சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பேப்பர் தட்டு தயாரிப்பது எப்படி Khan11

பேப்பர் தட்டு தயாரிப்பது எப்படி

Go down

பேப்பர் தட்டு தயாரிப்பது எப்படி Empty பேப்பர் தட்டு தயாரிப்பது எப்படி

Post by ahmad78 Thu 9 Feb 2012 - 16:54

பேப்பர் தட்டு தயாரிப்பது எப்படி
பேப்பர் தட்டு தயாரிப்பது எப்படி Images?q=tbn:ANd9GcQUxMg2j4uGRj7Wn9M8T3wDFk_Urc874c9oge5lfQTvDHELERlm52pdLyyf



சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காதவை பேப்பர் தட்டுகள்.
ஆடம்பரமாகவும் இருக்கும். வாழை இலை, பிளாஸ்டிக் தட்டுகளுக்கு மாற்றாக விளங்கும் இவற்றை தயாரித்து விற்றால் நல்ல லாபம் பார்க்கலாம் என்கிறார் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த சின்னாம்பாளையத்தில் உள்ள கற்பகவிருட்சம் மகளிர்
சுய உதவி குழுவை சேர்ந்த சுகுணா. அவர் கூறியதாவது: கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மகளிர் குழுவை துவக்கினோம். உறுப்பினர்கள் 5 பேர் சேர்ந்து, பேப்பர் பிளேட் தயாரிக்க பயிற்சி
பெற்றோம். வங்கியில் ரூ.5 லட்சம் கடன் வாங்கி
தொழிலுக்கு தேவையான மெஷின்களை நிறுவினோம்.

5 பேரும் பக்கத்து பக்கத்து வீடுகளை சேர்ந்தவர்கள் என்பதால் வீட்டு வேலைகளை சீக்கிரம் முடித்துவிட்டு பேப்பர் பிளேட் தயாரிக்கும் பணிகளை தொடங்குவோம். ஒருவர் பேப்பரை கட்டிங் செய்யும் இயந்திரத்தையும், மற்றொருவர் பிளேட் தயாரிக்கும் மெஷினையும் இயக்குவோம்.
மற்ற 2 பேர் பேக்கிங் செய்வார்கள். உற்பத்தியோடு விற்பனையையும் நாங்களே கவனிக்கிறோம். மின் தடை இல்லாமல் இருந்தால், ஒரு நாளில் 10 ஆயிரம் பிளேட் தயாரிக்கலாம். ஒரு பிளேட்டுக்கு 20 பைசா லாபம். மாதம் ரூ.18 ஆயிரம் வங்கிக்கு செலுத்துகிறோம். தினசரி சம்பளமாக நாங்கள் தலா ரூ.100 எடுத்து கொள்கிறோம். அலுவலகம், வீடு ஆகியவற்றில் நடைபெறும் விசேஷங்களில் பேப்பர் பிளேட் பயன்பாடு அதிகரித்து வருவதால் தயாரித்தவுடன் விற்று விடுகிறது.

பொள்ளாச்சி தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளிலும் எங்கள் பேப்பர் தட்டுகளை விற்று வருகிறோம். இதனால் நல்ல லாபம் கிடைக்கிறது.
பெண்கள் வீட்டில் இருந்தபடியே செய்வதற்கு ஏற்ற தொழில் இது. நீண்ட நாள்
ஸ்டாக் வைத்து விற்கலாம். நல்ல வருமானமும் கிடைக்கும்.

கட்டமைப்பு: இயந்திரங்கள் நிறுவ 10 அடி நீள, அகலத்தில் ஒரு அறை, தேவையான பேப்பர், உற்பத்தியான பிளேட்களை இருப்பு வைக்க மற்றொரு அறை, 1.5 ஹெச்பி மின் இணைப்பு (ரூ.3
ஆயிரம்). முதலீடு: பேப்பர் பிளேட் இயந்திரம் 1 (ரூ.1.4 லட்சம்), பேப்பரை 5, 6, 7, 8, 9, 10, 12 ஆகிய இஞ்ச் அளவுகளில் வட்ட வடிவில் வெட்ட பிளேடுகள் மற்றும் அந்த
அளவுகளில் பிளேட் செய்வதற்கான டை 7 (ரூ.54 ஆயிரம்) என மொத்தம் முதலீடு ரூ.1.94 லட்சம்.

உற்பத்தி பொருட்கள்: பாலிகோட் ஒயிட் பேப்பர் (திக்
ரகம் டன் ரூ.72 ஆயிரம், நைஸ் ரகம் ரூ.40 ஆயிரம்) சில்வர் திக் (டன் ரூ.38 ஆயிரம்), சில்வர்
நைஸ் (டன் ரூ.30 ஆயிரம்), புரூட்டி பேப்பர் திக் (டன் ரூ.50 ஆயிரம்), நைஸ் ரகம் (ரூ.38 ஆயிரம்)
மற்றும் பேக்கிங் கவர், லேபிள், செலோ டேப். கிடைக்கும் இடங்கள்: பேப்பர் பிளேட் மெஷின் சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களிலும், பேப்பர்களில் பாலிகோட் ஒயிட், சில்வர் திக் ஆகியவை சிவகாசி, சில்வர் நைஸ் டெல்லி, புரூட்டி பேப்பர் திக், நைஸ் ஆகியவை கேரளாவிலும் மலிவாக கிடைக்கின்றன.

உற்பத்தி செலவு: வாடகை, மின்கட்டணம், உற்பத்தி பொருட்கள், கூலி உள்பட பாலிகோட் ஒயிட் 6 இஞ்ச் பேப்பர் பிளேட் தயாரிக்க 20 பைசா, 7 இஞ்ச் தயாரிக்க 45 பைசா, 8
இஞ்ச் 60 பைசா, 10 இஞ்ச் ரூ.1, சில்வர் திக் 8 இஞ்ச் ரூ.1, 10 இஞ்ச் ரூ.1.30, சில்வர் நைஸ் 6 இஞ்ச் 25 பைசா, 7 இஞ்ச் 45 பைசா, புரூட்டி பேப்பர் 8 இஞ்ச்
ரூ.1, 10 இஞ்ச் ரூ.1.30 செலவாகிறது. 10 ஆயிரம் பிளேட் தயாரிக்க ஆகும் செலவு ரூ.7700. மாதத்தில் 25 நாளில் 2.5 லட்சம் பிளேட் உற்பத்திக்கு ரூ.1.92 லட்சம் தேவை.

வருவாய்: ஒரு பேப்பர் பிளேட்டுக்கு 20 பைசா லாபம் கிடைப்பதால் தினசரி லாபம் ரூ.2 ஆயிரம். 25
நாளில் ரூ.50 ஆயிரம் லாபம் கிடைக்கும். விற்பனை வாய்ப்பு: கேட்டரிங் நடத்துபவர்கள், சமையல் ஏஜென்ட்கள், விழாக்கள், அன்னதான நிகழ்ச்சி நடத்துபவர்கள் பேப்பர் பிளேட்களை வாங்குகிறார்கள். அவர்களுக்கு நேரடியாக சப்ளை செய்யலாம். கடைகளுக்கும் சப்ளை செய்யலாம். தரம், குறைந்த லாபம், நேரடி அணுகுமுறை இருந்தால் நிறைய ஆர்டர் கிடைக்கும்.

தயாரிப்பது எப்படி?



பேப்பர் தட்டு தயாரிப்பது எப்படி Low_Cost_Paper_Plates_Bowls_Making_Machine











பேப்பர் தட்டு தயாரிப்பது எப்படி 1267546209_77618872_3-Paper-Plate-Making-Machinery-Manufactures-Everything-Else-1267546209











பேப்பர் பிளேட் இயந்திரம் இரண்டு பாகங்களை கொண்டது. ஒன்று கட்டிங் மெஷின், இரண்டாவது பேப்பர் பிளேட் டை மெஷின். இரண்டும் மின்சாரத்தில் இயங்கக் கூடியவை. தயாரிக்க வேண்டிய பிளேட்டின் அளவுக்குரிய கட்டிங் வளையத்தை கட்டிங் மெஷினில் பொருத்த வேண்டும். கட்டிங் வளையத்துக்கு கீழ் பிளேட்டுக்குரிய பேப்பரை மொத்தமாக வைத்து இயக்கினால் கட்டிங் செய்யப்படும். வட்ட வடிவில் பேப்பர்கள் தனித்தனியாக கிடைக்கும். நைஸ் ரக பேப்பராக இருந்தால் 100 எண்ணிக்கை வரையும் திக் ரகமென்றால் 30 முதல் 40 வரை கட்டிங் செய்யலாம்.

கட் செய்த பேப்பர்களை பிளேட் டை மெஷினில் உள்ள அச்சின் மேல் வைத்து இயக்கினால் பேப்பரின் ஓரங்கள் வளைந்து பிளேட்களாக மாறும்.
பேப்பரை பிளேட்டாக வளைக்க டை மெஷின் 5 டிகிரி வெப்பம் இருக்க வேண்டும். அதற்கு உற்பத்தியை துவக்கும் முன்பு டை மெஷினை 90 டிகிரிக்கு சூடேற்ற வேண்டும்.

நிமிடத்திற்கு 30 பிளேட் தயாராகும். 40 பிளேட்களாக பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றி செலோ டேப் ஒட்டி பேக்கிங் செய்ய வேண்டும். இப்போது பேப்பர் பிளேட் விற்பனைக்கு தயார்.

பேப்பர் பிளேட் இயந்திரங்களை விற்பனையகங்களில் பார்வையிடலாம். அரை மணி நேரத்தில் இயக்குவதை கற்றுக் கொள்ளலாம். எளிய தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் இந்த தொழிலுக்கு மதிப்பு கூடி வருவதால் வங்கிகள் எளிதாக கடன் உதவி வழங்குகின்றன.





பேப்பர் தட்டு தயாரிப்பது எப்படி Evening-Tamil-News-Paper_53147089482











படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum