Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
உலகக் கிண்ணம் இன்னும் 33 நாட்கள்
Page 1 of 1
உலகக் கிண்ணம் இன்னும் 33 நாட்கள்
1844 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 ஆம் திகதி முதன் முறையாக சர்வதேச அளவில் கிரிக்கெட் விளையாடப்பட்டது. இந்த ஆட்டம் கனடா, அமெரிக்க நாடுகளுக்கு இடையில் நடைபெற்றது. டெஸ்ட் போட்டி 1877 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய, இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் முதல் முறையாக நடைபெற்றது.
அதன் பிறகு தொடர்ச்சியாக இவ்விரு நாடுகளுக்கு இடையிலான போட்டி ஆஷஸ் தொடர் என்ற பெயரில் இப்போது வரை நடைபெற்று வருகிறது.
1900 ஆம் ஆண்டில் பாரீஸில் நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டது. இந்தப் போட்டியில் பிரிட்டன், பிரான்ஸ் வீழ்த்தி தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றியது. அதன்பிறகு கிரிக்கெட் போட்டி ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட வில்லை.
காலம் காலமாக வளர்ச்சி பெற்று வந்த கிரிக்கெட் 1960 களில் தான் உலக அளவில் புகழ்பெற ஆரம்பித்தது. அதற்கு இங்கிலாந்து கவுன்டி கிளப் போட்டிகள் முக்கிய காரணமாக அமைந்தன. அவர்கள்தான் ஒரேநாளில் நடைபெற்று முடியும் வகையில் ஒருநாள் போட்டிகளை அறிமுகப் படுத்தினர்.
அதன் பிறகு 1962 ஆம் ஆண்டில் நான்கு நாடுகள் பங்கேற்கும் மிட்லாண்ட கோப்பை போட்டி அறிமுகப்படுத்தப்பட்டது.
சர்வதேச அளவிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி 1971 ஆம் ஆண்டு நடைபெற்றது. மெல்போர்னில் நடைபெற்ற இங்கிலாந்து, அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் முதல் 4 நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது.
இதனால் ஏமாற்றமடைந்த ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இறுதி நாளன்று 40 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. அப்போது ஓவருக்கு 8 பந்துகள் வீசப்பட்டன. இதையடுத்து ஒருநாள் போட்டிகள் இங்கிலாந்து மட்டுமின்றி அனைத்து நாடுகளிலும் புகழ்பெற்றன.
இதையடுத்து உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்த சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி) முடிவு செய்தது.
அதில் பிறந்ததுதான் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி. முதல் உலகக் கோப்பை போட்டி 1975 ஆம் ஆண்டு ஜூன் 7 ஆம் திகதி தொடங்கியது. அப்போது ஓவருக்கு 6 பந்துகள் வீதம் 60 ஓவர்கள் வீசப்பட்டன. வீரர்கள் வெள்ளை நிற உடைகளை அணிந்திருந்தனர். சிவப்பு நிற பந்துகள் பயன்படுத்தப்பட்டன.
முதல் உலகக் கோப்பையில் டெஸ்ட் போட்டியில் விளையாடும் அந்தஸ்தைப் பெற்றிருந்த இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கிந்தியதீவுகள், நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் டெஸ்ட் போட்டியில் விளையாடாத இலங்கை, கிழக்கு ஆபிரிக்கா என மொத்தம் 8 நாடுகள் பங்கேற்றன.
இங்கிலாந்து, மேற்கிந்தியதீவுகள், அவுஸ்திரேயா, நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்குத் தகுதிபெற்றன.
அரையிறுதியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி நியூசிலாந்தையும், அவுஸ்திரேலிய அணி, இங்கிலாந்தையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றன.
மேற்கிந்திய தீவுகள் அணி 17 ஓட்ட வித்தியாசயத்தில் அவுஸ்திரேலியாவை தோற்கடித்து கோப்பையைக் கைப்பற்றி கிரிக்கெட்டில் முதல் உலகச் சம்பியன் என்ற பெருமையைப் பெற்றது. இறுதி ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் தலைவர் கிளைவ் லாயிட் 85 பந்துகளில் 102 ஓட்டங்களை குவித்தார். இந்த ஆட்டத்தில் அவுஸ்திரேலியாவின் 5 முன்னணி வீரர்கள் ரன்அவுட் ஆகினர். அதில் 3 பேரை விவியன் ரிச்சர்ட்ஸ் ரன்அவுட் செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்த உலகக் கோப்பையில் நியூசிலாந்தின் கிளன் டேர்னர் 333 ஓட்டங்கள் குவித்து அதிக ஓட்டங்களை குவித்தவர் என்ற பெருமையைப் பெற்றார். அவுஸ்திரேலியாவின் கேரிகில்மோர் 11 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையைப் பெற்றார்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum