Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இதய நோயும், இரத்த அழுத்தமும்.
Page 1 of 1
இதய நோயும், இரத்த அழுத்தமும்.
நாகரீகம் வளர வளர மனிதனுக்கு விதவிதமான நோய்களும் தோன்றிக்கொண்டிருக்கின்றன. விஞ்ஞான கண்டுபிடிப்புகளில் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்யும் உணவுகளையும், இரசாயனம் கலந்த உணவுகளையும் சாப்பிடுவதால் உணவு போல் தன் ஆயுளையும் சுருக்கிக் கொண்டு தினமும் செத்துச் செத்து பிழைத்துக்கொண்டிருக்கிறான்.
நோயின்றி நூறாண்டு வாழ்ந்த முன்னோர்கள் எங்கே? தினமும் 10 மாத்திரைகள் விழுங்கும் நாம் எங்கே?
ஏன் இந்த மாற்றம்....?
நவீனத்தின் புதுமைதான் இது. அதிக மன உளைச்சல், ஓய்வில்லாத உழைப்பு, தீய பழக்கங்களுக்கு அடிமை என பலவாறானவை மனிதனுள் புகுந்து இப்படி ஆட்டிப்படைக்கின்றன.
அரைவேக்காட்டு உணவு, எண்ணெயில் பொரித்த உணவுகள், டின்களில் அடைக்கப்பட்டு பதப்படுத்தப்பட்ட உணவுகள், கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகள், போதிய உடற்பயிற்சியின்மை, இவைதான் மனிதனை அதிகம் பாதிக்கின்றன.
உடம்பிலுள்ள ஒவ்வொரு உறுப்பும் மனிதனின் செயல்பாட்டுக்கு முக்கிய காரணிகளாகின்றன.
மனிதனின் செயல்பாடுகளில் முதன்மை வகிப்பதும் தாயின் கருவில் இருக்கும்போதே துடிக்க ஆரம்பித்து இறுதிவரை துடித்துக்கொண்டிருக்கும் இருக்கும் ஒரே உறுப்பு இதயம்தான்.
ஒவ்வொரு மனிதனின் கைப்பிடி அளவே இதயம் உள்ளது. 350 கிராம் எடை கொண்ட இதயம் நிமிடத்திற்கு 72 தடவை துடிக்கும்.
அரபு நாடுகளில் இதயத்தை உடலின் இளவரசன் என்பார்கள். சித்தர்கள் இதயத்தை சூரிய கிரகத்தோடு ஒப்பிடுகிறார்கள். சூரியன் எவ்வாறு உலக இயக்கத்திற்கு முக்கியப் பங்காற்றுகிறதோ அதுபோல் மனித இயக்கத்திற்கு முக்கியப் பங்காற்றுவது இதயம்தான். இதனால்தான் அன்பைப் பரிமாறும் காதலர்கள்கூட இதயத்தை முதன்மையாக வைத்து பேசுகிறார்கள்.
60 வயதிற்குள் ஒரு மனிதன் இதயம் ஆச்சர்யப்படும் வகையில் 22000 இலட்சம் தடவை துடிக்கிறது. சுமார் 18000 டன் இரத்தத்தை உள்ளிழுத்து வெளியேற்றுகிறது. இந்த இரத்தம் செல்லும் நாளங்கள் சுமார் 62000 மைல் நீளமுள்ளவை.
இப்படி பல அதிசயங்களை தன்னகத்தே கொண்ட இதயமானது தமனி, சிரையாக அமைந்து நான்கு அறைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. நல்ல இரத்தத்தை உடலெங்கும் தமனி எடுத்துச்செல்கிறது. சிரை அசுத்த இரத்தத்தை இதயத்திற்கு எடுத்துவரும் செயல்களைச் செய்கிறது.
இவ்வாறு இதயம் நிமிடத்திற்கு 72 முறை சுருங்கி விரிகிறது.
இந்த சுருங்கி விரியும் தன்மையின் அழுத்தமானது 120/80 என்ற கணக்கில் இருக்கும். டென்ஷன், மன அழுத்தம், மன எழுச்சி மிகுதியாகும் போது அழுத்தம் அதிகரிக்கும். ஓய்வெடுக்கும்போது சற்று குறைந்து காணப்படும். இந்த இரத்த அழுத்தம் சிஸ்டாலக் 100 இருந்து 140 வரையும், டயஸ்டாலக் 90லிருந்து 100 வரைகூட இருக்கலாம்.
இந்த இரத்த அழுத்தம் உடலமைப்பையும் வயதையும் பொறுத்து மாறும்.
இரத்த நாளங்களில் கொழுப்புகள் படிவதால் இரத்த ஓட்டத்தின் தன்மையைக் குறைக்கிறது. இதனால் இதயத்திற்கு தேவையான இரத்தம் கிடைப்பதில்லை. இதயம் அதிகம் சுருங்கி விரிய ஆரம்பிக்கும். இந்த காலத்தில் வாய்வுக்களின் சீற்றம் மிகுதியானால் பித்தம் அதிகரித்து பித்தநீர் இரத்தத்தில் சேர்வதால் இருதயத்தின் சுருங்கி விரியும் தன்மையை சீர்கேடடையச் செய்கிறது. இதனால் இருதய அடைப்பு ஏற்படுகிறது. இதனால் சிலர் சில நொடிகளில் மரண வாசலை நெருங்க நேரிடுகிறது.
இதய நோய் தாக்குவதை சில காரணிகளிலிருந்து அறிந்துகொள்ளலாம்.
மார்புவலி
சிலருக்கு மார்பின் இடது பக்கத்தில் வலி வந்தவுடன் மாரடைப்பு என பயம் கொள்கின்றனர். மாரடைப்பானது இதயத்திலோ, மார்பின் இடப் பகுதியிலோ தோன்றுவதில்லை. வயிற்றில் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு வாய்வு சீற்றமாகி இதுபோன்ற வலியை ஏற்படுத்தும்.
மூச்சு விடுதலில் சிரமம்
சிலருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. அதிக வேலை செய்யும்போதும், ஓய்வெடுக்கும்போதும் இவ்வாறு மூச்சுத் திணறல் ஏற்பட்டால் அது இதய நோயின் அறிகுறியாகும்.
நெஞ்சு படபடப்பு
இதயம் வேகமாக துடிக்க ஆரம்பிக்கும். அப்போது இலேசாக மயக்கம் இருப்பதுபோல் தோன்றும், மேலும் வியர்வை அதிகமாக இருக்கும். அப்படி இருந்தால் அது இதய நோயின் அறிகுறியாகும். சிலருக்கு அதிர்ச்சியான தகவலைக் கேட்டாலோ அல்லது பயங்கரமான நிகழ்வுகளைப் பார்த்தாலோ இப்படி தோன்றலாம்... எனவே அதன் தன்மையை முதலில் உணர்ந்துகொள்ள வேண்டும்.
கணுக்கால் வீக்கம்
இரண்டு கணுக்கால்களிலும் அடிக்கடி வீக்கம் உண்டாகும். சில நாட்களில் அந்த வீக்கம் அப்படியே இருந்துவிடும். மேலும் மார்பு, வயிறு, தொடை, முகங்களில் வீக்கம் உண்டாகும். அந்த இடத்தில் கை வைத்து அழுத்தினால் பள்ளம் ஏற்படும். இப்படி இருந்தால் அது இதயநோயின் அறிகுறியாகும்.
இடது கை துடிப்புடன் வலி
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், நரம்பு தளர்ச்சிக்கு ஆளானவர்களுக்கும் மார்பு வலியுடன் இடது கை வலித்தால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
மயக்கம் ஏற்படுதல்
இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் வியர்வை படபடப்புடன் மயக்கம் ஏற்படும் இதை நன்கு கவனித்து உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
அதிக இரத்த அழுத்தம்
இரத்த அழுத்தம் ஒரு நோய் அல்ல. ஆனால் அதை அப்படியே குணப்படுத்தாமல் விட்டு விட்டால் அது இதய நோய்க்கு காரணமாக அமைந்துவிடும். எனவே இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக்கொள்ள வேண்டும். சில நேரங்களில் இரத்த அழுத்தமானது கிட்னியை செயலிழக்கவும், கண் பார்வை மங்கவும் செய்துவிடும்.
இரத்த அழுத்தமானது பெற்றோர்களில் யாராவது ஒருவருக்கு இருந்தால்கூட அது 25% குழந்தைக்கும் வர வாய்ப்புள்ளது.
அதிக இரத்த அழுத்தம் நடுத்தர வயதிற்குப் பின்னரே தலைகாட்டும்.
கோபம், கவலை, இயலாமை, மன அழுத்தம், மன உளைச்சல், தூக்கமின்மை, அதிக வேலைப்பளு இவற்றால் இரத்த அழுத்தம் அதிகரிக்கும்.
இரத்த பாதிப்புகளிலிருந்து விடுபட
புகை, மது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
உணவில் உப்பைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மலச்சிக்கல் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
டென்ஷனைக் குறைத்து மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
தேவையான ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். உடலை அதிகம் வருத்தக் கூடாது. உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்வது நல்லது.
இதய நோயிலிருந்து விடுபட உணவு கட்டுப்பாடு மிகவும் அவசியம்.
சர்க்கரை மற்றும் இனிப்பு வகை உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
வாயுவை உண்டாக்கும் கிழங்கு வகைகள், பருப்புகள் சில தானிய வகைகளை தவிர்ப்பது நல்லது.
குளிரூட்டப்பட்ட பானங்கள், அதிக வாசனை கலந்த உணவுகள் சாப்பிடக் கூடாது. அதுபோல் பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் தவிர்ப்பது அவசியம்.
அதிகம் கொழுப்பு சேர்ந்த பொருட்களைத் தவிர்க்க வேண்டும். எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளை சாப்பிடுவதும் நல்லதல்ல.
தேனீர், காபி போன்ற பானங்களைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
உணவில் அதிகம் காய்கறிகளையும், பழங்களையும், கீரைகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» இரத்த அழுத்தமும், நீரிழிவு நோயும்
» இதயமும், மிகு இரத்த அழுத்தமும்
» இதயமும், மிகு இரத்த அழுத்தமும்
» இதயமும், மிகு இரத்த அழுத்தமும்
» சர்க்கரை நோயும் -நபிவழி மருத்துவமும்
» இதயமும், மிகு இரத்த அழுத்தமும்
» இதயமும், மிகு இரத்த அழுத்தமும்
» இதயமும், மிகு இரத்த அழுத்தமும்
» சர்க்கரை நோயும் -நபிவழி மருத்துவமும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum