Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஜெயா டிவி நிர்வாகத்தில் தில்லு முல்லு, முக்கிய ஆவணங்களை கிழித்தெறிந்த சசிகலா கும்பல்
Page 1 of 1

ஜெயா, "டிவி' நிர்வாகத்தில் சசிகலா உறவினர்களின், "கைவரிசை'யால் இரண்டாவது இடத்திலிருந்த அந்த, "டிவி' தற்போது பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.
நிர்வாக இயக்குனர் அனுராதாவின் உதவியாளர் என்ற பதவியை வைத்துக் கொண்டு, "டிவி' நிர்வாகத்தை கோலோச்சி வந்த உதவியாளர் ஒருவர், சசிகலா நீக்கத்தை தொடர்ந்து, முக்கிய ஆவணங்களை கிழித்தெறிந்ததால் போலீஸ் விசாரணையில் சிக்கியுள்ளார்.
உதவியாளர் நியமனம்:ஜெயா, "டிவி' நிர்வாக இயக்குனராக டி.டி.வி.தினகரனின் மனைவி அனுராதா பணியாற்றி வருகிறார். "டிவி' துவக்கப்பட்ட காலத்தில் கட்சித் தொண்டர்களும், பொதுமக்களும் பார்த்து வந்தனர். டி.ஆர்.பி., ரேட்டிங்கில், இந்த "டிவி' இரண்டாவது, மூன்றாவது இடத்தை மாறிமாறி பெற்று வந்தது.ஆரம்ப காலத்தில் நிகழ்ச்சி தயாரிப்பு பணிகளில் இடம் பெற்றிருந்த, முக்கிய பிரமுகர்களை சசிகலா உறவினர்கள் திட்டமிட்டு வெளியே அனுப்பினர். அனுராதாவுக்கு ஆங்கிலம் சரியாக வராத காரணத்தினால், அவரது உதவியாளராக தினகரனுக்கு நெருக்கமான பிரமுகர் ஒருவரின் மகன் நியமிக்கப்பட்டார்.
தயாரிப்பாளர்கள் புலம்பல்:அந்த உதவியாளர் சசிகலாவுக்கு வேண்டப்பட்ட ஊழியர்களை நியமித்து, நிறுவனத்துக்கு விசுவாசமாக உழைத்த ஊழியர்களை வெளியேற வைத்தார். திரைப்படம் வாங்குவது தொடர்பாக தயாரிப்பாளர்களிடம் அந்த உதவியாளர் பேச்சுவார்த்தை நடத்துவார். கமிஷன் தலை தூக்கினால் தான், திரைப்படத்தை வாங்குவதற்கான ஒப்பந்தம் நடைபெறும்.கமிஷன் விவகாரத்தை கண்டு பல தயாரிப்பாளர்கள் புலம்புகின்றனர். தி.மு.க., ஆட்சி நடக்கும் போது தான் கமிஷன் விவகாரம் என்றால், அ.தி.மு.க., ஆட்சியிலும் அதே நிலை தான் நீடிக்கிறது என பிரபல தயாரிப்பாளர் ஒருவர் மனம் வெதும்பி குற்றம் சாட்டினார்.
எட்டாவது இடம்:"டிவி' நிறுவனத்திற்கு பணம் கட்டி, நேரம் ஒதுக்கி நடத்தும் நிகழ்ச்சிகளில் ஒரு குறிப்பிட்ட பிரமுகரை கவனித்தால் தான் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி ஒளிபரப்பாகும். இப்படி பல்வேறு "தில்லு முல்லு' நிர்வாகத்தினால் தற்போது ஜெயா "டிவி' பார்வையாளர்களால் புறக்கணிக்கப்பட்டு எட்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.முதல்வர் தெரிவிக்கும் இரங்கல் செய்தி, அவரது அறிக்கையை மட்டும் செய்திகளாக அறிவித்து விட்டால் மட்டும், முதல்வரின் மனதை குளிர வைக்க முடியும் என கருதி, ஒரே மாதிரியான செய்திகளை கொடுத்து, "டிவி' பார்க்கும் நேயர்களின் எண்ணிக்கையை குறைத்து விட்டனர் என்ற குற்றச்சாட்டையும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
விளம்பர கட்டணம்:இந்தியாவில் புகழ் பெற்ற ஒரு நிறுவனம், தனது விளம்பரத்தை வெளியிட, ஆண்டுக்கு குறிப்பிட்ட ஒரு தொகையை கட்டணமாக வழங்கி வந்தது. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், அந்த நிறுனத்திடம் கூடுதல் தொகையை தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அந்த நிறுவனம், உங்கள், "டிவி'யின் டி.ஆர்.பி., நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. எனவே நீங்கள் கேட்கும் தொகை தர முடியாது என கூறியுள்ளது.
இதையடுத்து, அந்த நிறுவனத்திற்கு சொந்தமான, மூன்று கன்டெய்னரில் பொருட்களை ஏற்றி திருவள்ளூர் அருகே செல்லும் போது அரசு அதிகாரிகள் மூலம் இடையூறு கொடுத்து மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.இந்த விவகாரம் நிறுவனத்தின் உரிமையாளருக்கு தெரிய வரவும், "நான் உலகம் முழுவதும் தொழில் செய்கிறேன். ஆனால், இந்த மாதிரி ஒரு மிரட்டலை சந்தித்ததே இல்லை. இந்த பிரச்னை குறித்து முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்கிறேன்' எனக் கூறியதும் வேறு வழியில்லாமல் அந்த கன்டெய்னர்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
இளையராஜா நிகழ்ச்சி:சென்னை நேரு விளையாட்டு ஸ்டேடியம் கடந்த 1991-96ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில் கட்டப்பட்டது. தி.மு.க., ஆட்சியில், அக்கட்சியின் சார்பில் பல விழாக்கள் நடத்தி, ஸ்டேடியம் சேதப்படுத்தப்பட்டது. கடந்த 2001 ஆண்டு மீண்டும் அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் ஸ்டேடியத்தில் எந்த விழாக்களையும் நடத்தக் கூடாது என முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
இந்நிலையில் ஜெயா, "டிவி' சார்பில் நடத்தப்படும் இளையராஜா பங்கேற்கும் நிகழ்ச்சி ஒன்று வரும் 28ம்தேதி நடக்கவுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு அனுமதி வேறு பெயரில் பெறப்பட்டுள்ளது. இருப்பினும், முதல்வர் விருப்பத்திற்கு மாறாக நிகழ்ச்சி நடத்த அனுமதி வாங்கியதும் தற்போது பிரச்னையாக வெடித்துள்ளது.
ஆவணங்கள் கிழிப்பு:இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, சசிகலா நீக்கப்பட்டதும், ஜெயா, "டிவி' நிர்வாகத்தின் முக்கிய ஆவணங்களை அந்த உதவியாளர் கிழித்தெறிந்துள்ளார். சில முக்கிய ஆவணங்களை, பேக்ஸ் மூலம் வேண்டியவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த தில்லு முல்லு சம்பவத்தை அவர் அரங்கேற்றும் போது கண்காணிப்பு காமிரா இருப்பதை அவசரத்தில் கவனிக்கவில்லை.இதனால் அவர் மாட்டிக் கொண்டார்.
நேற்று முன்தினம் கண்காணிப்பு காமிராவை போலீசார் எடுத்துச் சென்று பார்த்தனர். அப்போது தான் உதவியாளர் நடவடிக்கை கண்காணிப்பு காமிராவில் பதிந்திருப்பது தெரிய வந்தது. அந்த பிரமுகர் போலீசார் விசாரணையில் சிக்கியுள்ளார் என அ.தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

Permissions in this forum:
You cannot reply to topics in this forum