Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஆறு மாத சிறைவாசத்தின் பின்னர் கனிமொழி நாளைமறுதினம் சென்னை வருகை
Page 1 of 1

பீஇன்று முதல் மூன்று தினங்கள் புதுடில்லி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை
ஆறு மாதமாக திகார் சிறையில் இருந்து வந்த கனிமொழிக்கு பிணை கிடைத்தது. இதற்கான உத்தரவை டில்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்ததை அடுத்து தி.மு.க. தலைமை மட்டற்ற மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்துள்ளது. கனிமொழி யோடு சேர்ந்து கைது செய்யப்பட்டிருந்த கலைஞர் தொலைக்காட்சி இயக்குனர் சரத்குமாருக்கும் பிணை கிடைத்துள்ளது.
நேற்று முன்தினம் காலை தொடங்கிய விசாரணை மதியம் 1 மணி வரை நடந்தது. அப்போது கனிமொழியின் வழக்கறிஞர் அல்டாப் கூறுகையில், “2ஜி” வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 17 பேர் மீதும் கடந்த ஒக். மாதம் 22ம் திகதி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. உச்ச நீதிமன்றம், தனியார் கம்பெனியைச் சேர்ந்தவர்களுக்கு இந்த மாதம் 23 ஆம் திகதி பிணை வழங்கியது.
எனவே உச்ச நீதிமன்றம் நம்பிக்கை சதி மோசடி குற்றத்தை கருத்தில் கொண்டு தான் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரின் மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை கருத்தில் கொணடு தான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே, கனிமொழிக்கு பிணை வழங்க வேண்டும் என்றார். இதையடுத்து, விசாரணை முடிவுக்கு வந்தது. இதன் பின் மதியம் 3.45 மணிக்கு நீதிபதி ஷாலி, கனிமொழியின் பிணை மனு மீது தீர்ப்பு வழங்கினார். அப்போது அவர் கூறுகையில், “கனிமொழி உட்பட ஐந்து பேருக்கு பிணை வழங்கி உத்தரவிடுகிறேன்” என்றார்.
அவர் தனது உத்தரவில் கூறியிருப்பதாவது; “2ஜி” வழக்கில் கைது செய்யப்பட்ட கனிமொழி மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்திருக்கிறது. இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஐந்தாண்டு வரை கனிமொழிக்கு சிறைத் தண்டனை கிடைக்கும். தனியார் கம்பெனியைச் சேர்ந்த ஐந்து பேருக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியது. அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஏழு ஆண்டு வரை தண்டனை கிடைக்கும். எனவே, இரு தரப்பினரையும் பார்க்கும் போது, கனிமொழி மீது சுமத்தப்பட்ட குற்றத்தின் தீவிரம் குறைவாக உள்ளது. தவிர குற்றத்தின் தீவிரத்தையும், அதற்கு விதிக்கப்படும் தண்டனை இரண்டையும் கருத்தில் கொள்கிறேன். மேலும் கனிமொழி பிணை மனுவுக்கு சி.பி.ஐ. எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. கனிமொழி பெண் என்பதால் அவருக்கு இந்திய தண்டனைச் சட்டத்தின் 4 3 7 வது பிரிவின் கீழ் சிறப்பு சலுகை அளிக்க வேண்டும் என்பதையும் இந்த நீதிமன்றம் கவனத்தில் கொள்கிறது.
கனிமொழி தனது பிணைக்கு ஐந்து இலட்சம் ரூபாய் பிணையத் தொகை கட்ட வேண்டும். தவிர தனது கடவுச் சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். மேலும் வழக்கு விசாரணையில் தவறாது கலந்து கொள்ள வேண்டும். அவ்வாறு கலந்து கொள்ள முடியவில்லை என்றால் நீதிபதியிடம் முன்னதாக அனுமதி பெற வேண்டும். இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.
பிணை கோரி மனு தாக்கல் செய்திருந்த தொலைத் தொடர்பு துறை முன்னாள் செயலர் சித்தார்த் பெகுராவுக்கு நேற்று முன்தினம் பிணை வழங்கப்படவில்லை. இவரை பிணையில் விடுவதற்கு சி.பி.ஐ. எதிர்ப்பு தெரிவித்திருந்ததால் இவரது பிணை மனு மீதான உத்தரவு பின்னர் வழங்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.
நேற்று முன்தினம் காலை வழக்கு விசாரணையின் போது கனிமொழியின் தாயார் ராஜாத்தி உயர் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார்.
இந்நிலையில் காலை வழக்கு விசாரணை நீண்டுகொண்டே போனது. பின் விசாரணை மதியம் தொடரும் என்று நீதிபதி கூறினார். இதனால் சற்று சோர்வுடன் காணப்பட்ட ராஜாத்தி எதுவும் நடக்கப்போவதில்லை என்ற விரக்தியில் மதியம் நீதிமன்றத்திலிருந்து கிளம்பிவிட்டார். இந்நிலையில் மதியம் 3 மணி 45 நிமிடத்திற்கு நீதிபதி தனது உத்தரவை வழங்கினார். பிணை வழங்கி நீதிபதி உத்தரவு பிறப்பித்த போது, தி.மு.க. தரப்பில் யாரும் நீதிமன்றத்தில் இல்லை.
ராஜா உள்ளிட்ட நான்கு பேர் மட்டும் பிணைக்காக இன்னும் திகார் சிறையில் காத்திருக்கின்றனர். இதில் ராஜா இதுவரை பிணை கோரவில்லை.
இதையடுத்து நேற்று கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் சரத்குமார் உள்ளிட்ட ஐந்து பேரும் திகார் சிறையில் இருந்து விடுதலை ஆனார்கள்.
அவர் சென்னை திரும்பும் திகதி குறித்து தி.மு.க தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது;
அவர் பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெறும் நாட்களில் இருக்க வேண்டியிருப்பதால், 30. 11. 2011, 1. 12. 2011, 2. 12. 2011 ஆகிய மூன்று நாட்களிலும் பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு, 3. 12. 2011 அன்று காலையில் டில்லியிலிருந்து காலை விமானத்தில் புறப்பட்டு சென்னை வந்து சேருகிறார். டிசம்பர் 3, 4, 5, 6, 10, 11 பிறகு 24 முதல் 31 வரை நீதிமன்றம் விடுமுறை என்பதால் அந்த நாட்களில் சென்னையில் இருப்பார் என்பது தி. மு. க தொண்டர்களுக்கு தெரிவி க்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது. சென்னை திரும்பும் கனிமொழிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்க தி. மு. க சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பெரும் அளவில் சென்று கனிமொழியை வரவேற்கிறார்கள்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum