Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சைப் அல் இஸ்லாம் மீது லிபியாவில் நேர்மையான விசாரணை!
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
சைப் அல் இஸ்லாம் மீது லிபியாவில் நேர்மையான விசாரணை!
சைப் அல் இஸ்லாம் மீது லிபியாவில் நேர்மையான விசாரணை!
இடைக்கால அரசு அறிவிப்பு
கைது செய்யப்பட்ட லிபிய முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபியின் மகன் சைப் அல் இஸ்லாம் மீது நேர்மையான விசாரணை நடத்தப்படும் என லிபிய இடைக்கால அரசின் பிரதமர் அப்துர்ரஹீம் அல் கைப் வாக்குறுதி அளித்துள்ளார்.
9 வயதான சைப் அல் இஸ்லாம் நேற்று முன்தினம் லிபிய இடைக்கால அரசினால் கைது செய்யப்பட்டார். இவர் மீது சர்வதேச குற்றவியல் நீதி மன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் சைப் அல் இஸ்லாம் மீதான நீதிமன்ற விசாரணை லிபியாவிலேயே நடத்தப்படும் என இடைக்கால அரசு அறிவித்துள்ளது.
“சைப் அல் இஸ்லாம் மற்றும் அவருடன் இருந்தவர்கள் மீதான விசாரணை சர்வதேச மற்றும் உள்நாட்டு சட்டங்களுக்கு அமைவாக நேர்மையான முறையில் நடத்தப்படும். நாட்டின் நீதி, சுயாதீனம் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் வகையில் இந்த விசாரணை அமையும்” என லிபிய பிரதமர் நேற்று முன்தினம் சின்தான் நகரில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போது தெரிவித்தார்.
சைப் அல் இஸ்லாம் லிபிய பிரஜை. அவர் லிபியாவுக்கு எதிராகவே குற்றச் செயல்கள் புரிந்துள்ளார். எனவே, அவர் மீதான விசாரணை லிபியாவிலேயே நடத்தப்பட வேண்டும் எனவும் பிரதமர் அப்துர்ரஹீம் அல் கைப் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, சைப் அல் இஸ்லாம் மீதான விசாரணை குறித்து பேச்சுவார்த்தை நடத்த இவ்வாரத்திற்குள் லிபியா செல்ல சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைவர் லுயிஸ் மொரேனோ அகம்போ தீர்மானித்துள்ளார்.
“சைப் அல் இஸ்லாம் உயிருடன் பிடிக்கப்பட்டது ஒரு நல்ல செய்தி. இனி அவர் மீது நீதி நிலைநாட்டப்பட வேண்டும்” என அகம்போ ஹேகுவில் வைத்து தெரிவித்தார்.
எப்படி சிக்கினார்
சைப் அல் இஸ்லாம் தெற்கு லிபியாவில் ஒபாரி நகரில் இருந்து 50 கி.மீற்றர் தூரத்தில் உள்ள பாலைவனத்தில் பதுங்கியிருந்த போது கடந்த சனிக்கிழமை கிளர்ச்சிப் படையிடம் சிக்கினார்.
அப்போது அவருடன் 15 உதவியாளர்கள் இருந்தனர். இவர்கள் 3 வாகனங்களில் இருந்தனர். அவர்களுக்கு பின்னால் 2 கார்கள் வந்தன. அதில் சயீப் அல் இஸ்லாமும் மற்றும் 4 பேரும் இருந்தனர். அவர்களிடம் கிளர்ச்சி படை வீரர் அகமது என்பவர் நீங்கள் யார்? எங்கு செல்கிaர்கள் என விசாரித்தார். அப்போது அவர்களில் ஒருவன் சயீப் அல் இஸ்லாமை காட்டி இவரது பெயர் அப்துல்கலாம். இவர் ஒரு சமாதான தூதுவர் என்றான். இதற்கிடையே சயீப் அல் இஸ்லாமை புரட்சி படை வீரர் அடையாளம் கண்டு கொண்டார்.
இதைத் தொடர்ந்து எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் துப்பாக்கி சண்டையில் ஈடுபடாமல் சரண் அடைந்தார். இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். அப்போது அவர் மிகவும் பயம் கலந்த முகத்துடன் இருந்தார். ஏனெனில் தான் பிடிபட்டவுடன் சுட்டுக்கொல்லப்பட்டு விடுவோம் என நினைத்தார். ஆனால் அது போன்று நடக்காததால் நிம்மதி பெருமூச்சு விட்டு சகஜ நிலைக்கு திரும்பினார். இதைத் தொடர்ந்து அவர் விமானம் மூலம் ஷின்பான் நகருக்கு கொண்டு செல்லப் பட்டார்.
பிடிபட்ட போது சயீப் அல் இஸ்லாம் லிபியா பாரம்பரிய உடை அணிந்து இருந்தார். கருப்பு நிறத்தில் அடர்த்தியான தாடி வைத்து இருந்தார். அவரது மணிக்கட்டு மற்றும் 2 விரல்களில் காயத்துக்கான கட்டுகள் போட்டு இருந்தார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum