சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பட்ஜட்: அரச ஊழியருக்கு சம்பள உயர்வு 112 மக்கள் நல யோசனைகள் Khan11

பட்ஜட்: அரச ஊழியருக்கு சம்பள உயர்வு 112 மக்கள் நல யோசனைகள்

2 posters

Go down

பட்ஜட்: அரச ஊழியருக்கு சம்பள உயர்வு 112 மக்கள் நல யோசனைகள் Empty பட்ஜட்: அரச ஊழியருக்கு சம்பள உயர்வு 112 மக்கள் நல யோசனைகள்

Post by *சம்ஸ் Tue 22 Nov 2011 - 6:28

பட்ஜட்: அரச ஊழியருக்கு சம்பள உயர்வு 112 மக்கள் நல யோசனைகள் Mainpic
பட்ஜட்: அரச ஊழியருக்கு சம்பள உயர்வு 112 மக்கள் நல யோசனைகள்
ஒரே பார்வையில்...
*ஓய்வூதிய கொடுப்பனவு அதிகரிப்பு
*சேரிப்புற மக்களுக்காக 50,000 வீடுகள்
*சமுர்த்தி கொடுப்பனவு அதிகரிப்பு
*இரு நாள் தங்க விஸா அவசியமில்லை
*இலங்கை நாணயம் 3% மதிப்பிறக்கம்
*முதியோர் கொடுப்பனவு அதிகரிப்பு
*பஸ், லொறிக்கு பெறுமதி சேர் வரி நீக்கம்
*கலைஞர்கள், பத்திரிகையாளர்களுக்கு நிதியம்
*3,000 பசுக்கள் இறக்குமதி
*பொலிஸ் சேவையில் உள்ளளோருக்கு 3வது பிள்ளை பிறந்தால் ஒரு லட்சம் ரூபா
*தண்டப்பணம் செலுத்தாத கைதிகளை விடுவிக்க நிதி உதவி
*வடக்கு, கிழக்கு, தெற்கு, ரஜரட்ட பிரதேசங்களில் அரிசி ஏற்றுமதி வலயங்கள்

மர்லின் மரிக்கார், கே.அசோக்குமார்
நாட்டில் ஏற்பட்டுவரும் பொருளாதார அபிவிருத்தியின் பயன்களை மக்களுக்குக் கொண்டு செல்லுவதையும், வலுவான துரித பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கு தேவையான யோசனைகளையும் உள்ளடக்கிய வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் இரண்டாவது பதவிக்காலத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டம் நேற்றுப் பிற்பகல் சுபநேரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

பாராளுமன்றம் நேற்றுப் பிற்பகல் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடியது. சபை அமர்வின் ஆரம்ப நடவடிக்கைகளைத் தொடர்ந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நிதியமைச்சர் என்ற ரீதியில் 2012ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை சபையில் சமர்ப்பித்து உரையாற்றினார்.

இந்த உரையின்போது அவர் தெரிவித்த முன்மொழிவுகளில் முக்கியமானவைகள் வருமாறு,

அரசாங்க ஊழியர் சம்பள அதிகரிப்பு

சகல அரசாங்க ஊழியர்கள் மற்றும் படை வீரர்களுக்கான அடிப்படை சம்பளத்தில் 10 சதவீதம் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி பதவிநிலையல்லாத தரத்தினருக்கு இந்த அதிகரிப்பு 2012 ஜனவரியிலிருந்து வழங்கப்படும். பதவிநிலை அலுவலகர்களு க்கான சம்பளம் 2012 ஜனவரியிலிருந்து 5 சதவீதமும், மிகுதி 5 வீதம் 2012 ஜூலையிலிருந்தும் வழங்குவதற்கு ஜனாதிபதி முன்மொழிந்துள்ளார்.

ஓய்வூதியம் அதிகரிப்பு

2004க்கு முன்னர் இளைப்பாறியவர்க ளுக்கு மேலதிகமாக மாதாந்தக் கொடுப்பனவு 1000 ரூபா வழங்கப்படும். 2004-2006 காலப்பகுதியில் ஓய்வுபெற்றவர்களுக்கு 500 ரூபாவும் வழங்கப்படும். இக்கொடுப்பனவில் 2012 இல் ஜனவரியில் அரைவாசி யும் மற்றைய அரைவாசி 2012 ஜூலை யிலிருந்து வழங்கப்படும்.

சமுர்த்தி குடும்பங்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு

குறைவருமானம் பெறும் சிறிய குடும் பங்களுக்கு வழங்கப்படும் சமுர்த்திக் கொடுப்பனவான 210 ரூபா முதல் 615 ரூபா வரையான கொடுப்பனவை 750 ரூபாவாக அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப் பட்டுள்ளது. அதேநேரம், குறைந்த வரு மானம் பெறும் பொதுவான குடும்பங் களுக்கு வழங்கப்பட்டு வரும் 900 ரூபா வினை 1200 ரூபாவாக அதிகரிப்பதற்கும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.

இலத்திரனியல் வீசா வசதிகள்

அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள இலத்திரனியல் வீசா முறைமூலம் இல ங்கையில் 48 மணித்தியாலங்களுக்குக் குறைவான காலத்தினை செலவிடும் சுற்றுலாப் பயணி ஒருவரிடமிருந்து எவ் வித வீசா கட்டணமும் அறவிடப்பட மாட்டாது.

பஸ், லொறி மீதான பெறுமதி சேர்வரி நீக்கம்

சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்தில் உயர்தரத்தினை உறுதிப்படுத்தும்வகையில் புதிய பேருந்துகளின் இறக்குமதியினை மேற்கொள்வதற்கு வசதியாக அதற்கான இறக்குமதி மீதான பெறுமதிசேர் வரி நீக்கப்பட்டுள்ளது. அதேநேரம், பொருட்களை ஏற்றியிறக்கும் போக்குவரத்தில் ஈடுபடும் லொறிகள், டிரக்குகள் மற்றும் லொறி இயந்திரங்களுக்கான இறக்குமதி மீதான பெறுமதிசேர் வரியையும் சுங்கத் தீர்வை யையும் நீக்குவதற்குத் தீர்மானிக்கப்பட் டுள்ளது. இதேவேளை, பஸ்கள் மற்றும் லொறிகளுக்காகப் பயன்படுத்தப்படும் டயர்கள் மீதான இறக்குமதித் தீர்வையினை 50 வீதத்தால் குறைப்பதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இலங்கை நாணய மதிப்பிறக்கம்

நாடு நாணயமாற்று வீதத்தினை ஸ்திர மான ஒரு நிலையில் இருக்கின்ற அதே வேளை, இலங்கையுடன் போட்டியிடும் அயல் நாடுகள் அவற்றினது நாணயமாற்று வீதங்களை மதிப்பிறக்கம் செய்துள்ளன. எனவே, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இலங்கை நாணயமாற்று வீதத்தினை 3 சதவீதத்தினால் மதிப்பிறக்கம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சிறுவர் மகளிர் பாதுகாப்பு

சிறுவர்கள் மற்றும் பெண்களின் நன்மைக்காக நிறுவனங்களினால் நடத்தப் படும் கல்வி நிகழ்ச்சித் திட்டங்களை உறுதிப்படுத்துதல் மற்றும் விரிவாக்கல் அத்துடன் மாவட்ட செயலாளர்களின் நெருங்கிய கண்காணிப்பின் கீழ் ஆரம்பப் பாடசாலைகள் மற்றும் தர்மப் பாடசாலைகள் என்பவற்றுக்கு உதவுவதற்காக 150 மில் லியனை ஒதுக்கீடு செய்வதற்குத் தீர்மானிக் கப்பட்டுள்ளது.

கலைஞர்கள், பத்திரிகையாளர்களுக்கு வலுவூட்டுதல்

வயது முதிர்ந்த கலைஞர்கள், பத்திரிகை யாளர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு அவர்கள் காலத்துக்குக் காலம் வழங்கிய பங்களிப்பினை பாராட்டுவதன் மூலம் அவர்களது மரணச் சடங்குச் செலவீனங்களை ஈடுசெய்வதற்கு அவர்களது குடும்பங்களுக் கான உதவிகளை விரிவாக்குவதற்குத் தீர் மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக நிதிய மொன்றை உருவாக்குவதற்கும் தீர்மானிக் கப்பட்டுள்ளது. இதற்கு 50 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்வதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதேநேரம், இந்த விசேட நிதியத்தினது வட்டியினை வருமான வரியிலிருந்து விலக்களிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 25 வருடங்களுக்கு மேலாக பங்களிப்பினை வழங்கியுள்ள சிரேஷ்ட கலைஞர்கள் பத்திரிகையாளர்கள் மற்றும் எழுத்தாளர் களுக்கு மோட்டார் கார் ஒன்றினை கொள்வனவு செய்வதற்கு வட்டியில்லாத கடன் திட்டமொன்றும் அறிமுகப்படுத்தப் படவுள்ளது.

கால்நடை அபிவிருத்தி

கால்நடை உற்பத்திகளுக்குத் தேவையான உபகரணங்கள் மீதான பெறுமதி சேர் வரி விலக்களிக்கப்படும். பால் உற்பத்தியினை ஊக்குவிப்பதற்கு அரசு மற்றும் தனியார் துறையினருக்கு வரிச்சலுகைகளும் வழங் கப்படும். பால் பண்ணையாளர்கள் மத்தியில் விநியோகிப்பதற்கு 3000 பசுக் களை இறக்குமதி செய்வதற்கும் நடவ டிக்கை எடுக்கப்படவுள்ளது.

உள்நாட்டு விமான நிலையங்கள்

பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலைய விஸ்தரிப்பு, ஹம்பாந்தோட்டை சர்வதேச விமானநிலையம், பலாலி மற்றும் இரத் மலானை விமானநிலையங்களின் அபி விருத்தியுடன் கண்டி, நுவரெலியா, மட் டக்களப்பு, திருகோணமலை, ஹிங்கு ராங்கொட, சீகிரியா, அநுராதபுரம், இர ணைமடு போன்ற பிரதேசங்களில் உள்நாட்டு விமானநிலையங்கள் நிர்மாணிக் கப்படும், இதற்காக 750 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படும்.

வீடமைப்பு வசதி

நகர சேரிப் புறங்களில் வாழ்பவர்களின் வீடமைப்புப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு 50 ஆயிரம் வீடமைப்பு அலகுகளைக் கொண்ட பல்மாடித் தொடர் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. இதற்கான விசேட நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 500 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு

வெளிநாட்டு வேலைவாய்ப்பினை முடித்துக்கொண்டு நாடு திரும்புபவர் களுக்கும், மற்றும் தொழில்முயற்சி தொடர்பான முகாமைத்துவத் திறன் வசதிகளை வழங்குவது முக்கியமானதாகும். அத்தகைய முன்னெடுப்புக்களை ஊக்கு விக்கும் வகையில் வருமான வழிகள் அனைத்தினையும் 5 வருட காலப்பகுதிக்கு வரிவிலக்களிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நடமாடும் மொழி ஆய்வு கூடங் களை அமைக்கவென 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

சமூக ஒருங்கிணைப்புத் திட்டத்தின் கீழ் சகல பாடசாலை மாணவர்களுக்கும் ஆங்கில மொழிக்கு மேலதிகமாக சிங் களம் மற்றும் தமிழ் மொழிகள் போதிக் கப்படவிருக்கின்றது. இதற்குத் தேவையான பயிற்சிகளை ஆசிரியர்களுக்கு வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதே§ நரம், சமூக சேவைகள் ஊடாக மொழி ஆற்றல்களை பிரபல்யப் படுத்துவதற்கும், புதிய தொலைத் தொடர்பாடல் வசதிகளை அறிமுகப்படுத்துவதற்குமென நடமாடும் மொழியாய்வுக் கூடங்கள் அமைக்கப்பட வுள்ளன. இதற்கென 100 மில்லியன் ரூபா மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

முப்படை மற்றும் பொலிஸாரின் சமூகப் பாதுகாப்பு

சமூகப்பராமரிப்புத் திட்டத்தின் கீழ் பொலிஸ் சேவையில் கடமையாற்றும் மூன்றாவது பிள்ளை கிடைக்கப்பெறுமாயின் ஒரு இலட்சம் ரூபா வழங்கப்படும். கடந்த வருடம் இக்கொடுப்பனவு முப்படையின ருக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

பொருளாதார நெருக்கடியை எதிர் நோக்கும் படைவீரர்களின் பெற்றோருக்கு மாதாந்தம் 750 ரூபா படி கொடுப்பனவு வழங்கப்படும். ஊனமடைந்துள்ள படை வீரர்களுக்கு வாழ்க்கைத் தொழிற்பயிற்சி, சுயதொழில் வேலைவாய்ப்புக்காக ‘ரண விரு திவிநெகும’ திட்டத்தின்கீழ் விசேட கடன்திட்டம் அறிமுகப்படுத்தப் படும். இத்திட்டத்துக்கென 1700 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சகல ஊனமுற்ற படைவீரர் களுக்கும் மாதாந்தக் கொடுப்பனவு வழங்கவென 14ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப் பட்டுள்ளது.

முதியோருக்கான நல திட்டம்

எழுபது வயதுக்கு மேற்பட்ட முதிய வர்களுக்கு தற்போது வழங்கப்படுகின்ற மாதாந்தக் கொடுப்பனவு ரூபா 300 ரூபா விலிருந்து 1000 ரூபாவரை அதி கரிக்கப்படும். ஏனையவர்களுக்கு 100 ரூபாவிலிருந்து 500 ரூபா வரை அதி கரிக்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் 900 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. முதியோர் சுகாதார நலன் களைக் கவனிக்க வென குடும்ப மட்ட தாதியர் சேவை அறிமுகப்படுத்தப்படும்.

தளவைத்தியசாலைகளிலும், ஆயுர்வேத வைத்தியசாலைகளிலும் முதியோருக்கென விசேட வார்ட்டுக்கள் அமைக்கப்படும். இதற்குரிய தங்குமிட வசதிகளும் மேம் படுத்தப்படும். இத்திட்டத்துக்கென 200 மில்லியன் ரூபா மேலதிகமாக ஒதுக் கப்பட்டுள்ளது.

புராதன சமயஸ்தல பிரதேச மேம்பாடு

புராதன சமயத் தலங்களை சூழவுள்ள பாடசாலைகள், மகப்பேற்று நிலையங்கள், குடிநீர் வசதி மற்றும் பாதைகள் என்ப வற்றை அபிவிருத்தி செய்வதற்காக 300 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

சட்ட உதவி

குறைந்த வருமானம் பெரும் குடும்பங் களுக்கு சட்டரீதியான உதவிகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் சட்ட உதவி ஆணைக்குழு கிராம மட்டத்தில் சட்ட உதவி அமர்வுகளை நடாத்தி வரு கின்றது. இந்நடவடிக்கை வருமானம் குறைந்த குடும்பங்களுக்குப் பெறும் நிவாரணமாக உள்ளது. இதற்கென 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது.

சிறைச்சாலை மறுசீரமைப்பு

சிறு குற்றங்களுக்காக சிறைத்தண்டனை அனுபவிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் தண்டப் பணத்தை செலுத்த முடியாத வர்களாவர். அவர்களின் தண்டப் பணத்தை செலுத்தி அவர்களை விடுவிக்க அவர்களது குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கவும் யோசனை முன்வைத்துள்ளேன்.

முன்னாள் புலி உறுப்பினர்கள் சுமார் 15 ஆயிரம் பேருக்கு புனர்வாழ்வு அளித்து நாம் வெற்றியடைந்துள்ளோம். அதனால் சிறைச்சாலைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கும், அவற்றை புனர்வாழ்வு நிலையங்களாகவும், திறந்தவெளி முகாம் களாகவும் மாற்றுவதற்கு யோசனை முன்வைக்கின்றேன்.

அரிசி ஏற்றுமதி வலயங்கள்

வடக்கு, கிழக்கு, தெற்கு மற்றும் ரஜ ரட்ட ஆகிய நான்கு பிரதேசங்களில் அரசி ஏற்றுமதி வலயங்கள் உருவாக்கப்படும். இத்திட்டத்தின் கீழ் ஆராய்ச்சி, விதை நெல் மேம்பாடு மற்றும் விரிவாக்கல் என்பவற்றை ஊக்குவிக்கவென ஆரம்ப முதலீடாக 200 மில்லியன் ரூபா ஒதுக் கப்பட்டுள்ளது.

அரசி ஏற்றுமதி வலயங்களில் நவீன அரிசி ஆலைகளை அமைக்க முன்வரு வோருக்கு வரிச்சலுகை அளிக்கப்படும்.

குடிநீர்

தற்போது நடைபெற்றுவரும் குடிநீர் கருத்திட்டங்களை நிறைவு செய்வதற்கும், புதிய திட்டங்களை ஆரம்பிக்கவுமென 33 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், சகல மாகாணங்களிலும் வளர்ச்சியடைந்துவரும் சிறு நகரங்களில் 55 குடிநீர் திட்டங்கள் செயற்படுத்தப்படும். இதற்கென 3200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் குடிநீர் வீணாவதையும், கசிவதையும் 48 சத வீதத்திற்குக் குறைப்பதற்கும் 680 மில்லி யன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பட்ஜட்: அரச ஊழியருக்கு சம்பள உயர்வு 112 மக்கள் நல யோசனைகள் Empty Re: பட்ஜட்: அரச ஊழியருக்கு சம்பள உயர்வு 112 மக்கள் நல யோசனைகள்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 22 Nov 2011 - 6:43

நல்லதொரு திட்டமாகத் தெரிகிறது நடைமுறைச்சிக்கல்கள் மீறி பின்பற்றப்படுமானால் மிகவும் முன்னேற்றகரமான நிகழ்வுகளை நாட்டில் எதிர்பார்க்கலாம் பகிர்வுக்கு நன்றி

முக்கியமாக

வெளிநாட்டு வேலைவாய்ப்பு

வெளிநாட்டு வேலைவாய்ப்பினை முடித்துக்கொண்டு நாடு திரும்புபவர் களுக்கும், மற்றும் தொழில்முயற்சி தொடர்பான முகாமைத்துவத் திறன் வசதிகளை வழங்குவது முக்கியமானதாகும். அத்தகைய முன்னெடுப்புக்களை ஊக்கு விக்கும் வகையில் வருமான வழிகள் அனைத்தினையும் 5 வருட காலப்பகுதிக்கு வரிவிலக்களிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது வரவேற்கத்தக்கது வெளிநாடுகளில் வேலைசெய்து நாட்டுடன் ஐக்கியமாகிடத்திரும்புபவர்களுக்கு இது மிகவும் அவசியமானதாக அமையும்


பட்ஜட்: அரச ஊழியருக்கு சம்பள உயர்வு 112 மக்கள் நல யோசனைகள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum