சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» nisc
by rammalar Today at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 16:12

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

பயர்பாக்ஸ் புது வசதிகள் Khan11

பயர்பாக்ஸ் புது வசதிகள்

Go down

பயர்பாக்ஸ் புது வசதிகள் Empty பயர்பாக்ஸ் புது வசதிகள்

Post by *சம்ஸ் Tue 18 Jan 2011 - 23:05

ஓப்பன் சோர்ஸ் (Open Source) முறை என்று சொல்லப்படுகின்ற திறந்த நிலை சிஸ்டம் வரிகளுடன் அமைக்கப்பட்டது பயர்பாக்ஸ் பிரவுசர். இதனால் இதன் புரோகிராமிங் வரிகளைப் பெற்று, பல கணிப்பொறி வல்லுநர்கள், இதற்கான ஆட் ஆன் (Add on) தொகுப்புகளை இலவசமாக வழங்கி வருகின்றனர். இவற்றினால் பல கூடுதல் வசதிகள் நமக்குக் கிடைக்கின்றன. இவற்றைப் பற்றி ஏற்கனவே இந்த பகுதியில் குறிப்பிட்டிருக்கிறோம். அண்மையில் மேலும் சில கூடுதல் வசதிகளைத் தரும் தொகுப்புகளைப் பார்க்க நேர்ந்தது. அவற்றில் சிறப்பான சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
1. மல்ட்டி ரோ புக்மார்க்: நமக்குப் பிடித்த அல்லது நமக்குப் பயன்தரும் இணைய தள முகவரிகளைப் புக் மார்க் (Book Mark) என்ற பெயரில் பயர்பாக்ஸ் பிரவுசரில் பட்டியலிட்டு வைக்கிறோம். புக்மார்க் டூல்பாரில் கிளிக் செய்தவுடன் 20க்கும் மேற்பட்ட தளங்களுக்கான புக்மார்க்குகள் நமக்குக் கிடைக்கின்றன. இவற்றில் கிளிக் செய்தவுடன், அந்த இணைய தளங்களுக்கு நாம் எடுத்துச் செல்லப்படுகிறோம். ஆனால் புக்மார்க்குகளின் எண்ணிக்கை அதிகமாகும் போது, கூடுதலாக இருப்பவைகள், ஒரு கீழ்விரி மெனுவாக நமக்குக் கிடைக்கிறது. கீழாகச் சென்று கிளிக் செய்தால், மெனு விரிந்து நமக்கு அவை கிடைக்கின்றன. இதற்குப் பதிலாக அருகே ஒரு பட்டியல் விரிந்து அவை அனைத்தும் கிடைத்தால் நன்றாக இருக்கும் அல்லவா! இதற்கென ஒரு ஆட் ஆன் தொகுப்பு இலவசமாகக் கிடைக்கிறது. Multirow Bookmarks Toolbar என இது அழைக்கப்படுகிறது. இதனைப் பெற https://addons.mozil...efox/addon/6937 என்ற முகவரியில் உள்ள இணையப் பக்கத்திற்குச் செல்ல வேண்டும். இதனை இன்ஸ்டால் செய்த பின்னர், மெனுவில் புக்மார்க்குகள் சென்று தங்குவதில்லை. வரிசையாகப் பட்டியலிடப்படுகின்றன.
2. யு.எஸ்.பி.யில் பயர்பாக்ஸ்: சென்ற மாதம் ஒரு நாள் அவசரமாக வெளியூர் சென்றிருந்த போது, இணையத்தில் சில தகவல்களைத் தேடி ஒரு இன்டர்நெட் சென்டருக்கு சென்றேன். அங்கே இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பும், குரோம்பிரவுசரும் வைத்திருந்தனர். எனக்கு இவற்றை இயக்குவது தெரியும் என்றாலும், பயர்பாக்ஸ் பிரவுசரில் பழகிவிட்டதால், அது இல்லாதது சிறிது கஷ்டமாக இருந்தது. அப்போதுதான், ஏன் நாம் எடுத்துச் செல்லும் வகையில் பயர்பாக்ஸ் பிரவுசருக்கான பைலை வைத்திருக்கலாமே என்று யோசனை பிறந்தது. அதே நோக்கத்துடன் தேடுகையில் போர்ட்டபிள் பயர்பாக்ஸ் என்ற ஒரு புரோகிராம் பைல் இருப்பது தெரிய வந்தது. இதனை ஜான் டி ஹேலர் என்பவர் உருவாக்கி இலவசமாகத் தந்துள்ளார். இந்த பைலின் அளவு 5710 கேபி தான். இதனை ஒரு யு.எஸ்.பி.யில் இன்ஸ்டால் செய்து எடுத்துச் சென்றால், பயர்பாக்ஸ் பிரவுசரை இதிலிருந்தே இயக்கி பிரவுஸ் செய்திடலாம். இதனைப் பெறவும், இது குறித்து மேலும் தகவல்களைப் பெறவும் http://portableapps.com/apps/internet/firefox_ portable என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.
3. தண்டர்போர்டு போர்ட்டபிள் (Thunderbird Portable): பயர்பாக்ஸ் பிரவுசர் பயன்படுத்துபவர்கள் எல்லாரும்,மொஸில்லா தரும் இமெயில் கிளையண்ட் புரோகிராமான தண்டர்பேர்ட் பயன்படுத்துவார்கள். இந்த புரோகிராமும் யு.எஸ்.பி.யில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தும் வகையில் கிடைக்கிறது. 5950 கேபி அளவுள்ள பைலில் இது அடங்கியுள்ளது. இதனை யு.எஸ்.பி.யில் இன்ஸ்டால் செய்து இயக்கி பயன்படுத்தலாம்.
4. ஒன் கிளிக் ஆன்ஸர் (One Click Answer): பயர்பாக்ஸ் பிரவுசரில் எந்த இணைய தளத்தில் இருந்தாலும், ஏதேனும் ஒரு சொல்லுக்குரிய பொருள் தெரிய வேண்டுமா? ஒன் கிளிக் ஆன்ஸர்ஸ் என்ற ஆட் ஆன் தொகுப்பினை இன்ஸ்டால் செய்தால் போதும். எந்த சொல்லிலும் கர்சரை வைத்து ரைட் கிளிக் செய்தால், உடனே Answers.com என்ற தளத்திலிருந்து பொருள் விளக்கம் பெறப்பட்டு ஒரு பாப் அப் விண்டோவாகக் கிடைக்கும். இந்த ஆட் ஆன் தொகுப்பை http://www.answers.com/ என்ற முகவரியில் உள்ள தளத்தில் பெறலாம்.
5. வண்ணங்களில் டேப்கள்: பயர்பாக்ஸ் பிரவுசரில் திறக்கப்பட்ட ஒவ்வொரு இணைய தளத்திற்குமான டேப்களை ஒரே நிறத்தில் தான் பார்க்கிறோம். அதற்குப் பதிலாக அவற்றை வண்ணங்களில் பார்த்தால் நன்றாக இருக்குமே! ஒன்றுக்கொன்று வித்தியாசமான வண்ணங்களில் வேறுபடுத்திப் பார்க்கலாமே!! இதற்கான புரோகிராம் http://binaryturf.com/ என்கிற முகவரியில் உள்ள தளத்தில் கிடைக்கிறது. இதுவும் இலவசம்தான்.
6. வெப்சைட் பி.டி.எப். பைலாக: பல நேரங்களில் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் வெப்சைட்டை அப்படியே பி.டி.எப். பார்மட்டில் ஒரு பைலாக மாற்றி வைத்துக் கொள்ளலாமே என்ற எண்ணம் ஏற்படும், இல்லையா? ஏனென்றால் பல எச்.டி.எம்.எல். பைல்கள் இணைந்த ஓர் இணைய தளத்தை காப்பி செய்வது சற்று சிரமமான வேலையாகும். இதற்கென ஓர் ஆட் ஆன் தொகுப்பு PDFIt என்கிற பெயரில் கிடைக்கிறது. இதன் மூலம் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இணையதளம் முழுவதையும் அல்லது பார்த்துக் கொண்டிருக்கும் திரைக் காட்சியை மட்டும், பி.டி.எப். பைலாக மாற்றிக் கொள்ளலாம். இந்த ஆட் ஆன் தொகுப்பை இன்ஸ்டால் செய்து கொண்டால், எந்த தளத்தைப் பார்க்கும்போதும் மவுஸால் ரைட் கிளிக் செய்தால், கிடைக்கும் மெனுவில் பி.டி.எப். பைலாக மாற்றும் வசதி கிடைக்கும். அல்லது ஷார்ட் கட் கீகளைப் பயன்படுத்தியும் கீழ்க்கண்ட முறையில் பி.டி.எப். பைல்களைப் பெறலாம்.
மொத்த பக்கத்தினையும் முழு இமேஜாகப் பெற: Alt + 1

பார்க்கும் ஏரியாவை மட்டும் இமேஜ் ஆகப் பெற: Alt + 2
மொத்த பக்கத்தினையும் பி.டி.எப். பைலாகப் பெற: Alt + 3
பார்க்கும் ஏரியாவை மட்டும் பி.டி.எப் பைலாகப் பெற: Alt + 4
இதில் இன்னும் சில கூடுதல் வசதிகள் கிடைக்கின்றன. உருவாக்கப்படும் இமேஜுக்கு ஒரு டைட்டில் தரலாம். அந்த தலைப்பு என்ன எழுத்து வகையில், என்ன வண்ணத்தில், எந்த இடத்தில் அமைய வேண்டும் என்பதை செட் செய்திடலாம். பக்கத்தை இமேஜாக மாற்றுகையில் பல பில்டர்களைப் பயன்படுத்தலாம்.
உருவாக்கப்பட்ட இமேஜை பி.டி.எப். பைலாக மாற்ற www.touchpdf.com என்ற தளம் உதவுகிறது. இந்த ஆட் ஆன் தொகுப்பை உங்கள் பயர்பாக்ஸ் பிரவுசரில் இன்ஸ்டால் செய்திட https://addons.mozil...efox/addon/7528 என்கிற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.



உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum