சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சிரிக்க சில நிமிடங்கள் - Page 3 Khan11

சிரிக்க சில நிமிடங்கள்

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

சிரிக்க சில நிமிடங்கள் - Page 3 Empty சிரிக்க சில நிமிடங்கள்

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 1:26

First topic message reminder :

ஒரு பணக்காரரிடம் வேலைகேட்டு ஓர்இளைஞர் வந்து பணிவுடன் நின்றார்.

என்னிடம் வேலை ஒன்றும் காலியாக இல்லை. வேறு எங்காவது தேடுங்கள் என்றார் அவர்.

நான் உங்களைச் சேர்ந்த யார் என்ன சொன்னாலும் கீழ் படிந்து நடப்பேன், எனக்கு வேலை கொடுக்க வேண்டும் என மன்றாடினான்.

அவர் என்னிடம் எந்த வேலையும் காலி இல்லை என்று சொன்னார்;.

மருமகன் வேலை காலியாக இருக்கிறதே என்றான் அந்த வாலிபன்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down


சிரிக்க சில நிமிடங்கள் - Page 3 Empty Re: சிரிக்க சில நிமிடங்கள்

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 1:58

ஜோ : நான் வண்டி ஓட்டும்போது யாரும் லிப்ட் கேட்க மாட்டாங்க..
ஜான் : ஏன்?
ஜோ : ஏன்னா… நான் ஓட்டுறது ரோடு ரோலர் ஆச்சே.. ஹி..ஹி.

***

ஜோவும், நண்பரும் காபி ஷாப் சென்றிருந்தனர்.
நண்பர் : "காபி ஆறதுக்குள்ள குடிச்சுடு."
ஜோ : "சூடான காபி (Hot coffee) 5 ரூபா, ஆறிய காபி (Cold coffee) 10 ரூபானு போட்டுருக்காங்க இல்ல, அதனாலதானே!.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிரிக்க சில நிமிடங்கள் - Page 3 Empty Re: சிரிக்க சில நிமிடங்கள்

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 1:58

நண்பர் : "என்ன பண்ணிட்டிருக்க ஜோ?"
ஜோ : "எங்க அப்பாவுக்கு லெட்டர் எழுதிக்கிட்டு இருக்கேன்"
நண்பர் : "அதுக்கு ஏன் இவ்வளவு மெதுவா எழுதற?"
ஜோ : "அவரால வேகமாக படிக்க முடியாது. அதனால்தான் மெதுவா எழுதறேன்"


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிரிக்க சில நிமிடங்கள் - Page 3 Empty Re: சிரிக்க சில நிமிடங்கள்

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 1:59

ஓவிய கண்காட்சிக்கு சென்றிருந்த ஜோ பக்கத்திலிருந்தவரிடம்,
ஜோ : "எப்படி பாத்தாலும் ஒண்ணும் புரியல. இது என்ன ஓவியம்?"
நபர் : "இது முகம் பார்க்கும் கண்ணாடி சார்"


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிரிக்க சில நிமிடங்கள் - Page 3 Empty Re: சிரிக்க சில நிமிடங்கள்

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 2:00

ஒரு ஆராய்ச்சியாளர் தவளையை வைத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார். அவர் அதைத் "தாவு" என்று சொன்னால் அது தாவும்படி பழக்கியிருந்தார். ஆராய்ச்சியில் அதன் கால்களில் ஒன்றை வெட்டிவிட்டு, தாவு என்றவுடன் தவளை மூன்று கால்களால் கஷ்டப்பட்டுக் குதித்தது. அடுத்து இன்னொரு காலை வெட்டிவிட்டு, தாவு என்றவுடன் அப்போதும் கஷ்டப்பட்டு குதித்தது. மூன்றாவது காலை எடுத்ததும் மிகுந்த வலியுடன் ஒற்றைக்காலால் குதித்து எப்படியோ தாவியது. கடைசியாக நாலாவது காலையும் அவர் வெட்டிவிட்டு, தாவு என்றார். நகரவே முடியாமல் தவளை பரிதாபமாக விழித்தது. தவளை அசையவே இல்லை. அவர் தன் ஆராய்ச்சி முடிவில் எழுதினார், "நான்கு கால்களையும் எடுத்து விட்டால் தவளைக்குக் காது கேட்காது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிரிக்க சில நிமிடங்கள் - Page 3 Empty Re: சிரிக்க சில நிமிடங்கள்

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 2:00

கல்லறையின் முன்னால் ஒருவன். "நீ செத்திருக்கவே கூடாது. நீ செத்ததனால் நான் எவ்வளவு கொடிய துன்பங்கள் அனுபவிக்கிறேன் தெரியுமா? என் வாழ்க்கையே நரகமாகி விட்டது. நீ சாகாமல் இருந்திருக்கக் கூடாதா?" என்று அதையே திரும்பத் திரும்பச் சொல்லி அழுது கொண்டிருந்தான்.

அங்கு வந்த ஒருவர் அவனைப் பார்த்து இரக்கப் பட்டார். ஆறுதல் சொல்ல நினைத்தார்.

அவனருகே வந்த அவர் "இறந்து போனவர் உன் தந்தையா?" என்று கேட்டார்.

"இல்லை" என்றான் அவன்.

"மகனா?" என்று கேட்டார் அவர்.

"இல்லை" என்றான் அவன்.

வியப்பு அடைந்த அவர், "இறந்து போனவர் உனக்குத் தந்தையும் இல்லை மகனும் இல்லை என்கிறாய். எதற்காக இப்படி அழுது புலம்புகிறாய்? அவர் உனக்கு என்ன உறவாக வேண்டும்?" என்று கேட்டார்.

"இறந்து போன இவர் என் மனைவியின் முதல் கணவன்" என்று அழுதுகொண்டே சொன்னான் அவன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிரிக்க சில நிமிடங்கள் - Page 3 Empty Re: சிரிக்க சில நிமிடங்கள்

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 2:01

கிராமவாசி ஒருவர்,உலக நாடுகளை சுற்றிப்பார்க்க விரும்பினார். இதற்காக அவர் பிரபல சுற்றுலா நிறுவனத்தை அணுகினார். சுற்றுலா நிறுவனம் சொன்ன கட்டணத்தை செலுத்திவிட்டு, குறிப்பிட்ட தினத்தன்று அவர் பயணமானார். முதல் நாள் நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டார். .

அப்போது அவர், சுற்றுலா நிர்வாகியிடம், எப்போது சாப்பிடலாம் என்று கேட்டார்.
அதற்கு அந்த நிர்வாகி, காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மதிய உணவு 11 மணி முதல் 2 மணி வரையிலும், மாலை உணவு 3 மணி முதல் 6 மணி வரையிலும், இரவு உணவு 7மணி முதல் 11 மணி வரையிலும் ஓட்டலில் கிடைக்கும் என்று தெரிவித்தார்.

அதனைக் கேட்ட கிராமவாசி, நடுவே கிடைக்கும் ஒவ்வொரு மணி நேரத்தில் நான் எப்படி ஊர் சுற்றி பார்ப்பது என்று அலறினார்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிரிக்க சில நிமிடங்கள் - Page 3 Empty Re: சிரிக்க சில நிமிடங்கள்

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 2:02

ஒரு நாட்டில் போர் நடந்து கொண்டிருந்தது. அரசாங்கம் "குடிமக்கள் அனைவரும் தம் சக்திக்கு ஏற்ப யுத்த நிதி வழங்க வேண்டும்" என்று ஒரு உத்தரவு போட்டது. ஒரு பெரும் பணக்காரர் மட்டும் ஒரு பைசா கூட தராதது ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டது. உடன் ஒரு அதிகாரி அந்தப் பணக்காரரிடம் பேசி நிதி வாங்கி வர அனுப்பப் பட்டார்..

"அய்யா.. தாங்கள் இதுவரை நிதி தரவில்லை என்பது அரசு ஆய்வில் தெரிய வந்துள்ளது.. எனவே..."

"நிறுத்துங்கள்.. என்னய்யா பெரிய ஆய்வு..? என்னுடைய தாய் அடுத்த வேளை சோற்றுக்கில்லாமல் பட்டினி கிடந்து செத்தாளே.. அதை ஆய்வு செய்தீர்களா..??"

" வருந்துகிறேன் அய்யா.. ஆனால்..."

" என் தந்தை புற்றுநோயால் அவதிப்பட்டு தர்ம ஆஸ்பத்திரியில் தரையில் கிடந்து செத்தாரே.. அதைக் கண்டுபிடித்தீர்களா உங்கள் ஆய்வில்..?"

" மன்னிக்கவும் அய்யா.. இது...."

"நான் இன்னும் முடிக்கவில்லை..என்னுடைய தம்பி கடனாளி ஆகி குடும்பத்துடன் விஷம் குடித்தானே.. அது தெரியுமா உங்களுக்கு..?"

" தெரியாது அய்யா.."

" அவ்வளவு அவஸ்தைப் பட்ட அவர்களுக்கே நான் ஒரு பைசா கொடுக்கவில்லை.. உங்களுக்கு தருவேனா..? போய் வாருங்கள்..!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிரிக்க சில நிமிடங்கள் - Page 3 Empty Re: சிரிக்க சில நிமிடங்கள்

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 2:02

அதிபர் புஷ் வானுலகம் சென்றார்.. எமன் அவருக்கு தண்டனை விதித்து அதற்கான மூன்று தேர்வுகள் கொடுத்து எதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்க சொன்னான்..

முதல் அறையைத் திறந்து காட்ட, ஹிட்லரை சவுக்கால் அடித்துக் கொண்டிருந்தார்கள்.. புஷ் தன்னால் அடி தாங்க முடியாது என்று சொல்ல அடுத்த கதவு திறக்கப் பட்டது.
அங்கு இடி-அமீனை உரலில் போட்டு இடித்துக் கொண்டிருந்தார்கள்.. புஷ் அதுவும் முடியாதென்று மறுக்க.. அடுத்த கதவு திறந்துகாட்டும் போது எமன் சொன்னான்..

இதற்கு உமக்கு அருகதையே இல்லை.. இருந்தாலும் மூன்றாவது சாய்ஸ் இதுதான்..

அங்கு காந்தி அவர்களுக்கு எலிசபெத் டெய்லர் கால் அமுக்கி விட்டுக் கொண்டிருந்தார்.. புஷ் மிகுந்த சந்தோஷத்துடன் இதை ஏற்றுக்கொள்கிறேன் என்று கூற.. எமன் எலிசபெத் டைலரிடம் சொன்னான்..

" அம்மையாரே.. நீங்கள் கிளம்புங்கள்.. உங்கள் தண்டனைக் காலம் முடிந்து விட்டது.. இனி புஷ் பார்த்துக் கொள்வார்..!"


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிரிக்க சில நிமிடங்கள் - Page 3 Empty Re: சிரிக்க சில நிமிடங்கள்

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 2:03

ஒரு வேலைக்கான நேர்காணல்..

அதிகாரி ; இதுவரைக்கும் சிறப்பா செஞ்சுருக்கீங்க. இந்த மொழியறிவுச் சுற்றுலயும் தேர்வடைஞ்சுட்டீங்கன்னா வேலை கிடைச்சுடும்.. ஓ.கே. வா. சரி சொல்லுங்க..கூட்டுக்குறைபாட்டு குழுப்பதிவு சித்தாந்தம். இது பற்றி விளக்க முடியுமா..?

ம்ம். முடியுமே.. என் சித்தப்பா மகனுக்கு இந்த வேலையைக் கொடுத்தாச்சு. நீ போகலாம் அப்படின்னு அர்த்தம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிரிக்க சில நிமிடங்கள் - Page 3 Empty Re: சிரிக்க சில நிமிடங்கள்

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 2:04

தகப்பனார் சட்டையை எடுத்து மாட்டும் போது பையை கவனித்தார்.. காசு குறைந்தது.. பையனைத் திட்டினார்.. பையன் இல்லையென்று மறுத்தான்..தகப்பனார் நம்பவேயில்லை.. அம்மாக்காரி மகனுக்கு பரிந்து பேசினாள்..

ஏங்க பிள்ளையை கரிச்சு கொட்டறீங்க..? நான் எடுத்திருக்கக் கூடாதா..?

சான்ஸே இல்லே கமலா.. இன்னும் பணம் மிச்சம் பையில இருக்கே..!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிரிக்க சில நிமிடங்கள் - Page 3 Empty Re: சிரிக்க சில நிமிடங்கள்

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 2:04

கணவன் ஒருநாள் அலுவலகத்திலிருந்து தாமதமாக வந்தான்.. மனைவி அவன் சட்டையை சோதனை இட்டாள்.. ஒரு பெண்ணின் தலை முடி இருந்தது..பிலாக்கணம் பாடினாள்..

ஓஹோ.. உங்க வயசுக்கு சின்னப் பொண்ணா கேக்குதோ..?

இன்னொரு நாள் நரை முடி இருக்க.. கத்தினாள்..

கிழட்டு மாடுகளுடன் சகவாசமா..?வெட்கமா இல்லே..?

மறுநாள் சட்டையை நன்கு உதறிப் போட்டுக் கொண்டு வந்தான்.. மனைவிக்கு முடி எதுவும் தென்படவில்லை.. இருந்தாலும் விடவில்லை..

அடப்பாவி மனுஷா.. மொட்டை அடிச்சவளைக்கூட விடுறது இல்லியா..?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிரிக்க சில நிமிடங்கள் - Page 3 Empty Re: சிரிக்க சில நிமிடங்கள்

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 2:04

கேடி கபாலியோட மகளை, நம்ம இன்ஸ்பெக்டர் மகனுக்குக் கேட்டாங்களே என்னாச்சி?"

" பழக்க வழக்கம் சரியிருக்காதுன்னு கபாலி வேண்டாமுன்னு
சொல்லிட்டான்..!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிரிக்க சில நிமிடங்கள் - Page 3 Empty Re: சிரிக்க சில நிமிடங்கள்

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 2:05

ஆசிரியர் : ஏண்டா எவ்வளவு சொன்னாலும் அதிகப்பிரசங்கித்தனமா பேசுற? நல்ல மாட்டுக்கு ஒரு சூடு..

சின்னா : நல்ல மாட்டுக்கு ஏன் சார் சூடு போடணும்? அது தான் நல்ல மாடு ஆச்சே?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிரிக்க சில நிமிடங்கள் - Page 3 Empty Re: சிரிக்க சில நிமிடங்கள்

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 2:06

ஆசிரியர் : மாணவர்களே, நீங்க எல்லாரும் வைரம் மாதிரி....

சின்னா : நீங்க கூட வைரம் தான் ஸார்..

ஆசிரியர் : எப்படி சொல்றே ?

சின்னா : ஒரு வைரத்தால தானே இன்னொரு வைரத்தை அறுக்க முடியும்..?!!!!!!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிரிக்க சில நிமிடங்கள் - Page 3 Empty Re: சிரிக்க சில நிமிடங்கள்

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 2:06

சோதனை அதிகாரி : உங்க பள்ளியில் சுமாரா எத்தனை மாணவிகள் இருப்பாங்க?

சின்னா: எங்க பள்ளியில எல்லா பொண்ணுங்களுமே சுமார் தான் சார்...!!!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிரிக்க சில நிமிடங்கள் - Page 3 Empty Re: சிரிக்க சில நிமிடங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum