Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
முல்லைப் பெரியாறு நிபுணர் குழு அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்
Page 1 of 1

அறிக்கை பற்றி எதுவுமே கூற முடியாதென ஊடகவியலாளர்கள் முன்னிலையில் தெரிவிப்பு
முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் இறுதி முடிவை எடுப்பதற்குண்டான கட்டத்திற்கு, நிபுணர் குழு வந்துள்ளது. ஏற்கனவே திட்டமிட்டபடி தனது அறிக்கையை, அடுத்த மாதம் இறுதியில், உச்ச நீதிமன்றம் முன்பாக சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தங்களது அறிக்கை குறித்து எந்தவித தகவலும் வெளியில் கசியவிடக் கூடாது என்பதில் மிகுந்த கவனம் செலுத்தவும் முடிவெடுத்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக, 2010ம் ஆண்டு மார்ச் மாதத்தில் உச்ச நீதிமன்றம் ஒரு குழுவை அமைத்தது. அணையின் பலம் குறித்து ஆய்வு செய்து அறிக்கையை சமர்ப்பிக்கும்படி, அந்த குழுவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், தாங்கள் இதுவரை மேற்கொண்டு வந்த ஆய்வு மற்றும் ஆலோசனைகளுக்கு இறுதி வடிவம் தரும் கட்டத்திற்கு ஐவர் குழு வந்துள்ளது. இதற்காக நேற்று முன்தினம் டில்லி நீர்வள ஆணைய அலுவலகத்தில் ஐவர் குழு கூடி ஆலோசனை நடத்தியது. இந்த கூட்டம் நடைபெறுவதை முன்னிட்டு தமிழகம் சார்பில், கடந்த திங்கட்கிழமை நீதிபதி ஆனந்தை நேரில் சந்தித்து ஒரு மனுவும் அளிக்கப்பட்டது.
அதில் கேரளா முன்வைக்கும் வாதங்கள் அனைத்துமே உண்மைக்கு மாறானவை என்றும் அதை ஏற்க வேண்டாம் என்றும் கூறப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியதுமே, கேரள தரப்பில் ஒரு மனு அளிக்கப்பட்டது. அதில், அணையின் பலம் மிகவும் மோசமாக உள்ளதாக தங்களது மனுவோடு இணைத்து அளித்தது.
நேற்று முன்தினம் எல்லாமே மிகுந்த கெடுபிடிகளுக்கு உள்ளாக்கப்பட்டன. ஆனந்த், இலட்சுமணன், தோமஸ், தத்தே, மேத்தா என ஐந்து பேர் மட்டுமே அரங்கிற்குள் இருந்தனர். வழக்கறிஞர்கள் யாரும் வரவில்லை. அலுவலகத்திற்குள் கூட நுழைய அனுமதிக்காமல் பத்திரிகை யாளர்கள் அனைவரும் வீதியிலேயே நிறுத்தப்பட்டனர். கூட்டம் முடிந்ததும், மாலையில் வெளியில் வந்த தமிழக பிரதிநிதி இலட்சுமணன், அங்கிருந்த நிருபர்களைப் பார்த்து, யாரிடமும் பேச மாட்டேன்.
எதுவும் இப்போது கூற முடியாது. தமிழ் நாடு இல்லம் வரை என்னை தொடர்ந்து வந்து கேட்டாலும் கூட, எதுவும் தெரிவிக்க இயலாது என்று கூறிவிட்டுக் கிளம்பினார். அதேவேளை, அப்போது அங்கு வந்த கேரளா தரப்பு பிரதிநிதியான கே.டி. தாமஸ், இன்றும் இந்த கூட்டம் தொடர்ந்து நடைபெறும். தவிர பெப்ரவரியில் உச்ச நீதிமன்றத்தில் ஐவர் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டுமென்று திட்டமிட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum