சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

நாட்டில் அரச ஊழியர்களின் தொகை 13 இலட்சமாக உயர்வு Khan11

நாட்டில் அரச ஊழியர்களின் தொகை 13 இலட்சமாக உயர்வு

Go down

நாட்டில் அரச ஊழியர்களின் தொகை 13 இலட்சமாக உயர்வு Empty நாட்டில் அரச ஊழியர்களின் தொகை 13 இலட்சமாக உயர்வு

Post by நேசமுடன் ஹாசிம் Wed 9 Nov 2011 - 5:53

தனியார் துறையை விட அரச துறை மீது வைத்த அதீத நம்பிக்கையால் தான் ஆறு இலட்சமாகவிருந்த அரச ஊழியர் தொகையை நாம் 13 இலட்சமாக அதிகரிக்க நடவடிக்கை எடுத்தோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அவதூறுக்கும் அநாமதேய வெளிப்பாடுகளுக்கும் பயந்தால் எதனையும் செய்ய முடியாமற்போகும் என தெரிவித்த ஜனாதிபதி; அவற்றைக் கணக்கில் எடுக்காமல் மக்கள் சேவையை பொறுப்புடன் நிறைவேற்ற அரச ஊழியர்கள் முன்வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இலங்கையில் முதற் தடவையாக தாதியர் சேவைக்கு டிப்ளோமா பட்டதாரிகள் 1441 பேரை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு நேற்றைய தினம் அலரி மாளிகையில் இடம்பெற்றபோது நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி ஆறு இலட்சமாக அரச ஊழியர் தொகை யைக் குறைக்க எடுத்த நடவடிக்கைகளை முறியடித்து 13 இலட்சமாக அந்த எண்ணிக்கையைத் தம்மால் உயர்த்த முடிந்துள்ளது எனவும் தெரிவித்தார்.

நாட்டின் 14 தாதியர் பயிற்சி நிலையங்களில் டிப்ளோமா பயிற்சிபெற்ற 1441 தாதியர்களுக்கு டிப்ளோமா சான்றிதழ் வழங்கி தாதியர் சேவைக்கான நியமனங்களைக் கையளிக்கும் நிகழ்வு நேற்றைய தினம் அலரி மாளிகையில் நடைபெற்றது.

அமைச்சர் மைத்திரிபால சிறிசேன உட்பட அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், மாகாண ஆளுநர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள், பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் வடக்கு, கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் டிப்ளோமா பட்ட பயிற்சிகளை முடித்துக்கொண்ட தாதியர்களும் பங்கேற்றனர். டிப்ளோமா பட்டதாரி தாதியர்களுக்கு நியமனக் கடிதங்களைக் கையளித்து உரை நிகழ்த்திய ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரி வித்ததாவது,

தாதியர் சேவை மிகவும் காருண்யம் மிக்கது. தம்மை நாடி நம்பிக்கையுடன் வரும் நோயாளிகளை இன்முகத்துடன் வரவேற்று அவர்களைத் தமது சகோதர சகோதரிகளாகப் பார்த்து சிகிச்சை வழங்க வேண்டியது அவசியம்.

பொதுமக்கள் வழங்கும் வரிப் பணத்தில் தான் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் இதர சலுகைகளும் பாதுகாப்பான தொழிலும் வழங்கப்படுகிறது. அவர்களின் பணத்தைப்பெற்றுக் கொள்ளும் நாம் உச்ச அளவிலான சேவையை அவர்களுக்கு வழங்கி அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கை யைக் காப்பாற்ற வேண்டும்.

எத்தகைய பிரச்சினைகள் இருந்த போதும் நோயாளிகளுக்கருகில் செல்லும் போது சிரித்த முகத்துடன் சென்று சேவை செய்ய வேண்டும். வைத்தியத்தை விட தாதிமாரின் மனிதாபிமான சேவை மேலோங்கி நிற்க வேண்டும்.

நோயாளிகள் மிகவும் அப்பாவிகள் அவர்கள் எவ்வளவு பலம் பொருந்திய வர்களாக வாழ்ந்த போதும் நோய்க்குட்பட்ட போது பலவீனமாகி தமது பாதுகாப்பை முழுமையாக வைத்தியரிடம் ஒப்படைத்து நம்பிக்கையுடன் காத்திருப்பர். அத்தகை யோருக்கு கருணையுடனும் அன்புடனும் சேவை வழங்குவது மிக முக்கியமாகும். நோயின் வேதனையை மாற்ற புன்சிரிப்பு டனான பராமரிப்பால் முடியும்.

இன்றுவரை ஊழல், மோசடிகள் குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகாத ஒரே துறை தாதியர் துறையே. அந்த நன்மதிப்பு பாதுகாக்கப்பட வேண்டும்.

தாதியருக்கு பாரிய பொறுப்புகள் உள்ளன. தாதியர் சங்கத் தலைவரான முருத்தொட்டுவே தேரர் அநாமதேய பிரசுரங்கள் சம்பந்தமாகத் தெரிவித்தார். அதுபற்றி எனக்குத் தெரியாது அப்படி யென்றால் நான்தான் இவற்றையெல்லாம் விட்டுவிட்டு ஓட வேண்டும்.

அந்த அவதூறுகள் அநாமயதேய பிரசுரங்கள் எனக்கெதிரானதே அதனை நாம் கணக்கெடுக்கத் தேவையில்லை. யார் எதைச் சொன்னாலும் அதன் உண்மை என்னவென்று ஆய்ந்தறியும் திறமை உங்களுக்கு உள்ளது என்பதை நானறிவேன்.

அரச சேவையை ஆறு இலட்சமாகக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்த யுகம் ஒன்றிருந்தது. வெற்றிடங்கள் அதிகரித்து காணப்பட்ட போதும் அது நிரப்பப்படாமல் தட்டிக்கழிக்கப்பட்டது. அதனை மாற்றி நாம் அரச சேவையை 13 இலட்சம் பேர் கொண்டதாகக் கட்டியெழுப்பியுள்ளோம்.

அந்த 13 இலட்சம் பேருக்கும் சம்பளம், இதர கொடுப்பனவுகள் என பெருந்தொகை நிதியை அரசாங்கம் செலவிட்டு வருகிறது. ஒருபோதும் அதனைத் தாமதப்படுத்த முடியாது. அத்துடன் ஓய்வூதியக் கொடுப் பனவு 5 இலட்சம் பேருக்கு வழங்க வேண்டியுள்ளது. நாம் அரச சேவையில் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளோம் அதனால்தான் அதனை 13 இலட்சமாக உயர்ந்த நடவடிக்கை எடுத்தோம்.

தனியார் துறை இருந்த போதும் அத ற்கு மேலாக அரச சேவையில் எமக்கு நம்பிக்கை உள்ளது. அதனைப் பயனுள்ள துறையாக கட்டியெழுப்ப முடியும் என்ற நம்பிக்கை எமக்கிருந்தது. புதிதாக நியமனம் பெறுவோர் இதனை உணர்ந்து செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.


நாட்டில் அரச ஊழியர்களின் தொகை 13 இலட்சமாக உயர்வு Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics
» மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு
» பிரேசில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் தொகை 608 ஆக உயர்வு _ வீரகேசரி
» வன விலங்குகளால் உயிரிழப்பு:இழப்பீட்டுத் தொகை ரூ. 3 லட்சமாக உயர்வு; சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு
» சிகரெட் மீதான தமிழக அரசின் வாட் வரி உயர்வு-விலை உயர்வு-பற்றாக்குறை
» 7000 ஊழியர்களின் மனைவிகளுக்கு ஹெல்மெட் வழங்கிய வைர வியாபாரி!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum