Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பெற்றோர்களே எச்சரிக்கை
3 posters
Page 1 of 1
பெற்றோர்களே எச்சரிக்கை
"பெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா?
16 வயது… பெண்களுக்கு ஒருவிதமான மனரீதியான ரசாயன மாற்றத்தை கொடுக்க கூடிய ரெண்டும் கெட்டான் வயது, நல்லதும் தெரியாது, கெட்டதும் புரியாது என்பார்கள்.. வெழுத்ததெல்லாம் பால் மின்னுவதெல்லாம் பொன் என்று நினைத்து விடுகிறார்கள்.
இந்த வயதுடைய பள்ளிக்கு செல்லும் மாணவிகள் சிலர் விளக்கில் விழுந்த விட்டில் பூச்சிகளாய் காதல் வலையில் விழுந்து வாழ்க்கையை தொலைத்து விடுகிறார்கள். ஓரக்கண்ணால் பார்த்து… தயங்கி தயங்கி பேசி சத்தமில்லாமல் கடிதம் கொடுத்து… காதல் வளர்த்த காலம் போயே போச்சு.
நறுக்கு சுறுக்குன்னு ஒருபார்வை.. உங்க செல்போன் நம்பர் என்ன? என்று கேட்டு ஒரு சிரிப்பு.. அவ்வளவு தான் மறுநாளில் இருந்து அந்த செல்போன் நம்பருக்கு மணி கணக்கில் பேச்சு… 3 மாதம் கழித்து அந்த பையனுடன் ஓட்டம். இது தான் இன்றைய பள்ளி மாணவிகளின் தறிகெட்ட நிலை. இதில் பலர் முதல் திருமணம் செய்த வாலிபர்கள் என்பது வெளியே தெரியாத கொடுமை.
செல்போன் வசதி இல்லாத மாணவிகள் காதலனின் செல்போனுக்கு 1 ரூபாய் நாணய தொலைபேசியில் இருந்து தங்களது அழகை நீட்டி முழக்குகின்றனர். நேற்று இரவு டி.வி.யில் பார்த்த சினிமா காதல் காட்சிகள் முதல் சுவற்றில் ஒட்டப்பட்டிருக்கும் ஆபாச சுவரொட்டிகள் வரை அவர்களது பேச்சில் கலந்து மூச்சை சூடாக்குகிறது.
காதலன் என்ன சொன்னாலும் உண்மை என்று நம்பி நாமும் அது போல் செய்து பார்த்தால் என்ன என்ற ஒரு வித அசட்டு தைரியம் வந்து விடுகிறது. விளைவு வீட்டிலிருந்து ரன்…
கடந்த 2 மாதங்களில் மட்டும் பள்ளி மாணவிகள் காணாமல் போனதாக 50-க்கும் மேற்பட்ட புகார்கள் போலீசுக்கு வந்துள்ளது. இதில் வடபகுதி மற்ற பகுதிகளை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடிக்கிறது. வாரத்திற்கு குறைந்த பட்சம் 10 வழக்குகளாவது பதிவாகிறது. காணாமல் போன மாணவிகளை தேடி பார்த்தால் ஏதாவது ஒரு பையனுடைய வீட்டில், குடித்தனம் நடத்தும் “காதல்”
பட காட்சிதான்.
அவர்களை அழைத்து வந்தால் 14 வயது நிரம்பிய அந்தமாணவி பேசும் வசனங்கள் பெற்றோரை ரணமாக்குகிறது.. வாழ்ந்தால் அவரோடு, இல்லையேல் மண்ணோடு… என்ற சொல்லும் அந்த மாணவி சிறு பிள்ளையாய் இருக்கும் போது பார்த்து, பார்த்து
வளர்த்து… வெயில்படாமல், மழைபடாமல் கொஞ்சி வளர்த்த பெற்றோரின் பிஞ்சு மனது கனப்பதை காணமுடிகிறது. புண்ணியத்திற்கு போலீசார் அந்தப் பெண்ணிடம் வாழ்க்கையை எடுத்து கூறி நம்பிக்கையை ஏற்படுத்தி அந்தப்பெண்ணின் எதிர்காலம் கருதி அந்தப் பையனை எச்சரித்து அனுப்பி விடுகிறார்கள்.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது,
செல்போனும், டி.வி.யில் காட்டப்படும் சினிமாவும்தான் சிறுமிகளின் மனதை கெடுக்கிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் அந்த சிறுமிகள் தங்களை யாராவது காதலிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. விளைவு அந்த பெண்ணின் பின்னால் சுற்றும் ஊதாரி அவளது காதலனாகிறான். 14 முதல் 16 வயதில் காதலனுடன் சுற்றும் நிலை ஏற்படுகிறது.
டி..வி.யில் வரும் சில நிகழ்ச்சிகளில் உங்கள் காதலர் பெயரை சொல்லுங்க என்பதும் நீங்கள் இன்னும் காதலிக்க ஆரம்பிக்கலையா? என்பது போலவும் உரையாடி, சிசுகளின் மனதில் நஞ்சை ஏற்றுகின்றனர். எம்.பி.பொண்ணு, ரவுடியை காதலிப்பது, பணக்கார பொண்ணு மெக்கானிக்குடன் ஓடுவது, வீட்டை விட்டு ஓடிய காதலர்கள் வாழ்க்கையில் நல்ல நிலைக்கு உயர்வது. போன்ற காட்சிகளை பார்த்து மாணவிகளின் மனம் அலைபாய ஆரம்பிக்கிறது…
பின்னர் தனது காதலனுடன் செல்போனிலும் தொலை பேசியிலும் மணிக்கணக்கில் காலணாவுக்கு உபயோகமில்லாத பேச்சை பேசி அரட்டை அடிப்பது ஒருகட்டத்தில் வீட்டிற்கு தெரிய வந்தால் அவனுடன் ஓடிவிடுவது இதுதான் தற்போது அதிகம் நடக்கிறது. இதில் நல்லகுடும்பத்து பெண்கள் விதிவிலக்கு! போலீஸ் நிலையத்திற்கு வாரம் 15 புகார்களும், குறைந்த பட்சம் 10 வழக்குகளாவது பதிவு செய்யப்படுகிறது.
இதை தடுக்க பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கையை தினந்தோறும் கண்காணிக்க வேண்டும் அடிக்கடி செல்போன் பேச அனுமதிக்க கூடாது. தனியாகவோ, தோழிகளுடனோ அதிகமாக வெளியில் செல்ல அனுமதிக்க கூடாது. திடீரென புது புது ஆடைகளை அணிவதையும் முகத்தை பியூட்டிபார்லர் சென்று அழகு படுத்துவதையும் செய்யும் பெண்கள் நிச்சயம் காதல் வலையில் விழுந்திருக்கும் அபாயம் உண்டு, பெற்றோர் உஷாராக இருக்க வேண்டும்.
வயதுக்கு வந்த பெண்களை டி.வி.யில் காதல் காட்சிகளை பார்க்க
அனுமதிக்காதீர்கள். டி.வி. தொடர்களை பார்ப்பதை தவிர்த்தாலும் கூடுதல் நன்மை கிடைக்கும். தனியாக பள்ளி செல்லும் பெண்ணின் நடவடிக்கையை தயவு செய்து வாரம் ஒரு முறையாவது கண்காணியுங்கள். படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்பதை அடிக்கடி நினைவு படுத்துங்கள். காதலனுடன் ஓடி போய் சீரழிந்த பெண்களின் நிலமையை எடுத்துக்கூறுங்கள். அது அவர்களுக்கு ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தும்
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: பெற்றோர்களே எச்சரிக்கை
உண்மை இன்று காலம் கெட்டுக்கிடக்கிறது மாறிக்கிடக்கிறது கண்ணில் பட்டால் காதல் எடுத்த முடிவு சரியென்று வாழ்வை தொலத்து அவஸ்த்தைப்படும் குழந்தைகள் வலி நமக்கு மாத்திரமல்லாது அவர்களுக்கும் ஏற்படுத்திக்கொள்கிறார்கள் ஆதலால் கவனம் தேவை
Re: பெற்றோர்களே எச்சரிக்கை
நேசமுடன் ஹாசிம் wrote:உண்மை இன்று காலம் கெட்டுக்கிடக்கிறது மாறிக்கிடக்கிறது கண்ணில் பட்டால் காதல் எடுத்த முடிவு சரியென்று வாழ்வை தொலத்து அவஸ்த்தைப்படும் குழந்தைகள் வலி நமக்கு மாத்திரமல்லாது அவர்களுக்கும் ஏற்படுத்திக்கொள்கிறார்கள் ஆதலால் கவனம் தேவை
@. @.
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: பெற்றோர்களே எச்சரிக்கை
அருமையான பகிர்விற்கு நன்றி தோழரே வழிப்புடன் இருபது சிறந்தது இவ்வாறான சம்பவங்கள் குறித்து மக்கள்
போதியளவு வழிப்புடன் செயற்பட வேண்டியது
அவசியமானது.
போதியளவு வழிப்புடன் செயற்பட வேண்டியது
அவசியமானது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உள்ள பெற்றோர்களே எச்சரிக்கை!
» பெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா?
» மனிதத்தையே அழிக்கும் மாபாவிகள் பற்றிஇளைஞர்களே எச்சரிக்கை!! எச்சரிக்கை!!!
» பெற்றோர்களே உஷாராக இருங்கள்...
» பெற்றோர்களே இது உங்களின் கவனத்திற்கு
» பெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா?
» மனிதத்தையே அழிக்கும் மாபாவிகள் பற்றிஇளைஞர்களே எச்சரிக்கை!! எச்சரிக்கை!!!
» பெற்றோர்களே உஷாராக இருங்கள்...
» பெற்றோர்களே இது உங்களின் கவனத்திற்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum