சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!  Khan11

"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!

2 posters

Go down

"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!  Empty "ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!

Post by abuwasmee Mon 14 Nov 2011 - 23:08

http://abuwasmeeonline.blogspot.com

ஹஜ் செய்து விட்டு வருபவர்களிடம் காணப்படும் ஒரு நடைமுறை ஹாஜி அடைமொழி / பட்டம். அதுவரை சாதாரண அபூபக்கராக இருந்தவர், ஹஜ்ஜுக்குச் சென்று விட்டு வந்ததும் ஹாஜி அபூக்கராகி விடுவார். அதன்பிறகு இவர்களது பெயர் போடப்படும் இடங்களில் ஹாஜி என்ற அடைமொழி பயன்படுத்தப்படவில்லை என்றால் மிகுந்த கோபத்துக்குள்ளாகி விடுவார்கள். சிலர் கையெழுத்தில் கூட ஹாஜியைச் சேர்த்துப் போடுகின்றார்கள். ஒரு ஹஜ் செய்தால் ஹாஜி என்றும் இரண்டு ஹஜ் செய்தால் அல்ஹாஜ் என்றும் போட்டுக் கொள்வது தான் வேடிக்கையான விஷயம். நபி (ஸல்) அவர்கள், அவர்களின் மனைவி அன்னை ஆயிஷா (ரலி) அவர்களும் மதீனாவிலிருந்து மக்கா வந்து ஹஜ் என்னும் கடமையை முடித்துவிட்டு மீண்டும் மதீனா திரும்பினார்கள். நபி (ஸல்) அவர்களோ அல்லது அவர்களின் மனைவி அன்னை ஆயிஷா (ரலி) அவர்களோ தங்களின் பெயர்களுக்கு முன்னாள் “ஹாஜி” என்றோ அல்லது “ஹாஜிமா” என்றோ அடைமொழி இட்டுக்கொள்ளவில்லை. நபி( ஸல்) அவர்கள் காலத்தில் ஹஜ் செய்த இலட்சக்கணக்கான நபித்தோழர்களில் எவரும் இவ்வாறு அழைக்கப்படவில்லை. இவர்கள் வார்த்தைக்கு வார்த்தை கூறும் இமாம்கள் கூட தங்களது பெயருக்கு முன்னாள் ஹாஜி பெயரை சூட்டிக் கொள்ளவில்லை. ஹஜ் செய்தால் பெயருக்கு முன்னால் ஹாஜி என்று போட்டுக் கொள்ள வேண்டும் என்பதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் சில அறிவீலிகள் தங்களது பெயருக்கு முன்னாள் ஹாஜி என்று சூட்டிக் கொண்டு அழகு பார்க்கின்றனர். நபி (ஸல்) அவர்கள் ஹாஜி என்று போட மறந்துவிட்டார்களா? அல்லது அல்லாஹ் இவர்களுக்கு மட்டும் தனியாக வஹீ அனுப்பி இவ்வாறு போட்டுக்கொளுமாறு கூறினானா? இவர்கள் தங்களது பெயருக்கு முன்னாள் ஹாஜி என்று சூட்டிக்கொள்கிறார்கள் என்றால் தங்களது வணக்கத்தை விளம்பரமாக்கும் நோக்கமே மிகைத்து இருக்கின்றது நிச்சயமாக இவை நம் வணக்கத்தின் நன்மைகளை பாழ்படுத்திவிடும். அதுமட்டுமல்லாமல் சிலர் தாங்கள் வைத்திருக்கும் கடைகளுக்கு "ஹாஜி ஆன் சன்ஸ்" என்றும், "ஹாஜி மளிகைக்கடை" என்றும் பெயர் வைத்துக்கொண்டு விளம்பரம் தேடிக்கொள்ளும் நிலையைப் பார்க்கிறோம். அல்லாஹ் முஸ்லிம்களின் மீது விதித்த ஹஜ்ஜைத் தவிர மற்ற கடமைகளான ஈமான் கொள்வது, தொழுவது, ஜக்காத் கொடுப்பது, நோன்பு நோற்பது போன்ற கடமைகளை நிறைவேற்றும் எவரும் இதுபோன்று செய்வதில்லை. ஈமானி – (ஈமான் கொண்டவர்) என்றும், முஸல்லி – (தொழுகையாளி) என்றும், ஸோம்வி – (நோன்பாளி) என்றும், ஜக்காத்தி – (ஜக்காத் கொடுப்பவர்) என்றும் தங்களின் பெயருக்கு முன் போடுவதில்லை. ஆனால் ஹஜ் செய்தவர் மட்டும் தங்களது பெயருக்கு முன்னாள் ஹாஜி என்று சூட்டிக் கொண்டு தங்களின் அமலை விளம்பரமாக்குகின்றனர். குறிப்பாக இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வாழ்ந்துவரும் முஸ்லிம்கள் இதுபோன்று தங்களின் பெயருக்கு முன் ஹாஜி என்று சூட்டிக் கொள்கின்றனர். இது முற்றிலும் விளம்பரத்தின் நோக்கமே! விளம்பரத்தால் வீணாகும் வணக்கங்கள்: இதுபோன்று வணக்கத்தை விளம்பரமாக்குபவர்களையும், பிறர் மெச்ச வேண்டும் என்பதற்காக அமல் செய்பவர்களையும் மார்க்கம் மிக வன்மையாகக் கண்டிக்கின்றது. அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்கள் மெச்சுவதற்காகத் தமது செல்வத்தைச் செலவிடுவோர் (ஷைத்தானின் நண்பர்கள்). யாருக்கு ஷைத்தான் நண்பனாக ஆகி விட்டானோ அவனே கெட்ட நண்பன். (அல்குர்ஆன் 4:38) நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்களுக்குக் காட்டுவதற்காக தனது செல்வத்தைச் செலவிடுபவனைப் போல், உங்கள் தர்மங்களைச் சொல்­லிக் காட்டியும், தொல்லை தந்தும் பாழாக்கி விடாதீர்கள்! இவனுக்கு உதாரணம் மேலே மண் படிந்திருக்கும் வழுக்குப் பாறை. அதன் மேல் மழை விழுந்ததும் மேலே ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகிறது. தாம் பாடுபட்ட எதன் மீதும் அவர்கள் சக்தி பெற மாட்டார்கள். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான். (அல்குர்ஆன்2:264) அவசர உலகத்தை விரும்புவோருக்கு நாம் நாடியதை நாம் நாடியோருக்கு அவசரமாகக் கொடுத்து விடுவோம். பின்னர் அவர்களுக்காக நரகத்தை ஏற்படுத்துவோம். இழிந்து, அருளுக்கு அப்பாற்பட்டு அதில் கருகுவார்கள். (அல்குர்ஆன் 17:18) நான் நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் சென்றேன். அப்போது அவர்கள், ”யார் விளம்பரத்திற்காக நற்செயல் புரிகின்றாரோ அவர் பற்றி அல்லாஹ் (மறுமையில்) விளம்பரப்படுத்துவான். யார் முகஸ்துதிக்காக நற்செயல் புரிகின்றாரோ அவரை அல்லாஹ் (மறுமையில்) அம்பலப்படுத்துவான்” என்று கூறியதைக் கேட்டேன். அறிவிப்பவர்: ஜுன்துப் பின் அப்துல்லாஹ் (ரலி), நூல்: புகாரி 6499 அல்லாஹ்வின் பாதையில் உயிர் துறந்தவர்தான் (ஷஹீத்) மறுமையில் முதன் முத­ல் (விசாரிக்கப்பட்டு) தீர்ப்பு வழங்கப்படுவார். அவர் அல்லாஹ்வின் முன் கொண்டு வரப்படுவார். அல்லாஹ் அவருக்குச் செய்த அருட்கொடைகளைப் பற்றி அறிவித்துக் காட்டுவான். அதை அவர் அறிந்து கொண்டதும் இந்த அருட்கொடைகளுக்குப் பரிகாரமாக நீ என்ன வணக்கம் செய்தாய் என்று கேட்பான். அதற்கு அவர் நான் கொல்லப்படும் வரை உனக்காகப் போரிட்டேன் என்று கூறுவார். நீ பொய் சொல்கின்றாய். நீ வீரன் என்று பாராட்டப் படவேண்டும் என்பதற்காகவே போரிட்டாய். நீ வீரன் என்று (நீ கொல்லப்பட்டவுடன்) சொல்லப்பட்டு விட்டது என்று அல்லாஹ் கூறுவான். பிறகு அவர் தொடர்பாக உத்தரவிடப்பட்டு முகங்குப்புற இழுத்துச் செல்லப்பட்டு இறுதியில் நரகத்தில் தூக்கி எறியப்படுவார். அடுத்து (விசாரிக்கப்பட்டு) தீர்ப்பு வழங்கப்படுபவர் குர்ஆனைக் கற்று, பிறருக்கும் கற்பித்து, குர்ஆன் ஓதிக் கொண்டிருப்பவர் ஆவார். இவர் அல்லாஹ்வின் முன்னிலையில் கொண்டு வரப்பட்டு அல்லாஹ் அவருக்கு தனது அருட்கொடைகளை அறிவித்துக் காட்டுவான். அவர் இந்த அருட் கொடைகளை அறிந்து கொண்டதும், இந்த அருட்கொடைகளுக்கு பரிகாரமாக நீ என்ன அமல் செய்தாய் என்று கேட்பான். அதற்கு அவர் நான் கல்வியைக் கற்று அதை மற்றவர்களுக்கும் கற்பித்தேன். உனக்காகவே நான் குர்ஆன் ஓதினேன் என்று பதில் சொல்வார். நீ பொய் சொல்கிறாய். எனினும் நீ அறிஞன் என்று சொல்லப் படுவதற்காகவே கல்வி கற்றாய். காரி (ஓதத் தெரிந்தவர்) என்று சொல்லப்படுவதற்காகவே குர்ஆன் ஓதினாய். அவ்வாறு (உலகில்) சொல்லப்பட்டு விட்டது என்று அல்லாஹ் கூறுவான். பிறகு அவர் தொடர்பாக உத்தரவிடப்பட்டு முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு இறுதியில் நரகத்தில் எறியப்படுவார். அடுத்ததாக வசதிகளையும் பொருளாதாரத்தின் வகைகளையும் அல்லாஹ் யாருக்கு வழங்கினானோ அவர் (விசாரிக்கப்பட்டு) தீர்ப்பு வழங்கப்படுவார். அவர் அல்லாஹ்வின் முன்னிலையில் கொண்டு வரப்பட்டு அவருக்கு அல்லாஹ் தன் அருட்கொடைகளை அறிவித்துக் காட்டுவான். அவர் அந்த அருட்கொடைகளை அறிந்ததும், நீ அந்த அருட்கொடைகளுக்காக என்ன பரிகாரம் செய்தாய் என்று கேட்பான். அதற்கு அவர் நீ என்னனென்ன வழிமுறைகளில் செலவளிக்க வேண்டும் என்று விரும்புகிறாயோ அந்த வழிமுறையில் உனக்காக நான் செலவளிக்காமல் இருந்ததில்லை என்று பதில் சொல்வார். அதற்கு அல்லாஹ், நீ பொய் சொல்கிறாய். எனினும் நீ கொடை வள்ளல் சொல்லப் படுவதற்காக தர்மம் செய்தாய். அவ்வாறு சொல்லப்பட்டு விட்டது என்று கூறுவான். பிறகு இவர் தொடர்பாக உத்தரவிடப்பட்டு முகம் குப்புற இழுத்துச் செல்லப் பட்டு இறுதியில் நரகத்தில் தூக்கி எறியப்படுவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி­), நூல் : முஸ்­லிம் 3537 மேற்கண்ட வசனங்களும் ஹதீஸ்களும் முகஸ்துதிக்காக (விளம்பரத்திற்காக) ஒரு அமலைச் செய்தால் அது அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளப்படாது என்பதையும், அதற்குக் கூ­லி நரகம் தான் என்பதையும் தெளிவாக எடுத்துக் கூறுகின்றன. அல்லாஹ்வுக்காக செய்கின்ற வணக்கங்களில் மிக அதிகமாக முகஸ்துதிக்கு உள்ளாகும் வணக்கம் ஹஜ்தான். ஹஜ்ஜுக்குச் செல்லும் போது வீடுவீடாகச் சென்று, நான் ஹஜ் செய்யப் போகிறேன் துஆ செய்யுங்கள் என்று கூறுவது, விருந்து வைபவங்கள் நடத்தி ஹஜ்ஜை விளம்பரம் செய்வது, ஹஜ்ஜுக்குச் செல்லும் போதும் திரும்பும் போதும் கழுத்துகளில் மாலைகள், அது போல் வழியனுப்பு மற்றும் வரவேற்பு விழாக்கள், இதற்கென்று நியமிக்கப்படும் மேடைகளில் பொன்னாடைகள் போர்த்துதல். இவ்விழாக்களில் ஹாஜிகளின் புகழ்பாடுதல் போன்ற காரியங்கள் நிச்சயமாக ரியா (மறைமுக இணைவைப்பு) ஆகும். ”நான் உங்கள் மீது மிகவும் பயப்படுவது சிறிய இணை வைத்தலாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், ”அல்லாஹ்வின் தூதரே, சிறிய இணை வைத்தல் என்றால் என்ன?” என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ”ரியா (மறைமுக இணைவைப்பு)” என்று பதிலளித்தார்கள். ”நீங்கள் உங்கள் அமல்களை உலகத்தில் யாருக்குக் காட்டுவதற்காக செய்தீர்களோ அவர்களிடம் செல்லுங்கள். அவர்களிடம் கூ­லி கிடைக்குமா என்று பாருங்கள்” என்று அடியார்களின் அமல்களுக்குக் கூ­லி கொடுக்கும் நாளில் அல்லாஹ் கூறி விடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: மஹ்மூத் பின் ரபீத் (ர­லி), நூல்: அஹ்மத் 22528 நிச்சயமாக இவை நம் வணக்கத்தின் நன்மைகளைப் பாழ்ப்படுத்தி விடும். அல்லாஹ் நம்மைக் காப்பானாக!
abuwasmee
abuwasmee
புதுமுகம்

பதிவுகள்:- : 155
மதிப்பீடுகள் : 3

http://www.abuwasmeeonline.blogspot.com

Back to top Go down

"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!  Empty Re: "ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!

Post by நிலாம் Mon 14 Nov 2011 - 23:28

மிகவும் சரியான தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி
நிலாம்
நிலாம்
புதுமுகம்

பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum