்ரால் டெஸ்ட்’ (fasting lipid profile) எடுத்துக்
கொள்ளவேண்டும். இதில், 'எல்.டி.எல். கொலஸ்ட்ரால்’ அளவுக்கு அதிகமாக
இருந்தாலோ அல்லது 'ஹெச்.டி.எல். கொலஸ்ட்ரால்’ அளவு குறைவாக இருந்தாலோ
உடனடியாக சிறப்பு மருத்துவரை அணுகுவது நல்லது.
ரத்தக் கொதிப்பு, நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள், புகை பிடிப்பவர்கள்,
உடற்பயிற்சியே செய்யாதவர்கள், அதிக உடல் எடையுடன் கொழுப்புச் சத்து
உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே,
அதிகப்படியான கொழுப்பைக் குறைப்பதற்குத் தொடர்ச்சியான உடற்பயிற்சியும்,
டயட் இருப்பதுமே சிறந்த வழி. பெரும் பான்மையானவர்களால் இதனை சரிவரப்
பின்பற்ற முடியவில்லை. அதனால்தான் 'STATIN’ என்ற மருந்தைக்
கண்டுபிடித்தார்கள். கொழுப்பைக் குறைக்கக்கூடிய இந்த மருந்து பல ரகங்களில்,
மிகக்குறைந்த விலையில் கிடைக்கிறது. ஆனாலும், டாக்டரின் ஆலோசனையின்படி,
நல்ல தரமான நிறுவனங்களின் தயாரிப்புகளை வாங்கிப் பயன்படுத்துவது பக்க
விளைவுகளைக் குறைப்பதோடு, நல்ல பலனையும் கொடுக்கும்.
இந்த 'STATIN’ வகை மருந்துகளைத் தவறாமல் சாப்பிட ஆரம்பித்தால்
மாரடைப்பு வராமலே தடுக்கமுடியும். மாரடைப்பு வந்தபிறகும்கூட இதே மருந்தின்
அளவை அதிகமாகப் பயன்படுத்தும்பொழுது, கொழுப்பின் அளவு நாற்பதில் இருந்து
ஐம்பது சதவிகிதம் வரை குறைந்துவிடுவதால், மாரடைப்பு அபாயமும் முற்றிலும்
நீங்கிவிடுகிறது.
'க்ரீன் அண்ட் க்ரெய்ன்’ எனப்படும் பச்சைக் காய்கறிகள், பாசிப்
பருப்பு, கொண்டைக் கடலை மற்றும் பயிறு வகைகள், மோர்.... போன்ற உணவு வகைகள்
உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்றவை. தினமும் அரை மணி நேரம் வியர்க்க விறுவிறுக்க
நடைப்பயிற்சி செய்யலாம்; அல்லது உடலுக்கும், மனதுக்கும் தெம்பூட்டக் கூடிய
நீச்சல் பயிற்சி செய்யலாம்.
மாடிப்படிக்கட்டுகளில் ஏறி இறங்குவது, எந்திர உதவி இல்லாமல் நாமே
வீட்டு வேலைகளை செய்துவருவதும் கொழுப்பைக் குறைக்க உதவும் நல்ல
உடற்பயிற்சிகள்'' என்றார் விளக்கமாக.
டாக்டர் சொன்னதையெல்லாம்
அப்படியே ஃபாலோ பண்ணுங்க. ஹார்ட் அட்டாக்குக்கு குட்பை சொல்லுங்க!
நன்றி: தமிழ்
தாயகம்
---அன்புடன் உங்கள் சகோதரன்:
பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.

Similar topics
» மாரடைப்பைத் தடுக்கும் சக்தி இஞ்சிக்கு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
» கேன்சர் நோய்க்கு மலிவு விலையில் மருந்து: பயோகான் நிறுவனம் கண்டுபிடிப்பு
» 2 ஆயிரம் இட்லி 2 மணி நேரத்தில் விற்று தீர்ந்தது: மலிவு விலை உணவகங்களில் அலைமோதும் கூட்டம்
» மயக்க மருந்துகள்
» அலர்ஜி மருந்துகள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum