சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பனை மரத்தின் உச்சியில் தச்சு வேலை!
by rammalar Today at 6:26

» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Yesterday at 16:13

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 16:10

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 16:07

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 16:03

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 15:51

» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

முற்றும் முல்லைப்பெரியாறு அணை விவகாரம்!  Khan11

முற்றும் முல்லைப்பெரியாறு அணை விவகாரம்!

3 posters

Go down

முற்றும் முல்லைப்பெரியாறு அணை விவகாரம்!  Empty முற்றும் முல்லைப்பெரியாறு அணை விவகாரம்!

Post by *சம்ஸ் Sun 11 Dec 2011 - 6:22

மீனவர்கள் தாக்கப்படுதல், கூடங்குளம் அணு மின்நிலையம் என்று எமது அண்டை நாட்டு அரசியல்வாதிகள் கூச்சலிட்டு தமது அரசியல் செல்வாக்கினைப் பெருக்கிக்கொள்ளும் வகையில் தற்போது பூதாகரப்படுத்தப்படும் விஷயம்தான், முல்லைப் பெரியாறு அணை விவகாரம். மற்றுமொரு காவிரியாக கேரளத்திடம் தமிழகத்தை தண்ணீருக்காக மண்டியிட வைத்திருக்கிறது முல்லைப் பெரியாறு.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அமுல்படுத்துமாறு தமிழகம் கேரளத்திடம் கோர, கேரள அரசோ முல்லைப் பெரியாறு அணையை இடித்தே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கிறது.

கடலுக்குச் செல்லும் நீரை அணை கட்டி நீர்ப்பாசனத்துக்குப் பயன்படுத்தலாம் என்பது கி. பி. 2 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்லணை அமைத்து நீர்ப்பாசனத்துக்கு அந்நீரைப் பயன்படுத்தியவன் கரிகாலச்சோழன். அதைப்போலவே இற்றைக்கு சுமார் 117 ஆண்டுகளுக்கு முன்னர் தென் மாவட்ட தமிழர்கள் வறட்சியில் படும் கஷ்டத்தையும் அதே நேரம் பெரியாறு அணையின் தண்ணீர் கடலில் அநியாயமாக விழுந்து வீணாவதையும், ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் பார்த்த பென்னி குயிக் என்ற வெள்ளைக்காரர், அப்போது ஆங்கில அரசின் எதிர்ப்பையும் மீறி, இங்கிலாந்தில் உள்ள தனது சொத்துக்களை விற்று, தென் மாவட்டத் தமிழர்களைக் கொண்டு சென்று ஏராளமான ஆபத்துகளையும் உயிரிழப்புகளையும் சந்தித்துக் கட்டிய அணை முல்லைப் பெரியாறு அணை.

முல்லைப் பெரியாறு தண்ணீரை தேக்கி பின்னர் திறந்து விடும் அணை அல்ல. மாறாக பள்ளத்தில் விழும் தண்ணீரை தடுத்து நிறுத்தி ஒரு அளவுக்கு மேல் உயரச் செய்து மேட்டுப் பகுதிக்கு கொண்டு செல்வதற்காக அமைக்கப்பட்ட அணையாகும். எனவே காலஞ்செல்லச் செல்ல இவ்வணை பழுதடைய வாய்ப்பில்லை.

176 அடி உயரமுள்ள முல்லைப் பெரியாறு அணையில் எவ்வளவு உயரத்திற்கு தண்ணீர் தேக்கப்படுகிறதோ அந்த உயரத்துக்கு ஏற்ப அளவு அதிக தண்ணீர், தமிழ்நாட்டிற்குக் கிடைத்தது. இந்நிலை 1956 இல் தமிழ்நாட்டிலிருந்து கேரளா பிரிந்தபோதும் 156 அடி தண்ணீர் இவ்வணையில் தேக்கப்பட்டு தமிழ் நாட்டுக்கு அனுப்பப்பட்டது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

முற்றும் முல்லைப்பெரியாறு அணை விவகாரம்!  Empty Re: முற்றும் முல்லைப்பெரியாறு அணை விவகாரம்!

Post by *சம்ஸ் Sun 11 Dec 2011 - 6:22

முற்றும் முல்லைப்பெரியாறு அணை விவகாரம்!  W-2
1978 ல் மனோரமாவில் ஒரு கட்டுரை வெளிவந்தது. அந்தக் கட்டுரை முல்லைப் பெரியாறு அணை உடையும் நிலையில் உள்ளது. கூடிய விரைவில் மூன்று மாவட்ட மக்கள் நீரில் மிதக்கும் எனப் பீதியை ஏற்படுத்துவதாக இருந்தது. இவ்வணை பலவீனமாகவிருப்பதாக கட்டுக்கதை எங்கும் பரவியது. அணையைப் பலப்படுத்தும் வரை தற்காலிக ஏற்பாடாக அதன் நீர்மட்டத்தை 132 அடியாகக் குறைக்க தமிழக மற்றும் கேரள அரசுகள் இணங்கின. ஆனால், பின்னர் தமிழக அரசு அதனைப் பலப்படுத்திய போதும் கேரளம் நீர்மட்டத்தை உயர்த்த மறுத்துவிட்டது.

தற்போது பூமியதிர்ச்சி ஏற்பட்டால் இவ்வணை தாங்காதெனக் கூறிவருகிறது கேரள அரசு. 999 ஆண்டுகளுக்கு தமிழகத்துக்கு உரிமையுள்ள முல்லைப் பெரியாறு அணை இந்தியாவில் உள்ள அணைகளிலேயே மிகவும் வலுவான அணையாகும். 7 ரிச்டர் அளவுக்கு பூகம்பமே வந்தாலும் அணை சேதம் அடையாது எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அத்தோடு இந்த பகுதியில் 3.5 ரிச்டருக்கு மேல் பூமி அதிர்ச்சிக்கு வாய்ப்பில்லை.

முல்லைப் பெரியாறு அணை அதன் முழு அளவான 156 அடிக்கு நீர் தேக்கும் அளவிற்கு உறுதியாக உள்ளதென்று கூறி, அணையின் நீர்மட்டத்தை உயர்த்திக்கொள்ள கேரள அரசிற்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், 2006 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அளித்த தீர்ப்பில், அணையின் நீர் மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடிக்கு தமிழ்நாடு உயர்த்திக்கொள்ள கேரள அரசு அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை முடக்கும் வகையில் தனது நீர்ப்பாசன சட்டத்தினைத் திருத்தி ஒரு அவசர சட்டத்தை கேரள அரசு பிறப்பித்தது. அதன்படி, முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக் கருதி அணையின் நீர் மட்டத்தை உயர்த்துவதற்கில்லை என்று அறிவித்தது.

அணையை உடைக்க கேரள அரசு கூறும் காரணம் அணை உடைந்தால் இடுக்கி, குமுளி, எல்லப்பாரா மக்கள் தண்ணீரில் மிதப்பார்கள் என்பது. ஆனால் உண்மையில் இந்த மூன்று இடங்களும் அணையின் தண்ணீர் வெளியேறும் பகுதியை விட அதிக உயரத்தில் இருக்கின்றன.

இவ்வணையின் மூலம் பெறப்படும் தண்ணீரினால் கேரளா மின்சாரத்தை மாத்திரமே பெற்றுக் கொள்கின்றது. ஆனால் இவ்வணையின் மூலம் உச்ச அளவு தண்ணீர் பெறப்பட்ட போது, தமிழ்நாட்டில் 2,17,000 ஏக்கரில் விவசாயம் செய்யப் பட்டது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை கேரள அரசு செயற்படுத்தாத தால் இதன் மூலம் பாசனம் பெறும் காணிகளின் அளவு 46,000 ஏக்கராகச் சுருங்கி விட்டது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

முற்றும் முல்லைப்பெரியாறு அணை விவகாரம்!  Empty Re: முற்றும் முல்லைப்பெரியாறு அணை விவகாரம்!

Post by *சம்ஸ் Sun 11 Dec 2011 - 6:23

முற்றும் முல்லைப்பெரியாறு அணை விவகாரம்!  W-3
தற்போது அணையின் நீர் தேக்க அளவை 120 அடியாக குறைக்க வேண்டும் என்றும் அணை பலவீனமாக இருப்பதால் அதை இடித்து விட்டு புதிய அணையை கட்ட வேண்டும் என்றும் கேரளா பிடிவாதம் பிடிக்கிறது.

தமிழக அரசும், தமிழக அரசியல் கட்சிகளும் இதை ஏற்கவில்லை. புதிய அணை கட்டக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதுடன் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

கேரளாவில் அரசு மற்றும் அரசியல் கட்சிகள் இந்தப் பிரச்சினையை பூதாகரமாக்கி, மக்களிடையே பீதியை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் தமிழக எல்லைப் பகுதியிலும் பெரியாறு அணைப் பகுதியி லும் வன்முறை ஏற்படும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக எல்லையில் கேரளத்தைச் சேர்ந்த கட்சிகள் மற்றும் உள்ளூர் அமைப்புகள் வன்முறை மற்றும் பதற்றத்தை ஏற்படுத்தும் செயல்களை அரங்கேற்றி வருகின்றன. கேரளத்தில் அரசியல் கட்சிகள் எல்லாம் ஒன்றுதிரண்டு முல்லைப் பெரியாறு அணை இடிக்கப்பட வேண்டும் என்பதற்காகப் போராடுகின்றன.

இந்நிலையில் கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எந்தளவில் மக்களிடம் இருந்து எதிர்ப்பு வெடித்ததோ அதேபோன்றதான மக்களெதிர்ப்புப் போராட்டமே தற்போது வேண்டப்படுகின்றது. முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கேரள அரசை கண்டித்து, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில், சென்னையில் எதிர்வரும் 15 ஆம் திகதி உண்ணாவிரதம் நடைபெற இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 1,450 திரையரங்குகள் உள்ளன. அவை அனைத்திலும் அன்றைய தினம், சினிமா காட்சிகள் ரத்துச் செய்யப்படும். கேரளாவிலும் முழு அளவிலான போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் அதனைப் பூதாகரப்படுத்தி காசாக்குவதே ஊடகங்களினதும் அரசியல்வாதிகளினதும் நோக்கமாக இருக்க மொழி, வரலாறு மற்றும் பொருளாதார ரீதியாக ஒன்றையொன்று சார்ந்திருக்கும் மாநிலங்களான தமிழகமும், கேரளாவும், பேச்சுவார்த்தையின் மூலமாக இப்பிரச்சினையைத் தீர்த்துக் கொள்வதே இரு மாநிலங்களினதும் எதிர்கால உறவு சிறக்க வழிவகுக்கும். மாறாக இருதரப்பும் எதிர்ப்பினை மேலும் வலுப்படுத்துவது கேரளாவுக்கும் தமிழகத்துக்குமிடையிலான உறவை கர்நாடக - தமிழக உறவுபோல் மேலும் சிக்கலானதாக்கிவிடும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

முற்றும் முல்லைப்பெரியாறு அணை விவகாரம்!  Empty Re: முற்றும் முல்லைப்பெரியாறு அணை விவகாரம்!

Post by jasmin Sun 11 Dec 2011 - 11:55

காடுகள் நீர் வளம் மற்றும் மலைகளின் ஆளுமையை மத்திய அரசாங்கம் தங்களின் கைகளில் எடுக்க வேண்டும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

முற்றும் முல்லைப்பெரியாறு அணை விவகாரம்!  Empty Re: முற்றும் முல்லைப்பெரியாறு அணை விவகாரம்!

Post by நேசமுடன் ஹாசிம் Sun 11 Dec 2011 - 12:23

எதைச்செய்தாவது பிரச்சினையற்ற தீர்வினை எட்ட வேண்டும்


முற்றும் முல்லைப்பெரியாறு அணை விவகாரம்!  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

முற்றும் முல்லைப்பெரியாறு அணை விவகாரம்!  Empty Re: முற்றும் முல்லைப்பெரியாறு அணை விவகாரம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum