சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் Khan11

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம்

3 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் Empty இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by நண்பன் Thu 20 Jan 2011 - 9:30

அன்புள்ள வாசகர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).


“இறைமறையில்
அறிவியல் அற்புதங்கள்” என்ற தொடரின் மூலம்இ பல ஆண்டுகள் ஆய்வு செய்துஇ பல
நூறு அறிவியல் அறிஞர்களின் கடுமையான உழைப்பிற்கு பின் கண்டுபிடிக்கப்பட்ட
அறிவியல் உண்மைகளை 15 நூற்றாண்டுகளுக்கு முன்புஇ அறிவியல் வாடையைக்கூட
அறிந்திராத மக்களுக்கு முன்பு மிக எளிமையாக இறைவன் குர்ஆனில்
கூறியிருக்கும் அறிவியல் அதிசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள
முன்வந்திருக்கிறேன்.

இறைவன்
கூறியிருக்கும் விதம் அறிவியல் அறியாத மக்களும்இ அறிவியலின் உச்சானியில்
இருக்கும் மக்களும் மிக எளிமையாக புரிந்து கொள்ளும் அமைப்பில் இருப்பது
அதன் அதிசயங்களில் பேரதிசயமாகும். எந்த காலத்தில் வாழ்ந்த மக்களும் அவர்கள்
புரிந்து கொண்ட அறிவியல் உண்மைகளுக்கு எதிராக குர்ஆனின் வசனங்கள் ஒரு
போதும் இருந்ததில்லைஇ இனிமேலும் அவ்வாறு இருக்கப்போவதுமில்லை.



வெவ்வேறு
காலங்களில் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளை அந்தந்த காலத்தில்
வாழ்ந்த அறிவியல் அறிஞர்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் குர்ஆன் வசனங்கள்
அமைந்திருப்பது அதன் தனிச்சிறப்பாகும்.

ஒரு
காலத்தில் கண்டு பிடிக்கப்பட்ட அறிவியல் உண்மைகள் தவறு என நிரூபணம்
செய்யப்படும் போதுஇ குர்ஆன் சொன்ன கருத்து தவறு என்று ஆகாதுஇ மாறாக அவர்கள்
திருகுர்ஆனை விளங்கிக் கொண்ட விதம்இ குர்ஆனின் வசனத்திற்கு அவர்கள்
கொடுத்த பொருள்தான் தவறு என்றாகும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் Empty Re: இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by நண்பன் Thu 20 Jan 2011 - 9:31

தற்போது கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் உண்மையின்
படியே இறைவசனம் பொருள் தருகிறது என்று ஒவ்வொரு காலத்து மக்களையும் நம்ப
வைப்பதும்இ எல்லா காலத்து அறிவியல் அறிஞர்கள் கூறும் கருத்துடன் நூற்றுக்கு
நூறு பொருந்தி வருகிறது என்று சொல்ல வைப்பதும் அதன் அழியாத அற்புதங்களில்
உள்ளதாகும். இந்த அற்புதம் குர்ஆனுக்கு மட்டுமே சொந்தமானதாகும்.

வேத
நூற்களில் அறிவியல் ஆராய்ச்சி செய்ய தூண்டும் ஒரே வேதம் குர்ஆன் மட்டும்
தான் என ஆணித்தரமாக என்னால் சொல்லமுடியும். மற்ற வேதங்கள் அவ்வாறு
தூண்டவில்லை என்பதைவிட அறிவியல் உண்மைக்கு எதிராக நிற்கிறதுஇ அறிவியல்
பேசுபவர்களை குழப்பவாதிகள்இ மாபெரும் குற்றவாளிகள் என முத்திரை குத்தி மரண
தண்டனை விதிக்கப்பட்ட வரலாறுகளைத்தான் நம்மால் படிக்க முடிகிறது.



மற்ற
வேதங்கள் இறைவனால் அருளப்பட்ட நிலையிலிருந்து மாறிஇ பல மாற்றங்களுக்கு
உட்படுத்தப் பட்டுவிட்டதால்இ பல அறிவியல் உண்மைகளுக்கு எதிராக இயற்கையாகவே
அவைகள் அமைந்துவிட்டன. மத குருமார்களின் ஆதிக்கம் வலுவாக இருந்த போதுஇ
அறிவியல் பேசுவோர்கள் சமூக விரோதிகளாகஇ இறைக்குற்றம் செய்து விட்டவர்களாக
கருதப்பட்டுஇ சிறையிலடைத்து சித்திரவதை செய்யப்பட்டு வந்தார்கள்இ தங்களது
கருத்துகளிலிருந்து பின் வாங்கியவர்களுக்கு உயிர்பிச்சை அளிக்கப்பட்டதுஇ
தான் கண்டுபிடித்த அறிவியல் உண்மையிலிருந்து பின்வாங்கதவர்கள் மரண தண்டனை
விதிக்கப்பட்டு கொல்லப் பட்டார்கள். இந்த கொடுமை மதத்தின் பெயரால்இ
வேதத்தின் பெயரால் அரங்கேற்றம் செய்யப்பட்டது என்பதுதான் அதிலும் கொடுமையாக
இருந்தது.




இந்தக் கொடூரம்
வேதங்களின் பெயரால்இ அரங்கேற்றம் செய்யப்பட்டு கொண்டிருந்த காரணத்தால் பல
அறிவியல் விஞ்ஞானிகள்இ “இறைவன் இல்லை”இ “வேதம் பிற்போக்கான கருத்துடையது”
என்ற முடிவுக்கு வர வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானார்கள்.




ஆனால்
எந்த வேத நூலுக்கும் இல்லாத ஒரு தனி சிறப்பு இந்த குர்ஆனுக்கு
இருப்பதால்தான்இ மேலும் அறிவியல் உலகைப் படைத்த அல்லாஹ்வால் அருளப்பட்ட
வேதமாகவும் இருப்பதால்தான் இன்று அறிவியல் உலகிற்குகூட அதனால் சவால்
விட்டுஇ நிமிர்ந்து நிற்க முடிகிறது. குர்ஆனை போல இலக்கிய சுவையும்இ
கருத்தாழமும்இ அறிவியல் உண்மைகளை எளிமையாக எடுத்து வைக்கும் அதன் சிறப்பு
பொருந்திய ஒரு வசனத்தையாவது இந்த உலக மக்களால் கொண்டு வர முடியுமா? என அது
எடுத்து வைக்கும் சவாலை 15 நூற்றாண்டுகளாக யாராலும் எதிர்கொள்ள
முடியவில்லையேஇ இனிமேலும் அதனை எதிர்கொள்ள முடியாது என்பது இரண்டு
கருத்துக்கு இடமில்லாத உண்மையாகும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் Empty Re: இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by நண்பன் Thu 20 Jan 2011 - 9:32

வானவியல்இ
புவியியல் என எத்தனை இயல்கள் இருக்கின்றனவோ அத்தனை இயல்களையும் ஆராய்ச்சி
செய்து அல்லாஹ்வின் அற்புத ஆற்றலை புரிந்து கொள்ள தூண்டுகிற ஒரே வேதம்
குர்ஆன் மட்டுமே.



இந்த தொடரை
உங்கள் முன் வைப்பதில் பெருமிதம் அடைகிறேன். நான் ஒரு மருத்துவன் என்ற
முறையில் இன்றைய நவீன மருத்துவ அறிவியல்களை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு
பெற்றுள்ளேன். இந்த அறிவியல் உண்மைகளை 15 நூற்றாண்டுகளுக்கு முன்பே குர்ஆன்
மூலம் இந்த உலகிற்கு மிக எளிமையான முறையில் உணர்த்தப்பட்டு விட்டது என்பதை
விளக்குவதே எனது நோக்கம்.

நாம் வாழ்ந்து
கொண்டிருக்கும் இந்த காலம்இ ஒவ்வொரு துறை குறித்தும் தெளிவானஇ தீர்க்கமான
தகவல்களை தந்து கொண்டிருக்கும் அறிவியல் நுட்பம் நிறைந்த காலம். மதத்தின்
பெயரால் மூட நம்பிக்கைகளை வளர்ப்பது கடினம்இ எந்த தகவலையும் அறிவியல்
தகவலோடு ஒப்பீடு செய்து பார்த்து ஏற்றுக் கொள்ளும் காலம் இது. மருத்துவ
துறையில் இன்று புதிதாக கண்டு பிடிக்கப்பட்ட உண்மைகள் குர்ஆனில் எந்தந்த
வசனங்களில் இடம் பெற்றுள்ளது என்று வாசகர்களுக்கு இனம் காட்டுவதே எனது
முக்கிய நோக்கம். அதன் மூலம் குர்ஆன் இறைவேதம் என்பதை எளிதாக புரிந்து
கொள்ள மிக வசதியாக இருக்கும்.



அல்லாஹ்
எனது நல்ல நோக்கத்திற்கு வெற்றியை தருவானாக. எனக்கு இப்படி ஒரு சேவை
செய்வதற்கு வாய்பளித்த இறைவனுக்கு நன்றி கூறிஇ எனது இந்த சேவையினை
அங்கீகரித்து கொள்ள பிரார்த்தனையும் செய்து கொள்கிறேன்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் Empty Re: இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by நண்பன் Thu 20 Jan 2011 - 9:32

கருயியல்


கருயியல்
என்பது மனிதன் கருவுற்று அவன் எவ்வாறு தாயின் வயிற்றில் வளர்ச்சி அடைந்துஇ
முழு மனித வடிவம் பெற்று பிறக்கிறான் என்ற தகவலை ஆய்வு செய்யும் ஒரு
துறையாகும். ஒரு பெண் கருவுற்ற நாள் முதல்இ அவளது வயிற்றில் குழந்தை
எந்தந்த நிலையில் எவ்வாறு வளர்ச்சி அடைகிறது என்பது பற்றிய அறிவு சிறிய
அளவுகூட இல்லாத காலகட்டத்தில் குர்ஆனில் மிக தெளிவாகஇ அதே நேரத்தில் மிக
எளிமையாக கருவளர்ச்சியின் எல்லா விவரங்களையும் கூறப்பட்டிருப்பது அறிவியல்
அறிஞர்களை வியப்பில் ஆழ்த்துகிறது.



இறைபணிக்காக இணைந்து நிற்கும் எனதருமை இஸ்லாமிய சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
பதினான்கு
நூண்றாண்டுகளுக்கு முன் எல்லாம் வல்ல இறைவனால் நமது நபிக்கு
ஜிப்பரயீல்(அலை) மூலமாக அருளப்பட்ட இத்தன்னிகரற்ற மாமறையில் தெரிவித்துள்ள
வாழ்க்கை நெறிகளும்இ அறிவியல் உண்மைகளும் இறைச்சட்டங்களும் இனி எத்தனை
நூற்றாண்டுகள் ஆனாலும் காலத்துக்கேற்ப பொருந்தி நிறைந்து நிற்பவை என்பது
சத்தியம்.



இவ்வரிய திருமறை
வருடம் ஒரு முறையும்இ நமது நபி(ஸல்) அவர்களின் இறுதியாண்டு வாழ்க்கையில்
இரு முறையும் ஜிப்பரயீல்(அலை) அவர்களின் மூலம் சரிபார்க்கப்பட்டும்இ
ஆயிரமாயிரம் சத்திய சஹாபாக்களால் மனனம் செய்யப்பட்டும்இ பிரதிகள்
எடுக்கப்பட்டும் இன்றுவரை ஒரு எழுத்துக்கூட மாற்றம் செய்யப்படாமல்
இறையருளால் பாதுகாக்கப்பட்டுஇ இத்திருமறை “இறைவசனமே” என உலகிற்கு
தெளிவாக்கி கொண்டிருக்கிறது.



அறிஞர்களும்இ
விஞ்ஞானிகளும்இ பல்துறை வல்லுனர்களும் நம் திருமறையில் புதைந்துகிடக்கும்இ
காலத்துக்கேற்ப பொருந்தி நிற்கும்இ உண்மைகளை கண்டு வியந்து நிற்கின்ற
வேளையில்இ ஒரு சில அறிவிலிகள்இ 1400 ஆண்டுகள் பழமைவாய்ந்தஇ ஒரு
படிப்பறிவில்லாத நபரின் வாக்குகள் இந்த நூற்றாண்டுக்கு ஏற்றதல்ல என
வீராப்பு பேசி எதிர்த்து சேறு பூச விழைகின்றனர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் Empty Re: இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by நண்பன் Thu 20 Jan 2011 - 9:33

அன்பு சகோதரர்களே!இ இவ்வெதிர்ப்புக்கள் நமக்கு
புதிதல்ல. இஸ்லாம் என்கின்ற வாழ்க்கைநெறி இப்பூலோகத்தில் வேரூன்றி உயர்ந்து
நிற்க அது கொடுத்த விலையான தியாகங்களும்இ உயிர்களும் உலகில் தோன்றிய எந்த
ஒரு மதத்திற்கும் ஏற்பட்டதல்ல. இந்த உலகம்இ நமக்கு உரியதான அடுத்த நிரந்தர
உலகத்திற்கு நம்மை தயார்படுத்திக் கொள்ளும் ஒரு பயிற்சி களமேஇ (நபி மொழி)
என்ற சிந்தனையுடன் இச்சத்திய நெறிகளை வேரூன்ற தம் இன்னுயிரையும்இ
உடமைகளையும் நீத்த ஆயிரமாயிரம் நபித்தோழர்களையும்இ இஸ்லாமிய உடன்
பிறப்புகளையும் மனதில் நினைத்து இறைவனிடம் அவர்கள் நிரந்தர வாழ்க்கைக்கு
இறைஞ்சி நமது இறைப்பணியை இனிதே தொடர்வோம்.



இச்சிறிய
முன்னுரையோடுஇ இதழ்கள்தோறும் இறைமறையில் புதைந்து கிடக்கும் அறிவியல்
உண்மைகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். ஆலோசனைகளும் கருத்துகளும்
கேள்விகளும் வரவேற்கப்படுகின்றன.



இந்த வரிசையில்இ மனிதன் எவ்வாறு உருவாக்கப்படுகிறான் என்பதைஇ இறைமறை விளக்குவதை பார்ப்போம்.
நிச்சயமாக
(முதல்) மனிதனைக் களிமண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம். பின்னர்
(அதற்கென உள்ள) ஒரு பாதுகாப்பான இடத்தில் (கர்ப்பப்பையில்) நாமே அவனை
இந்திரியத்துளியாக ஆக்கினோம். பின்னர் அதை அலக் என்ற நிலைக்கு மாற்றினோம்.



பின்னர்
‘அலக்’ என்பதை சதைத்துண்டாக ஆக்கினோம். சதைதுண்டை எலும்பாக ஆக்கிஇ
எலும்புக்கு மாமிசத்தை அணிவித்தோம். பின்னர் வேறு படைப்பாக (முழு மனிதனாக)
உருவாக்கினோம். ஆகவே படைப்பாளர்களில் அழகானவனான அல்லாஹ் உயர்ந்தவனாக
ஆகிவிட்டான். அல் குர்ஆன் 23:12-14



சகோதரர்களே!
மனித கருவளர்ச்சியியலை இவ்வளவு துல்லியமாக வெவ்வேறு நிலைகளில் அதன்
உருமாற்றம்இ கால அளவுஇ குணாதிசயங்களை படைப்பாளனால் மட்டுமே தெளிவாக்க
இயலும்.



நான்
கருவளர்ச்சியியலில் ஆழமாக செல்லாமல் இவ்வசனத்தின் சிறப்பை மட்டும்
தெளிவாக்குகிறேன். “அந்த இந்திரியத்துளியை கர்பப்பையில் ஒரு பாதுகாப்பான
நிலையில் வைத்தோம்” அதாவதுஇ கர்பப்பையின் அமைப்புஇ அதன் தசைத்தன்மைஇ
சிறப்பு இரத்த ஓட்ட அமைப்பு அதன் திசுவுடைய குணங்கள் எல்லாம் அதற்கே
(குழந்தை வளர்ச்சிக்கே) உரித்தானவை. இச்சிறப்பு அமைப்பு இது போன்ற வேறு
எந்த உறுப்புகளுக்கும் இல்லை. செயற்கை முறையில் கருத்தரித்தல் செய்தாலும்
அதை (கருவை) பின்னர் இக் கருப்பையில்தான் வைத்து வளர்க்க முடியும். மேலும்
“பாதுகாப்பான நிலையில்” வைத்தோம் என்கிறான். அதாவது இக்கருவை கர்ப்பபையின்
“உடம்பு” என்ற பகுதி அல்லாது வேறு எந்த பகுதியில் வைத்தாலும் (கருவை) கரு
முழு வளர்ச்சி அடைவதில்லை. (யுடிழசவ) அபார்ட் ஆகிவிடும். எனவேதான் இறைவன்
“பாதுகாப்பான இடத்தில்” (உடம்பு பகுதியில்) வைத்ததாக கூறுகிறான்.



இந்த
வசனங்களை உன்னிப்பாக கவனிக்கும் போது இறைவன் கர்ப்பப்பையை பொதுவாக
குறிப்பிடும் போது “ரஹ்ம்” என்று தான் இறைமறையில் பல இடங்களில்
குறிப்பிடுகிறான்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் Empty Re: இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by நண்பன் Thu 20 Jan 2011 - 9:34

அடுத்து விந்து துளியை “அலக்” என்ற நிலைக்கு மாற்றினோம் என்று வருகிறது.


அலக்” என்ற அரபி வார்த்தைக்கு

1. அட்டை
2. தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு பொருள்
3. இரத்தக்கட்டி என்ற பொருள்கள் உண்டு.

அட்டையையும்இ “கரு”வையும் ஒப்பிட்டு பார்க்கும் போது சில ஒற்றுமைகள் உண்டு.



1. இந்த இரண்டின் ஒருமித்த தோற்றம்.
2. அட்டை மற்றவர்களின் இரத்ததைத் உணவாகக் கொள்கிறது. கருவும் தாயின் இரத்ததைத்தான் உணவாக்குகிறது.
அடுத்து
தொங்கிக்கொண்டிருக்கும் பொருள் என்பது தாயின் கர்ப்பப்பையில் ஒட்டிக்
கொண்டிருக்கம் குழந்தை கருக்கு மிக்க பொருத்தமான பொருள்தானே!.




இரத்தக்கட்டி
என்ற பொருளும் மிகச்சரியானதே. எவ்வாறு எனில் “கரு” உருவான முதல் மூன்று
வாரங்களும் இரத்தக்கட்டி போன்றுதான் இருக்கும். (இரத்த ஓட்டம் இருக்காது.
சுப்ஹானல்லாஹ்! இறைவன் அந்த “அலக்” என்ற வார்த்தையில் கருவின் இயல்புகள்இ
குணங்கள்இ வளர்ச்சிநிலை போன்றவற்றை வியக்கும் படி தெரிவித்துள்ளான்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் Empty Re: இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by நண்பன் Thu 20 Jan 2011 - 9:35

மனிதன் மண்ணால் படைக்கப்பட்டானா?


முதல்
மனிதன் எவ்வாறு படைக்கப்பட்டான் என்பது பற்றி அறிந்து கொள்வதுஇ “கரு”வில்
குழந்தையின் வளர்ச்சியின் நிலைகள் பற்றி தெளிவாக புரிந்து கொள்வதற்கு
துணையாக இருக்கும் என்பதனால் அது பற்றி குர்ஆன் என்ன சொல்கிறதுஇ அறிவியல்
உலகம் என்ன முடிவு எடுத்திருக்கிறது என்று இந்த தொடரில் பார்ப்போம்.



முதல்
மனிதன் எவ்வாறு படைக்கப்பட்டான் என்பதில் மதவாதிகளுக்கும்இ (யூதர்கள்இ
கிருஸ்தவர்கள்) “இயற்கையே கடவுள்” என நம்பிக்கை கொண்டுள்ள
நாத்திகவாதிகளுக்கும் இடையில் நீண்ட நாட்களாகவே கருத்து வேறுபாடுகள் நிலவி
வருகின்றன.



“பாத்திரங்கள்
எவ்வாறு மண்ணிலிருந்து செய்யப்படுகிறதோஇ அது போல் மண்ணிலிருந்து நேரடியாக
மனித உருவம் செய்யப்பட்டு உயிரூட்டப்பட்டது” என்று மதவாதிகள் நம்பி
வருகிறார்கள்.



இயற்கையை இறைவனாக
ஏற்றுக் கொண்டவர்கள் “அமீபா” என்ற ஒரு செல் உயிரினத்திலிருந்து வளர்ச்சி
அடைந்து இயற்கையாக பல மாற்றங்களுக்குள்ளாகி பல்வேறு உயிரினங்களாக தோன்றிஇ
அது குரங்கு நிலைக்கு வந்துஇ அதன் பிறகு நிகழ்ந்த மாற்றத்தில்
குரங்கிலிருந்து முதல் மனிதன் தோன்றினான் என்ற டார்வினின் (செத்து போன)
தத்துவத்தை(?) நம்பி வருகிறார்கள்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் Empty Re: இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by நண்பன் Thu 20 Jan 2011 - 9:37

இந்த இரண்டு கருத்துமே தவறானது என்ற முடிவுக்கு
வந்துள்ளது இன்றைய விஞ்ஞான உலகம். “அமீபா”விலிருந்து இயற்கையாகவே வளர்ச்சி
அடைந்துஇ மனிதனுடைய நிலைக்கு வந்திருப்பது உண்மை என்று நாம் நம்ப வேண்டும்
எனில் அந்த வளர்ச்சி தொடர்ந்து நடைபெற்று

மனிதனிலிருந்து வேறு ஒரு உயிரினம் உருவாகி இருக்க வேண்டும்.


மனிதன்
உருவாகி பல ஆயிரம் ஆண்டுகள் ஆகியும் அதுபோன்ற மாற்றம் நிகழ்ந்துள்ளதாக
செய்திகள் இல்லை. அவ்வாறு நிகழ்வதற்கான அறிகுறிகூட இல்லை. குரங்கு மனிதனாக
மாறியது உண்மை எனில் இப்போதுள்ள குரங்குகள் ஏன் மனிதனாக மாறுவதில்லை?

படைப்பாளன்
இல்லாமல் ஒரு பொருள் உருவாகும் என்பதை எந்த காலத்தில் வாழ்ந்த அறிவியல்
அறிஞர்களாலும் நிரூபணம் செய்ய முடியவில்லை. அவ்வாறு கற்பனை செய்துகூட
பார்க்க முடியாது என்பது தான் உண்மை.



எனவே
டார்வினின் “இயற்கையாக எல்லாப் பொருளும் வந்தன” என்ற தத்துவம் (?)
குப்பையில் தூக்கி எறியப்பட வேண்டிய ஒன்று என்ற முடிவுக்குத்தான் வர
முடிகிறது.

மண்ணிலிருந்து நேரடியாக மனித
உருவம் செய்யப்பட்டு உயிரூட்டப்பட்டது என்று மதவாதிகளால் நீண்ட காலமாக
நம்பப்பட்டு வரும் தகவலையும் அறிவியல் உலகம் ஏற்றுக் கொள்ளவில்லை. அவ்வாறு
செய்யப்பட்டிருப்பதற்கு சாத்தியங்கள் குறைவு என்பதற்கு பல காரணங்களை முன்
வைக்கிறார்கள்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் Empty Re: இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by நண்பன் Thu 20 Jan 2011 - 9:38

மண்ணின் “மூல”சத்திலிருந்து படைக்கபட்டான் மனிதன்


மண்ணையும்இ
மனிதனையும் ஆய்வு செய்த போது இரண்டின் மூலங்களும் ஒரே பண்புடையதாக
இருக்கிறதுஇ எனவே மண்ணின் மூலப் பொருள்களை எடுத்துதான் மனிதன்
படைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று இன்றைய அறிவியல் அறிஞர்கள் கூறி
வருகிறார்கள். அவர்கள் இந்த முடிவு எடுப்பதற்கு பல ஆண்டுகள் ஆய்வு செய்ய
வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.



(மண்ணிற்கும்
மனிதனுக்கும் பொதுவாக அமைந்திருக்கும் வேதியில் தனிமங்கள்: பிராணவாய்வுஇ
கால்சியம்இ பொட்டாசியம்இ உப்புஇ கார்பன்இ ஹைட்ரஜன்இ பாஸ்பரஸ்இ கந்தகம்இ
சோடியம்இ நைட்ரஜன்இ குளோரின்இ மெக்கினீசியம்இ இரும்புஇ செம்பு
போன்றவைகளாகும்.)



ஆனால்
அல்லாஹ்வின் அருள்மறை குர்ஆனையும் நபிமொழியினையும் படித்துப் பார்த்தால்
இது புது கருத்தல்லஇ 1400 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லப்பட்டுவிட்ட ஒரு தகவல்
ஆகும். அந்த உண்மையை புரிந்து கொள்வதற்குதான் இத்தனை ஆண்டுகள் ஆய்வு செய்ய
வேண்டிய அவசியம் நமக்கு ஏற்பட்டுள்ளது என்பது தெரியவரும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் Empty Re: இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by நண்பன் Thu 20 Jan 2011 - 9:39

முதல் மனிதனும்இ குர்ஆனும்


மனிதனை
மண்ணிலிருந்து படைத்தோம்இ களிமண்ணிலிருந்து படைத்தோம் என்று குர்ஆனில் பல
இடங்களில் சொல்லப்பட்டுள்ளது. இந்த வசனங்களை மட்டும் படித்து பார்ப்பவர்கள்
மண்ணிலிருந்து பாத்திரங்கள் செய்யப்படுவது போல் நேரடியாக மனித உருவம்
செய்யப்பட்டு உயிரூட்டப்பட்டான் என்று தான் புரிந்து கொள்கின்றனர்.



உண்மை
அது அல்ல. மனிதனை படைப்பதற்கு தேவைப்படும் மூலக்கூறுகள் மண்ணிலிருந்து
எடுக்கப்பட்டு அதன் மூலமாகத்தான் மனிதன் படைக்கப்பட்டான் என்ற செய்திதான்
குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை குர்ஆன் முமுவதையும் படித்துப்
பார்க்கும் ஒருவரால் எளிதாக புரிந்து கொள்ளலாம்.



மனிதன் களிமண்ணால் படைக்கப்பட்டான் என்று ஒரு வசனத்திலும்இ மண்ணால் படைக்கப்பட்டான் என்று வேறொரு வசனத்திலும் கூறப்பட்டுள்ளது.

هُوَ الَّذِي خَلَقَكُمْ مِنْ طِينٍ
அவன் (அல்லாஹ்) தான் உங்களை களிமண்ணால் படைத்தான்.
அல் குர்ஆன் 6: 2

وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَكُمْ مِنْ تُرَابٍ
இன்னும் அவன் (அல்லாஹ்) உங்களை மண்ணிலிருந்து படைத்திருப்பது அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்.
அல் குர்ஆன் 30: 20


குர்ஆனில்
ஆதி மனிதனை படைத்த செய்தியை கூறிவரும் போது “தீன்” (களிமண்) என்ற
வார்த்தையை 6 முறையும்இ “துராப்” (சாதாரண மண்) என்ற வார்த்தையை 6 முறையும்
பயன்படுத்தி அல்லாஹ் கூறியுள்ளான். இயற்கையில் களிமண்ணுடைய தன்மையும்இ
சாதாரண மண்ணுடைய தன்மையும் ஒன்றல்ல.




சில மாறுபட்ட பயன்களை தரக்கூடியது. இந்த இரண்டு வித மண்ணும் மனிதனுடைய
படைப்பில் நிச்சயமாக பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அதுவும் சரிசம
அளவில் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். காரணம் மனிதனை களிமண்ணிலிருந்து
படைத்தோம் என்ற செய்தியையும்இ சாதாரண மண்ணிலிருந்து படைத்தோம் என்ற
செய்தியையும் குர்ஆனில் சமமான முறையில் சொல்லப்பட்டுள்ளது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் Empty Re: இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by நண்பன் Thu 20 Jan 2011 - 9:39

“தீன்” என்ற வார்த்தையும்இ “துராப்”
என்ற வார்த்தையும் ஒரே பொருளில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று
வாதிப்பது தவறான போக்காகும். காரணம் அல்லாஹ் வெறுமனே ஒரு வார்த்தையைத்
தேர்ந்தெடுத்து செய்திகளை சொல்வதில்லை. அவன் பல்வேறு வார்த்தைகளைப்
பயன்படுத்தி ஒரே செய்தியை சொன்னாலும்இ அந்த ஒவ்வொரு வார்த்தையிலும் ஒவ்வொரு
அர்த்தம் நிச்சயமாக மறைந்திருக்கத்தான் செய்யும்.



மனிதனை
களிமண்ணில்தான் படைத்தான் என்றால் “தீன்” என்ற வார்த்தை மட்டும்
போதுமானது. அல்லது சாதாரண மண்ணில் மனிதன் படைக்கப்பட்டிருந்தால் “துராப்”
என்ற வார்த்தை மட்டும் போதுமானது. அவ்வாறிருந்தும் இரண்டு வார்த்தைகளையும்
இந்த தொடரில் பயன்படுத்தப்பட்டிருப்பது மனிதன் இந்த இருவகை மண்ணிலிருந்தும்
தான் படைக்கபட்டுள்ளான் என்ற தகவலைச் சொல்வதற்காகத்தான் அல்லாஹ் அவ்வாறு
பயன்படுத்தி இருக்கலாம் என்று நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.



அதாவது
முதலில் களிமண்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை பின்வரும் 32வது
அத்தியாத்தில் 7-வது வசனத்தில் இடம் பெற்றிருக்கும் வசனத்தின் மூலம்
அறிந்து கொள்ளலாம். அந்த வசனத்தில் “மனிதனின் படைப்பை களிமண்ணிலிருந்துதான்
ஆரம்பித்தான்” என்று இடம் பெற்றுள்ளது. அதன் பிறகு அந்த களிமண்ணில் சாதாரண
மண்ணையும் சேர்த்து கலவையாக ஆக்கப்பட்டு அதிலிருந்து மூலக்கூறுகளை எடுத்து
மனிதன் படைக்கப்பட்டுள்ளான்.



(களிமண்
கொண்டு மட்டும் எந்த பொருளையும் உருவாக்க முடியாதுஇ களிமண் கொண்டு மட்டும்
உருவாக்கப்படும் பொருள் காய்ந்துவிடும் போது விரிசல் ஏற்பட்டுஇ
உறுதிவாய்ந்ததாக இருப்பதில்லைஇ பாத்திரங்கள்இ செங்கள் போன்ற பொருட்கள்
செய்வதற்கு களிமண்ணுடன் மண்ணையும் சேர்க்கும் போதுதான் உறுதி கிடைக்கும்இ
அதனால் தான் களிமண்ணில் பாத்திரம்இ செங்கள் செய்பவர்கள்இ வீடு கட்டுவர்கள்
மண்ணையும் சேர்த்து கொள்வதைப் பார்க்கிறோம். அதுபோல் சாதாரண மண் கொண்டு
எந்தப் பொருளையும் தயாரிக்க முடியாது.




காரணம் ஒன்றோடு ஒன்று சேரும் பிசு பிசுப்பு தன்மை அதில் இருப்பதில்லை. ஒரு
பொருளை உற்பத்தி செய்வதற்கு இரு வகை மண்ணும் அவசியப்படுகிறது என்பதை நாம்
நடைமுறையில் அறிந்து வருகிறோம்.)



இந்த
இரு வகை மண்ணின் கலவைதான் மனிதனின் படைப்பிற்கு அடிப்படை. இந்த இருவகை
மண்ணிலிருந்து நேரடியாக மனித உருவம் செய்துஇ அந்த உருவத்தில்
உயிரூட்டப்பட்டு மனிதன் படைக்கப்படவில்லை. மாறாக இந்த இரு வகை மண்ணின்
கலவையினை பல வேதியில் மாற்றங்களுக்கு உட்படுத்திஇ அந்த கலவையிலிருந்து
மனிதனைப் படைப்பதற்கு தேவையான “மூல” த்தை எடுத்து அந்த மூலத்திலிருந்துதான்
முதல் மனிதன் படைக்கப்பட்டான். இதனை நாம் கற்பனையாக சொல்லவில்லை.




மனிதன் படைக்கப்பட்ட செய்தியினை கூறும் பின்வரும் இறைவசனங்கள்இ நாம்
எடுத்து வைக்கும் வாதத்தை உறுதி படுத்துகிறது. மனிதன் எவ்வாறு
படைக்கப்பட்டான் என்ற தகவலைத் தரும் வசனங்களை நிதானமாக படித்துப்
பார்க்கும் இந்த கருத்தினை எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது.

الَّذِيْ أَحْسَنَ كُلَّ شَيْءٍ خَلَقَهُ وَبَدَأَ خَلْقَ الْأِنْسَانِ مِنْ طِينٍ
(அவன்)
எத்தகையவனென்றால் அவன் படைத்த ஒவ்வொரு பொருளையும் (அதன் வடிவமைப்பையும்)
மிக்க அழகாக்கி வைத்தான். மேலும் மனிதனின் படைப்பை களி மண்ணிலிருந்து
ஆரம்பித்தான். 32: 7



இந்த வசனத்தில் “மனிதனின் படைப்பை களி மண்ணிலிருந்து ஆரம்பித்தோம்” என்று கூறப்பட்டுள்ளது. இதுதான் மனித படைப்பின் ஆரம்ப நிலை.

களி
மண்ணிலிருந்து நேரடியாக மனிதம் உருவம் செய்து உயிரூட்டப்பட வில்லை என்பது
இங்கு கவனிக்கத்தக்கது. மனிதனின் படைப்பை களி மண்ணிருந்து ஆரம்பித்துஇ
எந்தந்த நிலையை அடைந்துஇ அது எவ்வாறு முழுமை அடைந்தது என்று அடுத்தடுத்த
வசனங்களின் மூலம் அல்லாஹ் கூறி வருகிறான்.


إِنَّا خَلَقْنَاهُمْ مِنْ طِينٍ لازِبٍ
நிச்சயமாக நாம் அவர்களை பிசு பிசுப்பான களிமண்ணிலிருந்து படைத்திருக்கின்றோம். அல்குர்ஆன்: 37:11


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் Empty Re: இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by நண்பன் Thu 20 Jan 2011 - 9:40

இது மனித படைப்பின் இரண்டாவது நிலை



பிசு
பிசுப்பான களிமண்ணிலிருந்து மனிதன் படைக்கப்பட்டதாக இந்த வசனத்தில்
அல்லாஹ் கூறுகிறான். களிமண் பிசுபிசுப்பான நிலைக்கு எப்போது மாறும்?
களிமண்ணுடன் தண்ணீர் சேர்க்கப்படும் போது அது பிசுபிசுப்பான நிலைக்கு மாறி
விடுகிறது. இந்த வசனத்தின் மூலம் மனிதனின் படைப்பில் தண்ணீரும்
சேர்க்கப்பட்டுள்ளது என்ற செய்தியையும் சேர்த்து புரிந்து கொள்ள முடிகிறது.


(மனிதன் உடலமைப்பில் 75 சதவீதம் தண்ணீர் இடம் பெற்றிருப்பது
இங்கே கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்.) களிமண்ணில் தண்ணீர் சேர்த்து பிசு
பிசுப்பான நிலைக்கு கொண்டு வரப்பட்டு சில காலம் அதே நிலையில் இருந்தது.
(எவ்வளவு காலம் என்பது அல்லாஹ்விற்கு மட்டும் தெரிந்த விஷயம்.)


وَلَقَدْ خَلَقْنَا الْأِنْسَانَ مِنْ صَلْصَالٍ مِنْ حَمَأٍ مَسْنُونٍ
மாற்றமடைந்து
துர்வாடை ஏற்படும் கறுப்பு மண்ணிலிருந்து மாறியஇ தட்டினால் ஓசை வரும்
களிமண்ணிலிருந்து நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம். அல் குர்ஆன்: 15: 26

இந்த வசனத்தில் மனித படைப்பின்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் Empty Re: இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by நண்பன் Thu 20 Jan 2011 - 9:41

மூன்றாவது மற்றும் நான்வாது நிலையினை அல்லாஹ் கூறி இருக்கிறான்.


“ஹமஉ”
என்றால் கருப்பு மண் என்பது பொருளாகும். “மஸ்னூன்” என்றால் மாற்றமடைந்து
துர்வாடை ஏற்படும் மண் என்பது பொருளாகும். மண்இ களிமண்இ தண்ணீர் ஆகிய
மூன்றும் சேர்ந்த கலவையை அதே நிலையில் சில காலம் விட்டு வைக்கப்பட்டு
விட்டது நீண்ட நாட்கள் (எவ்வளவு நாள் என்பதை அல்லாஹ் அறிவான்.)


இருந்த
அந்த கலவை சாக்கடை மண்ணைப்போல கருப்பு நிறமாக மாறிஇ துர்வாடை ஏற்படும்
நிலைக்கு மாறிவிட்டது. (சாக்கடையில் நீண்ட நாட்கள் கிடக்கும் மண் கருப்பு
நிறமாக மாறிஇ துர் நாற்றம் வீச ஆரம்பிக்கும் என்பதை நாம் அறிவோம்.) இது
மனிதப்படைப்பின் மூன்றாவது நிலை.

خَلَقَ الْأِنْسَانَ مِنْ صَلْصَالٍ كَالْفَخَّارِ



சுட்டெடுத்த மண்பாண்டத்தைப் போல (தட்டினால்) ஓசை வரும் களிமண்ணால் அவன் (முதல்) மனிதரைப் படைத்தான். அல் குர்ஆன்: 55:1


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் Empty Re: இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by நண்பன் Thu 20 Jan 2011 - 9:44

இது மனிதப்படைப்பின் நான்காவது நிலை


“ஸல்ஸால்”
என்பது மண் கலந்து சுட்டெடுக்கப்பட்ட காய்ந்த களி மண்ணாகும். அதனை
தட்டினால் “ஸல்இ ஸல் என ஓசை தரும் என்பதால் அதற்கு “ஸல்ஸால்” எனப்
பெயரிடப்பட்டுள்ளது.




இந்த
“ஸல்ஸால்” என்ற வார்த்தையின் மூலம்தான் முதல் மனிதனின் படைப்பில்
களிமண்ணுடன் சாதாரன மண்ணும் சேர்க்கப்பட்டுள்ளது என்ற உண்மையை நாம் அறிந்து
கொள்ள முடிகிறது. நான் ஆரம்பித்தில் குறிப்பிட்ட தகவலை இது ஊர்ஜிதம்
செய்கிறது.


وَلَقَدْ خَلَقْنَا الْأِنْسَانَ مِنْ سُلالَةٍ مِنْ طِينٍ
நிச்சயமாக (முதல்) மனிதனை களி மண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம். அல் குர்ஆன்: 23:12
இது
மனிதப்படைப்பின் ஐந்தாவது நிலையாகும். முதல் மனிதன் களிமண்ணுடைய
மூலச்சத்திலிருந்துதான் படைக்கப்பட்டிருக்க முடியும் என்று இன்று கண்டு
பிடிக்கப்பட்ட அறிவியல் உண்மையை 1429 மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அறிவியில்
அறிவு அறவே இல்லாத காலத்து மக்களுக்கு முதல் மனித படைப்பு எவ்வாறு
நிகழ்ந்தது என்பதை மிக எளிமையாக இந்த குர்ஆன் எடுத்து சொல்லியிருக்கிறது.
அது குர்ஆனின் அதிசயங்களில் ஒன்றாகும்.


அல்லாஹ் ஒரு பொருளைப் படைப்பதற்கு எந்த காரணங்களும் அவசியமில்லை. “குன்” என்று சொன்னால் அந்தப் பொருள் உடனடியாக உண்டாகிவிடும்.

إِنَّمَا أَمْرُهُ إِذَا أَرَادَ شَيْئاً أَنْ يَقُولَ لَهُ كُنْ فَيَكُونُ
அவன் யாதொரு பொருளை(ப் படைக்க) நாடினால்இ அதற்கு அவன் கட்டளையிடுவதெல்லாம் “ஆகுக!” எனக் கூறுவதுதான் உடனே ஆகிவிடும்.
அல் குர்ஆன்: 36: 82


எனினும்
உலகில் ஒரு நியதியை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். வானத்தையும் பூமியையும்
ஏழு நாட்களில் படைத்ததிருப்பதும் அந்த நியதிப்படிதான். (அல்லாஹ்விடத்தில்
ஒரு நாள் என்பது நாம் கணக்கிடும் ஆயிரம் ஆண்டுகளுக்கு சமமானதாகும்.) எந்த
பொருளையும் திடீரென படைத்து விடுவதில்லை. முதல் மனிதனை படைப்பதற்கு எந்த
பொருளின் துணையும்இ எந்த முன்மாதிரியும் இல்லாமால் இறைவனால் படைக்க
முடியும் என்றாலும் மண்இ களிமண்இ தண்ணீர் கலவையினை பல வேதியில்
மாற்றங்களுக்கு உட்படுத்தி அதிலிருந்து மனிதனைப் படைப்பதற்கு தேவையான
மூலப்பொருட்களை உருவாக்கிஇ அந்த மூலத்திலிருந்து முதல் மனிதனைப்
படைத்துள்ளதும் இந்த நியதிப்படிதான்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் Empty Re: இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by நண்பன் Thu 20 Jan 2011 - 9:44

மனிதர்கள் எவ்வாறு படைக்கப்படுகின்றனர்?


கடந்த
தொடரில் மண் கலவையிலிருந்து எடுக்கப்பட்ட மூலத்தில் முதல் மனிதர்
படைக்கப்பட்டார் என்ற உண்மையைப் புரிந்து கொண்டோம். இந்த தொடரில் அவரது
சந்ததிகளான மனிதர்கள் எவ்வாறு படைக்கப்படுகின்றனர் என்ற தகவல் பற்றி
குர்ஆன் என்ன கூறுகிறது என்று அறிந்து கொள்வோம்.



முதல்
மனிதர் படைக்கப்பட்டது போல அவரது சந்ததிகளையும் மண்ணின் மூலத்திலிருந்து
நேரடியாக படைக்கப்பட வில்லை என்பது தெளிவான உண்மை. தொடர்ந்து
உற்பத்தியாகும் மரபணுக்கள் வழியாக இனப்பெருக்கம் நடை பெற்றிருக்க வேண்டும்.
ஏனெனில் முதல் மனிதரைப் போலவே அவரது சந்ததிகளும் மண்ணின் மூலத்திலிருந்து
படைக்கப்படுகின்றனர் என்றால் ஒவ்வொரு மனிதனின் படைப்பிற்கும் ஒரு நீண்ட கால
அவகாசம் தேவைப்படும். அது நடை முறைக்கு சாத்தியமற்றது.



எனவே
மனிதர்களின் மரபணுக்கள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்பட்டுஇ மனிதர்கள்
படைக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த மரப்பணுக்களை மனிதர்களிலிருந்தே
உற்பத்தி செய்துஇ மனித சமுதாயத்தை படைத்திருக்க முடியும் என்பது
நடைமுறையில் மட்டுமல்லாமல் அறிவியில் உலகிலும் ஒத்துக் கொள்ளப்படும்
விஷயமாகும். அந்த மரப்பணுக்களால் மனித சந்ததிகள் எவ்வாறு
படைக்கப்படுகின்றனர் என்பதுதான் இந்த தொடரின் மையப் பொருளாகும்.



يَا أَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُمْ مِنْ ذَكَرٍ وَأُنْثَى
மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண் மற்றும் ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம்.
அல் குர்ஆன்: 49:13

இந்த
வசனத்தில் மனிதர்கள் அனைவரும் ஒரு ஆண்இ பெண்ணிலிருந்துதான் படைக்கப்
பட்டனர் என்ற செய்தியை அறிந்து கொள்கிறோம். அதாவது மனிதர்கள் தொடர்ச்சியாக
படைக்கப்படுவதற்கு தேவையான மரப்பணுக்களை ஆண் மற்றும் பெண்ணிடம் உற்பத்தி
செய்து அதன் மூலம் மனித சமுதாயம் படைக்கப்படுகிறது என்ற உண்மையை புரிந்து
கொள்ளலாம்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் Empty Re: இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by நண்பன் Thu 20 Jan 2011 - 9:46

விந்துவில் இறைவன் செய்யும் விந்தைகள்


களிமண்ணின்
மூலச்சத்திலிருந்து முதல் மனிதரை படைத்த அல்லாஹ் அந்த முதல் மனிதரின்
சந்ததிகளை அவரது விந்துவின் மூலத்திலிருந்து படைத்தான்.
ثُمَّ جَعَلَ نَسْلَهُ مِنْ سُلالَةٍ مِنْ مَاءٍ مَهِينٍ
பின்னர் வடிகட்டி எடுக்கப்பட்ட அற்ப நீரில் (இந்திரியத்தில்) இருந்து அவனுடைய சந்ததியை உண்டாக்கினான். அல் குர்ஆன்: 32:8




மனித
சந்ததிகளை விந்துவிலிருந்து படைத்த செய்தியை அல்லாஹ் சுமார் 15 இடங்களில்
கூறுகிறான். 12 இடங்களில் நுத்ஃபா என்ற வார்த்தையையும்இ 3 இடங்களில் மாஉ
என்ற வார்த்தையையும் பயன்படுத்தி கூறியுள்ளான்.
நுத்ஃபா என்பதற்கு
சுத்தமான நீர் என்பது பொருளாகும். ஆணுடைய விந்துஇ எந்த வித மாசுகளும்
சென்றடைந்திராத பாதுகாப்பான இடத்திலிருந்து வெளியேறுவதால் அதற்கு நுத்ஃபா
என்ற பெயர் பொருத்தமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆணுறுப்பிலிருந்து
குதித்து வெளியாகும் வழுவழுப்பான திரவத்திற்கு விந்து எனப்படும்.


இந்த
விந்துவில் இறைவன் செய்யும் விந்தைகள் இறைவனுக்கு மட்டுமே தெரிந்த
வித்தையாகும். அற்பமான ஒரு துளி விந்துவில் பல அதிசயங்கள்
நிகழ்த்தியிருப்பது அவனுடைய வியத்தகு அத்தாட்சிகளில் ஒன்றாகும்.

பல
நூறு அறிவியல் அறிஞர்களின் கூட்டு முயற்சியால் முதன்முதலாக இயந்திர மனிதன்
செய்யப்பட்ட போதுஇ உலகமே வியப்பில் ஆழ்ந்து அது பற்றிய செய்திகள்இ
ஊடகங்களில் பல மாதங்களாக தலைப்பு செய்திகளாக வெளி வந்து கொண்டிருந்தன.


இயந்திர
மனிதன் ஆற்றும் செயல்பாடுகள் குறித்து அதிசயங்களாக நாம் பேசிக்
கொண்டிருந்தோம். அந்த இயந்திர மனிதனை உற்பத்தி செய்வதற்கு பல்வேறு
தனிமங்களும்இ கனிமப் பொருட்களும்இ முன் மாதிரியும் தேவைப்பட்டன என்பது
கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமாகும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் Empty Re: இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by நண்பன் Thu 20 Jan 2011 - 9:46

ஆனால் அந்த இயந்திர மனிதனையும் உருவாக்கும் ஆற்றல்கள் உள்ள நிஜ மனிதனை எந்த முன் மாதிரியும் இல்லாமல் ஒரு துளி இந்திரியத்தில் படைத்திருப்பது பேசித்தீராத அதிசயமாக உள்ளது.

விந்துவிலிருந்துதான் மனிதர்கள் படைக்கப்படுகிறார்கள் என்ற செய்தியையும், அந்த விந்து எங்கிருந்து எவ்வாறு உற்பத்தியாகிறது, அதன் தன்மைகள் எவ்வாறு உள்ளது என்றும் 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு குர்ஆனில் மிகத் தெளிவாக கூறப்பட்டிருப்பது அதிலும் பேரதிசயமாக உள்ளது. காரணம் மனிதர்கள் எவ்வாறு படைக்கப்படுகின்றனர் அதற்கான மூல விதை என்ன? என்பது பற்றிய அறிவு 18 ம் நூற்றாண்டு வரை அறிவியல் உலகில் யாரும் அறிந்திருக்கவில்லை. 18ம் நூற்றாண்டின் இறுதியிதில்தான் இந்த உண்மை அறிவியல் அறிஞர்களால் புரிந்து கொள்ளப்பட்டு, அறிவியல் உலகிற்கு விளக்கப்பட்டுள்ளது.


குழந்தை உருவாகுவதற்கு ஆண் மற்றும் பெண்ணின் விந்து அவசியமானதாகும் என்ற அறிவையும் அதன் வெவ்வேறு நிலைகள் பற்றிய விளக்கத்தையும் 1940 ஆண்டுவாக்கில்தான் அந்த அறிவியல் அறிஞர்களால் பெற்றுக் கொள்ள முடிந்தது. ஆனால் குர்ஆன் இந்த தகவலை 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டது. 49 வது அத்தியாத்தில் 13 வது வசனத்தில் மனிதர்களே! உங்களை ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம் என்று கூறும் இறைவேதமான குர்ஆன், 76 வது அத்தியாயம் 2வது வசனத்தில் (ஆண், பெண் ஆகியோரின்) கலப்பான இந்திரியத்துளியிலிருந்து நிச்சயமாக மனிதனை நாம் படைத்தோம் என்றும் கூறுகிறது. இதன் மூலம் குழந்தையின் உற்பத்திக்கு ஆண், பெண் ஆகிய இருவருக்கும் பெரும் பங்கு உள்ளது என்ற உண்மையை தெளிவு படுத்தியுள்ளது.


இந்த உண்மையை ஒரு சாதாரண மனிதனால் நிச்சயமாக சொல்லியிருக்க முடியாது. அதிலும் குறிப்பாக அறிவியல் வாடையே இல்லாத 1400 ஆண்டுகளுக்கு முன்பு இது போன்ற செய்தியை ஒரு மனிதர் சொல்லியிருக்க முடியும் என்பதை கற்பனை செய்துகூட பார்க்கமுடியாது. அனைத்தையும் அறிந்த அல்லாஹ் ஒருவனால்தான் சொல்லியிருக்க முடியும் என்பதை யாரும் மறுக்க இயலாது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் Empty Re: இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by நண்பன் Thu 20 Jan 2011 - 9:47

விந்து எவ்வாறு வெளிப்படுகிறது

فَلْيَنْظُرِ الْأِنْسَانُ مِمَّ خُلِقَ – خُلِقَ مِنْ مَاءٍ دَافِقٍ – يَخْرُجُ مِنْ بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ
ஆகவே மனிதன்இ (தான்) எதிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறான் என்பதை அவன் சிந்தித்து பார்க்க வேண்டாமா?
குதித்து
வெளியாகும் (ஒரு துளி) நீரிலிருந்து அவன் படைக்கப்பட்டான். அது (ஆணின்)
முதுகந் தண்டிற்கும் கடைசி நெஞ்செலும்புகளுக்கும் மத்தியிலிருந்து
வெளிப்படுகிறது. (அல் குர்ஆன்: 86:5-7)


இந்த
வசனத்தின் மூலம் மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்ற தகவலை
சிந்தனையோடு பார்க்க வேண்டும் என்று மனிதனை இறைவன் தூண்டுகிறான். அவ்வாறு
சிந்திக்கும் போது அற்பமான ஒரு துளி விந்துவில் அல்லாஹ் நிகழ்த்திய அற்புத
ஆற்றல்களை புரிந்து கொண்டுஇ அந்த அல்லாஹ்வை ஏற்றுஇ அவனை அஞ்சி வாழ்வதற்கு
அது பெரிதும் துணை புரியும்.



மனிதன்
மமதை கொண்டுஇ படைத்தவனை நம்ப மறுத்து கண்டதே காட்சிஇ கொண்டதே கோலம் என
தான்தோன்றித்தனமாக நடந்துஇ அநியாயமும்இ அக்கிரமங்களும் செய்து கொண்டிருந்த
போதுதான் இறைத்தூதர்களை அனுப்பி வைத்துஇ மனிதர்கள் திருந்தி வாழ்வதற்கு
தேவையான இது போன்ற தகவல்களை அவர்களுக்கு நினைவு படுத்திஇ அந்த மனிதர்கள்
திருந்தி வாழ்வதற்கு ஒரு சிறந்த வழியினை ஏற்படுத்தி தந்துள்ளான். இது போன்ற
தகவலை ஒருவன் சிந்திக்கும் போதுஇ தான் அற்பமானவன்இ தன்னை இந்த அழகிய
தோற்றத்தில் வடிவமைத்து படைத்தவன் மிக சக்தி உள்ளவன் என்ற உண்மையை
புரிந்துகொண்டுஇ தன்னைப்படைத்த அல்லாஹ்வை அஞ்சி வாழ்வான். அதுவே
அல்லாஹ்வின் விருப்பமாகும்.



குதித்து
வெளியாகும் நீர் என இறைவன் கூறியிருப்பது ஆணும் பெண்ணும் உறவு கொள்ளும்
போது ஆணிடமிருந்து வெளியாகும் திரவப் பொருளான விந்துவைத்தான் இங்கு
குறிப்பிடுகிறான். சிலர் ஆண்இ பெண் இருவரிடமிருந்து வெளியாகும் நீர் என்று
பொருள் கொள்கிறார்கள். அது தவறாகும். காரணம் பெண்ணினிடம் உற்பத்தியாகும்
விந்துஇ குதித்து வெளியாகும் தன்மையுள்ளதல்லஇ அவளிடம் உற்பத்தியாகும்
விந்து வெளிக்கு வருவதில்லை. குதித்துஇ உடலை விட்டும் வெளியாகும் தன்மை
ஆணுடைய விந்துவிற்கு மட்டும் உள்ள பண்பாகும்.


எனவே இந்த வசனத்தில் குதித்து வெளியாகும் நீர் என்பதற்கு ஆணின் விந்து என்றுதான் பொருள் கொள்ள வேண்டும்.
அதிசயப்பிறவியான
ஆறறிவு மனிதனைப் படைப்பதற்கு காரணமாக அமைந்துள்ள விந்தை உற்பத்தி செய்துஇ
அதனை முறையாக வெளிப்படுத்திஇ உரிய இடத்தில் (கர்பப் பையில்) சேர்த்து
வைப்பதில் இறைவன் காட்டும் அதிசயங்கள் தான் எத்தனை? எத்தனை?

சிறுநீர்
வெளியாகும் வழியும்இ விந்து வெளியாகும் வழியும் ஒன்றாக இருந்தாலும் அந்த
இரண்டும் கலந்து விடாமல் இருக்க அவன் ஏற்படுத்தியுள்ள தடைகள்தான்
எத்தகையது? சிறுநீர் வெளியாகும் போது விந்து வெளிப்படாத படியும்இ விந்து
வெளியாகும் போது சிறுநீர் வெளிப்படாத படியும் ஏற்படுத்தப்பட்டுள்ள தடையின்
இரகசியத்தை அதனை படைத்த இறைவனே நன்கு அறிந்தவன்.



காரணம்
மிக நுணுக்கமாக திட்டமிடப்பட்டுஇ அமைக்கப்படும் பாதுகாப்பான குடிநீர்
குழாய்இ சாக்கடையின் ஓரத்தில் இருக்கம் போது அந்த குழாயின் வழியாக
கடத்தப்படும் குடிநீரில் சாக்கடை நீர் கலப்பதை மனித கச்திகளால் தடுக்க
முடிவதில்லை. ஆனால் ஒரே உடலில் வெவ்வேறு இடங்களில் உற்பத்தியாகும்
திரவங்கள்இ ஒரே வழியாக வெளிப்பட்டாலும் எந்த காலத்திலும் அந்த இரண்டு
திரவங்களும் ஒன்றோடு ஒன்று கலந்து விடமுடியாத படி பாதுகாப்பு
செய்யப்பட்டுள்ளது இறை சக்தியல்லவா?.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் Empty Re: இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by நண்பன் Thu 20 Jan 2011 - 9:49

குதித்து
வெளியாகும் நீர் என்று கூறப்பட்டிருப்பது சிறுநீரிலிருந்து விந்தை
வித்தியாசப்படுத்தி காட்டுவதற்காகவே தெரிவு செய்து போடப்பட்ட வார்த்தை.
சிறுநீருக்கு குதித்து வெளியாகும் தன்மையில்லை. விந்து மட்டுமே குதித்து
வெளியாகும் தன்மையில் உள்ளதாகும். அந்த தன்மை ஏன் விந்திற்கு மட்டும்
உள்ளது என்று சிந்தித்தால் அதிலும் அல்லாஹ் செய்துள்ள அறிவியலின் அற்புத
ஆற்றலை புரிந்து கொள்ள முடிகிறது.



பெண்ணிடம்
உள்ள கர்பப்பை மிக ஆழத்தில் இருப்பதால் அதனை நோக்கி செலுத்தப்படும்
விந்துஇ சாதாரணமாக வேகமின்றி ஆண் உறுப்பிலிருந்து வெளியாகுமானால் அது
கர்ப்பப் பையை சென்றடைவது சாத்தியக்கூறு குறைவு. குதித்த நிலையில்
அழுத்தத்துடனும் வீரியத்துடனும் விரைவாக வெளியாகும் போதுதான் அந்த விந்து
கர்ப்பப் பையில் சரியான இடத்தை நோக்கி சென்றடைவதற்கு அதிக வாய்ப்புகள்
உள்ளது.



மேலும்இ இந்த விந்தில்
பல கோடி உயிரணுக்கள் உள்ளன. அவைகள் சுயமாக நகர்ந்து முன்னேறும் தன்மை
உள்ளவை. எனினும் நகர்ந்து செல்லும் அதன் வேகம் மிகக் குறைவானதே. மேலும்
சுமார் 15 நிமிடம் மட்டுமே உயிர் வாழும் தன்மையுடைது. மேலும்
உற்பத்தியாகும் உயிரணுக்களில் 20-30 வீத உயிரணுக்கள் மட்டும்தான் முழு
வளர்ச்சியடைந்ததாகவும்இ நகர்ந்து செல்லும் வீரியமும் உடையதாகும்.


இந்த
குறுகிய கால அவகாசத்திற்குள் கர்பப்பை குழாயை (குயடடழியைn வுரடிந)
சென்றடைய வில்லையானால் அந்த உயிரணுக்கள் செத்துப் போய்விடும். விந்து
குதித்து வெளியாகுவதால் அது சுமந்து வரும் பெரிய அமானிதமான மனித
உயிரணுக்களை விரைவாக உள்ளே தள்ளிஇ அந்த உயிரணுக்கள் செல்ல வேண்டிய இலக்கான
கர்ப்பப்பை குழாயை (குயடடழியைn வுரடிந) விரைவில் சென்றடைவதற்கு பெரிதும்
உறுதுணையாக இருக்கிறது. வீரியமின்றிஇ சாதாரணமாக விந்து வெளியாகுமேயானால்
உயிரணுக்கள் சேர வேண்டிய இலக்கை சென்றடையும் வாய்ப்புகள் குறைந்துஇ
செல்லும் வழியிலேயே செத்து மடிந்து விடும்.



மேலும்
ஓரு மனித உடலின் சராசரி வெட்ப நிலையில் 37 டிகிரியாகும். ஆணுறுப்பிற்கு
கீழே இருக்கும் இனவிருத்தி உயிரணுக்களை உற்பத்தி செய்யும் பணியில்
ஈடுபட்டிருக்கும் விதையின் வெட்ப நிலைஇ உடலின் வெட்ப நிலையை விட சுமார் 3-4
டிகிரி குறைவாகவே இருக்கும். காரணம் விந்தில் இருக்கும் பல கோடி
உயிரணுக்கள் (இது குறித்து பின்னர் விவரிக்கப்படும்.) 34 டிகிரி வெட்ப
நிலையில் தான் உயிர் வாழ முடியும். வெட்ப நிலை அந்த அளவைவிட சற்று
அதிகரிக்கும் போது அந்த உயிரணுக்களால் உயிர் வாழ முடியாமல் செத்துவிடும்.




விந்து
சிறுநீரைப் போல சாதாரணமாக வெளிப்படுமேயானால் ஆணுறுப்பில் உள்ள கூடுதல்
வெப்ப நிலையாலும்இ சிறுநீரின் வேதிய பொருட்களாலும் அந்த விந்தில் உள்ள
உயிரணுக்கள் வரும் வழியிலேயே செத்துபோய்விடும். அதனை கருத்தில் கொண்டுதான்
பல கோடி உயிரணுக்களை சுமந்து வரும் விந்தை குதித்து விரைவாக வீரியத்துடன்
தனித்து வெளியேறும் தன்மையில் படைத்துள்ளான் இறைவன்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் Empty Re: இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by நண்பன் Thu 20 Jan 2011 - 9:49

ஆகவே மனிதன் (தான்) எதிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறான் என்பதை அவன் சிந்தித்து பார்க்க வேண்டாமா?


குதித்து வெளியாகும் (ஒரு துளி) நீரிலிருந்து அவன் படைக்கப்பட்டான்.



அது (ஆணின்) முதுகந் தண்டிற்கும் கடைசி நெஞ்செலும்புகளுக்கும் மத்தியிலிருந்து வெளிப்படுகிறது. (அல்குர்ஆன் 86: 5இ6இ7)

கடந்த
இதழில் 86 அத்தியாத்தின் 6வது வசனத்தில் “குதித்து வெளியாகும்
நீரிலிருந்து மனிதன் படைக்கப்பட்டான்” என்று இறைவன் கூறியதன் பொருளை
விளக்கமாக விந்து எவ்வாறு வெளிப்படுகிறது என்றும்இ அதன் பயன்பாடுகள் என்ன
என்றும் பார்த்தோம்.



மனிதன்
எதிலிருந்து படைக்கப்பட்டான் என்ற இரகசியத்தை இந்த வசனத்தில் குறிப்பிடும்
இறைவன் அதனை சாதாரணமான செய்தியாக சொல்லாமல்இ அந்த செய்தியை சொல்வதற்கு
முன்பே மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்று சிந்தித்துப்
பார்க்கட்டும் என்று கூறிஇ நமது சிந்தனையைத் தூண்டிவிட்டுஇ
அதற்குப்பிறகுதான் “குதித்து வரும் நீரிலிருந்து மனிதன் படைக்கப்பட்டான்”
என்ற தகவலைக் கூறுகிறான்.



“குதித்து
வரும் நீரிலிருந்து” எவ்வாறு மனிதன் படைக்கப்பட்டிருக்க முடியும்இ அதன்
தன்மைகள் யாது? என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்பது இறைவனின்
விருப்பம் போலும். காரணம் அவ்வாறு ஒரு மனிதன் சிந்தித்து தான் எதிலிருந்து
படைக்கப் பட்டிருக்கிறோம் என்பதின் உண்மை நிலையை தெரிந்து கொண்டால்இ
தன்னைப்படைத்த இறைவன் ஒருவன் உண்டு என்பதை நம்பிஇ அந்த இறைவனின் அற்புத
ஆற்றலை அறிந்து கொள்வான் அப்போது தன்னைப்படைத்த ஆற்றல் மிக்க அல்லாஹ்வை
அஞ்சி நடக்க வேண்டும் என்ற உணர்வு அவனில் ஏற்படும். எனவே “குதித்து வரும்
நீர்” எத்தகைய தன்மை வாய்ந்தது என்று இன்னும் சற்று ஆழமாக சிந்தித்துப்
பார்ப்போம்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் Empty Re: இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by நண்பன் Thu 20 Jan 2011 - 9:50

விந்துவின் சேர்மங்கள்:



إِنَّا خَلَقْنَا الْأِنْسَانَ مِنْ نُطْفَةٍ أَمْشَاجٍ نَبْتَلِيهِ فَجَعَلْنَاهُ سَمِيعاً بَصِيراً
நிச்சயமாக
நாம் மனிதனை கலப்பான ஓர் இந்திரியத்துளியிலிருந்து நாம் சோதிப்ப(தற்கு
நாடிய)வர்களாக அவனைப் படைத்தோம் எனவே செவியுறுபவனாகஇ பார்ப்பவனாக அவனை நாம்
ஆக்கினோம். (அல் குர்ஆன்: 76: 2)

இந்த வசனத்தில் இந்திரியத்திற்கு “கலப்பான” என்ற ஒரு தன்மையை சேர்த்துக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு பல விரிவுரையாளர்களும் “பெண்ணின் கரு முட்டையுடன் கலந்த இந்திரியம்” என்று பொருள் கொள்கிறார்கள்.
ஆனால்
வேறு சில விரிவுரையாளர்கள் “அந்த இந்திரியத்தில் மரபணுக்கள்இ உயிரணுக்கள்இ
வேதியியல் பொருட்கள்இ மேலும் பல தனிமங்கள் சேர்ந்திருப்பதால் அதனை கலப்பான
இந்திரியம் என்று இறைவன் கூறியுள்ளான் எனக் கருதுகிறார்கள்.


இந்த
வசனத்தில் இடம் பெற்றுள்ள “கலப்பான” என்ற வார்த்தைக்கு இவ்வாறு இருவகையான
பொருள் கொள்வதற்கும் எந்த தடையும் இருப்பதாக நமக்குத் தெரியவில்லை. காரணம்
இந்த வசனத்தில் “கலப்பான இந்திரியம்” என்று பொதுவாகத்தான் இறைவன்
குறிப்பிட்டுள்ளான்இ எதனுடன் கலந்தது என்று குறிப்பிட்டு சொல்லவில்லைஇ எனவே
இரண்டு விதமாகவும் இந்த வசனத்திற்கு பொருள் கொள்வதற்கு சாத்தியம் உண்டு.

மேலும்
மனிதன் படைக்கப்பட்ட செய்திகளைக்கூறும் அனைத்து வசனங்களை ஆழமாக ஆய்வு
செய்து பார்த்தால் இரண்டாவது பொருள்தான் மிகப்பொருத்தமாக இருக்கிறது.
இந்தக் கருத்தை சையது குத்பு என்ற விரிவுரையாளர் தனது விரிவுரையில்
குறிப்பிடுகிறார். இந்த இரண்டாவது பொருள் எவ்வாறு பொருந்தி வருகிறது
என்பதைப் பார்ப்போம்.



இறைவன்
பயன்படுத்தியுள்ள “நுத்ஃபத்” என்ற வார்த்தைக்கு விந்து என்றுதான் இதுவரை பல
மொழிபெயர்ப்பாளர்களும்இ விரிவுரையாளர்களும் அர்த்தம்
சொல்லிவந்துள்ளார்கள். “நுத்ஃபத்” என்ற வார்த்தைக்கு வேறு ஒரு அர்த்தம்
இருப்பதை பலரும் கவனத்தில் கொள்ளவில்லை. அந்த அர்த்தத்தை பார்ப்பதற்கு
முன்பு விந்துவின் சேர்மங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.



1. ஊவைசi யுஉனை (சிட்டிரிக் அமிலம்)
2. ஊhழடநளவநசழட (கொலஸ்டிரால்)
3. ணுinஉ Phழளிhயவநள (ஜின்க் பாஸ்ஃபேட்)
4. யுஉனை Phழளிhயவநள (ஆசிட் பாஸ்ஃபேட்)
5. டீiஉழசடிழயெவநள (பைகார்பனேட்)
6. ர்லயடழசரniஉ யுஉனை (ஹைலோரினிக் அமிலம்)


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் Empty Re: இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by நண்பன் Thu 20 Jan 2011 - 9:54

இந்த வகைத் திரவம் சுமார் 20மூ வீதம் வரை இருக்கும்.


1. யுனெசழபநn (ஆன்ரோஜன்)
2. நுளவசழபநn (ஈஸ்ட்ரோஜன்)
3. புடரவயஅiஉ யுஉனை (குளுட்டாமிக் ஆசிட்)
4. ஐழெளவைழட (இனோசிட்டால்)
5. ஐnhiடிin(இன்ஹிபின்) 2. Pசழவநin (புரதம்)
இந்த
வகைத் திரவங்கள் உயிரணுக்கள் உயிர் வாழ்வதற்கும் பாதுகாப்பாக கற்பறைக்கு
செல்வதற்கும் துணை புரிகிறது. இந்த உயிரணுக்கள்இ திரவங்கள் சேர்ந்த
மொத்தத்திற்கு பெயர்தான் விந்து அல்லது இந்திரியம் என்று கூறுகிறோம். இதனை
இறைவன் குர்ஆனில் “மாஉ” என்றும்இ “மனிய்” என்றும் குறிப்பிட்டிருப்பதை
பின்வரும் வசனங்களின் மூலம் அறிந்து கொள்கிறோம்.




ثُمَّ جَعَلَ نَسْلَهُ مِنْ سُلالَةٍ مِنْ مَاءٍ مَهِينٍ
அற்ப நீரிலிருந்து வடிகட்டி எடுக்கப்பட்ட மூலத்திலிருந்து மனிதனின் சந்ததிகளை உண்டாக்கினான். (அல் குர்ஆன் 32: 8)
أَلَمْ نَخْلُقْكُمْ مِنْ مَاءٍ مَهِينٍ
அற்பமான நீரிலிருந்து உங்களை நாம் படைக்க வில்லையா? (அல் குர்ஆன் 77: 20)
خُلِقَ مِنْ مَاءٍ دَافِقٍ
குதித்து வெளிவரும் நீரிலிருந்து மனிதன் படைக்கபட்டான். (அல் குர்ஆன் 86: 6)
أَلَمْ يَكُ نُطْفَةً مِنْ مَنِيٍّ يُمْنَى
(கற்பத்தில்) செலுத்தப்படும் விந்துவில் உள்ள ஒரு நுத்ஃபாவாக அவன் இருக்கவில்லையா? (அல்குர்ஆன் 75:37)

மேற்கூறப்பட்ட
முதல் மூன்று வசனத்தில் விந்துவின் மொத்தத்திற்கு “மாஉ” என்ற
வார்த்தையையும்இ நான்காவது வசனத்தில் “மனிய்” என்ற வார்த்தையையும்
பயன்படுத்தப் பட்டிருக்கிறது.



ஆனால்
“நுத்ஃபத் என்ற வார்த்தைக்கு விந்து என்று பொருள் கொள்வது அவ்வளவு
பொருத்தமானதல்ல. அந்த வார்த்தைக்கு விந்துவில் உள்ள “உயிரணு” என்று
அர்த்தம் கொள்வது குர்ஆனுடைய வசனங்களுடன் மிகப்பொருத்தமாக உள்ளது. இந்த
அர்த்ததை அந்த வார்த்ததைக்கு கொடுத்து பொருள் விளங்கும் போது அல்லாஹ்
எவ்வளவு ஆழமாக இந்த விஞ்ஞான செய்தியை சொல்லியிருக்கிறான் என்பதும் நமக்குத்
தெரியவரும்
விந்துவின் சேர்மங்கள் என்ன என்ன உள்ளது என்றும் நுத்ஃபா
என்ற வார்த்தை எவ்வாறெல்லாம் பயன் படுத்தப்பட்டுள்ளது என்பதையும்
பார்ப்போம்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் Empty Re: இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by நண்பன் Thu 20 Jan 2011 - 9:58

ஓரு ஆணுக்கு ஒரு தடவை விந்து வெளியாகும்
போது அதனுடைய அளவு சுமார் 2.5அட முதல் 3.5அட இருக்கும் என்று
கணக்கிடப்பட்டுள்ளது. அதில் ஒரு துளியில் சுமார் 40 கோடி உயிரணுக்கள்
இருக்கும். அவற்றில் 70மூ சதவீதம் மட்டும்தான் வீரியம் உள்ளதாக இருக்கும்.
அந்த உயிரணுக்கள் தலைப்பகுதிஇ வால்பகுதி என இரு பகுதியைக் கொண்டிருக்கும்.


தலைப்பகுதி
சற்று நீள உருண்டை வடிவத்திலும்இ வால்பகுதி சற்று நீண்ட நிலையிலும்
இருக்கும். தலை 5 மைக்ரோன் அளவும்இ வால் 55 மைக்ரோன் அளவும் கொண்டதாகும்.
தலைப்பகுதியில் ஒரு வகை திரவும் சுரந்து கொண்டிருக்கும். அந்த திரவம்
பெண்ணின் கருவரைக்குள் இருக்கும் கருமுட்டையை மூடியிருக்கும் மெல்லி திரையை
தகர்த்துஇ கருமுட்டையை சென்று அடைவதற்கு துணை புரிகிறது. இந்த உயிரணுக்கள்
கருவறையை நோக்கி நீந்தி செல்லும் தன்மை வாய்ந்தது. அவ்வாறு நீந்திச்
செல்வதற்கு வாலை துடுப்பாக பயன்படுத்தி ஒரு நிமிடத்திற்கு 3அஅ வேகம் என்ற
விகிதத்தில் முன்னேறிச் செல்கிறது.



இந்த
உயிரணு கர்பப்பைய அடைந்துஇ பெண்ணின் கரு முட்டையுடன் சேர்ந்ததும் வால்
பகுதி முறிந்து வெளியில் தங்கி விடும். அந்த கருமுட்டை உயிரணுவுடன்
சேர்ந்ததும்இ வேறொரு உயிரணு வந்து தன்னுடன் சேர்ந்துவிடாமல் இருக்க மெல்லிய
தடையை ஏற்படுத்தி விடும். சில வேளைகளில் இறைவனின் நாட்டத்தால் வேறொரு
உயிரணுவும் அந்த தடையை தகர்த்துவிட்டு உள்ளே சென்றுவிடும்.


அப்போது
அந்த கரு முட்டை இரண்டு உயிரணுவுடன் சேர்ந்து இரட்டை குழந்தை
உருவாகுகிறது. இது போல்தான் அபூர்வமாக பல உயிரணுக்கள் பெண்கரு முட்டையுடன்
சேர்ந்துவிடும் போது 3இ4இ5 குழந்தைகள் பிறக்கும் அதிசயமும் நடைபெறுகிறது.
அல்லாஹ் அவ்வப்பொழுது இது போன்ற அதிசயங்களை நிகழ்த்திஇ குழந்தை உருவாக்கல்
தனது கட்டுப்பாட்டில் மட்டும்தான் இருக்கிறது என்ற உண்மையை மனித
சமுதாயத்திற்கு உணர்த்திக் கொண்டிருக்கிறான்.




இந்த
உயிரணுக்களை பாதுகாப்பாக சுமந்து வருவதற்கு சில திரவங்களும்
உற்பத்தியாகும். மீன்கள் உயிர் வாழ்வதற்கு நீர் எவ்வாறு அவசியமோ அது போல
இந்த உயிரணுக்கள் உயிர்வாழ்வதற்கும் சில திரவங்கள் அவசியமாகும். அவைகளை
பின் வருமாறு மருத்துவ அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.



1. குசரஉவழளந (ஃபிரக்டோஸ்)
2. Pலசழ Phயளிhயவநள (பைரோ பாஸ்ஃபேட்)
3. யுளஉழசடிiஉ யுஉனை (அஸ்கார்பிக் அமிலம்)

4. Pசழளவய படயனெiளெ (புரோஸ்டோ கிளான்டின்ஸ்)

இந்தவகைத்திரவங்கள் சுமார் 60மூ வரை இருக்கும்.
1. ஊவைசiஉ யுஉனை (சிட்டிரிக் அமிலம்)
2. ஊhழடநளவநசழட (கொலஸ்டிரால்)
3. ணுinஉ Phழளிhயவநள (ஜின்க் பாஸ்ஃபேட்)
4. யுஉனை Phழளிhயவநள (ஆசிட் பாஸ்ஃபேட்)
5. டீiஉயசடிழயெவநள (பைகார்பனேட்)
6. ர்லயடழசரniஉ யுஉனை (ஹைலோரினிக் அமிலம்)


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் Empty Re: இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by நண்பன் Thu 20 Jan 2011 - 9:59

இந்த வகைத் திரவஙகள் சுமார் 20மூ வரை இருக்கும்.


1. யுனெசழபநn (ஆன்ரோஜன்)
2. நுளவசழபநn (ஈஸ்ட்ரோஜன்)
3. புடரவயஅiஉ யுஉனை (குளுட்டாமிக் ஆசிட்)
4. ஐழெளவைழட (இனோசிட்டால்)
5. ஐnhiடிin (இன்ஹிபின்)
6. Pசழவநin (புரதம்)


இந்த திரவங்களும் உயிரணுக்களும் சேர்ந்து 20மூ இருக்கும்.
இந்த அனைத்து வகைத் திரவங்களும் உயிணுக்கள் உயிர் வாழ்வதற்கும்இ பாதுகாப்பாக கர்பறைக்கு செல்வதற்கும் துணை புரிகிறது.



இந்த
உயிரணுக்கள்இ திரவங்கள் சேர்ந்த மொத்தத்திற்கு பெயர்தான் விந்து அல்லது
இந்திரியம் என்று கூறுகிறோம். இதனை இறைவன் குர்ஆனில் மாஉ என்றும்இ மஹீன்
என்றும் குறிப்பிட்டிருப்பதை பின்வரும் வசனங்களின் மூலம் அறிந்து
கொள்கிறோம்.



ثُمَّ جَعَلَ نَسْلَهُ مِنْ سُلالَةٍ مِنْ مَاءٍ مَهِينٍ
அற்ப நீரிலிருந்து வடிகட்டி எடுக்கப்பட்ட மூலத்தில் (நுத்ஃபா) மனிதனின் சந்ததிகளை உண்டாக்கினான். அல் குர்ஆன்: 32:8

أَلَمْ نَخْلُقْكُمْ مِنْ مَاءٍ مَهِينٍ
அற்பமான நீரிலிருந்து உங்களை நாம் படைக்க வில்லையா? அல் குர்ஆன்: 77:20
خُلِقَ مِنْ مَاءٍ دَافِقٍ
குதித்து வெளிவரும் நீரிலிருந்து மனிதன் படைக்கபட்டான். அல் குர்ஆன்: 86:6




أَلَمْ يَكُ نُطْفَةً مِنْ مَنِيٍّ يُمْنَى
(கர்பத்தில்) செலுத்தப்படும் விந்துவில் (மனியில்) உள்ள ஒரு நுத்ஃபாவாக அவன் இருக்கவில்லையா? அல் குர்ஆன்:75:37.

மேற்கூறப்பட்ட
முதல் மூன்று வசனத்தில் விந்துவின் மொத்தத்திற்கு மாஉ என்ற
வார்த்தையையும்இ நான்காவது வசனத்தில் மஹீன் என்ற வார்த்தையையும்
பயன்படுத்தப் பட்டிருக்கிறது.



ஆனால்
நுத்ஃபத் என்ற வார்த்தைக்கு விந்து என்று பொருள் கொள்வதை விடஇ விந்துவில்
உள்ள உயிரணு என்று அர்த்தம் கொள்வது குர்ஆனுடைய வசனங்களுடன் மிகவும்
பொருந்தி வருகிறது. இந்த அர்த்ததைக் அந்த வார்த்தைக்கு கொடுத்து பொருள்
விளங்கும் போது அல்லாஹ் எவ்வளவு ஆழமாக இந்த விஞ்ஞான செய்தியை
சொல்லியிருக்கிறான் என்பதும் நமக்குத் தெரியவரும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் Empty Re: இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by நண்பன் Thu 20 Jan 2011 - 10:00

நுத்ஃபா என்பதற்கு உயிரணு என்று பொருள் கொள்ள வேண்டும் என்பற்கு பின் வரும் வசனங்கள் சான்றாக உள்ளன.

அந்த
வசனங்களை ஆய்வு செய்யும் முன்பு இன்றைய மருத்துவ அறிவியலில் இந்த உயிரணு
குறித்து என்ன முடிவுக்கு வந்துள்ளது என்ற செய்தியைத் தெரிந்துக் கொள்வோம்.
கர்பப்பையை நோக்கிச் செலுத்தப்படும் இந்திரியம் அனைத்தும் கர்ப்பையை
சென்று அடைவதில்லை. மாறாக ஒரே ஒரு உயிரணு மட்டும்தான் பெண் கருமுட்டையுடன்
சேர்ந்துஇ பல மாற்ற நிலைகளுக்கு உள்ளாகி மனித உருவம் பெற்று குழந்தையாக
பிறக்கிறது.



இந்த விஷயத்தை நன்றாக புரிந்து கொண்டு பின் வரும் இறைவசனங்களை ஆய்வு செய்து பார்ப்போம்.

أَلَمْ يَكُ نُطْفَةً مِنْ مَنِيٍّ يُمْنَى
(கர்பத்தில்) செலுத்தப்படும் விந்துவில் உள்ள ஒரு நுத்ஃபாவாக அவன் இருக்கவில்லையா? அல் குர்ஆன்:75:37.

இந்த
வசனத்தில் கர்ப்பப்பையில் செலுத்தப்படும் இந்திரியத்தில் உள்ள நுத்ஃபா வாக
ஆகியருக்க வில்லையா? என்று இறைவன் வினவுகிறான். இந்த வசனத்தில் இடம்
பெற்றுள்ள நுத்ஃபா என்ற வார்த்தைக்கு இந்திரியத் துளி என்ற பொருள்
கொடுப்பதைவிட உயிரணு என்ற பொருள் கொடுப்பது இந்த தொடருக்கு மிகப்
பொருத்தமாக இருக்கிறது.



அதாவது
இந்திரியத்தின் ஒரு துளியாக அவன் இருக்க வில்லையா? என்று பொருள்
கொடுப்பதைவிடஇ இந்திரியத்தில் அவன் ஒரு உயிரணுவாக இருக்க வில்லையா? என்ற
பொருள் கொடுத்து இந்த வசனத்தை வாசிக்கும் போது மிகப் பொருத்தமாக உள்ளது.



ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ
பின்னர்இ (அதற்கென உள்ள) ஒரு பாதுகாப்பான இடத்தில் (கர்ப்பபையில்) அவனை நுத்ஃபா ஆக்கினோம். அல் குர்ஆன்: 23:13.

இதற்கு
முந்திய வசனத்தில் முதல் மனிதரை களி மண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம்
என்ற செய்தியைக் கூறி விட்டு அதற்குப்பிறகு இந்த வசனத்தைக் கூறியுள்ளான்
இறைவன்.



முதல் மனிதர் எவ்வாறு
களி மண்ணின் மூலச்சத்திலிருந்து படைக்கப்பட்டாரோ அது போல அவரது சந்ததிகளை
அற்பமான நீரின் மூலப்பொருளிலிருந்துதான் படைத்தேன் என்று உணர்த்துவதற்காக
இவ்வாறு குறிப்பிட்டிருக்கலாம். இதையே 32வது அத்தியாயம் 8வது வசனத்தில்
குறிப்பிடுகிறான்.

அற்ப நீரிலிருந்து வடிகட்டி எடுக்கப்பட்ட மூலத்திலிருந்து மனிதனின் சந்ததிகளை உண்டாக்கினான். அல் குர்ஆன்: 32:8
அந்த மூலம்தான் உயிரணு.



அதனை சுலாலத் என்று 32வது அத்தியாயம் 8வசனத்திலும்இ நுத்ஃபா என்று மேற்குறிப்பிட்ட வசனத்திலும் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

இந்த
வசனத்தில் கூறப்பட்டுள்ள நுத்ஃபத் என்ற வார்த்தைக்கு உயிரணு என்று பொருள்
கொள்ள வேண்டும் என்று நாம் சொல்வதற்கு காரணம் நுத்ஃபாவை பாதுகாப்பான
கர்ப்பப்பையில் ஆக்கியதாக இறைவன் கூறுகிறான். கர்ப்பப்பையில் ஆக்கப்படுவது
ஒரு துளி இந்திரியம் அல்லஇ அதில் உள்ள ஒரு உயிரணுதான் என்பது அறிவியல்
உலகில் ஐயத்திற்கு இடமின்றி தெளிவாக நிரூபணம் செய்யப்பட்ட விஷயமாகும்.
அறிவியலுக்கு எதிரான கருத்தை குர்ஆன் ஒரு போதும் முன் வைக்காது. எனவே இந்த
வசனத்தில் இடம் பெற்றுள்ள நுத்ஃபா என்ற வார்த்தைக்கு உயிரணு என்று பொருள்
கொள்வதே சரியானதாகும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் Empty Re: இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum