சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Today at 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Today at 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Today at 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Today at 13:53

» வரகு வடை
by rammalar Today at 13:40

» கை வைத்தியம்
by rammalar Today at 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Today at 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Today at 10:49

» விடுகதைகள்
by rammalar Today at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Today at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Today at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Today at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Today at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41

» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26

குழந்தைகளை சாப்பிட வைப்பது எப்படி? Khan11

குழந்தைகளை சாப்பிட வைப்பது எப்படி?

+3
ஹம்னா
யாதுமானவள்
gud boy
7 posters

Go down

குழந்தைகளை சாப்பிட வைப்பது எப்படி? Empty குழந்தைகளை சாப்பிட வைப்பது எப்படி?

Post by gud boy Fri 13 Jan 2012 - 21:20

சாப்பிடாமல் அடம் பிடிப்பது குழந்தைகளின் சுபாவம். அதை மாற்ற முடியாமல் திண்டாடுவது அம்மாக்களின் சுபாவம் என்றாகிவிட்டது. அடம் பிடிக்கும் குழந்தைகளை ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகளை சாப்பிட வைப்பது சுலபமானதல்ல.

குழந்தைகள் முடிவெடுக்கட்டும் :-

எதையாவது சமைத்துவிட்டு "இதை சாப்பிடப் போறியா இல்லையா?" என்று குழந்தைகளை மிரட்டுவதை மறந்துவிடுங்கள். நாளை அல்லது அடுத்த ஒரு வாரம் உங்கள் குழந்தைகள் எதை சாப்பிட விரும்புகிறார்கள் எனபதைக் கேட்டு சமைத்தால் அவர்கள் வேண்டாம் என்று சொல்ல வாய்ப்பு இருக்காது. அவர்கள் கேட்பதெல்லாம் சமைக்க நேரமில்லை என்றால் அவற்றை விடுமுறை நாட்களில் சமைப்பதாக கூறலாம்.

இந்த வம்பே வேண்டாம் என்று நினைப்பவர்கள் 2 அல்லது 3 உணவு வகைகளிலிருந்து ஒன்றை தேர்ந்தெடுக்கும்படி குழந்தைகளிடம் கேட்கலாம். குழந்தைகளிடையே எதை சாப்பிட வேண்டும் என்ற சண்டை ஏற்படலாம். அப்படி ஏற்படாமல் இருக்க குழந்தைகளிடையே உருவாகும் போட்டியை தடுப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

சமையலில் குழந்தைகள் உதவட்டும் :-

நீங்கள் சமைக்கும்போது உங்கள் குழந்தைகளின் உதவியை நாடுங்கள். அவர்கள் வயதிற்கேற்ப சமையலில் உங்களுக்கு உதவும்படி கேட்டு கொள்ளுங்கள். பரிமாறும் போது, குழந்தை உதவியதை மறக்காமல் அனைவரிடமும் சொல்லுங்கள். நீங்களும் மற்ற குடும்பத்தினரும் குழந்தையைப் பாராட்டுங்கள். இப்போது குழந்தை முகம் சுளிக்காமல் சாப்பிடுவதைப் பாருங்கள்!

வித்தியாசமாக சாப்பிடட்டும் :-

பெரியோர்கள் சாப்பிடுவதைப் போலவே குழந்தைகள் சாப்பிட வேண்டும் என்று நினைக்காதீர்கள். "சப்பாத்தியுடன் ஜாம் யாராவது சாப்பிடுவாங்களா?" "சீஸ் சாதத்துடன் சாப்பிடக் கூடாது!" இப்படி சொல்வதைவிட்டு அவர்கள் விரும்பும் வகையில் உணவை கொடுத்தால், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

பசிக்கும் போது சாப்பிடட்டும் :-

நாம் சாப்பிடும் நேரங்களில் குழந்தைகளும் சாப்பிட வேண்டும் என்று நினைப்பதால் தான் நாம் அவர்களை வற்புறுத்துகிறோம். பசித்தால் அதைத் தாங்கிக் கொண்டு எந்தக் குழந்தையும் சாப்பிடாமல் இருக்காது! நம் வற்புறுத்தல் அவர்களுக்கு சாப்பிடும் பழக்கத்தைவிட உணவை வெறுக்கும் பழக்கத்தையே உண்டாக்கும். இதை தவிர்க்க குழந்தைகள் விரும்பி கேட்கும் போது உணவு கொடுத்தால் அவர்களுக்கு உணவைக் கண்டால் ஓட வேண்டும் என்ற நினைப்பு மாறிவிடும்.

ஷ்ஷ்ஷ்!! தெரியாமலே போகட்டும் :-

பல சமயங்களில் சத்தான உணவு வகைகள் குழந்தைகளுக்குப் பிடிக்காமல் போகலாம். அதற்காக அவற்றை ஒதுக்கிவிட வேண்டாம். மிகச் சிறிய துண்டுகளாக நறுக்கி / துறுவி அல்லது நன்றாக அரைத்து / மசித்து அவர்களுக்குப் பிடித்த உணவுடன் கலந்துவிடலாம். இவற்றைக் குறைவானஅளவில் சேர்ப்பது நல்லது. அதிக அளவில் கலந்து ருசி மாறிவிட்டாலும் கவலை வேண்டாம். இருக்கவே இருக்கு தக்காளி சாஸ், சீஸ் போன்றவை!

மேலே உள்ள குறிப்புகளை பின்பற்றினால் ஒரே நாளில் அல்லது வாரத்தில் குழந்தைகள் மாறிவிடுவார்கள் என்று எண்ண வேண்டாம். தொடர்ந்து பின்பற்றுங்கள். ஒரு மாதத்தில் நீங்களே மாற்றத்தைப் பார்க்கலாம்.
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

குழந்தைகளை சாப்பிட வைப்பது எப்படி? Empty Re: குழந்தைகளை சாப்பிட வைப்பது எப்படி?

Post by யாதுமானவள் Sat 14 Jan 2012 - 15:25

என்னுடைய மூத்த மகன் குழந்தையாய் இருக்கும்போது சாப்பிட மிக மிக அடம்பிடிப்பான். அதை இப்போது சொன்னால் அவன் சொல்லும்பதில்... "அப்பவே உங்க சமையல் எங்களுக்கு பிடிக்காம இருந்தது மம்மி ன்னு சொல்றான்... :( "
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

குழந்தைகளை சாப்பிட வைப்பது எப்படி? Empty Re: குழந்தைகளை சாப்பிட வைப்பது எப்படி?

Post by ஹம்னா Sat 14 Jan 2012 - 19:20

யாதுமானவள் wrote:என்னுடைய மூத்த மகன் குழந்தையாய் இருக்கும்போது சாப்பிட மிக மிக அடம்பிடிப்பான். அதை இப்போது சொன்னால் அவன் சொல்லும்பதில்... "அப்பவே உங்க சமையல் எங்களுக்கு பிடிக்காம இருந்தது மம்மி ன்னு சொல்றான்... :( "
:’|: :’|:


குழந்தைகளை சாப்பிட வைப்பது எப்படி? X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

குழந்தைகளை சாப்பிட வைப்பது எப்படி? Empty Re: குழந்தைகளை சாப்பிட வைப்பது எப்படி?

Post by *சம்ஸ் Sat 14 Jan 2012 - 20:09

யாதுமானவள் wrote:என்னுடைய மூத்த மகன் குழந்தையாய் இருக்கும்போது சாப்பிட மிக மிக அடம்பிடிப்பான். அதை இப்போது சொன்னால் அவன் சொல்லும்பதில்... "அப்பவே உங்க சமையல் எங்களுக்கு பிடிக்காம இருந்தது மம்மி ன்னு சொல்றான்... :( "

புத்தியான பிள்ளைக்கு அறிகுறி அக்கா உங்களின் பையன் புத்திசாலி :)

சிறந்த பகிர்விற்கு நன்றி தோழரே


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

குழந்தைகளை சாப்பிட வைப்பது எப்படி? Empty Re: குழந்தைகளை சாப்பிட வைப்பது எப்படி?

Post by mufees Sat 14 Jan 2012 - 20:14

அருமையான பதிவுக்கு நன்றி .
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

குழந்தைகளை சாப்பிட வைப்பது எப்படி? Empty Re: குழந்தைகளை சாப்பிட வைப்பது எப்படி?

Post by நண்பன் Sat 14 Jan 2012 - 21:42

எங்க வீட்டிலும் இதே தொல்லை குழந்தையை சாப்பிட வைப்பது பெரிய காரியம் :!#: :!#:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளை சாப்பிட வைப்பது எப்படி? Empty Re: குழந்தைகளை சாப்பிட வைப்பது எப்படி?

Post by முfதாக் Sun 15 Jan 2012 - 5:53

பிள்ளயளிண்ட பிரச்சன பெரிய
பிரச்சன எண்டு ஏனப்பு பீத்திக்கிற...?
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

குழந்தைகளை சாப்பிட வைப்பது எப்படி? Empty Re: குழந்தைகளை சாப்பிட வைப்பது எப்படி?

Post by நண்பன் Sun 15 Jan 2012 - 13:25

முffதா ஐ முஹம்மட் wrote:பிள்ளயளிண்ட பிரச்சன பெரிய
பிரச்சன எண்டு ஏனப்பு பீத்திக்கிற...?
நுளைந்து பாருங்கள் அதிலும் எவ்வளவு சுகம் உள்ளது :+=+: :+=+:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளை சாப்பிட வைப்பது எப்படி? Empty Re: குழந்தைகளை சாப்பிட வைப்பது எப்படி?

Post by gud boy Sun 15 Jan 2012 - 18:52

யாதுமானவள் wrote:என்னுடைய மூத்த மகன் குழந்தையாய் இருக்கும்போது சாப்பிட மிக மிக அடம்பிடிப்பான். அதை இப்போது சொன்னால் அவன் சொல்லும்பதில்... "அப்பவே உங்க சமையல் எங்களுக்கு பிடிக்காம இருந்தது மம்மி ன்னு சொல்றான்... :( "


தாயை போல பிள்ளை.. :,;: :,;:
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

குழந்தைகளை சாப்பிட வைப்பது எப்படி? Empty Re: குழந்தைகளை சாப்பிட வைப்பது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum