Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சிறுவர் துஷ்பிரயோகத்தை கட்டுப்படுத்த அதிகபட்ச தண்டனையே அவசியம்
4 posters
Page 1 of 1
சிறுவர் துஷ்பிரயோகத்தை கட்டுப்படுத்த அதிகபட்ச தண்டனையே அவசியம்
நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் சமீப காலமாக சிறுவர் மீதான துஷ் பிரயோக சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சிறுவர் மற்றும் சிறுமியர்க ளென இருபாலாரும் வயது வந்தோரால் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத் தப்பட்டுள்ள ஏராளமான சம்பவங்கள் நடந்துள்ளன.
மாணவர் மீதான பாலியல் துஷ்பிரயோகத்தில் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் ஈடு பட்டுள்ள சம்பவங்களும் இடம்பெற்றிருப்பதை ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகி றது. சிறுவர்கள் மீதான பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும் சட்டம் இலங்கையில் நடைமுறையில் உள்ளது. இத்தகைய குற்றங்களில் ஈடுபட்ட ஏராளமானோர் நீண்டகால சிறைத்தண்டனைக்கு உள்ளாகியுள்ளனர். எனினும் இக் குற்றங்கள் எதிர்பார்த்தபடி குறைவடைந்ததாகத் தெரியவில்லை.
சிறுவர் மீதான துஷ்பிரயோக சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்திருப்பதாக சமூக நல அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. மாணவர் மீது ஆசிரியரே குற்றம் புரி ந்த சம்பவமும் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னிலங்கையி லும் ஆங்காங்கே இடம்பெற்றுள்ள சிறுவர் மீதான துஷ்பிரயோகங்களில் ஆசிரி யர்கள் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
இவற்றுக்கெல்லாம் அப்பால் சிறுமிகள் மீதான பாலியல் குற்றங்களில் தந்தையரே சம்பந்தப்பட்டுள்ள வக்கிரத்தனமான சில சம்பவங்களும் பதிவாகியுள்ளன. சிறுவர் துஷ்பிரயோகத்தைப் பொறுத்தவரை கொடுமையின் உச்சமென்றே இதனைக் கூற வேண்டும்.
பராயமற்ற இள வயதினர் மீது மேற்கொள்ளப்படும் பாலியல் ரீதியான எந்தவொரு துஷ்பிரயோகமும் மிகவும் பாரதூரமானதாகும். இள வயதினருக்கு உடல் ரீதியில் பாதிப்பை ஏற்படுத்துவது ஒருபுறமிருக்க உள ரீதியிலும் ஆழமான பாதிப்புகளையும் வடுக்களையும் இச்சம்பவங்கள் ஏற்படுத்துகின்றன. எதுவுமறியாத சிறு வயதினர் தங் களையறியாமலேயே துர்நடத்தையில் நாட்டம் கொள்வதற்கும் இது போன்ற சம்ப வங்கள் காரணமாக அமைந்துவிடக்கூடும்.
சிறார்களின் வாழ்க்கையையே சிதைக்கும் பாரதூரமான செயலாகவே சிறுவர் பாலி யல் துஷ்பிரயோகம் கருதப்படுகிறது. எனவேதான் இக்குற்றங்களுக்கு எமது நாட் டின் சட்டத்தில் கடுமையான தண்டனைகள் புகுத்தப்பட்டுள்ளன.
மேற்படி குற்றங்களில் ஈடுபடுவோருக்கு எதுவித தயவு தாட்சண்யமும் காட்டப்பட லாகாது. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் எவரையும் சட்டத்தின் முன்னால் கொண்டுவர வேண்டிய பொறுப்பும் நம் அனைவருக்கும் உண்டு. ஆசிரியத் தொழில் புனிதமானதெனப் போற்றப்படுகிறது. எனினும் ஒருசில ஆசிரியர்களே மாணவர் மீதான துஷ்பிரயோகத்தில் சம்பந்தப்பட்டுள்ளனரென்பது ஆசிரிய சமூகத் துக்கே தலைகுனிவானதாகும்.
இது ஒரு புறமிருக்க இக்குற்றங்களுக்கான சூழ்நிலையை உருவாக்கும் காரணி களை இனங்காண்பது இங்கு அவசியம். பாடசாலை நேரம் தவிர்ந்த வேளைகளில் பாடசாலைகளில் நடத்தப்படும் வகுப்புகளுக்கு மாணவர்களை அனுப்பும் போது பெற்றோர் விழிப்புடன் இருப்பது பிரதானம்.
இத்தகைய சூழ்நிலைகளில் குற்றங்கள் இடம்பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள் ளன. மாலை நேர வகுப்புகளின் போது சிறுவர்கள் பலர் துஷ்பிரயோகத்துக்கு உள் ளான சம்பவங்கள் ஆங்காங்கே கிராமப் பகுதிகளில் இடம் பெற்றுள்ளதனால் இவ் விடயத்தில் பெற்றோர் விழிப்புடனிருப்பது அவசியமாகிறது.
மிகுந்த நம்பிக்கைக்கு உரியவர்கள் மற்றும் உறவினர் போன்றோரால் சிறுவர், சிறு மியர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ள சம்பவங்கள் பரவலாக இடம்பெற்றிருப்பதை கருத்தில் கொள்ளும் போது இந்த விழிப்புணர்வு மிகவும் அவ சியமாகிறது.
இதேசமயம் தாய்மார் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்குச் செல்வதனால் அவர்களது சிறுபிள்ளைகள் துஷ்பிரயோகத்துக்கு உள்ளான சம்பவங்கள் இடம்பெறுகின்றன. தந் தைமாராலேயே இப்பிள்ளைகள் தவறாக வழி நடத்தப்படுகின்றனர். குடும்பக் கட்ட மைப்பு சிதைவடைவதனாலேயே இது போன்ற அவலங்கள் ஏற்படுகின்றன.
சிறுவர் சிறுமியர் மீது இழைக்கப்படுகின்ற இத்தகைய கொடுமைகள் குறித்து கூடு தலான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டிய அவசியம் தற்போது உணரப்பட் டுள்ளது. இவ்விடயத்தில் கூடுதல் விழிப்புணர்வு பெற வேண்டியோர் பெற்றோ ரேயாவர்.
அத்துடன் இவ்விடயத்தில் சமய, சமூகத் தலைவர்களது ஒத்துழைப்பும் அவசிய மாகும். இவர்கள் மக்களிடையே குறிப்பாக பெற்றோர் மத்தியில் விழிப்பை ஏற்படு த்த வேண்டும். குற்றம் புரிவோர் மீது தயவு தாட்சணியம் காட்டக்கூடாது. கடுமை யான தண்டனை வழங்கப்பட வேண்டும். அதற்குப் பொலிஸார் தமது கடமையைப் பொறுப்புடன் செய்ய வேண்டும்.
சில பொலிஸ் நிலையங்களில் தமக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து முறையிடச் செல்லும் பெண்கள் மீது கூட பொலிஸார் துஷ்பிரயோகம் மேற்கொள் ளப்பட்ட சம்பவங்களும் பதிவாகாமல் இல்லை. எனவே வேலிகளே பயிரை மேயாது எதிர்காலத்திலாவது காவலாக இருந்து கலாசார பண்பாட்டு ஒழுக்க விதிக ளுடன் வாழ வழிசமைப்போம்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிறுவர் துஷ்பிரயோகத்தை கட்டுப்படுத்த அதிகபட்ச தண்டனையே அவசியம்
(*(: :% :%சில பொலிஸ் நிலையங்களில் தமக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து முறையிடச் செல்லும் பெண்கள் மீது கூட பொலிஸார் துஷ்பிரயோகம் மேற்கொள் ளப்பட்ட சம்பவங்களும் பதிவாகாமல் இல்லை. எனவே வேலிகளே பயிரை மேயாது எதிர்காலத்திலாவது காவலாக இருந்து கலாசார பண்பாட்டு ஒழுக்க விதிக ளுடன் வாழ வழிசமைப்போம்.
Re: சிறுவர் துஷ்பிரயோகத்தை கட்டுப்படுத்த அதிகபட்ச தண்டனையே அவசியம்
காலாச்சார சீரழைவால் ஏற்படும் இந்த வக்கிரங்களை கடினமான தண்டனைகள் மூலமே குறைக்க முடியும்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: சிறுவர் துஷ்பிரயோகத்தை கட்டுப்படுத்த அதிகபட்ச தண்டனையே அவசியம்
இதற்கு இஸ்லாமிய தண்டனைகளை செய்வது போல் பகிரங்கமாக மற்றவர்களின் பார்வைக்கு தெரிந்த வகையில் ஒரு இரு தண்டனை நிறைவேற்றினாலே போதுமானது அடங்கிடுவார்கள்
Similar topics
» சிறுவர் பிரச்சினைகளை ஆராய்தற்காக பாடசாலைகளில் சிறுவர் பாதுகாப்பு குழுக்கள்!
» சிறுவர் புத்தகம் எழுதுங்கள்...!!{சிறுவர் பாடல்}
» அமெரிக்காவில் எனக்கு மரண தண்டனையே? விக்கிலீக்ஸ் நிறுவனர்!
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
» பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அதிகபட்ச மதிப்பெண் சலுகை 10% தான் -உச்ச நீதிமன்றம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum