Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சமுர்த்தி உத்தியோகத்தர்கள் அரச நிரந்தர சேவைக்குள் இணைப்பு
Page 1 of 1

மார்ச் மாதம் முதல் அமுல் திவிநெகும திணைக்களத்தின் கீழ் செயற்பாடு
புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்
மார்ச் மாதம் முதல் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் அரசாங்க ஓய்வூதியம் பெறும் நிரந்தர உத்தியோகத்தர்களாக மாற்றப்பட வுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தி யோகத்தர்களுடனான சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மேற்கண்டவாறு கூறினார். நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (24.01.2012) வாழைச்சேனை பேத்தாழை குகனேசன் மண்டபத்தில் வைத்து மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை அமைச்சர் சந்தித்தார். இதன் போது தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் எதிர்வரும் மார்ச் மாதத்துடன் அரசாங்க திணைக்களத்தின் கீழ் உள் வாங்கப்படவுள்ளனர்.
இவர்கள் திவிநெகும எனும் திணைக்களத்தின் கீழ் உள்வாங்கப்படவுள்ள னர். அதன் மூலம் இந்த நாட்டிலுள்ள அனைத்து சமுர்த்தி உத்தியோகத்தர்களும் நிரந்தர அரசாங்க உத்தியோகத்தர்களாக மாற்றப்படவுள்ளனர்.
இதற்கான அங்கீகாரத்தை அமைச்சரவையி லும் பாராளுமன்றத்திலும் பெறவுள்ளோம்.
நிந்தர ஓய்வூதியம் பெறும் அரசாங்க உத்தியோகத்தர்களாக சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மாற்றப்பட்டு அவர்களுக்கு அரசாங்க உத்தியோகத்தர்கள் பெறும் அத்தனை சலுகைகளும் வழங்கப்படும்.
திவிநெகும திட்டத்தினூடாக வறிய மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பாடுபட வேண்டும். அதற்காக திறம்பட உழைக்க வேண்டும். இத்திட்டத்தினை வெற்றிகரமாக கொண்டு செல்வதற்கான அனைத்து ஒத்துழைப்புகளையும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் வழங்க வேண்டும்.
சமுர்த்தி உத்தியோகத்தர்கள் நிரந்தர அரசாங்க உத்தியோகத்தர்களாக மாறும் போது மூன்று வழிவகைகளை பின்பற்ற முடியும். இவ்வளவு காலமும் சமுர்த்தி உத்தியோகத்தர்களாக செலுத்தி வந்த 12% ஊழியர் சேமலாப நிதியினை (ஈ.பி.எப்) பெற்றுக் கொள்ள முடியும் அவ்வாறு அவர்கள் அதை பெற்றுக் கொண்டால் அவர்கள் எதிர்வரும் மார்ச் மாதம் முதல் புதிய நியமனத்துக்குள்ளாகுவார்கள்.
அவ்வாறில்லாமல் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் வழங்கிய 12 வீத ஊழியர் சேமலாப நிதியினை பெறாமல் விட்டால் அவர்கள் ஆரம்ப முதல் அவர்களின் சேவை கணக்கிடப்பட்டு நிரந்தர ஓய்வூதியத்துக்கு உடனடி தகுதிபெறுகின்றனர்.
அத்தோடு சமுர்த்தி உத்தியோகத்தர்கள் சேவையிலிருந்து நீங்கிக் கொள்ள விரும்பினால் அவர்களுக்கு இரண்டு வருட சம்பளத்துடன் ஊழியர் சேமலாப நிதியும் வழங்கப்படும்.
இவற்றில் ஏதாவது ஒன்றை சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பின்பற்ற முடியும். ஆனால் எந்த வொரு சமுர்த்தி உத்தியோகத்தரும் பணத்தைப் பெற்றுக் கொண்டு சேவையிலிருந்து விடுபடக் கூடாது என்பதே எனது தனிப்பட்ட ஆலோசனையாகும்.
தற்போது சமுர்த்தி உத்தியோகத்தர்களாக இருபவர்கள் அரசாங்க உத்தியோகத்தர்களாக மாற்றப்பட்டால் அனைவருக்குமே இதன் மூலம் சிறந்த எதிர்காலமுண்டு.
சமுர்த்தி உத்தியோகத்தர்கள் நிரந்தரமாக்கப்பட்டவுடன் அவர்களுக்கான வீட்டுக்கடன் வசதிகள் உட்பட அனைத்து வசதிகளும் வழங்கப்படும்.
வ்வளவு காலமும் வழங்கப்படாமலிருந்த அனைத்து பதவியுயர்வுகளும் நிரந்தரமாக்கப்பட்டவுடன் வழங்கப்படும். தற்போது சமுர்த்தி உத்தியோகத்தர்களின் அடிப்படை சம்பளத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு இம்மாத சம்பளத்துடன் வழங்க நடவடிக்கை எடுப்பேன் எனவும் அமைச்சர் இதன் போது தெரிவித்தார்.
இச் சந்திப்பில் சமுர்த்தி அதிகார சபையின் வாழ்வாதார பணிப்பாளர் எம். நடேசராசா, மட்டக்களப்பு மாவட்ட பிரதி பணிப்பாளர் பி. குணரட்னம் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum