Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அரை மணி நேரச் சந்திப்பு
Page 1 of 1
அரை மணி நேரச் சந்திப்பு
பயணிகள் கவனத்திற்கு... டெல்லி செல்ல வேண்டிய "இண்டியன்-ஏர்லைன்ஸ்' விமானம் இன்னும் அரை மணி நேரத்திற்குள் வந்தடையும். நன்றி'' என்ற மெல்லிய குரலில் அறிவிப்பு வந்ததைக் கேட்டு ஸ்டாலில் நின்று கொண்டிருந்த சாருமதி, "ஏற்கெனவே ஒரு மணி நேரம் தாமதம். இன்னும் அரை மணி நேரமா?' என்று தனது கடிகாரத்தைப் பார்த்தார்.
பின்னர் தன் கையில் இருந்த டீயை குடித்தார். அவரைப் பார்ப்பதற்கு எளிமையாகவும், மிகவும் படித்தவராகவும் தெரிந்தார்.டீயைக் குடித்துவிட்டு தனது லக்கேஜ்களை எடுத்து "வெயிட்டிங் ஹாலு'க்குச் சென்று ஓர் இருக்கையில் அமர்ந்தார். அவர் அருகே இரண்டு இருக்கைகள் தாண்டி சோகத்துடன் ஒரு பெண் அமர்ந்திருப்பதைப் பார்த்தார்.
அவரைப் பார்த்தால் ஏதோ ஒன்றைப் பறி கொடுத்தவர் போலிருந்தார். அவருக்கு வயது 30 முதல் 35 வயது வரை இருக்கும் என ஊகித்தார்.சாருமதி அவர் அருகே சென்று அமர்ந்தார். அவரிடம் பெயர் என்னவென்று கேட்டார்.
அவரும் கல்பனா என்று கூறினார். பின்னர் சாருமதி, "ஏன் கவலையாகக் காணப்படுகிறீர்கள்? எதுவாக இருந்தாலும் சரி, கூறுங்கள்' என்று கூறினார்.கல்பனா, "ஒன்றுமில்லை' என்று தனது துக்கத்தை மறைத்தார். "நீங்களும் டெல்லிக்குத்தானா?' என்று சாருமதி கேட்டார். கல்பனாவும் "ஆம்' என்று கூறினார்
.பின்னர் சாருமதி, "தயக்கமில்லாமல் சொல்லுங்க. துக்கத்தை மனசுல வச்சுக்கிட்டே இருக்காதீங்க' என்று கூறினார். கல்பனாவும் தனது கதையைச் சொல்ல ஆரம்பித்தார்:"எனக்கு ஒரே ஒரு மகள். அவள் பெயர் சத்யா. இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு சாலை விபத்தில் அவளுக்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டது. நாங்களும் எவ்வளவோ டாக்டர்களிடம் கொண்டு சென்று காண்பித்தோம்.
ஆனால் எல்லோரும் கைவிட்டுவிட்டார்கள். அவள் இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே, "அம்மா! நான் இறந்து விடுவேனாம்மா? இறந்த பிறகு கடவுள்தான் என்னைப் பார்த்துக் கொள்வாரா? நீங்கள் வரமாட்டீர்களா?' என்று அந்த ஆறு வயது குழந்தை கேட்கும்போது எப்படியிருக்கும்?' என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே கல்பனாவின் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது.
சாருமதி அவருக்கு ஆறுதல் கூறினார். மனதில் தைரியத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். பின்னர் அவரும், "எனக்கும் ஒரு மகன் இருந்தான். அவனுக்குப் பிறவியிலேயே மூளையில் கட்டி இருந்தது. அதைக் குணப்படுத்துவது மிகவும் கடினம். சிலர் இறந்தும் போயிருக்கிறார்கள்.
ஆனால் அபூர்வமாக சில சமயம் குணப்படுத்த முடியுமாம். அந்த ஒரு வார்த்தைக்காகத்தான் நாங்கள் உயிரோடு இருந்தோம். வெளிநாடுகளிலிருந்து மருத்துவர்களை வரவழைத்தோம். அவர்களும் சிகிச்சை அளித்தனர். அவனை எங்களுக்குப் பிடிக்கவில்லையோ என்னமோ! 12 வயதிலேயே எங்களை விட்டுப் பிரிந்தான். அவன் இறந்த நேரத்தில் நான் உங்களைவிட மேலாக வருத்தமுற்றேன்.
அவன் இருக்கும் இடத்திற்கே செல்ல முயற்சித்தேன். என் கணவரும் இதைப் பார்த்து மனம் உடைந்து போனார். பின்னர் மாதங்கள் ஆக ஆக, நாங்கள் எங்களுக்குள் மன தைரியத்தை வளர்த்துக் கொண்டோம். தன்னம்பிக்கையை ஊட்டும் புத்தகங்களை வாங்கிப் படித்தோம்.இரண்டு ஆண்டுகள் சென்றன. நாங்கள் ஒரு சிறிய அனாதை ஆசிரமம், ஊனமுற்றோர் இல்லம் போன்றவற்றை நிறுவினோம்.
பல ஆசிரமங்களுக்குப் பொருளுதவி அளித்தோம். ஒரு வாரத்திற்கு முன்புகூட, பக்கத்து ஊரிலிருக்கும் ஊனமுற்றோர் மற்றும் அனாதைகள் ஆசிரமத்திற்குச் சென்று எங்களால் இயன்ற பொருளுதவியை அளித்தும் அவர்களுக்கு சேவை செய்தும் மன திருப்தியுடன் வந்தோம்.
இதற்கெல்லாம் காரணம் எங்களிடமிருந்த மன தைரியம் மட்டுமே! தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் இருந்த நான், அதே மனநிலையில் இருந்திருந்தால் நிச்சயமாக எங்களுக்கு உலகத்தின் மறு பக்கம் தெரிந்திருக்காது' என்று கூறிக்கொண்டே தனது பையிலிருந்து இரண்டு புத்தகங்களை எடுத்துக் கல்பனாவிடம் கொடுத்தார். கல்பனாவின் முகத்திலும் நம்பிக்கை மலர்ந்தது.
அதற்குள்-"பயணிகள் கவனத்திற்கு... டெல்லி செல்ல வேண்டிய விமானம் இன்னும் 5 நிமிடங்களுக்குள் ரன்வே 1-ல் வந்து நிற்கும்' என்ற அறிவிப்பு வந்தது. பின்னர் இருவரும் தங்களது லக்கேஜ்களை எடுத்துக்கொண்டு புறப்பட்டனர்.கல்பனா தனது நன்றியை உண்மையில் தாமதமாக வந்த அந்த விமானத்திற்குத்தான் கூற வேண்டும்.
- பா.செ. முத்துபாரதி
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum