சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Yesterday at 17:04

» கொக்கோ மரம்
by rammalar Yesterday at 13:11

» கமல் ஹேப்பி
by rammalar Yesterday at 13:05

» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Yesterday at 13:02

» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Yesterday at 9:04

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Yesterday at 8:57

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Yesterday at 4:28

» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Yesterday at 4:19

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 3:45

» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Yesterday at 3:39

» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52

» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:37

» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Wed 26 Jun 2024 - 7:09

» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Wed 26 Jun 2024 - 6:55

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Wed 26 Jun 2024 - 4:43

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Tue 25 Jun 2024 - 16:08

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 25 Jun 2024 - 16:01

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Tue 25 Jun 2024 - 4:01

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Tue 25 Jun 2024 - 3:57

» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Tue 25 Jun 2024 - 3:46

» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Tue 25 Jun 2024 - 3:38

» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Tue 25 Jun 2024 - 3:18

» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46

» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40

» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35

» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27

» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55

» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52

» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50

» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18

» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17

» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16

» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15

» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14

வெட்டு மின்வெட்டு வெட்டு ....! -யாதுமானவள். Khan11

வெட்டு மின்வெட்டு வெட்டு ....! -யாதுமானவள்.

+2
நண்பன்
யாதுமானவள்
6 posters

Go down

வெட்டு மின்வெட்டு வெட்டு ....! -யாதுமானவள். Empty வெட்டு மின்வெட்டு வெட்டு ....! -யாதுமானவள்.

Post by யாதுமானவள் Thu 9 Feb 2012 - 0:36

வெட்டு குத்து...போய் இப்போது வெட்டு வெட்டு மின் வெட்டு .... என்றுதான் எல்லா தலைப்புச் செய்திகளும் புலம்பிக்கொண்டிருக்கிறது.

ஒளிமயமான தமிழ்நாட்டை உருவாக்கிக் காட்டுவேன் என்று கூட்டு சேர்ந்து மேடைதோறும் வசனம் பேசி ஒட்டு வாங்கி நாற்காலியில் அமர்ந்தபின்னே இருட்டுக்குள் தமிழகத்தைத் தள்ளிவிட்டு திருட்டு அரசியல் நடத்துகின்றனர்.

நாமெல்லாம் பேசுவதற்கும் எழுதுவதற்கும் ஒரு கருப்பொருளாக இந்த மின்வெட்டும் மாறிவிட்ட ஒரே அவலம் மட்டுமே தற்போது தமிழ் நாட்டில் நிலவுகிறது. தட்டிக்கேட்க, யார் என்ற பெரிய கேள்விக்குறி அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது.

மிக்சி கிரைண்டர்... டிவி. லேப்டாப் ஆடு மாடு என்று நாங்கள் கொடுப்பதை வாங்கிக்கொண்டு எங்களுக்கு ஒட்டு போடுங்கள் என்று கேட்பவர்களிடம்... இவைஎல்லாம் எங்களுக்குத் தேவையில்லை எங்களுக்குத் தேவையானது இதுதான் - இவற்றைச் செய்தால் நாங்கள் ஒட்டு போடுகிறோம் என மக்கள் ஒன்று சேர்ந்து நம் தேவைகளை நிறைவேற்றும் அரசு வேண்டுமென எப்போது முடிவேடுக்கிரார்களோ அப்போதுதான் நாடு உருப்படும்.

முந்தைய அரசு இலவசத்தைக் கொடுத்து மக்களை ஏமாற்றுகிறதென்று சொல்லிவிட்டு அந்த அரசு கொடுத்ததை விட அதிகமாக எல்லாவற்றையும் கொடுப்பதாக தேர்தல் வாக்குறுதி கொடுத்ததும், ஆறு மாதத்தில் மின்வெட்டை முற்றிலுமாக ஒழித்துவிடும் எமது அரசு என்று ... உதய சூரியன் வேண்டாம் நாங்க முழு சூரியன் என்கிற ரேஞ்சுக்குப் பேசி ஓட்டு வாங்கி பதவிக்கு வந்த வேகத்தில் அரிசி பருப்பு என அதிகமாகக் கொடுத்துவிட்டு ... கருணாநிதி இலவசமாகக் கொடுத்ததெல்லாம் இவர் "விலையில்லா" பொருளாகக் கொடுத்து ...கூடவே காதில் அடையாள அட்டை மாட்டிய ஆடுகளைக் கொடுக்க ...பாவம் அந்த ஆடுகளையும் காதை அறுத்து மக்கள் விற்க அராம்பித்துவிட்டார்கள்.

பால் விலையில் இருந்து பஸ் கட்டணம் வரை உயர்த்திட்டு நம் கஜானாவில் காசில்லை. அதனால் வேறு வழியில்லாமல் விலையேற்றம் செய்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் நமது அரசு இருக்கிறதென்று மக்களிடம் கெஞ்சாத குறையாக எல்லா விலையும் ஏற்றிவிட்டு இந்த அரசு மேல் மக்கள் கொஞ்சநஞ்சம் வைத்திருந்த / எதிர்பார்த்த நம்பிக்கையையும் குறைத்துக்கொண்டார்கள்.

இதில் இன்னொரு கூத்தும் நடந்தது.... சமீபத்தில் டாஸ்மாக் ல் இரவு பத்தரை மணி வரை குடிமகன்கள் இருந்து அங்கேயே குடிக்கலாம் என்று இரவு 10 மணிவரை இருந்த டாஸ்மாக் ஐ அரை மணி நேரம் அதிகமாக்கியது இன்றைய அரசு. காரணமாகச் சொன்னதுதான் பெரிய வேடிக்கை.

அதாவது... இதற்குமுன் இரவு பத்துமணி வரை திறந்திருந்த டாஸ்மாக் கடையில் கடை மூடும்போது வருபவர்கள் சரக்கு வாங்கினாலும் அமர்ந்து குடிக்க முடியாமல் அவதிப்படுகிறார்களாம். அதானால் அவர்களுக்கு அங்கேயே அமர்ந்து குடிக்கும்படி வசதியாக இன்னும் அரை மணி நேரம் அதிகப்படுத்தி இருப்பதாகச் செய்தி வந்தது. காரணம் என்னவெனில் ..தினம் அரைமணி நேரம் அதிகமாக்குவதன் மூலம் கணிசமான கோடிகள் வருமானம் அதிகமாக கிடைக்கும் என்பதே. இதில் மக்களின் நலன் குறித்த அக்கறை இந்த அரசிற்கு இருப்பதாக எப்படி நம்புகிறார்கள் என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.

உதய சூரியன் வேண்டாம் என்பக்கம் கருப்பு சூரியன் இருக்கிறது எங்களுக்கு ஒட்டு போடுங்கள் என்று கேட்டுவிட்டு மக்கள் நிம்மதியைக் குலைத்துக்கொண்டு சட்டசபையில் ஒருவர் மாற்றி ஒருவர் குலைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

சங்கரன் கோவிலில் நடக்க இருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கு ஒற்றை சீட்டுக்காக 26 அமைச்சர்களை அனுப்பிவிட்டு வெறும் ஆறு அமைச்சர்கள் மட்டுமே சென்னையில் வைத்துக்கொண்டு அரசு அலுவல்களை கவனிக்கும் ... இவர்களுக்கு மின்வெட்டாவது ...மக்களைப்பற்றிய கவலையாவது?

தேர்வு நேரம்.... வெய்யில் காலம்....! மாணவர்கள் படிப்பார்களா.. உறங்குவார்களா? கரண்ட் இருக்கும்போது தான் படிக்க முடியும்.... கரண்ட் இருக்கும்போது தான் உறங்க முடியும்... என்று மாணவர்களும் ,...கரண்ட் இருக்கும்போதே சமையல் முடித்து விட வேண்டும்... என்று அம்மாக்களும்... வேலைக்குப் போகும் பெண்கள் படும் அவஸ்தையும்... சிறு தொழிற்சாலைகள் மின்வெட்டினால் எதிர்கொள்ளும் பாதிப்புகளும்....பற்றி நம் அரசு ஏனோ கவலை கொள்வதாகத் தெரியவே இல்லை.

சித்திரை மாதத்து அக்கினி வெய்யில் வெறும் பதினைந்து நாள் தான் மக்களைப் படுத்தும். ஆனால் மக்கள்மேல் அக்கறையில்லா இந்த அரசு பதவிக்காலம் வரை மக்களைப் படுத்தும்.

ஏதோ தைப்பூசத்துக்கு மௌன விரதம் இருப்பதுபோல் அம்மையார் வாய்திறக்காமல் இருக்கிறார்...

ஏனென்று எத்தனையோ விதத்தில் யோசித்துப் பார்க்கையில்... மக்களுக்கு மின்வெட்டு அதிகப்படுத்தி அதனால் மக்களை அதிகமான பாதிப்பிற்கு உள்ளாக்கி.... எதாவது செய்து எங்களுக்கு மின்சாரம் தடையில்லாமல் கொடுங்கள் என்று மக்கள் கேட்க ... இது தான் நான் எதிர்பார்த்ததென்று கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறப்பதொன்றே வழி வேறெந்த மார்க்கமும் இல்லை... நான் ஆந்திரா கர்நாடகா என்று எல்லோரிடமும் கையேந்தி விட்டேன் பலனில்லை... இதொன்றே வழியென்று கூடங்குளம் அணு மின் நிலையத்தை திறக்கப்போகிறாரோ?
http://latharaniyinsorchithirangal.blogspot.in/2012/02/blog-post_09.html


யாதுமானவள் (எ) லதாராணி



யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

வெட்டு மின்வெட்டு வெட்டு ....! -யாதுமானவள். Empty Re: வெட்டு மின்வெட்டு வெட்டு ....! -யாதுமானவள்.

Post by நண்பன் Thu 9 Feb 2012 - 6:35

உள்ளக்குமுறல்களைத் சொல்லி விட்டீர்கள் மேடம்
இறுதியில் இதுதான் நடக்கப்போகிறதென்பதையும் கூறி விட்டீர்கள்
:’|:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வெட்டு மின்வெட்டு வெட்டு ....! -யாதுமானவள். Empty Re: வெட்டு மின்வெட்டு வெட்டு ....! -யாதுமானவள்.

Post by அப்துல்லாஹ் Thu 9 Feb 2012 - 10:21

கற்காலத்திற்கு அழைத்துச்செல்லும் முன்னாள் கலா மோகினியின் கனிவு மிக்க ஆட்சியில் ஆட்டுரலும் உலக்கை உரலும் சிம்னி விளக்குகளும் சீர்ககெட்ட சட்ட ஒழுங்கும் இப்பொழுது புத்தாடை உடுத்தி புறப்பட்டு விட்டது பாட்டுப் பாடிக்கொண்டு... போவோமா கற்காலம் ... போயாச்சு நம் சந்தோசம்...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

வெட்டு மின்வெட்டு வெட்டு ....! -யாதுமானவள். Empty Re: வெட்டு மின்வெட்டு வெட்டு ....! -யாதுமானவள்.

Post by *சம்ஸ் Mon 4 Mar 2013 - 18:50

நண்பன் wrote:உள்ளக்குமுறல்களைத் சொல்லி விட்டீர்கள் மேடம்
இறுதியில் இதுதான் நடக்கப்போகிறதென்பதையும் கூறி விட்டீர்கள்
:’|:
@. @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வெட்டு மின்வெட்டு வெட்டு ....! -யாதுமானவள். Empty Re: வெட்டு மின்வெட்டு வெட்டு ....! -யாதுமானவள்.

Post by கைப்புள்ள Mon 4 Mar 2013 - 19:05

அப்துல்லாஹ் wrote:கற்காலத்திற்கு அழைத்துச்செல்லும் முன்னாள் கலா மோகினியின் கனிவு மிக்க ஆட்சியில் ஆட்டுரலும் உலக்கை உரலும் சிம்னி விளக்குகளும் சீர்ககெட்ட சட்ட ஒழுங்கும் இப்பொழுது புத்தாடை உடுத்தி புறப்பட்டு விட்டது பாட்டுப் பாடிக்கொண்டு... போவோமா கற்காலம் ... போயாச்சு நம் சந்தோசம்...
வெட்டு மின்வெட்டு வெட்டு ....! -யாதுமானவள். 76244 வெட்டு மின்வெட்டு வெட்டு ....! -யாதுமானவள். 76244 வெட்டு மின்வெட்டு வெட்டு ....! -யாதுமானவள். 111433
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

வெட்டு மின்வெட்டு வெட்டு ....! -யாதுமானவள். Empty Re: வெட்டு மின்வெட்டு வெட்டு ....! -யாதுமானவள்.

Post by பானுஷபானா Tue 5 Mar 2013 - 4:35

ரொம்ப அருமையான கட்டுரை அக்கா.... :)) :))

ஏமாற ஆள் இருக்கும் வரை ஏமாத்துறவங்க கொடி தானே பறக்கும் :!.: :!.:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வெட்டு மின்வெட்டு வெட்டு ....! -யாதுமானவள். Empty Re: வெட்டு மின்வெட்டு வெட்டு ....! -யாதுமானவள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum