Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
துவம்சம் செய்த 'தானே' புயல் : தமிழ்நாடு, புதுச்சேரியில் 27 பேர் பலி?!
4 posters
Page 1 of 1
துவம்சம் செய்த 'தானே' புயல் : தமிழ்நாடு, புதுச்சேரியில் 27 பேர் பலி?!
தானே புயல் கடந்து சென்ற பின்னர் சென்னை மெரினா கடற்கரை
இன்று காலை புதுச்சேரி மற்றும் கடலூர் மாவட்டங்களை கடந்து சென்ற 'தானே' புயல் காற்றின் பாதிப்பில் 27 க்கு மேற்பட்டோர் பலியாகியிருப்பதாக
தற்போது வெளிவந்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. கடலூரில் பதினெட்டு பேரும், புதுச்சேரியில் 9 பேரும், சென்னையில் இருவரும் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நெல்லூர் மாவட்டத்தில் 9.8 செ.மீ அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. 140 கி.மீ வேகத்தில் வீசிய புயல் காற்றினால் புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பல வீடுகளின் கூரைகள் சேதமடைந்தன. மின் கம்பங்கள், தொலை தொடர்பு கம்பங்கள், மரங்கள் தெருக்களில் முறிந்து வீழ்ந்தன. புதுச்சேரியில் மாத்திரம் 2 இலட்சத்துக்கு மேற்பட்ட மரங்கள் சாய்ந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Re: துவம்சம் செய்த 'தானே' புயல் : தமிழ்நாடு, புதுச்சேரியில் 27 பேர் பலி?!
மேலும் கடலூர், திண்டிவனம், சிதம்பரம், விழுப்புரம் செல்லும் முக்கிய சாலைகளிலும் நூற்றுக்கணக்கான மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன. தனியார் தொலைபேசி கோபுரங்களும் முறிந்து வீழ்ந்துள்ளதால் தொலைத்தொடர்பு முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
புயல் பாதிப்பு குறித்து அறிவதற்கு சென்னை வானிலை ஆய்வு மையத்தை 1077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும், சென்னை தவிர்ந்த ஏனைய மாவட்ட மக்கள் 1800 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறியப்படுத்தப்பட்டுள்ளது.
ரயில் போக்குவரத்து ஸ்தம்பிதம் :
தானே புயல் காரனமாக சென்னையிலிருந்து காலை 8.20 க்கு திருச்சி செல்லும் ரயில் இரத்தாகியுள்ளது. திருச்சிலியிருந்து காலை 6.30 மணிக்கு சென்னை புறப்பட்ட பல்லவன் எக்ஸ்பிரஸ் அரியலூரில் நிறுத்தப்பட்டு பின்னர் மீண்டும் திருச்சிக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கீழ்புத்துப்பட்டில் இலங்கை அகதிகள் முகாமிற்குள் கடல் நீர் புகுந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் நெல்லிக்குப்பம், நெம்மேலிக்குப்பம், தேவனேரிகுப்பம் பகுதிகளில் கடல் நீர் ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதுச்சேரியில் சட்டசபை கட்டடம், ஆளுனர் மாளிகை முன்பிருந்த மரங்களும் முரிந்து வீழ்ந்துள்ளன. இதனால், புயல், மற்றும் மழையால் உயிரிழந்தவர்களுக்கு தலா 2 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
புயல் கரையைக் கடந்தவுடன் வேகம் குறைந்து மேற்கு நோக்கி நகரும் என்பதால் உள் மாவட்டங்களான கோவை, சேலம், ஈரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று முழுவதும் மழை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் வழங்கிய பேட்டி :
Re: துவம்சம் செய்த 'தானே' புயல் : தமிழ்நாடு, புதுச்சேரியில் 27 பேர் பலி?!
புயல் நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு: வங்க கடலில் நிலை கொண்டிருந்த 'தானே' என்ற பெயர் கொண்ட தீவிர புயல், இன்று காலை 6.30-7.30 மணிக்கு புதுச்சேரிக்கும் கடலூருக்கும் இடைப்பட்ட பகுதியில் கரையை கடந்தது. இது காலை 8.30 மணி அளவில் கடலூருக்கு மேற்கே 30 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு தீவிர புயலாக நிலை கொண்டுள்ளது. இது மேலும் மேற்கு நோக்கி நகர்ந்து படிப்படியாக வலு இழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புயல் கரையை கடந்தபோது புதுச்சேரியில் 120 கிலோ மீட்டர் வேகத்திலும், கடலூரில் 87 கி.மீ. வேகத்திலும் காற்று வீசியது பதிவாகி உள்ளது. இது 135 கி.மீ. வேகத்தில் வீசுவதற்கான வாய்ப்பு இருந்தது.கடலூர் அருகே கரை கடந்த புயல் 11.30 மணி அளவில் கள்ளக்குறிச்சிக்கும், பகல் 2 மணி அளவில் சேலத்துக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி செல்ல வாய்ப்பு உள்ளது.
இதுமேலும் வலு இழந்து நாளை காலை காற்றழுத்த பகுதியாக மாறி மேற்கு நோக்கி சென்றுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயல் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மழை பெய்யும். வடமாவட்டங்களில் பலத்த மழை அல்லது மிக பலத்த மழை பெய்யும். வடமாவட்டங்களில் கடலோர பகுதிகளிலும், தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். விட்டு விட்டு மழை பெய்யும். தரைக்காற்று வேகமாக வீசும்.
புயல் மேற்கு நோக்கி நகரும்போது வீசும் பலத்த காற்றால் கூரை வீடுகள் சேதமடையும். மின்கம்பங்கள், தொலைத் தொடர்பு இணைப்புகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. புயல் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் அதிகபட்சமாக 15 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. கல்பாக்கம், கேளம்பாக்கம்-10 செ.மீ., கடலூர், மதுராந்தகம், உத்திரமேரூர்-9 செ.மீ.
செங்கல்பட்டு, மகாபலிபுரம்-8 செ.மீ., சென்னை விமான நிலையம், திருவள்ளூர், சிதம்பரம்-7 செ.மீ., சென்னை அண்ணா பல்கலைக்கழகம், டி.ஜி.பி. அலுவலகம், நுங்கம்பாக்கம், செம்பரம்பாக்கம், வானூர், சீர்காழி ஆகிய இடங்களில் 6 செ.மீ. மழை பதிவாகி உள்ளது இவ்வாறு ரமணன் கூறினார்.
Re: துவம்சம் செய்த 'தானே' புயல் : தமிழ்நாடு, புதுச்சேரியில் 27 பேர் பலி?!
இதே தானே புயலின் சேதங்கள் குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கின் கவனத்திற்கு மத்திய அமைச்சர் நாராயணசாமி கொண்டுவந்துள்ளார். அப்போது உடனடியாக நிவாரண பணிகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ள பிரதமர் சேதத்திற்குரிய நிவாணர நிதி உதவிகள் வழங்கப்படும் எனவும் வாக்குறுதி அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தானே புயலின் சேத விபரங்கள் குறித்து தமிழக அரசு விரிவான அறிக்கை ஒன்றை மத்திய அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டுமெனவும், அதன் பின்னர் மத்திய அரசினால் அமைக்கப்படும் குழு தமிழகத்திற்கு சென்று நிலைமைகளை ஆய்வு செய்து மத்திய அரசுக்கு சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் இந்நிவாரண நிதி உதவி வழங்கப்படும் என நாராயணசாமி தெரிவித்தார்.
Re: துவம்சம் செய்த 'தானே' புயல் : தமிழ்நாடு, புதுச்சேரியில் 27 பேர் பலி?!
இயற்கை சீற்றங்கள் கூட இல்லை இவை ஆண்டுகளின் மழைக்காலங்களில் அடித்து ஓயும மழையின் வேகமான வரவு தான் இருளில் மாநகரம் மூழ்கினாலும் வீராணம் ஏரி நிரம்புகிறது... டிசம்பர் நமக்கு கஷ்டம் தான் ....சண்டப்பிரசண்டம் ஏற்படுத்துகிறது அவ்வளவு தான்...
Re: துவம்சம் செய்த 'தானே' புயல் : தமிழ்நாடு, புதுச்சேரியில் 27 பேர் பலி?!
அத்தனையிலும் இறைவன் படிப்பினைகளை ஏற்படுத்துகிறான் மெதுவாக வீசினால் தென்றலாகிறது அதுவே சீற்றமெடுத்தால் சீரழிக்கிறது இது இயற்கை
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: துவம்சம் செய்த 'தானே' புயல் : தமிழ்நாடு, புதுச்சேரியில் 27 பேர் பலி?!
@. @.அப்துல்லாஹ் wrote:இயற்கை சீற்றங்கள் கூட இல்லை இவை ஆண்டுகளின் மழைக்காலங்களில் அடித்து ஓயும மழையின் வேகமான வரவு தான் இருளில் மாநகரம் மூழ்கினாலும் வீராணம் ஏரி நிரம்புகிறது... டிசம்பர் நமக்கு கஷ்டம் தான் ....சண்டப்பிரசண்டம் ஏற்படுத்துகிறது அவ்வளவு தான்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum