சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Yesterday at 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Yesterday at 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Yesterday at 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Yesterday at 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Yesterday at 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Yesterday at 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Yesterday at 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Yesterday at 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Yesterday at 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Yesterday at 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Yesterday at 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Yesterday at 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Yesterday at 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Yesterday at 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54

» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48

» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42

» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37

» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31

» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54

» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri 24 May 2024 - 4:51

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu 23 May 2024 - 13:16

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu 23 May 2024 - 12:56

» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu 23 May 2024 - 12:49

» இலங்கை அழகி
by rammalar Thu 23 May 2024 - 12:37

» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Thu 23 May 2024 - 12:32

» மிதமிருக்கும் அவள் நட்பு!
by rammalar Thu 23 May 2024 - 11:25

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by rammalar Thu 23 May 2024 - 9:24

வழக்குத் தாமதங்களை குறைப்பதற்கு சட்டக் கோவைகளில் திருத்தம் கொண்டு வர ஏற்பாடு! Khan11

வழக்குத் தாமதங்களை குறைப்பதற்கு சட்டக் கோவைகளில் திருத்தம் கொண்டு வர ஏற்பாடு!

2 posters

Go down

வழக்குத் தாமதங்களை குறைப்பதற்கு சட்டக் கோவைகளில் திருத்தம் கொண்டு வர ஏற்பாடு! Empty வழக்குத் தாமதங்களை குறைப்பதற்கு சட்டக் கோவைகளில் திருத்தம் கொண்டு வர ஏற்பாடு!

Post by முனாஸ் சுலைமான் Sun 12 Feb 2012 - 20:36

வழக்குத் தாமதங்களை குறைப்பதற்கு சட்டக் கோவைகளில் திருத்தம் கொண்டு வர ஏற்பாடு! Hakeemவழக்குகள் தாமதமாவதற்கு அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கை கிடைப்பதில் ஏற்படும் சுணக்கமும் முக்கிய காரணம் என்பதால் அதன் பணிகளை பிராந்திய ரீதியில் பன்முகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென நீதியமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்

அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் நடைபெற்ற முக்கிய கலந்துரையாடல் ஒன்றின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அனுராதபுர மாவட்டத்தின் மேல், மாவட்ட, நீதவான் நீதிமன்ற நீதிபதிகளும் சட்ட மருத்துவ அதிகாரிகளும் பொலிஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

நீதியமைச்சின் செயலாளர் கமலினி டி சில்வா, அரசாங்க இரசாயன பகுப்பாளர் டி.ஆர்.என்.எம்.லியனாராச்சி, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் யசந்த கோதாகொட, அனுராதபுரம் பிரதான சட்ட மருத்துவ அதிகாரி தனஞ்சய வைத்தியரத்ன ஆகியோரும் இக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தனர்.

அமைச்சர் ஹக்கீம் அங்கு மேலும் தெரிவித்ததாவது: "எனது அமைச்சின் கீழ் வரும் அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களம் குற்றச் செயல்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் புலனாய்வு மற்றும் துப்புத்துலக்கல் போன்றவற்றில் மிகவும் முக்கியமான பணியில் ஈடுபட்டு வருகிறது.

நாடளாவிய ரீதியில் நடைபெறும் குற்றச்செயல்களின் போது அவற்றில் சம்பந்தப்படும் தடயங்கள், மாதிரிகள் என்பவற்றை பரிசோதனைக்குட்படுத்தி அறிக்கை சமர்ப்பிப்பதில் காலதாமதம் ஏற்படுவதாக நீதியமைச்சுக்கு நீதிமன்றங்களினூடாக முறைப்பாடுகள் கிடைத்த வண்ணமுள்ளன. அவ்வாறான தாமதம் காரணமாக ஏராளமான வழக்குகளில் தீர்ப்புகளை வழங்குவதில் நீதிபதிகளுக்கு சிரமங்கள் ஏற்படுகின்றன.

கஞ்சா என்ற போதைப்பொருள் கைப்பற்றப்படும் பொழுது லொறிகளில் சாக்குப் பொதிகளில் மூடை மூடையாக ஏற்றி அப்படியே பகுப்பாய்வுக்காக அனுப்பும் போது அவற்றை ஏற்றி இறக்குவது மட்டுமல்லாது, களஞ்சியப்படுத்தி வைத்திருப்பதும் பாரிய சிரமத்தையும் இடநெருக்கடியையும் ஏற்படுத்துகிறது. அவற்றின் ஒரு சிறு தொகையை மட்டும் பரிசோதனைக்கு உட்படுத்தினால் போதுமானது. ஆனால் அதற்கான தண்டனையை விதிப்பதற்கு கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் முழுத் தொகையின் நிறையையும் அளவீடு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுவதாக இங்கு எங்கள் மத்தியில் அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளராலும் பிரதி பகுப்பாய்வாளராலும் சுட்டிக்காட்டப்பட்டது கவனிக்கத்தக்கது.

பொதுவாக அரசாங்க நிறுவனங்களில் காணப்படும் ஆளணி தட்டுப்பாடு நீதித்துறையைப் பொறுத்தவரையிலும் இருந்து வருவது இவ்வாறான தாமதங்களுக்கு ஒரு காரணமாகும்.

வர்த்தக ரீதியான வழக்குகளில் கூட காலதாமதம் ஒரு பாரிய பிரச்சினையாக உருவாகியிருக்கிறது. அதனால் உள்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள வெளிநாட்டார் தயக்கம் காட்டி பின்வாங்க நேரிடுகிறது.

வழக்குகள் தாமதமாவது குறித்து பிரதம நீதியரசருடன் நான் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன். நீதித் துறைக்கான நிதியுதவியின் அவசியம் சம்பந்தமாக உலக வங்கி பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடி வருகிறேன்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த வரவு செலவு திட்டத்தில் வழக்கு தாமதங்களை குறைப்பதற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். ஆயினும், வழக்குகள் தாமதமாவதை பொறுத்தவரை எதிர்பார்த்த பலன் கிட்டிய பாடில்லை. அதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினரின் முழுமையான ஒத்துழைப்பு இன்றியமையாதது.

வழக்குத் தாமதங்களை இயன்றவரை குறைப்பதற்கு ஏற்றவகையில் குற்றவியல் மற்றும் குடியியல் (சிவில்) சட்டக் கோவைகளில் விரைவில் பாராளுமன்றத்தில் திருத்தங்களை கொண்டு வர உள்ளேன்" என்றார்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

வழக்குத் தாமதங்களை குறைப்பதற்கு சட்டக் கோவைகளில் திருத்தம் கொண்டு வர ஏற்பாடு! Empty Re: வழக்குத் தாமதங்களை குறைப்பதற்கு சட்டக் கோவைகளில் திருத்தம் கொண்டு வர ஏற்பாடு!

Post by mufees Sun 12 Feb 2012 - 20:39

பகிர்வுக்கு நன்றி .
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum