Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பிரஜா ராஜ்ஜியத்தைக் கலைத்து விட்டு காங்கிரஸில் இணைந்த சிரஞ்சீவி அமைச்சராகிறார்
Page 1 of 1

பிரஜா ராஜ்ஜியம் என்ற பெயரில் கட்சி நடத்தி வந்த நடிகர் சிரஞ்சீவி காங்கிரஸில் வந்து இணைந்து விட்டதைத் தொடர்ந்து தற்போது அவருக்கு மத்திய இணை அமைச்சர் பதவியைக் கொடுக்க சோனியா காந்தி தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.
இந்தப் பதவிக்காகத்தான் இத்தனை நாட்களாக ஆவலுடன் காத்திருந்தார் சிரஞ்சீவி. இந்தப் பதவியே முன்பே கிடைத்திருக்க வேண்டும். ஆனால் இடையில் தெலுங்கானா பிரச்சினை விஸ்வரூபம் எடுத்ததாலும், சோனியாவுக்கு உடல் நலம் சரியில்லாமல் போனதாலும் அவரால் மத்திய அமைச்சர் பதவியை உடனே அடைய முடியவில்லை.
இந்த நிலையில் தற்போது சிரஞ்சீவிக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்க சோனியா முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. பிரஜா ராஜ்ஜியத்தைக் கலைத்து விட்டு காங்கிரஸில் சேர்ந்த போது சோனியா காந்தி அப்போது டில்லியிலேயே இல்லை. மாறாக ராகுல் முன்னிலையில் தான் அவர் கட்சியில் சேர்ந்தார்.
இந்த நிலையில் முதல் முறையாக சோனியாவை நேற்று முன்தினம் சந்தித்தார் சிரஞ்சீவி. காங்கிரஸில் சேர்ந்த பிறகு அவர் சோனியாவை சந்தித்தது இதுவே முதல் முறையாகும்.
அப்போது உரிய கெளரவம் தரப்படும் என சிரஞ்சீவிக்கு உறுதியளித்தாராம் சோனியா. அவருக்கு விரைவில் மத்திய இணை அமைச்சர் பதவி தரப்படும் என்று டில்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் அதற்கு முன்பாக சிரஞ்சீவி எம்.பியாக வேண்டும். ராஜ்யசபா மூலமாகவோ அல்லது லோக்சபா எம்.பியாகவோ அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால்தான் அமைச்சர் பதவியில் நீடிக்க முடியும். இதற்காக அடுத்த ஆண்டு ஆந்திராவில் நடைபெறவுள்ள ராஜ்யசபா தேர்தலில் சிரஞ்சீவியை நிற்கவைக்க காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. அப்போது 6 இடங்களுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் ராஜ்யசபா தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பே சிரஞ்சீவி அமைச்சராகி விடுவார் என்று கூறப்படுகிறது. அமைச்சரான பின்னர் அவர் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவாராம்.
நேற்று முன்தினம் சோனியாவை சந்தித்த பின்னர் வெளியே வந்த சிரஞ்சீவி படு உற்சாகமாக காணப்பட்டார். அவர் கூறுகையில், எனக்கு உரிய கெளரவம் அளிக்கப்படும் என்று மேடம் உறுதியளித்துள்ளார். மேலும் எனது கட்சியிலிருந்து காங்கிரஸில் இணைந்த எம்.எல். ஏக்களுக்கும், பிற தலைவர்களுக்கும் கூட உரிய மரியாதை தரப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார் என்றார்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum