Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அன்புள்ள மனைவிக்கு... அபு
+3
நேசமுடன் ஹாசிம்
kalainilaa
அப்துல்லாஹ்
7 posters
Page 1 of 1
அன்புள்ள மனைவிக்கு... அபு
நண்பர் ஒருவர் மனைவியின் பிரிவை தாளாமல் அடிக்கடி என்னிடம் மனம் திறப்பதுண்டு..அவருக்காக இது
அன்புள்ள மனைவிக்கு...
நாற்பது நாட்களுக்குமேல்
மனைவியை விட்டு பிரிந்து
இருக்கவேண்டாம் என
மார்க்கம் சொல்கிறது...
வருடத்திற்கு நாற்பது நாள்
மட்டுமே கூடியிருக்கும்
சூழ்நிலைக்கு வாழ்க்கை
நம்மை தள்ளுகிறது...
தூரவானத்தில் சிறகடிக்கும்
சுதந்திரப்பறவையாய்
மனம் இதயவானத்தில்
சிறகடிக்கின்றது..நினைவுகளோடு
ஊர்கூடி உன்னை என் அருகே
அமரவைத்தும்...
உன் கரம்பற்றி உன்னை என்
உரிமையாக்கி கொண்டதும்
ஊர் அடங்கிய அந்த முதலிரவில்
கதைகள் பேசி அன்பு பரிமாறியதும்
இரவைப்போல் மெல்ல மெல்ல
உன்னுள் நானும்...
என்னுள் நீ என கரைந்துபோனதும்...
உறவுகளிடமிருந்து விலகிய அந்த
தேனிலவு நாட்களில் ஒன்றாக
ஊர்சுற்றி திரிந்ததும்...
சின்ன சின்னதாய் சண்டையிட்டு
ஒருநாள் பேசாமல் பொய்கோபம்
கொண்டு...ஊடலாய், பின் கூடும்
சுகம்...நமையன்றி யார் அறிவார்?
எழுபது நாட்கள் விடுமுறை முடிந்து
பயணநாட்கள் நெருங்கும் போது
ஏழுநாட்கள் உறங்காமல் இரவெல்லாம் என் மார்போடு
முகம் புதைத்து அழுததும்...
முதல் பிரசவத்தில் பெண்களுக்கே
ஆன பயத்தில் நீ இருக்க..எத்தனை
முறை சமாதானம் சொன்னாலும்
சமாதானம் ஆகா உன் மனம்..
பிரசவத்திற்கு எப்படியாவது வந்துவிடுங்கள் என நீ கெஞ்சியதும்
இன்னும் மறக்கவில்லை....
அவரமாய் கிடைத்த பத்துநாள்
லீவில் உனைப்பார்க்க வந்ததும்
பிரசவத்தின் போது உன் அருகில்
அமர்ந்ததும்...அழகிய பிள்ளையை
பெற்றெடுத்து என் வாழ்க்கையை
எனக்கு முழுமையாக்கினாய்...
எனக்காக உன் முழுவதும் அர்பணித்தாய்..
உனக்கு இதுவரை எதுவும்
நான் தந்ததில்லை...
என்ன வேண்டும் கேள் என்
மணிபர்ஸ் கனமாகவேயிருக்கிறது
என்றேன்...
என் காதருகே அவள் சொன்னாள்
என்னை விட்டுபோகாமல் எப்போதும்
என்னுடனே இருங்கள் என்று..
வார்த்தை ஏதும் இல்லாமல் என்
இதயம் இப்போது கனக்கின்றது....
மனைவி போகப்பொருள் அல்ல
போதிமரம்...
அன்பு உறவு அபூபக்கர் சித்தீக்
சிங்கப்பூரிலிருந்து முகப்புத்தகம் வழியாக...
Re: அன்புள்ள மனைவிக்கு... அபு
ஆஹா மிக நல்ல ஒரு படைப்பு நிகழ்வுகளின் தொகுப்பு அவற்றுக்கான உணர்ச்சிகளுடன் சிந்தாமல் சேதப்படாமல் இங்கே வெளிக் கொணர்ந்துள்ளது பாராட்டத்தக்கது...மார்க்கம் சொல்வதும் மனித வாழ்வின் தேவைக்காக மாறிக் கொண்டதும் இறைவன் நமக்குத் தகவமைத்த வழியில் தானே... இஸ்லாம் இந்த மண்ணுக்கேத்த மார்க்கம் தான். குடும்பம் சார்ந்த ஒரு மனிதனின் வடிவம் அவன் திருமணம் முடித்து ஒரு மனைவியிடம் தன்னைக் காட்டிக் கொள்ள தன்னைத்தானே அவன் செதுக்கும் அவன் உழைப்பும் ஈட்டும் பொருளும் அவனைச் சார்ந்தோரை மகிழ்விக்க முயற்சிக்கும் அவனது துடிப்பும் தான் அவனது அழகிய வடிவம். அதற்காக அவன் கொஞ்சம் தூரம் விலகி (மனைவியடிமிருந்து தொலைவு மட்டுமே அவனை விலக்கி வைக்கும் ) பொருள் ஈட்டும் இந்த அமைப்பு ஒன்றும் வெறுக்கப்பட்டதல்ல... நம் ஊனிலும் உயிரிலும் நம் உறவுகள் நரம்புகளின் குருதியாய் ஓடிக கொண்டிருக்கையில் அது பிரிவே இல்லை உறவுகளே... சமாதானப் பட்டு மேலும் மகிழ்வுற்று வாழ்வோம்.... இப்படி ஒரு நல்ல படைப்பை இங்கு நமக்களித்த அபு வின் எழுத்து இப்பொழுது நல்ல உயரம தொட்டு நிற்கிறது..அதன் கடைசிவரி தவிர்த்து இந்த எழுத்தோவியம் அவரின் கிரீடத்தில் ஒரு சிறகு தான்.
Re: அன்புள்ள மனைவிக்கு... அபு
மனைவி போகப்பொருள் அல்ல
போதிமரம்...
உண்மைதானே.இதை நாம் இன்னும் உரக்கவே சொல்லலாமே .
பகிர்வுக்கு நன்றி தோழரே .
ஒரு கேள்வி .இது தங்கள் நண்பரின் படைப்பா இல்லை
உங்கள் வாழ்க்கை தொகுப்பா ?
போதிமரம்...
உண்மைதானே.இதை நாம் இன்னும் உரக்கவே சொல்லலாமே .
பகிர்வுக்கு நன்றி தோழரே .
ஒரு கேள்வி .இது தங்கள் நண்பரின் படைப்பா இல்லை
உங்கள் வாழ்க்கை தொகுப்பா ?
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அன்புள்ள மனைவிக்கு... அபு
அது தான் சொல்லியுள்ளேன் அபு என் சிங்கப்பூர் வாழ் உறவு... நம் முகப்புத்தகத்தில் வரும் எங்கள் ஊரின் இளவல்....
Re: அன்புள்ள மனைவிக்கு... அபு
அப்துல்லாஹ் wrote:அது தான் சொல்லியுள்ளேன் அபு என் சிங்கப்பூர் வாழ் உறவு... நம் முகப்புத்தகத்தில் வரும் எங்கள் ஊரின் இளவல்....
நம்பிட்டோம்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அன்புள்ள மனைவிக்கு... அபு
அருமையான கவிதை என்பதைவிட ஆழமான வலியென்று சொல்லலாம் அழகாக நீங்கள் எழுதியிருக்கிங்க உங்க அனுபவமும் சேர்த்து
அசத்தலான படைப்பு சீக்கிரம் மனைவியில் வேண்டுகோளை நிறைவேற்ற அவருக்காகவும் எமக்காகவும் பிரார்த்திப்போம்
அசத்தலான படைப்பு சீக்கிரம் மனைவியில் வேண்டுகோளை நிறைவேற்ற அவருக்காகவும் எமக்காகவும் பிரார்த்திப்போம்
Re: அன்புள்ள மனைவிக்கு... அபு
மிகவும் அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
இவைகளைப் படித்த பிறகு மனதில் ஒரு ஏதோ இனம் புரியாத ஆயிரம் கேள்விகள் எழுந்து கொண்டிருக்கிறது???? விடை சொல்லவும் முடிவெடுக்கவும் முடியா நிலையில் நான்.
இவைகளைப் படித்த பிறகு மனதில் ஒரு ஏதோ இனம் புரியாத ஆயிரம் கேள்விகள் எழுந்து கொண்டிருக்கிறது???? விடை சொல்லவும் முடிவெடுக்கவும் முடியா நிலையில் நான்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அன்புள்ள மனைவிக்கு... அபு
அரபு நாடுகளில் வசிக்கும் தனிமையான ஆண்களின் [திருமனம் ஆனவர்கள் ] உள்ளகுமுறல் இதுதான் ..உண்மை குமுறல்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: அன்புள்ள மனைவிக்கு... அபு
உணர்வுப்பூர்வமான வரிகள்.உளம் கனிந்த பாராட்டுக்கள்
puthuvaipraba- புதுமுகம்
- பதிவுகள்:- : 88
மதிப்பீடுகள் : 30
Re: அன்புள்ள மனைவிக்கு... அபு
உங்களுக்குத்தான் அந்தப் பிரச்சினையே இல்லையே :?:jasmin wrote:அரபு நாடுகளில் வசிக்கும் தனிமையான ஆண்களின் [திருமனம் ஆனவர்கள் ] உள்ளகுமுறல் இதுதான் ..உண்மை குமுறல்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அன்புள்ள மனைவிக்கு... அபு
:% :% :%நண்பன் wrote:உங்களுக்குத்தான் அந்தப் பிரச்சினையே இல்லையே :?:jasmin wrote:அரபு நாடுகளில் வசிக்கும் தனிமையான ஆண்களின் [திருமனம் ஆனவர்கள் ] உள்ளகுமுறல் இதுதான் ..உண்மை குமுறல்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அன்புள்ள மனைவிக்கு... அபு
விடுங்க மாஸ்டர் தாங்க மாட்டாங்க சின்னப்பிள்ளைkalainilaa wrote:நண்பன் wrote:உங்களுக்குத்தான் அந்தப் பிரச்சினையே இல்லையே :?:jasmin wrote:அரபு நாடுகளில் வசிக்கும் தனிமையான ஆண்களின் [திருமனம் ஆனவர்கள் ] உள்ளகுமுறல் இதுதான் ..உண்மை குமுறல்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அன்புள்ள மனைவிக்கு... அபு
நான் வரவில்லை இந்த ஆட்டத்துக்கு .........
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அன்புள்ள மனைவிக்கு... அபு
தனியா விட்டுட்டு புட்டுக்கலாம்னு பாக்குறீங்களா விட மாட்டேன் மல்லிகையிடம் என்னை தனியாக விடாதீர்கள் நானும் பாவம்kalainilaa wrote:நான் வரவில்லை இந்த ஆட்டத்துக்கு .........
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum