Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
''அய்யா வைர முத்துவே''!
+3
முfதாக்
நண்பன்
லோக.அஞ்சன்
7 posters
Page 1 of 1
''அய்யா வைர முத்துவே''!
ஐயா வைரமுத்துவே -உன்
முத்தான கவிதைக்குள்
மூழ்கிப்போனவர்களில்
நானும் ஒருவன்.
சந்தம் தொனிக்க
முந்தும் தமிழில் நீ
சொந்தக் குரலில் பாடும்
சங்கத்தமிழுக்கும் நான் அடிமை
சந்தேகம் கிளப்பும் உன்
விந்தைத் தமிழ்ப் பேச்சின்
வீரியம் மறுதலிக்கும் -ஒரு
வினாக்குறி பற்றியதோர்
விடைதேடும் வினாக்கள்சில!
''காலில் அரிப்பெடுத்தாலும்
அதைக் குனிந்து சொறியத்
தலை குனியாத் தலைவனென்று''
அன்று நீ மேடையில் முழங்கினையே!- அது
உண்மையா? உசுப்பேற்றலா?
உதாரணமா? இல்லை
பரிசுக்காய் பாடிய பகட்டா?
ஓ கவித் துரோணா!-எங்கள்
முல்லையில் உள்ள முள்ளியில்-இரும்பு
முட்களால் எம்மை கொல்கையில்
ஐயகோ என்றுநாம் அலறையில்-சிறு
பிஞ்சுகள் பூக்களை பெண்டிரை
ஊனரை பாணரை இன்னும்
அம்புகள் கடிவிடுதூம்
அறத்தினுள் வருனரை
எங்களின் அரியணை மேவிய
உத்தமர் சுத்தனர்- வீரத்தில்
மலை ஒத்தவர் யாவரும்
கத்தினர் கதறினர் விம்மினர்-ஈற்றினில்
செத்தனர் செத்தனர் செத்தனரே!
ஐயா!
தன்காலின் அரிப்புக்காய்
தலை குனியாத் தலைவன்
தமிழர்நம் தலைசிதற உடல்
குற்றுயிராய் துடிக்க
குருதிகலந்த கடல்நீர் சிவக்க
குந்தியிருமணியில் நின்றது
போர்என்றான்!
உயிர்வாடை கொண்டுவந்த
உப்புக்காற்றின்ஈரம் உருக்காத மனமுளதோ?
உந்தலைவன் மனமென்ன உருக்கால் ஆனதுவோ?
உயிர்வாடை கொண்டு வந்த
உப்புக்காற்றின்ஈரம் உருக்காத மனமுளதோ?
உந்தலைவன் மனமென்ன
உருக்கால ஆனதுவோ?
நெஞ்சத்தே வேல் பார்க்க
நேர் விரைந்தாள் தமிழ்த்தாய்
வீரமற்ற மகனென்றே முலை
அறுத்தாள் இன்னொருத்தி
முறத்தால் புலிகலைத்தாள் ஓர் மறத்தமிழ்தாய்
மதமஅடக்கி வீரத்தில்
மலை நிகர்த்தாள் அரியாத்தை!
அம்மைகளின் வீரமின்னும் அரியணையில் இருக்கையிலே
உந்தலைவன் வீரமெங்கே
உரைப்பாயா உண்மைதனை?
வெடிக்கும் வெள்ளையர்க்கு
திறை மறுத்தான் கட்டபொம்மன்!
கனவில் ௯டக் கலங்க வைத்தான்
மண்ணின் மைந்தன் -என் முன்னோன்
பண்டார வன்னியன்!
மூவேந்தர் எழு வள்ளல்
தொடர் தொடராய் வீரம்!
காக்கை வன்னியனோடு எட்டப்பன் போல்
கனமாய் கை கோர்த்து
களை அழிக்கும் காரியமாய் -எங்
களை அழிக்கும் காரியமாய்
கனமழையாய் குண்டு வீசி -நெல்
முளையழித்துப்போன
நெஞ்சமற்ற ஈனருடன்
உந்தலைவன் கைகோர்த்தான்
அவன் யார்?
நெஞ்சம்பிழியும் நீசச் செயலின்முன்
வஞ்சத்தோடஞ்சி
வாழாவிருந்த அவன்
கால் சொறியாதிருக்க -சிங்களவன்
தலை வெட்டி போனானே
அறிகிலையோ நீ?
வையம் அறிந்திற்று!
நீர்க்குமிழ் உடைவதனால்
நீரலை ஆவதில்லை!
வேர்பாற வீழ்ந்தாலும்
வீரம் அழியவில்லை!
உடுக்கை இழந்து நாம்
உயிரழிந்து நிக்கையிலே
கடுக்கனில் விருப்புற்ற- உன்
கலைத்தலைவன் செயலே
காலத்திலும் மாறா -கன
வடுவாய் ஆனதெம்முள்!
புலித்தோலழிய புறப்பட்ட நரியதுவே
ஊளையிடாதிருந்து உறுமல் காட்டியதால்
வேங்கைப்புலிஎன்று
வீண் வார்த்தை பகர்ந்தனை காண்!
போகட்டும்...
ஈற்றில் ஒரு இறுதி வேண்டுகோள்!
பூ னைகளை எப்போதும்
புலியென்று பாடாதே!
சிறு நரியை இனிமேல்
சிறுத்தை என்றியம்பாதே!
கையாலாகானை
கொடைவள்ளல் என்னாதே!
சின்னத்தனத்தாரை
சிறப்புறப்பாடாதே!
----------முற்றும்-----------
முத்தான கவிதைக்குள்
மூழ்கிப்போனவர்களில்
நானும் ஒருவன்.
சந்தம் தொனிக்க
முந்தும் தமிழில் நீ
சொந்தக் குரலில் பாடும்
சங்கத்தமிழுக்கும் நான் அடிமை
சந்தேகம் கிளப்பும் உன்
விந்தைத் தமிழ்ப் பேச்சின்
வீரியம் மறுதலிக்கும் -ஒரு
வினாக்குறி பற்றியதோர்
விடைதேடும் வினாக்கள்சில!
''காலில் அரிப்பெடுத்தாலும்
அதைக் குனிந்து சொறியத்
தலை குனியாத் தலைவனென்று''
அன்று நீ மேடையில் முழங்கினையே!- அது
உண்மையா? உசுப்பேற்றலா?
உதாரணமா? இல்லை
பரிசுக்காய் பாடிய பகட்டா?
ஓ கவித் துரோணா!-எங்கள்
முல்லையில் உள்ள முள்ளியில்-இரும்பு
முட்களால் எம்மை கொல்கையில்
ஐயகோ என்றுநாம் அலறையில்-சிறு
பிஞ்சுகள் பூக்களை பெண்டிரை
ஊனரை பாணரை இன்னும்
அம்புகள் கடிவிடுதூம்
அறத்தினுள் வருனரை
எங்களின் அரியணை மேவிய
உத்தமர் சுத்தனர்- வீரத்தில்
மலை ஒத்தவர் யாவரும்
கத்தினர் கதறினர் விம்மினர்-ஈற்றினில்
செத்தனர் செத்தனர் செத்தனரே!
ஐயா!
தன்காலின் அரிப்புக்காய்
தலை குனியாத் தலைவன்
தமிழர்நம் தலைசிதற உடல்
குற்றுயிராய் துடிக்க
குருதிகலந்த கடல்நீர் சிவக்க
குந்தியிருமணியில் நின்றது
போர்என்றான்!
உயிர்வாடை கொண்டுவந்த
உப்புக்காற்றின்ஈரம் உருக்காத மனமுளதோ?
உந்தலைவன் மனமென்ன உருக்கால் ஆனதுவோ?
உயிர்வாடை கொண்டு வந்த
உப்புக்காற்றின்ஈரம் உருக்காத மனமுளதோ?
உந்தலைவன் மனமென்ன
உருக்கால ஆனதுவோ?
நெஞ்சத்தே வேல் பார்க்க
நேர் விரைந்தாள் தமிழ்த்தாய்
வீரமற்ற மகனென்றே முலை
அறுத்தாள் இன்னொருத்தி
முறத்தால் புலிகலைத்தாள் ஓர் மறத்தமிழ்தாய்
மதமஅடக்கி வீரத்தில்
மலை நிகர்த்தாள் அரியாத்தை!
அம்மைகளின் வீரமின்னும் அரியணையில் இருக்கையிலே
உந்தலைவன் வீரமெங்கே
உரைப்பாயா உண்மைதனை?
வெடிக்கும் வெள்ளையர்க்கு
திறை மறுத்தான் கட்டபொம்மன்!
கனவில் ௯டக் கலங்க வைத்தான்
மண்ணின் மைந்தன் -என் முன்னோன்
பண்டார வன்னியன்!
மூவேந்தர் எழு வள்ளல்
தொடர் தொடராய் வீரம்!
காக்கை வன்னியனோடு எட்டப்பன் போல்
கனமாய் கை கோர்த்து
களை அழிக்கும் காரியமாய் -எங்
களை அழிக்கும் காரியமாய்
கனமழையாய் குண்டு வீசி -நெல்
முளையழித்துப்போன
நெஞ்சமற்ற ஈனருடன்
உந்தலைவன் கைகோர்த்தான்
அவன் யார்?
நெஞ்சம்பிழியும் நீசச் செயலின்முன்
வஞ்சத்தோடஞ்சி
வாழாவிருந்த அவன்
கால் சொறியாதிருக்க -சிங்களவன்
தலை வெட்டி போனானே
அறிகிலையோ நீ?
வையம் அறிந்திற்று!
நீர்க்குமிழ் உடைவதனால்
நீரலை ஆவதில்லை!
வேர்பாற வீழ்ந்தாலும்
வீரம் அழியவில்லை!
உடுக்கை இழந்து நாம்
உயிரழிந்து நிக்கையிலே
கடுக்கனில் விருப்புற்ற- உன்
கலைத்தலைவன் செயலே
காலத்திலும் மாறா -கன
வடுவாய் ஆனதெம்முள்!
புலித்தோலழிய புறப்பட்ட நரியதுவே
ஊளையிடாதிருந்து உறுமல் காட்டியதால்
வேங்கைப்புலிஎன்று
வீண் வார்த்தை பகர்ந்தனை காண்!
போகட்டும்...
ஈற்றில் ஒரு இறுதி வேண்டுகோள்!
பூ னைகளை எப்போதும்
புலியென்று பாடாதே!
சிறு நரியை இனிமேல்
சிறுத்தை என்றியம்பாதே!
கையாலாகானை
கொடைவள்ளல் என்னாதே!
சின்னத்தனத்தாரை
சிறப்புறப்பாடாதே!
----------முற்றும்-----------
லோக.அஞ்சன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 9
மதிப்பீடுகள் : 10
Re: ''அய்யா வைர முத்துவே''!
இதயத்தின் வலி இன்னும் தீராத ரணங்களாக இங்கு காண முடிகிறது மறக்க நினைக்கும் சில கசப்புகழை இங்கு மீண்டும் மறக்காதே என்று கவி பாடிய லோகா அன்ஜன் அவர்களுக்கு பாராட்டுக்கள் மன சாந்தி பெற ஆறுதல் வாழ்த்துக்கள்
:( :( :pale: :pale: :pale: :oops: :oops:
:( :( :pale: :pale: :pale: :oops: :oops:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ''அய்யா வைர முத்துவே''!
உங்கள் அறிமுகம் தர முடியுமா அன்புறவே :];: :];:loga.anjan wrote:நன்றி சகோதரா!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ''அய்யா வைர முத்துவே''!
நான் இதை ஏனவே பார்த்தேன் லோகா,,,
வைரமுத்துவின்
பிரண்ட தனம்
பற்றி
மிகவும்
ஆணித்தரமாய்
அறிக்கை
இட்டது போல
இருக்கு
நன்று,,,
வைரமுத்துவின்
பிரண்ட தனம்
பற்றி
மிகவும்
ஆணித்தரமாய்
அறிக்கை
இட்டது போல
இருக்கு
நன்று,,,
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: ''அய்யா வைர முத்துவே''!
உங்கள் அறிமுகம் தர முடியுமா அன்புறவே//////
நிச்சயாமாக! தனிப்படவா இல்லை வெளிப்படையாகவா சகோதரா?
நிச்சயாமாக! தனிப்படவா இல்லை வெளிப்படையாகவா சகோதரா?
லோக.அஞ்சன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 9
மதிப்பீடுகள் : 10
Re: ''அய்யா வைர முத்துவே''!
என்னைப்பற்றி என்ற முகப்பில் உங்கள் அறிமுகம் வெளிப்படையாக அனைவரும் அறியும் விதமாக அமையட்டும் உறவே வாருங்கள்loga.anjan wrote:உங்கள் அறிமுகம் தர முடியுமா அன்புறவே//////
நிச்சயாமாக! தனிப்படவா இல்லை வெளிப்படையாகவா சகோதரா?
:here:
உங்கள் அறிமுகம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ''அய்யா வைர முத்துவே''!
சேனை இனிச் செந்தமிழ் பாடும்...!!!
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: ''அய்யா வைர முத்துவே''!
நிச்சியமாக கலந்திருப்போம் நட்போடு பணிப்போம் @. @.mufftaaa mod wrote:சேனை இனிச் செந்தமிழ் பாடும்...!!!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ''அய்யா வைர முத்துவே''!
மலருக்கு
இனி
மறுபிறப்பு
எம்மால்...!!!
இனி
மறுபிறப்பு
எம்மால்...!!!
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: ''அய்யா வைர முத்துவே''!
முffதா ஐ முஹம்மட் wrote:மலருக்கு
இனி
மறுபிறப்பு
எம்மால்...!!!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ''அய்யா வைர முத்துவே''!
@.நண்பன் wrote:முffதா ஐ முஹம்மட் wrote:மலருக்கு
இனி
மறுபிறப்பு
எம்மால்...!!!
Re: ''அய்யா வைர முத்துவே''!
செந்தமிழர் வலிகளெல்லாம்
சேர்த்து வைத்து சிதை மூட்டி
வந்தமிழன் கதையொன்று
வன்னி வாய்க்காலில் முடிந்ததனை
செந்தமிழால் நீயுரத்தாய்...!
வெந்தணல்கள் கொட்டி நெஞ்சில்
வேதனை தான் செய்தது போல்
சந்தமிட்டிச் சொன்னதெல்லாம்
பந்தி இட்டுப் பேசுதடா நெஞ்சில்...!
சந்திக்குச் சந்தி சாக்கடையாய் ஆன தந்தி
முந்திக்கு வந்தெதென்று
மூச்சிரைத்தொர் பலரும் இங்கு...!
பேசுவதில் லாபமில்லை
பெயர்த்தெறி பீதிதனை
ஒழிந்திருந்து தாக்குவதால்
பழி விலகிப் போகுமென்றால்
கிழிந்து விடும் கீழ்வானும்
மழை பொழிந்து விட வழியிறி...!
சேர்த்து வைத்து சிதை மூட்டி
வந்தமிழன் கதையொன்று
வன்னி வாய்க்காலில் முடிந்ததனை
செந்தமிழால் நீயுரத்தாய்...!
வெந்தணல்கள் கொட்டி நெஞ்சில்
வேதனை தான் செய்தது போல்
சந்தமிட்டிச் சொன்னதெல்லாம்
பந்தி இட்டுப் பேசுதடா நெஞ்சில்...!
சந்திக்குச் சந்தி சாக்கடையாய் ஆன தந்தி
முந்திக்கு வந்தெதென்று
மூச்சிரைத்தொர் பலரும் இங்கு...!
பேசுவதில் லாபமில்லை
பெயர்த்தெறி பீதிதனை
ஒழிந்திருந்து தாக்குவதால்
பழி விலகிப் போகுமென்றால்
கிழிந்து விடும் கீழ்வானும்
மழை பொழிந்து விட வழியிறி...!
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: ''அய்யா வைர முத்துவே''!
அன்னைத்தமிழணைந்த ஆருயிரின் துன்பங்க்கண்டு
தன்னைத்தந்தாகிலும் தடுத்திடுவோர் தமிழரென்றால்
தன் நாட்டின் தலைமகனாம் ராஜீவெனும் தருவறுத்து
எம்நாட்டின் அரசியலில் இழிதொரு நிலைதந்து
தமிழர்தம் பெருமையினை தரணியிலே தாழ்த்திட்ட
இழிமனிதர் எடுத்திட்ட வன்மங்கள் வன்துயர்கள்
இடராக இந்தியத்தாய் இதயத்தில் ஈட்டியாக
இறங்கித்தான் கிழித்ததுவும் இணையில்லாச் சோகத்தை
இம்மண்ணில் விதைத்ததுவும் வைரமுத்துவின் சோதரனே.....
தன்னைத்தந்தாகிலும் தடுத்திடுவோர் தமிழரென்றால்
தன் நாட்டின் தலைமகனாம் ராஜீவெனும் தருவறுத்து
எம்நாட்டின் அரசியலில் இழிதொரு நிலைதந்து
தமிழர்தம் பெருமையினை தரணியிலே தாழ்த்திட்ட
இழிமனிதர் எடுத்திட்ட வன்மங்கள் வன்துயர்கள்
இடராக இந்தியத்தாய் இதயத்தில் ஈட்டியாக
இறங்கித்தான் கிழித்ததுவும் இணையில்லாச் சோகத்தை
இம்மண்ணில் விதைத்ததுவும் வைரமுத்துவின் சோதரனே.....
Re: ''அய்யா வைர முத்துவே''!
அருமையான செந்தமிழில் கவிதை பகிர்ந்த உறவுக்கு நன்றி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum