சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

தேன் Khan11

தேன்

Go down

தேன் Empty தேன்

Post by மீனு Mon 19 Dec 2011 - 20:44

இயற்கையாகவே இனிப்பானதும், ஆரோக்கியத்திற்கும் தேவையானவற்றையும் கொண்டது
தேன். தேனீக்கள் சேகரித்து பாதுகாத்து வைத்திருக்கும் தேனானது, பல ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தடிமல், காய்ச்சல், சிறுவெட்டுக்காயம்
போன்றவற்றிக்கு கைமருந்தாக பயன்பட்டு வந்திருக்கின்றது. தேன் ஒரு
தடிப்பான, இனிப்பான, தேனீக்களால் தயாரிக்கப்படும் பானமாகும். இது சீனியை
விட குறிப்பிடதக்க அளவில் அதிகம் இனிப்பானதாகும். தேனீக்கள் தமது
தேவைக்காக தேனைச் செய்து பாதுகாத்து வைக்கின்றன. கூட்டாக வாழும் தேன்
கூட்டில் இராணித் தேனீ, வேலையாள தேனீ, ஆண் தேனீ என மூன்று வகையான
தேனீக்களுண்டு. வேலையாட் தேனீக்கள், மலர்களிலுள்ள தேனையும், மகரந்த
மணிகளையும் சேர்த்து (கால்களில் மகரந்தம் கொண்டு செல்லும் பைகளுண்டு) தமது
கூட்டிற்கு எடுத்துச் செல்கின்றன. இவற்றை தேனீயின் உடலினுள்ளமைந்த ‘தேன்
வயிறு’ (கணி ஸ்ரொமக்) என்னும் பையினுள்ளெடுத்து, நெஞ்சுப்பகுதியில்
சுரக்கும் ஒருவித திரவத்தைப் பயன்படுத்தி பகுதியாக சமிபாடடையச் செய்கின்றன.
இறுதியாக திரவத்தன்மையான இப்பதார்த்தத்தை, தேன் வதையின் அறைகளில்
விட்டுவிடுகின்றன. தேனீக்கள் தமது செட்டையை வேகமாக வீசுவதன் மூலம்
தேனிலுள்ள நீர் அகற்றப்பட்டபின், தடிப்பான, பாகுநிலை கூடிய இனிப்பு கூடிய
தேன் வதைகளில் அடைக்கப்படுகின்றன. ‘றோயல் nஐலி’ (அசர பாகு) என ஒரு பால்
போன்ற, போசாக்கு கூடிய பாகு ஒன்றை வேலையாட் தேனீக்கள் வெளிவிடுகின்றன.
இந்தப் பாகு தெரிவு செய்யப்பட்ட சில தேன் புழுக்களுக்கு (லாவா)
கொடுக்கப்படும். இவை இராணித் தேனீயாக விருத்தியடையும். ‘அரச பாகி’ல்
20க்கும் அதிகமான முக்கியமான அமினோஅமிலங்களுடன், உயிர்ச்சத்துக்களில் -
உயிர்ச்சத்து ‘பி’ கலவை, உயிர்ச்சத்து ‘சி’ போன்றனவும் சில தாதுப்
பொருட்களுமுண்டு. அமினோ அமிலங்களில் சில எமக்கு வேண்டியன, ஆனால் அவற்றை
எமதுடல் தயாரிப்பதில்லை. ‘அரச பாகு’ தொடர்ச்சியாக தினமும் 3 – 5
மாதங்களுக்கு எடுத்துவந்தால் உடலில் சக்திப் பெருக்கமும், யௌவனம்
அதிகரிக்குமென கூறுவார்கள். மேலும், உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும்
நாடிக்குழாய்கள் தடிப்படையாமலிருக்கவும் தேன் உதவுதாக கருதப்படுகிறது. ‘அரச
பாகு’ மருந்துளிகளாக கிடைப்பதோடு (கப்சுல்) தோல் மேற்பூச்சுக்
கலவைகளிலும் சேர்க்கப்படுகின்றது. தேனில் அதிகளவில் (80வீதம்)
இனிப்புத்தன்மையைத்தரும் பழவெல்லம் (பிரக்ரோஸ்), குளுக்கோஸ் ஆகியவற்றுடன்
உயிர்ச்சத்துக்களும், (பி, சி, டி, ஈ) அமினோ அமிலங்களும் சில
கனிப்பொருட்களும் (பொட்டாசியம், மங்கனிஸ்) காணப்படுகின்றன. தேனினுள்ள சீனி
வகைகள் இலகுவாக சமிபாடடைந்து, உடனடியாக சக்தியை விடுவிக்கக் கூடியதால,;
விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தலாம். தேன் நஞ்சு நீக்கியாக
செயற்படக்கூடியதால், தோல் புண்கள், எரிகாயங்களில் தடவி விடலாம்.
புண்ணிலிருந்து நீரை உறிஞ்சுவதால், நோய் கிருமிகளான பற்றீரியா,
பங்கசுக்களின் வளர்ச்சி தடுக்கப்படுகின்றது. தொண்டை புண்;ணாவதற்கு காரணமான
ஸ்ரெபிலோகொக்கை, ஸ்ரெப்ரோகொக்கை போன்ற பற்றீரியாக்களை தாக்கி அழிப்பதாக
அறியப்பட்டுள்ளது. மேலும் நோயெதிர்ப்புச் சக்தியைக் கூட்டும் வகையிலும்
செயற்படுவதனால், சில வகையான புற்று நோய்கள் தடுக்கப்படலாம் என
கருதப்படுகின்றது. மனுக்கா தேன் - நியூசிலாந்தில் மனுக்கா
மரப்பூக்களிலிருந்து கிடைக்கும் தேனில் விடசேடமானதோர் பற்றீரியா தொற்றை
தடுக்கவல்ல தன்மை காணப்படுகின்றது. இத்தன்மையின் வலுவை யு.எம்.எவ் (யுனிக்
மனுக்கா பக்ர) என்று குறியிடப்பட்டிருக்கும் (யு.எம்.எவ் 5பிளஸ்,
யு.எம்.எவ் 10பிளஸ், யு.எம்.எவ் 15பிளஸ், யு.எம்.எவ் 30பிளஸ்). தேன் ஓர்
சிறந்த உணவாகும். மேலும் சீனியை விட அதிக இனிப்பாதலால் சீனியின் அளவை விட
குறைவாக பயன்படுத்தலாம். தேனில் பதனிட்ட பண்டங்கள் நீண்ட நாட்களுக்கு
கெடாமல் இருக்கும். சித்த, ஆயூர்வேத வைத்திய முறைகளில் தேன் முக்கிய
இடத்தைப்பிடித்துள்ளது. கசப்பான மருந்துகளை தேனில் குழைத்துக் கொடுக்கும்
பொழுது கசப்பு தெரியாத வேளை தேன் மருந்தின் தன்மையில் எவ்வித மாற்றமும்
செய்வதில்லை. தேனின் மருந்துவ குணங்கள்: - பசியை அதிகரிகச் செய்யும் -
உடற்கழிவை இலகுவில் அகற்றும் - நோயெதிர்ப்புச் சக்தியைத் தூண்டும் -
குருதியை தூய்மைப்படுத்தி, சிவப்பனுக்களின் உற்பத்தியைத் தூண்டும் - சீழ்
பிடித்த புண்ணை குணப்படுத்தும் - வயிற்றுப் புண்ணை ஆற்றும் - நரம்புகளுக்கு
வலுக்கொடுத்து கை, கால் நடுக்கத்தை போக்கும் - எலும்புகளுக்கு வலிமையைத்
தரும் - தீப்புண்ணை ஆற்றவல்லது. - சரும நோய்களுக்கு சிறந்த நிவாரணி -
மூளைக்கு இரத்தோட்டத்தை சீராக்க நினைவாற்றல் அதிகரிக்கும் - போதைப்
பொருட்களின் நஞ்சை முறிக்கும் - உடல் சூட்டை தணிக்கவல்லது - உடல்
வனப்பையும் தாது விருத்தியையும் அதிகரிக்கும் தேனில் பதனிட்ட இஞ்சி
இஞ்சியைத் தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி நிழலில் உலரவைத்து.
அதிலுள்ள நீர் காய்ந்ததும், அதை ஒரு கண்ணாடிப் போத்தலில் போட்டு, சுத்தமான
தேனை ஊற்றிக் கலக்கி மூடி வைக்கவேண்டும். இது நெடு நாள் கெட்டுப்போகாமல்
இருக்கக் கூடியது. காலையிலும் மாலையிலும் இரண்டு தொடக்கம் மூன்று துண்டுகளை
சாப்பிட சுவையாக இருப்பதோடு, சமிபாட்டு நோய்களும் வராது. தேனும் இஞ்சிச்
சாறும் இஞ்சியைத் தோல் நீக்கி நசுக்கிப் பிளிய சாறு வரும். சற்றை வடிகட்டி
எடுத்து, ஒரு கரண்டி இஞ்சிச் சாற்றிற்கு ஒரு கரண்டி தேன் என்னும் அளவில்
கலந்து காலையில் அருந்தி வர, இரத்தம் சுத்தப்பட இரத்தம் விருத்தி
அடைவதோடு, வாத, நரம்பு சம்பந்தமான நோய்கள் தலை காட்டா. தேனும் பாலும்
நீண்ட நாள் நோயுற்று இருந்தோர்க்கும், உடல் நலம் குன்றியோர்க்கும், பாலில்
தேனைக் கலந்து தினமும் கொடுத்து வர, உடல்; போசக்குப் பெறும், சோர்வு
நீங்கி, புதிய தென்பு உண்டாகும். தேனை எல்லா வயதினரும் உண்ணலாம். ஒரு
வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum