Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கொழும்பு மாநகரை அபிவிருத்தி செய்ய பாரிய செயற்றிட்டம்
Page 1 of 1

அதிகார சபை அமைக்க தீர்மானம்
l நிர்மாண பணிகளில் படையினர்
l உள்ளூராட்சி மன்றங்களுடன் நல்லுறவை பேண சட்டம்
எம். எஸ். பாஹிம்
கொழும்பு நக ரையும் அண்டிய பகுதிகளையும் நவீனமயப் படுத்துவதற்காக பாரிய பல திட் டங்களை முன் னெடுக்க அமை ச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இது தவிர நகர அபிவிருத்திக் கென கொழும்பு பெரும்பாக அதிகார சபையொன்றை அமைக்க அரசாங்கம் கொள்கை அளவில் தீர்மானித்துள்ளதோடு இது தொடர்பில் கொழும்பு மாநகர சபை அடங்கலான உள்ளூராட்சி சபை களுடன் பேசவுள்ள தாக அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக் வெல்ல தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று அரசாங்கம் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. அமைச்சர் மேலும் கூறியதாவது: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் யோசனைக்கமைய கொழும்பு நகரை மையமாக கொண்டு முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களை மேலும் விஸ்தரிக்கவும், கொழும்பு நகரையும் அதனை அண்டிய பகுதிகளையும் அபிவிருத்தி செய்யவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அடையாளங் காணப்பட்ட பல திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மெனிங் சந்தை பேலியகொடைக்கு
இதன்படி கொழும்பு மெனிங் சந்தை மற்றும் மொத்த வர்த்தக சந்தை என்பன பேலியகொட பிரதேசத்திற்கு கொண்டு மாற்றப்படும். மெனிங் சந்தைத் தொகுதி உள்ள பிரதேசத்தை புறக்கோட்டை பஸ் தரிப்பிட விஸ்தரிப்புக்கு பயன்படுத்தவும் அங்கு நடைபாதை வியாபாரிகளுக்கென விசேட வர்த்தக தொகுதியொன்றை நிர்மாணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இது தவிர புறக்கோட்டை பழைய மீன் சந்தை உள்ள மத்திய வர்த்தக சந்தைத் தொகுதி முழுமையாக புனரமைக்கப்படும்.
குதிரை ஓட்டத்திடல் மற்றும் புலூம்பீல்ட் விளையாட்டு மைதானம், கொழும்பு கோட்டை சந்தைப்படுத்தல் திணைக்கள கட்டட தொகுதி என்பவற்றை முழுமையாக புனரமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த பாரிய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கொழும்பு கோட்டை பேரை ஆறு என்பவற்றை அண்மித்த பிரதேச அபிவிருத்தி புறக்கோட்டை பஸ் தரிப்பிட அண்மித்த பகுதியை நடைபாதை வர்த்தகர்களின் வர்த்தக பிரதேசமாக முன்னேற்றுதல், சுதந்திரச் சதுக்கத்தை அண்மித்த பிரதேச அபிவிருத்தி என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்தத் திட்டங்களை முன்னெடுத்தல் முகாமைத்துவம் மற்றும் கண்காணிப்பு பணிகள் என்பன நகர அபிவிருத்தி அதிகார சபையினூடாக மேற்கொள்ளப்படும்.
செலவுகளை குறைப்பதற்காக திட்ட நிர்மாணப் பணிகள் இலங்கை இராணுவப் படை பொறியியல் ரெஜிமெண்ட், கடற்படை, விமானப்படை சிவில் பொறியியல் பிரிவு என்பவற்றுக்கு வழங்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
கொழும்பு பெரும்பாக அதிகார சபை
மக்களின் நலன் கருதி கொழும்பு பெரும்பாக அதிகாரசபை சட்டமொன்றை கொண்டு வரவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
அரசாங்கம் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும் போது உள்ளூராட்சி மன்றங்களுடன் நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டும். இதனடிப்படையிலே புதிய சட்டம் கொண்டு வரப்படவுள்ளது.
இதுதொடர்பில் சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி சபைகளுடன் அனேகமாக பேசவுள்ளோம். அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள். சுபீட்சமான எதிர்காலத்திற்கான செயற்பாடுகளுக்கு யாரும் தடங்கலாக இருக்க மாட்டார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum