சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

திருமண விளம்பரம் மூலம் பெண்களை ஏமாற்றும் நபரின் லீலை தொடர்கிறது  Khan11

திருமண விளம்பரம் மூலம் பெண்களை ஏமாற்றும் நபரின் லீலை தொடர்கிறது

Go down

திருமண விளம்பரம் மூலம் பெண்களை ஏமாற்றும் நபரின் லீலை தொடர்கிறது  Empty திருமண விளம்பரம் மூலம் பெண்களை ஏமாற்றும் நபரின் லீலை தொடர்கிறது

Post by நண்பன் Fri 21 Jan 2011 - 13:14

பதுளையைச் சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்வதாகக் கூறி, அவரை அழைத்துச் சென்ற நபர் பட்டிபொல பகுதியில் வைத்து பெண்ணை மிரட்டி அவரது நகைகளையும் கையடக்கத் தொலைபேசியையும் பறித்துக் கொண்டு தலைமறைவாகியுள்ளார். குறிப்பிட்ட நபர் பத்திரிகைகளில் மணமகள் தேவை என விளம்பரங்களை பிரசுரித்து அந்த விளம்பரம் மூலம் தொடர்பு கொள்ளும் குடும்பத்தாரிடம் நல்லவர் போல நடித்து பெண்களை அழைத்துச் சென்று இவ்வாறான ஏமாற்று வேலையில்
ஈடுபடுவதாக ஏமாற்றப்பட்ட பெண்கள் பலர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பொலிஸில் றைபாடு செய்யப்பட்ட போதிலும் இது வரையில் எதுவித முன்னேற்றம் காணப்படவில்லை எனவும் குடும்பத்தார் தெரிவிக்கின்றனர்.
குறித்த இச்சம்பவம் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது அது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது. பதுளையைச் சேர்ந்த குறித்த பெண் சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றவர். இவருக்கு குழந்தை ஒன்றும் உள்ளது. விவாகரத்திற்கு பின்னர் பெற்றோருடன் தங்கியிருக்கும் இப்பெண் குடும்பத்தில் மூத்தவர்.

இவர் கடந்த வருடம் ஜூலை மாதம் 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பத்திரிகை ஒன்றில்.

விவாகரத்து பெற்ற குடும்ப பொறுப்பற்ற மணமகள் தேவை என்ற விளம்பரத்தை பார்த்து அன்றே அதில் குறிப்பிடப்பட்டிருந்த கையடக்கதொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தியுள்ளார்.

தொலைபேசி அழைப்பில் தொடர்பில் வந்த நபர் தனது பெயர் அன்பு எனவும், தான் கடந்த 6 வருடங்களாக ஜப்பான் நாட்டில் இருந்த தாகவும் தான் அங்கிருந்த காலத்தில் தனது மனைவி வேறொரு ஆணுடன் போய்விட்டதாகவும் எனவே நாட்டுக்கு வந்ததும் அவரை விவாகரத்து செய்துவிட்டதாகவும் கூறியதுடன்.

தனக்கு பெற்றோர்கள் இல்லை, உறவு என்று சொல்வதற்கு ஒரு தங்கையும் அவருடைய கணவரும் அவரது 2 பிள்ளைகள் மட்டுமே.
தங்கை குடும்பத்துடன் மாத்தளையில் வசிக்கின்றார் என மேலும் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கூறியதாவது.

இது ஆடி மாதம் என்பதால் பெண்ணை பார்க்க வீட்டுக்கு வரமுடியாது. எனவே வேறு எங்காவது சந்திக்கலாம் வாருங்கள் என குறிப்பிட்ட பெண்ணை தனியே அழைக்கவே அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இறுதியில் பதுளை நகரில் சந்திப்பது என முடிவாகவே பின்னர் கதைக்கிறேன் என அழைப்பை துண்டித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 06 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று குறிப்பிட்ட பெண் அவருடைய தந்தை தம்பி ஆகியோர் சகிதம் பதுளை நகருக்குச் சென்று அவரை சந்தித்துள்ளனர். குறிப்பிட்ட நபர் அவர்களுடன் பேசியபோதும் அவர்களை நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்திற்கு அழைத்து செல்வதிலேயே முனைப்பாக இருந்துள்ளார் எனினும் பெண்ணை சார்ந்தோர் மறுத்து விடவே ஹோட்டல் ஒன்றில் தேநீர் அருந்தலாம் என சென்றபோது தற்செயலாக நபரின் கையடக்கத் தொலைபேசியை எடுத்த பெண் அதனை ஆராய்ந்து பார்த்தபோது அந்த கையடக்கத் தொலைபேசியில் அதிகமான பெண்களின் குறுந்தகவல்கள் இருந்துள்ளதை கண்ணுற்றதாகவும். அவற்றிற்கு பதில் அனுப்பியவாறே நபர் பெண் வீட்டாருடன் உரையாடியுள் ளார். அதன் பின்னர் அவர்கள் விடைபெற்றனர்.

மீண்டும் இரண்டு நாட்களுக்கு பின்னர் குறிப்பிட்ட பெண்ணுக்கு தொடர்பை ஏற்படுத்திய நபர். சீதை அம்மன் கோயிலுக்கு வருமாறு கூறியதுடன் அவருடைய தங்கை என அடையாளப்படுத்திய பெண்ணொருவரும் உரையாடியுள்ளார் அவரும் குறிப்பிட்ட பெண்ணை வருமாறு அழைத்துள்ளார். இதன் போதும் பெண் மறுத்துவிடவே தான் இந்தியாவுக்குச் சென்று வந்து திருமணத்தை வைத்துக் கொள்வதாகக் கூறி அழைப்பினை துண்டித்துக் கொண்டுள்ளார்.

அடுத்து வந்த ஒரு மாதம் எதுவித தொடர்புமின்றி போகவே குறிப்பிட்ட பெண் நபரின் தொலைபேசிக்கு தொடர்பினை ஏற்படுத்தி பார்த்துள்ளார். எனினும் நபரின் தொலைபேசி இலக்கம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

மீண்டும் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 04 ஆம் திகதி சனிக்கிழமை குறிப்பிட்ட பெண்ணுக்குக்கு தொடர்பினை ஏற்படுத்திய நபர் எனது தங்கையை குடும்பத்தாரை எதிர்வரும் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை உங்கள் வீட்டுக்கு அழைத்து வருகிறேன், நீங்கள் பண்டாரவளை நகருக்கு வந்து எங்களை அழைத்து செல்லுங்கள் எனக் கூறியுள்ளார்.

10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை குறிப்பிட்ட பெண் நபரையும் அவருடைய தங்கை குடும்பத்தினரையும் அழைத்துவர பண்டாரவளை ரயில் நிலையத்திற்கு சென்ற போது அங்கு அந்த நபர் மட்டுமே நின்றுள்ளார். உங்கள் தங்கை குடும்பத்தார் எங்கே எனக் கேட்ட போது முதலில் அப்புத்தளையில் நிற்கின்றனர் என தெரிவித்த அவர் பின்னர் ஒரு பெண்ணுக்கு தொடர்பை ஏற்படுத்தி ஏதோ உரையாடிவிட்டு தங்கை பட்டியபொலயில் நிற்கிறார்.
நாங்கள் அங்கு செல்வோம் எனக் கூறி ரயிலில் பட்டிபொலவுக்கு பயணித்தனர்.

ரயிலில் செல்லும் வழியில் பெண்ணிடம் கையடக்கத் தொலைபேசியை வாங்கியவர் நீ தவறவிட்டுவிடுவாய் என்னிடம் இருக்கட்டும் என பொக்கட்டுக்குள் வைத்துக் கொண்டுள்ளார்.

பட்டிபொல ரயில் நிலையத்தில் இறங்கியவர்கள் சிறிது தூரம் நடந்து சென்று ஒரு காட்டுப் பகுதியை அடைந்தனர் இதனால் அச்சமடைந்த பெண் நீங்கள் என்னை ஏமாற்றப் பார்க்கிறீர்கள். நான் போகிறேன் என வந்த வழியே திரும்பி நடக்க தனியே போகாதே என்னை நம்பியே உங்கள் அப்பா உன்னை அனுப்பியுள்ளார். நான் உன்னைக் கொண்டு விடுகிறேன் என பெண்ணுடன் நடந்துள்ளார். அவர்கள் ரயில் நிலையத்தை அடைந்த பொழுது அந்த சந்தர்ப்பத்தில் ரயில் இல்லை எனக் கூறவே பாதைக்கு வந்தவர்கள் ஒரு பஸ் வர அதில் ஏறி 30 ரூபா தொலைவான ஒரு இடத்தில் வந்து இறங்கியுள்ளனர்.

இந்த வழியே வெலிமடைக்கு செல்லலாம் எனக் கூறியுள்ளார் அவர் சிறிது தூரம் நடந்து சேற்று நிலமான பகுதியில் பெண்ணை தடுத்து நிறுத்தினார். அவள் மழைக்காக பிடித்திருந்த குடையை மடக்குமாறு கூறவே பெண் ஏன் என கேள்வி எழுப்ப குடையை பிடுங்கி எறிந்தவன் பெண்ணின் தலை முடியைப் பிடித்து கன்னத்தில் அடித்ததுடன் சரமாறியாக தாக்கி கீழே அமருமாறு கூறியுள்ளான். பின் உன்னைத் திருமணம் செய்ய அழைத்து வந்தேன் என எண்ணிவிடாதே நகைகளை கழற்றி தா என எச்சரித்துள்ளான். பெண் முடியாது எனக் கூறவே கை செயின் கழுத்து மாலை என்பவற்றை அறுத்து எடுத்ததுடன். வளையல் மோதிரம் கை செயின் தோடு, மாலை 2,500 ரூபா பணம் கையடக்கதொலைபேசி என்பவற்றை பறித்துக்கொண்டு போ என விரட்டி யுள்ளான். (இதன்போது அவனின் கையில் மர்மமான பொருளொன்று இருந்துள்ளது அது கத்தியாகக் கூட இருக்கலாம்.)

நகைகள் பணம் என்பவற்றை இழந்த பெண் எப்படி செல்வேன் எனப் புலம்ப வா உன்னை கொண்டு போய் விடுகிறேன் எனக் கூறி நுவரெலியா வீதியில் முச்சக்கர வண்டி ஒன்றில் ஏறியுள்ளனர். முச்சக்கரவண்டி நுவரெலியாவில் நிறுத்தப்படாமல் நானுஓயா நகரில் நிறுத்தப்பட்டது. குறிப்பிட்ட நபரும் முச்சக்கர வண்டி சாரதியும் வரும் வழியில் கதைத்துக் கொண்டே வந்துள்ளனர். இந்தப்பெண் யார் ஏன் அழுகிறார் என சாரதி கேட்க குறிப்பிட்ட நபர் அவரை நான் திருமணம் செய்யப் போகிறேன் இருவருக்கும் சண்டை அதுதான் அழுகிறார் எனக் கூறியுள்ளார்.

நானுஓயா நகரில் முச்சக்கரவண்டி சாரதியிடம் எவ்வளவு பணம் வேண்டும் எனக் கேட்ட போது உங்களிடம் பணம் கேட்பதா என சாரதி கூற குறிப்பிட்ட நபர் 500 ரூபாய் கொடுத்துள்ளார்.அதன்பின்னர் குறிப்பிட்ட பெண்ணை நானுஓயா ரயில் நிலையத்தில் இறுத்திவிட்டு இங்கேயே இரு நான் வாகனம் எடுத்துக் கொண்டு வருகிறேன் என சென்றவன் திரும்பி வரவில்லை.

அங்கே தனித்து போன பெண் அழுது கொண்டு நிற்க அங்கிருந்தோர் அவருடைய நிலை அறிந்து மறுநாள் அவரை அவரது வீட்டில் கொண்டு சேர்த்துள்ளனர்.

இதேவேளை குறிப்பிட்ட பெண்ணைக் காணாத அவர்களது குடும்பத்தார் பொலிஸ் அவசர அழைப்பு பிரிவிற்கு தெரிவித்ததுடன் மறுநாள் (11 ஆம் திகதி) காலை பசறை பொலிஸில் றைப்பாடு செய்துள்ளனர். குறிப்பிட்ட பெண் பசறை பொலிஸாரின் உதவியை நாடிய போது சம்பவம் நானுஓயா பகுதியில் இடம் பெற்றதால் நீங்கள் நானுஓயா பொலிஸில் முறைப்பாடு செய்யுங்கள் எனப் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கடந்த பல மாதங்களாக பல பெண்களை ஏமாற்றி நகை பணம் மற்றும் கையடக்க தொலைபேசிகளை பறித்து வருகிறார். இவர் தொடர்பாக பல முறைப்பாடுகள் பொலிஸில் இருப்பினும் இதுவரையில் நபர் தொடர்பான தகவல் எதுவும் கிடைக்கவில்லை எனக் குடும்பத்தார் கவலை தெரிவிக்கின்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வீரகேசரி வார வெளியீடு மற்றும் அதற்கு முதல் ஞாயிற்றுக் கிழமை வீரகேசரி வாரவெளியீடு பத்திரிகையில் திருமணம் செய்வதாக விளம்பரம் செய்து பெண்களை மோசடி செய்த நபர் தலைமறைவு என்ற தலைப்பிலும் பல பெயர்களில் பல ஊர்களில் பெண்களைமோசடி செய்த நபரைத் தேடுகிறது பொலிஸ் என்ற தலைப்பிலும் வெளியாகிய குறிப்பிட்ட செய்திகளின் தொடர் புடைய நபரே இந்தச் சம்பவத்திற்குக் காரண மானவர் என தற்போது தெரியவந்துள்ளது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum