Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தனுஷ் இயக்கத்தில் நடிக்க நான் ரெடி” அபிஷேக் பச்சன்
2 posters
Page 1 of 1
தனுஷ் இயக்கத்தில் நடிக்க நான் ரெடி” அபிஷேக் பச்சன்
‘கொலவெறிக்கு’ப் பிறகு தனுஷ்
ஆல்ரவுண்டர் ஆகிவிட்டார். அபிஷேக்கின் பாராட்டைத் தொடர்ந்து அவரை வைத்து
தனுஷ் இயக்கப் போவதாக கிசுகிசுக்கள் வலை உலகில் பரவி வந்தது.
இந்நிலையில் “தனுஷின் இயக்கத்தில் நான் நடிக்கப் போவதாக செய்திகள்
பரவியுள்ளது. அப்படி நான் எதுவும் அறிவிக்கவில்லை. ஆனால் இப்போது
சொல்கிறேன், தனுஷ் சம்மதித்தால் அவரது இயக்கத்தில் நடிக்கத் தயாராக
இருக்கிறேன்.
தனுஷின் முதல் படத்திலிருந்து சமீபத்திய படங்கள் வரை அனைத்தையும்
பார்த்துவிட்டேன். அபாரமான நடிப்புத் திறமை கொண்டவராக இருக்கிறார்.
இளைஞர்களை எப்படி கவர்வது என்ற சூத்திரத்தை தன்னுள்ளே கொண்டிருக்கிறார்.”
என்று கூறினார்.
இந்தியா டுடே நடத்தும் ‘யூத் சம்மிட் 2011′ நிகழ்சிக்காக இளைஞர்களின்
மத்தியில் உரையாட இன்று (டிசம்பர் 10) சென்னை வந்திருக்கும் அபிஷேக்
மேலும் பேசுகையில், ” நான் நடித்த 17 படங்கள் தொடர்ந்து ‘பிளாப்’ ஆகின.
ஆனாலும் இன்று இத்துறையில் கம்பீரமாக வலம் வருகிறேன். பெரிய நடிகன்
என்ற நினைப்பு எனக்குக் கிடையாது. என்னை நானே சுய விமர்சனம் செய்து
கொள்வதால் இதைத் தெரிவிக்கிறேன்.
சிலர் நடிகர்களின் நடிப்பை விமர்சனம் செய்கிறேன் பேர்வழி என்று ஒட்டு
மொத்தமாக அவர்களை அழிக்கும் வேலையை செய்கின்றனர். இந்நிலையில் என்
வாழ்க்கையில் ஒரு சம்பவத்தை நினைவு கூற விரும்புகிறேன்.
எனது ஒரு படத்தின் காட்சியை திரையரங்கிற்கு நேரில் சென்று பார்த்தேன்.
படம் முடிந்து வெளியில் வந்த ஒரு பெண் என் கன்னத்தில் பளார் என்று அறைந்து
விட்டு ‘உன் தந்தைக்கு இருக்கும் பெயரை அசிங்கப்படுத்தாதே’ என்று
சொல்லிப் போய்விட்டார்.
அன்றுதான் உண்மையாகவே நான் எவ்வளவு கேவலமாக நடிக்கிறேன் என்று
தெரிந்தது. தூக்கம் வராமல் நடு இரவில் என் தந்தையை எழுப்பி “எனக்கு
என்மீதே வெறுப்பாக இருக்கிறது.
பேசாமல் வேறு வேலை செய்யட்டுமா?” என்று கேட்டேன் அதற்கு அவர், “உன்னை
நீயே விமர்சித்துக் கொள். அதை செய்யாமல் எந்த முடிவையும் எடுக்காதே” என்று
கூறினார். அந்த பதில் என் தவறுகளை அறியத் தூண்டியது.
உடனடியாக எனது அனைத்து படங்களையும் பார்த்து கிட்டத்தட்ட இருபதுக்கும் மேற்பட்ட நோட்டுகளில் என் தவறுகளைக் குறித்துக் கொண்டேன்.
இளைஞர்களுக்கு இதைத் தான் நான் சொல்ல விரும்புகிறேன். உங்களை நீங்களே
சோதனை செய்து கொள்ளுங்கள் தவறை அறிந்து கொள்ளாமல் வேறொன்றை நாடாதீர்கள்
அதுவும் தவறாகவே நடக்கும்.”
இரண்டு ஹீரோக்கள் சேர்ந்து நடிப்பது இந்தியா முழுக்க பேமசாகி வரும்
காலகட்டத்தில் இன்னமும் சிலர் முறுக்கிக்கொண்டு தான் இருக்கிறார்கள் இதைப்
பற்றி அபிஷேக் கருத்து தெரிவிக்கும்போது” எனக்கும் இதில் விருப்பம் தான்.
ஆனால் கதை தான் அதை தீர்மானிக்க வேண்டுமே தவிர நடிகர்களின்
பிரபலத்தன்மையை பொருத்து முடிவெடுக்கக் கூடாது. ஆனால் இந்த டிரண்ட்
தமிழில் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது..!”
பேஸ்புக் முழுக்க இரண்டு விஷயங்கள் தான் பிரபலமாக இருக்கிறது. ஒன்று
தனுஷின் ‘கொலவெறி டி’.. மற்றொன்று அபிஷேக்கின் ‘பேபி பி’… மணிரத்தினத்தை
சந்திக்க அடிக்கடி சென்னைக்கு வரும் அபிஷேகிற்கு தமிழ் படங்களில் நடிக்க
ஆசையாம்…! பாலிவுட் டூ கோலிவுட் பாலம் ரெடி…!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தனுஷ் இயக்கத்தில் நடிக்க நான் ரெடி” அபிஷேக் பச்சன்
அபிசேக் உண்மையை கூறி இருக்கிறார்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: தனுஷ் இயக்கத்தில் நடிக்க நான் ரெடி” அபிஷேக் பச்சன்
jasmin wrote:அபிசேக் உண்மையை கூறி இருக்கிறார்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum